பொழுது விடியுதோ இல்லையோ,.. பால்கனில வந்து கூப்பாடு ஆரம்பிச்சுரும். ஒரு கையளவுக்கு அரிசியோ சாதமோ போட்டு வெச்சா சமத்தா விழுங்கிட்டு, தட்டுல ஊத்தி வெச்சுருக்கும் தண்ணியையும் குடிச்சுட்டுப் போவாங்க. இவனுங்களைப் பத்தி ஏற்கனவே பகிர்ந்துருக்கேன். மழைக்காலம் ஆரம்பிச்சதும் வேணுங்கற சாப்பாடும் தண்ணியும் வெளியவே கிடைக்க ஆரம்பிச்சதும் ஆளை அட்ரஸையே காணோம். இருந்தாலும் கடமை தவறாம சாப்பாடும் தண்ணியும் வைக்கிறதுதான். எப்பவாவது வந்து தரிசனம் கொடுத்துட்டுப் போறானுங்க.
இப்ப புது விருந்தாளிகளா குருவியும் அடிக்கடி வர ஆரம்பிச்சுருக்கு. அழிஞ்சுட்டு வர்ற இனம்ன்னு வேற ஆதங்கமாயிருக்கா. அதான் பிடிச்சுப்போட்டுட்டேன். நாளப்பின்னே நம்ம வலைப்பூவுல இருக்கற படத்தை வருங்கால சந்ததிக்குக் காமிச்சுக்கலாமில்லே.
நல்லா வயிறு முட்டச் சாப்பிட்ட அசதி இவருக்கு..
போட்டோ எடுக்கறேன்னதும் என்னா இஸ்டைலா போஸ் கொடுக்கறான் பாருங்க :-)
இவங்க குருவியக்கா.. பொண்ணா இருந்தாலும் மேக்கப் எல்லாம் இல்லாம எவ்ளோ சிம்பிளா இருக்காங்க..
இவரு குருவியக்காவோட ஊட்டுக்காரரு.
மீசை, தாடிக்கெல்லாம் டையடிச்சுக்கிட்டு. லிப்ஸ்டிக்கெல்லாம் பூசிக்கிட்டு என்னா இஷ்டைலா இருக்காரு. ஆளுக்கு கெத்தும் கொஞ்சம் கூடுதல்தான். போட்டோ எடுக்கறப்ப அக்கா அழகா போஸ் கொடுத்தாங்க. ஒரே க்ளிக்குல ஓகேயாகிருச்சு. அக்கா ஊட்டுக்காரர்தான் ட்ரில் வாங்கிட்டார். போகஸ் செஞ்சு க்ளிக் செய்யப்போற நேரத்துல சட்ன்னு திரும்பிக்குவார். ஒரு வழியா அசந்த நேரத்துல சுட்டுட்டேன்.
திரும்பிக்கிட்டா உட்ருவோமா என்ன :-)
மழைக்காலம் ஆரம்பிச்சதுலேர்ந்து காலைல இவங்க சத்தத்துலதான் கண்ணு முழிச்சாறது. காலை வேளைகள்ல காக்கா, குருவி, புறா, மைனா, இன்னும் பெயர் தெரியாத ஒண்ணு ரெண்டு பறவைகள்ன்னு காச்..மூச் ன்னு ஒரே சத்தக்காடுதான். விடிஞ்சும் விடியாத அந்தக்காலை நேரத்துல இவங்க போடுற சந்தோஷக்கூச்சல்தான் அன்னிக்கு முழுக்க மனசை உற்சாகமா வெச்சுருக்குதுன்னும் கூட சொல்லலாம்.
54 comments:
விடிஞ்சும் விடியாமலும் இதுங்க போடும் சத்தம் சுகமான ராகம் காதுகளுக்கு...
