Friday 7 December 2012

இது அவங்க ஏரியா..

சாப்பிடவும் ஒலி எழுப்பவும் வாய் இருந்தாலும், மனிதர்களைப்போல் பேச முடியாத காரணத்தினாலேயே விலங்குகளை வாயில்லாப்பிராணிகள் என்று குறிப்பிடுகிறோம். மனிதர்களிலும் கூட மனதில் நினைப்பதை வெளியே கூறும் துணிச்சல் இல்லாதவர்களையும் அந்தப்பெயரிலேயே அழைப்பது வேறு விஷயம் :-)

மனிதனை விட விலங்குகள் என்னதான் புத்தி கூர்மையானவை என்று சொல்லப்பட்டாலும் மனிதன் தந்திரமாக அவைகளையெல்லாம் அடக்கி ஆண்டு விடுகிறான். ஒரு மரத்தையே முறித்துப்போடும் வலிமையுள்ள யானை ஒரு சிறு இரும்புச்சங்கிலிக்குக் கட்டுப்பட்டு ஐந்துக்கும் பத்துக்கும் கையேந்தும் கொடுமையே இதற்குச் சான்று.

கண்ணில் அகப்பட்ட ஒரு சில மிருகங்களை இங்கே கட்டிப்போடாமல் சுதந்திரமாக விட்டு வைத்திருக்கிறேன். அவைகளைத் தொந்தரவு செய்யாமல் பார்த்து ரசியுங்கள். அனுமதிக்கட்டணம் கிடையாது :-)

இன்னிக்காவது வாழைப்பழமும் தேங்காயும் கிடைக்குமா?
ரெண்டு செகண்டுதான் அசையாமல் நிற்பேன். போட்டோ பிடிச்சுக்கோ
அல்லோ.. எச்சூஸ் மீ. இது எங்களுக்கு லஞ்ச் டைம்.
சிந்தனை செய் மனமே.. 

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ்ல கலந்துக்கறதுக்கு பயிற்சி எடுத்திட்டிருக்கேன்..
அம்மாவைக்காணோம்.. 
கண்ணா.. முறுக்கு தின்ன ஆசையா :-)
போனி டெயில் இப்ப ஃபாஷன் இல்லையாம். அதான் லூஸ்ல விட்டுட்டேன் :-)
பாவம் போல் ஒரு பார்வை..
அடுத்த ரவுண்டுக்கு ரெடியா இருக்கறவங்கல்லாம் சட்டுன்னு வாங்க. போலாம் ரைட்ட்ட்..

20 comments:

ராமலக்ஷ்மி said...

படங்களையும் கமென்டுகளையும் ரசித்தேன்:)! இரண்டாம் படத்தில் எருமையார் நல்லா போஸ் கொடுத்திருக்கிறார். பழுப்புக் குதிரைக் குட்டி அழகு.

Asiya Omar said...

இது நம்ம ஏரியா இல்லையா? அருமையான படங்கள். பகிர்வும் அழகு.

இமா க்றிஸ் said...

படங்கள் சூப்பர் என்றால்... கொடுத்திருக்கும் தலைப்புகள் சூப்பரோ சூப்பர். ;) ரசித்தேன்.

அமுதா கிருஷ்ணா said...

எல்லாம் அம்சமாய் லட்சணமாய் இருக்கு.

semmalai akash said...

அருமையான படங்களும் அதற்காக சொன்ன ஒரு வரிகளும், மிகவும் ரசித்தேன்.

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!

எருமையை வெகுவாக ரசிச்சேன்.
அடடா.....என்ன ஒரு அழகு!!!!!

ஃப்ளா லெஸ் ஸ்கின் பேபி:-)

குறையொன்றுமில்லை. said...

படங்களும் பொருத்தமான கமெண்டுகளும் சூப்பர்

RVS said...

நெசம்மாவே உங்களை நேஷனல் ஜியோகரஃபிக் சேனல்லையும் டிஸ்கவரி சேனல்லையும் தேடிக்கிட்டிருக்காங்க மேடம்!!

சூப்பர் என்ற சொல்லில் அடங்காத ஃபோட்டோக்கள். அருமை. :-)

raji said...

படங்கள் மட்டுமில்லை அதுக்குண்டான ஸ்டேட்மெண்டும் சூப்பர் :-)

மாதேவி said...

அனைத்தும் அழகு.

வெங்கட் நாகராஜ் said...

படங்களும் அதற்கேற்ற கமெண்டுகளும் வாவ்! :)

Ranjani Narayanan said...

//கண்ணா முறுக்கு திங்க ஆசையா//
இப்போ போனி டெயில் பாஷன் இல்லையாம்...//
புன்னகையை வரவழைத்த கமெண்டுகள்!

http://ranjaninarayanan.wordpress.com
http://pullikkolam.wordpress.com
http://thiruvarangaththilirunthu.blogspot.in/

வல்லிசிம்ஹன் said...

யானை ரொம்பப் பிடிச்சதுப்பா.
ஓணானின் சிந்தனை பிரமாதம். அந்தக் குதிரை அழகோ அழகு. விடுதலை செய்துடலாமான்னு யோசனை வருது. அத்தனை பொறுமையா கட்டிவச்ச பசு போல இருக்கே.

படங்கள் அத்தனையும் அருமை. காப்ஷனோ பிரமாதம்.உங்கள் பொறுமைக்கும் திறமைக்கும் நல்ல எடுத்துக்காட்டு சாரல்.

'பரிவை' சே.குமார் said...

படமும் அதற்கான விளக்கமும் அருமை.

'பரிவை' சே.குமார் said...

படமும் அதற்கான விளக்கமும் அருமை.

ADHI VENKAT said...

படங்கள் ஒவ்வொன்றும் அபாரம்... பொறுமையா எடுத்ததுக்கு பாராட்டுகள்.

கமெண்ட்ஸும் ரசித்தேன்.

ஸ்ரீராம். said...

படங்கள் பிரமாதம்

அந்த யானை பல்லே தேய்க்காதோ.....!
அந்த மாடு மழையில கூட நனையாதோ...!
அடுத்த சவைப்புக்கு இவ்வளவு நேரமா..!
சிந்தனை செய் மனமே = எக்சர்சைஸ் செய் தினமே....
அந்தக் குதிரை முடி வெட்டாதோ...!

கோமதி அரசு said...

படங்கள் எல்லாம் அழகு.
அனுமதிக் கட்டணம் இல்லாமல் ரசித்துப் பார்த்தேன்.
உங்கள் படம்பிடிப்புக்கு வாழ்த்துக்கள்.
நானும் ஊருக்கு போய் மாட்டின் மேல் காக்காய் உட்கார்ந்து அதன் முதுகில் ஏதோ ஒன்றை கொத்துவதை படம் எடுத்து இருக்கிறேன்.
உங்களைப் போல் எடுக்க முடியாது.
அத்தனையும் அழகு.

pudugaithendral said...

superனு ஒரு வார்த்தையில் சொல்லிட முடியாது. ரசிச்சேன்

இராஜராஜேஸ்வரி said...

ரசிக்கவைக்கும் அருமையான படங்கள் !

LinkWithin

Related Posts with Thumbnails