Tuesday 26 March 2013

குங்குமம் தோழியின் தினமொழிகளில் சாரல் துளிகள்..

பார்த்த, கேட்ட, படித்த மற்றும் ஏற்படும் அனுபவங்களையொட்டி நம் மனதிலும் ஏதாவது கருத்துகள் தோன்றுவது இயல்பே. அப்படித் தோன்றும் எண்ணங்களை எழுதி வைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துத்தான்  எழுத ஆரம்பித்தேன். அப்படி எழுதுவதற்காக ரூம் போட்டு உட்கார்ந்து  சிந்திக்கும்போது வந்து விழுவது போதாதென்று அவ்வப்போது சில சிந்தனைகள் சுயம்பாகவும் உதிப்பதுண்டு. இப்படி ஒவ்வொரு துளிகளாகச் சேர்பவற்றை அவ்வப்போது எண்களிட்டு முகநூலிலும், குழுமங்களிலும் பகிர்வது மட்டுமன்றி "சாரல் துளிகள்" என்று என் வலைப்பூவிலும் தொகுத்துப் போடுவது வழக்கம்.

முகநூலில் "குங்குமம் தோழி" பத்திரிகை, நண்பர்களின் சிந்தனைகளை தினமொழி என்ற பெயரில் வெளியிட்டு வருகிறது. அதில் சாரல் துளிகளிலிருந்தும் சில துளிகளை வெளியிட்டிருக்கிறார்கள். பார்த்ததும் ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. பகிர்ந்து கொண்டால் சந்தோஷம் இரட்டிப்பாகுமாம். ஆகவே பகிர்ந்து விட்டேன் நட்புகளிடம்... 

பிப்ரவரி 24 அன்று வெளியான இந்தத்துளி இங்கே தொகுப்பில் இருக்கிறது..

 பிப்ரவரி 28 அன்று வெளியான  இந்தத்துளி இங்கே தொகுப்பில் இருக்கிறது..


மார்ச் 25.. அதாவது, நேற்று ஒரே நாளில் இரண்டு துளிகளை வெளியிட்டு இனிய ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டார்கள்.


ஊக்குவித்து உற்சாகப்படுத்திய குங்குமம் தோழிக்கு மிக்க நன்றி..

10 comments:

ஸாதிகா said...

சாரல்துளிகளின் சாராம்சம் அருமை.வாழ்த்துகக்ள்.

திண்டுக்கல் தனபாலன் said...

மிக்க சந்தோசம்... வாழ்த்துக்கள்...

ராமலக்ஷ்மி said...

அருமையான பொன்மொழிகள். தொடரட்டும் சாரலின் துளிகள்!
நல்வாழ்த்துகள் சாந்தி.

மாதேவி said...

சாரல்துளிகள் அருமை. வாழ்த்துகள்.

பூந்தளிர் said...

பொன்மொழிகள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு பத்திரிக்கையில் வந்திருப்பது ரொம்ப சந்தோஷமான விஷயம். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அருமை சாரல், இதயத்திலிருந்து
முகிழ்க்கும் நல்லெண்ணெங்கள்
அனைவருக்கும் நல்லதே செய்திருக்கின்றன.அவை உங்களுக்கும் நல்லதே செய்திருக்கின்றன.வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள்.... மேலும் பல பெருமைகள் உங்களை வந்தடையட்டும்.

VijiParthiban said...

சாரல்துளிகள் அருமை. வாழ்த்துகள்.

ADHI VENKAT said...

சாரல் துளிகள் அருமை. பாராட்டுகள்.

சாந்தி மாரியப்பன் said...

கருத்துரையிட்ட அனைவருக்கும் மிக்க நன்றிகள்..

LinkWithin

Related Posts with Thumbnails