விருந்தாளிங்க எல்லாம் சூப்பர் ஸ்டைலா இருக்கிறாங்க! காணக் கிடைக்காத குருவிகளை ஜோடியாப் புடிச்சு அழகா ஆவணப்படுத்தியிருக்கிறீர்கள். ஃப்ளிக்கரில் அசத்திய மைனா சார் எங்கே:)? முன்னரே இங்கே பகிர்ந்து விட்டீர்களா?
வூட்டுக்காரர் செம பார்ட்டி!
நம்மூட்டுலே இப்ப ரேஷன் டபுள் ஆகி இருக்கு. கூட்டம் அதிகமாப்போச்சு. குளிர் காலம். வேறெங்க போவாங்க பாவம் இல்லையா?
காலை 9 மணிக்கு ப்ரேக்ஃபாஸ்ட்.
தனியா ஒரு வாட்ச் பர்ட் உக்காந்துருக்கும். நாம் சாப்பாடு வச்சதும் கஞ்சி வரதப்பா.........ன்னு கூவும். உடனே மற்றவர்கள் வந்துருவாங்க,
எப்பவும் ப்ரெட் தான். அதுவும் மல்ட்டி க்ரெய்ன் ப்ரெட்.
படங்கள் அழகு...
முதல் இரு படத்தில் உள்ளவரை, தினமும் பார்க்க முடிகிறது.
முடிவில் இரு படத்தில் உள்ளவரை, பார்த்து பல நாள் ஆச்சி...
இனி படத்தில் தான் பார்க்க முடியும் போல் உள்ளது...
(Mobile Tower - களால் இந்த இனமே நரகத்தில் .ச்சீ.. நகரத்தில் காணாமல் போய் விட்டது.)
நன்றி... (த.ம. 3)
அட சூப்பர் .... நமக்கு எவ்வளவு இனிமையான கீதங்களை தருகிறது...... படங்கள் அனைத்தும் அருமை....
நேரடியாகப் பார்ப்பதைப் போன்று
அருமையாக இருக்குது புகைப்படங்க்கள்
வார்த்தைக்ளில் தெரிக்கும் உற்சாகம்
எங்களையும் தொற்றிக் கொண்டது
மனம் கொள்ளை கொள்ளும் பஹிவு
தொடர வாழ்த்துக்கள்
நிற்கிற பொருட்களையே நானெல்லாம் ஒழுங்கா போட்டோ எடுப்பதில்லை; ஒவ்வொரு நொடியும் நகரும் இவங்களை எப்படி தான் எடுதீங்கலோ?
கடைசி மூணு படம் ரொம்ப பிடிச்சது. அசத்துங்க
:) ரொம்ப அழகான விருந்தாளிங்க..
விருந்தாளிகள் எல்லாம் ரொம்ப அழகாக இருக்கிறார்கள்.
நகரங்களில் அபூர்வம். வளரட்டும் உறவுகள்.
super....
இவங்க குருவியக்கா.. பொண்ணா இருந்தாலும் மேக்கப் எல்லாம் இல்லாம எவ்ளோ சிம்பிளா இருக்காங்க..
எல்லாம் ரொம்ப அழ்கா மனதை ஈர்க்கிறார்கள்..
சாந்தி எஞ்சாய்.
காலை வேளைகள்ல காக்கா, குருவி, புறா, மைனா, இன்னும் பெயர் தெரியாத ஒண்ணு ரெண்டு பறவைகள்ன்னு காச்..மூச் ன்னு ஒரே சத்தக்காடுதான். விடிஞ்சும் விடியாத அந்தக்காலை நேரத்துல இவங்க போடுற சந்தோஷக்கூச்சல்தான் அன்னிக்கு முழுக்க மனசை உற்சாகமா வெச்சுருக்குதுன்னும் கூட சொல்லலாம். //
நானும் அதிகாலையில் மொட்டை மாடியில் கைபிடி உணவை வைத்து விட்டு வரும் பறவைகளை படம் எடுப்பேன். அவை சத்தம் கேட்கும போது மனதுக்கு இதமாகவும், உற்சாகமாகவும் இருக்கும்.
