Thursday 12 July 2012

பூந்தோட்டம்.. (12-7-2012 அன்று பூத்தவை)


துளசி: உடல் எடை கூடிக்கிட்டே போகுதே!!.. எப்படிக்குறைக்கிறதுன்னு கவலைப்பட்டு ஜிம்மைத்தேடி இனிமே ஓட வேண்டாம். நல்லா காரமா சாப்பிட்டுக்கிட்டே எடையைக் குறைக்கலாம். ஆமாம்.. சிவப்பு மிளகாய்ல இருக்கற கேப்ஸைஸின் என்ற வேதிப்பொருள், கொழுப்பைக் கரைச்சு  உடல் எடையைக் குறைக்க உதவுதுன்னு மான்செஸ்டர் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்துல இருக்கற உணவு விஞ்ஞானியான வைட்டிங் கண்டுபிடிச்சுச் சொல்லியிருக்கார்.
இந்த கேப்ஸைஸினின் உதவியால் நம்ம உடம்பில் சூடு அதிகமாகி அதனால் அட்ரீனலின் சுரப்பு அதிகமாக்கப்பட்டு இறுதியில் மூளைக்கு கொழுப்பைக் கரைக்கும்படி உத்தரவு கிடைக்குது. தனக்குக் கிடைச்ச உத்தரவைச் செயல்படுத்தும் மூளை உடம்புல இருக்கற கொழுப்பு செல்களை அழிக்கும்படி அடுத்த கட்ட உத்தரவை தன்னோட பணியாட்களான உடலின் இதர இயக்கங்களுக்குக் கொடுக்குது. இதனால உடம்பின் எல்லாப் பாகங்கள்லயும் கொழுப்பு கரைக்கப்பட்டாலும் வயிற்றுப்பகுதியில் இருக்கற கொழுப்புத்தான் முக்கியமா கரைக்கப்படுதுன்னு ஆராய்ச்சிகள் சொல்லுது. ஆகவே இனிமே உடம்பின் கொழுப்பையும் எடையையும் குறைக்கணும்ன்னா டயட்ங்கற பேர்ல பட்டினி கிடந்தோ, ஜிம்முக்குப்போயி உடம்பை வருத்திக்கவோ தேவையில்லை,.. நல்லாக் காரமாச் சாப்பிட்டே குறைக்கலாம்.

சோன் டக்கா: மும்பையை எப்படியாவது குப்பையில்லா நகரமாக்கியே தீரணும்ன்னு எங்க மாநகராட்சி கங்கணம் கட்டிக்கிட்டிருக்கு. நாளைக்கு நடக்கப்போற பொதுக்கூட்டத்துல, தங்களோட இருப்பிடத்தையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமா குப்பையில்லாம வெச்சுக்கற அபார்ட்மெண்டுகளுக்கும், என்.ஜி.ஓக்களுக்கும், சமூக சேவை நிறுவனங்களுக்கும் சொத்து மற்றும் தண்ணீர் வரிகளில் சலுகை வழங்கப்படும்னு தீர்மானம் கொண்டு வரப்போறாங்க. இந்தத்தீர்மானம் மட்டும் நிறைவேறிடுச்சுன்னா, இன்னும் மூணு மாசத்துல இதை அமலுக்கும் கொண்டாந்துருவாங்க.

இன்னும் பத்தாயிரம் இடங்கள்ல புதுசா குப்பைத்தொட்டிகள் வைக்கப்போறதாவும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளுக்குன்னு தனித்தனியா வெச்சு, மக்கும் குப்பைகளை உரத்துக்கும் மக்காத குப்பைகளை மறு சுழற்சிக்கும் அனுப்பப் போறதாவும் சொல்லிட்டிருக்காங்க. கேக்க எல்லாம் நல்லாத்தான் இருக்கு. நடைமுறைக்கு வருமான்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

மகிழம்பூ: “வல்லமை” மின்னிதழில் ஒவ்வொரு வாரமும் ஒரு படைப்பாளியை, வல்லமையில் எழுதப்பட்ட அவர்களோட படைப்புகளின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து வழங்கப்படும் வல்லமையாளர் விருது திரு. இன்னம்பூரார் ஐயா அவர்களால் இந்த வாரம் எனக்கு வழங்கப்பட்டிருக்குது. வல்லமை இதழில் நான் எழுதி வெளிவந்த மந்திரச்சொல் என்ற கவிதைக்காக இந்த விருது கிடைச்சுருக்குது. மிக்க நன்றி இன்னம்பூரார் ஐயா. 