எங்கள் வீட்டு விருந்தாளிகள் அனில், காக்கா, தவிட்டு குருவி, கருப்பு குருவி, வாலாட்டி குருவி, பருந்து.
வானத்தில் அதிகாலையில், கொக்கு, புறா, எல்லாம் வரிசையாக பறந்து போகும், கிளிக்கூட்டம் போகும் பார்க்க ரம்மியமாய் இருக்கும். மீன் கொத்தி சத்தம் போட்டுக் கொண்டு மதில் மேல் வந்து நிற்கும்.
உங்கள் பதிவு மனதுக்கு இதமாய் இருக்கிறது.
அழகான படங்கள். அருமையான படப்பிடிப்பு.... வாழ்த்துகள் சகோ.
குருவி வீட்டுகாரர்தான் ரொம்பவே அழகு.சாரல்....மேக்கப் செட் ஒண்ணு வாங்கிக் குடுத்திட்டா இன்னும் அழகாயிருப்பாங்கப்பா !
சிட்டுக்குருவுகளின் மனசுக்கு மிகவும் உற்சாகம் சாரல். படங்கள் கொள்ளை அழகு.மகன் பம்பாயில் இருக்கும் போது புறாக்கள் கூட்டமே அதிகம்.
உக்கும் உக்க்ம்னு கொஞ்சுன் அழகே நல்லா இருக்கும். காணக்கிடைக்கத குருவிகளைப் படமெடுத்துப் போட்டதற்கு மிகவும் நன்றிமா.
அருமையான பூபாளம்னு சொல்லுங்க :-)
பத்தி பத்தியான குறிப்புகளுடன் படங்கள். அருமையாக இருந்தன..
விருந்தாளிகளின் போட்டோகள் அருமை..
ஊரில் எங்க வீட்டுக்கு தினமும் ஒரு கொக்கு வருவது உண்டு.. :)
எப்படிப்பா பறவைகளை ஃபோட்டோ எடுக்குறீங்க? :-))) எங்க வீட்டுக்கும் பெரிய சிட்டுக்குருவி கூட்டம் வரும். ஆனா, நம்மளோட மெல்லிய அசைவைக் கண்டால்கூட ஓடிப்போய்டுது!! :-(
விருந்தாளிகளை நல்லாத்தான் கவனிச்சிருக்கீங்க.. போட்டோலாம் எடுத்து அமர்க்களம் தான். கவனிக்கலைன்னா கோவிச்சிட்டு போயிருவாங்க.. பிறகு அம்புட்டுதேன். ரொம்ப நல்லாருக்கு போட்டோஸ்.
முதல் இரண்டு விருந்தாளிகல மட்டும்தான் தெரியுது.மத்தவங்க வேற்று கிரகவாசிகளா?
திரு VGK.(வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களிடமிருந்து தாங்கள்
“SUNSHINE BLOGGER AWARD “ என்ற விருதினை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!
நல்ல பதிவு
நன்றி,
ஜோசப்
http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)
குட்டிக் குருவியாரின் படங்கள் மிக அழகு. அவை நொடிக்கொரு தரம் 'போஸ்' மாறிக் கொண்டேயிருக்குமே! இங்கு எங்கள் வீட்டருகில் சமீப காலமாக நான்கு புறாக்கள் விஜயம். படமெடுப்பதற்குள் ஏகப் பட்ட உபத்திரவங்கள்! பறவைகளின் ஒலி தரும் உற்சாகத்துக்கு அளவேது?
வாங்க சங்கவி,
ஆமாங்க,..அதுவும் மழைக்காலத்துல இன்னும் சுகமா இருக்குது இந்த பூபாளம் :-)
வாசிச்சதுக்கு நன்றி :-)
வாங்க ராமலக்ஷ்மி,
மைனா அப்புறமா பறவைக்கூட்டத்தோட வரேன்னுட்டுப் போயிட்டார்.
ரசிச்சதுக்கு நன்றி :-)
வாங்க துள்சிக்கா,
நீங்க எடுத்த படத்துல ஒரு குளியல் காட்சியில் நடிச்சவங்க இன்னும் கண்ணுக்குள்ளயே நிக்கிறாங்க. இப்ப பனியில் குளிக்கக்கூட முடியாது இல்லையா.. பாவம்தான்.
மனுஷங்களைப்போல அதுகளுக்கும் ஊட்டம் வேணுமோல்லியோ.. தானிய ப்ரெட் கொடுத்து நல்லாக் கவனிச்சுக்கோங்க :-)
வாங்க தனபாலன்,
எங்கூர்ல எப்பவும் குருவியார் களபிளன்னுட்டே சுத்திட்டிருக்கார். நம்மூர்ல அருகி வர்றது வருத்தம் தரும் விஷயம்தான்..
வாசிச்சதுக்கு நன்றி.
வாங்க விஜி,
மும்பை மழையை நீங்களும் நல்லா எஞ்சாய் செய்யறீங்க இல்லையா..
படங்களை ரசித்தமைக்கு நன்றி :-)
வாங்க ரமணி,
உற்சாகமூட்டும் உங்க வார்த்தைகளுக்கும் வாசிச்சதுக்கும் நன்றி :-)
வாங்க மோகன் குமார்,
சித்திரமும் கைப்பழக்கம் இல்லையா.. கொஞ்சம் பொறுமையுடன் காமிராவையும் சரியாகக் கையாண்டால் அருமையான படங்களை எல்லோரும் எடுக்கலாம் :-)
வாசிச்சதுக்கு நன்றி.
வாங்க முத்துலெட்சுமி,
உங்க வீட்டுப்பக்கம் மயில்களெல்லாம் வருதுன்னு ஒருக்கா பதிவுல சொன்ன ஞாபகம். இப்ப மழைக்காலம்தானே. இன்னும் வர்றாங்கன்னா கொஞ்சம் கண்ணுல காட்டறது :-))
வாசிச்சதுக்கு நன்றி
வாங்க மாதேவி,
காலையில் இதுங்க சத்தத்தைக் கேட்டுக்கிட்டே வெறுமனே கண்ணை மூடிப் படுத்திருக்கும்போது அப்படியே கிராமத்துல இருக்கறாப்பல ஒரு ஃபீலிங்கு :-))
வாசிச்சதுக்கு நன்றி.
வாங்க அமுதா,
ரொம்ப நன்றிங்க
வாங்க ராஜேஸ்வரி,
வாசிச்சு ரசிச்சதுக்கு நன்றிங்க
நம்மூரில் தினம் பார்க்கும் காக்கவ துபாயில் பார்க்க முடியல
புறா, குருவி தான் அதிகம்
படங்கள் சூப்பர்
வாங்க வலைஞரே,
வருகைக்கு நன்றி.
வாங்க லக்ஷ்மிம்மா,
எங்கூட்டு விருந்தாளிகளுக்கு தினம் எஞ்சாய்மெண்டுதான் :-)
உங்க வீட்டுப்பக்கம் இன்னும் நிறைய விருந்தாளிகள் சுத்திட்டிருப்பாங்க இல்லையா..
வாசிச்சதுக்கு நன்றி.
வாங்க கோமதிம்மா,
உங்கூட்டு விருந்தாளிகளை உங்க பதிவுல பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டேன். வீட்ல முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிறதைப் பார்த்ததும் இன்னும் சந்தோஷமா இருந்தது. எங்க பக்கங்கள்ல புறா மட்டுமே முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். அதையும் இப்பக் காண முடியலை.
வாசிச்சதுக்கு நன்றி.
வாங்க வெங்கட்,
ரசிச்சதுக்கு நன்றிங்க..
வாங்க ஹேம்ஸ்,
அம்மாவே சும்மாயிருக்கறப்ப ஐயாவுக்கு மேக்கப் செட்டா?.. சும்மாவே கையில பிடிக்க முடியாது. இதுல மேக்கப் கிட் வாங்கிக்கொடுத்துட்டாலும் :-)))
அம்மா கிட்ட கேட்டா இயற்கையாவே நான் அழகுதானேன்னு சொல்றாங்க :-)
வாங்க வல்லிம்மா,
இந்தியாவுல உள்ள குருவிங்கல்லாம் அரபு நாடுகளுக்குப் போயிருச்சு போலிருக்கு. ஹுஸைனம்மாவும் ஜலீலாக்காவும் ஒரு குருவிக்கூட்டமே அங்க வர்றதா சொல்லியிருக்காங்க பாருங்க.
வாசிச்சதுக்கு நன்றிம்மா..
வாங்க ராஜி,
தினம் கேட்டாலும் அலுக்காத பூபாளமில்லையோ :-)
வாசிச்சதுக்கு நன்றிங்க.
வாங்க இளங்கோ,
வாசிச்சு ரசிச்சதுக்கு நன்றிங்க..
வாங்க நாடோடி,
தினமும் கொக்கு வருதா?.. அது தலையில வெண்ணை வெச்சாவது பிடிச்சுப் போடுங்க உங்க பதிவுல :-)
வாசிச்சதுக்கு நன்றி.
வாங்க ஹுஸைனம்மா,
//எப்படிப்பா பறவைகளை ஃபோட்டோ எடுக்குறீங்க? //
இதென்ன கேள்வி?... காமிராவால்தான் ;-)
ச்சும்மா வெளாட்டுக்கு :-)
அதுங்களுக்குத் தெரியாம மறைஞ்சுருந்து எடுக்கறதுதான். தினமும் அதுங்களுக்கு நம்ம கையால சாப்பாடு போடறதை வழக்கமாக்கிட்டா அப்றம் நாம கிட்ட நின்னாலும் பயப்படாம இருக்கும். அப்புறமென்ன சுட வேண்டியதுதான்..
வாங்க ஸ்டார்ஜன்,
முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்துன்னு சொம்மாவா சொல்லியிருக்காங்க. அதனால அவங்களை நல்லாவே கவனிச்சுக்கறேன் :-)
வாசிச்சு ரசிச்சதுக்கு நன்றி..
வாங்க அறிவுக்கடல்,
எப்படீங்க கண்டுபிடிச்சீங்க அவங்க வேற்றுக்கிரக வாசிகள்ன்னு. பூமின்னு ஒரு கெரகம் இருக்காம். அங்கேருந்துதான் வந்துருக்காங்கன்னு செய்தி சொல்லுது. உங்கூட்டுக்கு வந்தா நல்லாக் கவனிங்க. இல்லைன்னா நெஜமாவே வேத்துக்கிரக வாசியாகிரும் :-)
வாசிச்சதுக்கு நன்றி.
வாங்க சங்கரலிங்கம் அண்ணா,
வாசிச்சு ரசிச்சதுக்கு நன்றி.
வாங்க தமிழ் இளங்கோ,
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
வாங்க ஜோசப்,
வருகைக்கு நன்றி.
வாங்க ஸ்ரீராம்,
நீங்க சொல்றது உண்மைதான். சுறுசுறுப்பான மாடல்களாக்கும் இவங்க. கொஞ்சம் பொறுமையாயிருந்தா விதவிதமான போஸ்களில் சுடலாம்.
உங்க வீட்டுப் புறாக்களையும் படம் பிடிச்சுப் போடுங்க.
வாங்க ஜலீலாக்கா,
வாசிச்சு ரசிச்சதுக்கு நன்றிக்கா.
Post a Comment