வேப்பம்பூ: நேத்து தொலைக்காட்சியில் பார்த்த ஒரு காட்சி உண்மையிலேயே நிறையப்பேரை அதிர வெச்சுருக்கும். உ.பியில் இருக்கும் ஒரு ஆஸ்பத்திரியில் மருத்துவர் பார்க்க வேண்டிய தையல் போடுதல், மற்றும் இஞ்செக்ஷன் கொடுக்கறது போன்ற வேலைகளை ஒரு வார்டு பாய் செஞ்சுட்டிருந்த காட்சிகளைத்தான் சொல்றேன்.

அவங்கல்லாம் மருத்துவப் பயிற்சி பெற்றவங்கதான்னும், சுமார் பத்து வருஷங்களாவே வெளி நோயாளிகள் பிரிவில் அவங்க நோயாளிகளுக்குச் சிகிச்சை கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்காங்கன்னும் கொஞ்சம் கூட தயக்கமில்லாம இயல்பா அந்த மாநிலத்தோட அதிகாரிகளும் அமைச்சர்களும் சப்போர்ட்டாச் சொன்னது இன்னும் அதிர்ச்சியைக் கொடுத்தது. எல்லாம் சரி,.. அவங்கல்லாம் அந்தளவுக்கு மருத்துவ அனுபவம் இருக்கறவங்கன்னா, பிரதம மந்திரி, அமைச்சர்கள், முதலமைச்சர்களுக்கும் இதே மாதிரி மருத்துவச் சேவை செய்வாங்களா?ங்கற கேள்விக்குத்தான் பதிலில்லை. இந்தப் பாக்கியமெல்லாம் நம்மைப் போன்ற சாமான்ய மனுஷங்களுக்குத்தான் கிடைக்கும் போலிருக்கு.

எருக்கம்பூ: எத்தனைதான் சட்டங்கள் கொண்டாந்தாலும் கருவிலேயே ஆரம்பிக்கும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறையற வழியைக் காணோம். பெண் சிசுக்கள் பிறந்தப்புறம் அழிக்கிறது பத்தாதுன்னு கருவிலேயேயும் அழிச்சுடறாங்க, ஆண் குழந்தை மோகம் அந்தளவுக்கு மக்களோட கண்ணை மறைச்சுருக்கு. இதுக்கு சில டாக்டர்களும், அல்ட்ரா சவுண்ட் என்ற அறிவியல் முன்னேற்றமும் துணை போறதுதான் வேதனை. இதைப்பத்தி விரிவா ஒரு பதிவே எழுதலாம். அந்தளவுக்கு விஷயமிருக்கு.
படங்கள் அளிச்ச கூகிளக்காவுக்கு நன்றி
இனிமே அப்படி, ஆணா பெண்ணான்னு கண்டறிஞ்சு பெண் குழந்தைகளை அழிக்கற பெற்றோர்களையும், அப்படிச் செய்யக் கட்டாயப்படுத்தற சுற்றத்தாரையும், கொலைக்குற்றம் சாட்டி, ஆயுள் தண்டனையோ அல்லது மரண தண்டனையோ விதிக்கலாம்ன்னு இ.பி.கோ செக்ஷன் 302ல் திருத்தம் கொண்டாரணும்ன்னு எங்க மாநில அரசு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்போவதா எங்க சுகாதார அமைச்சரான சுரேஷ் ஷெட்டி சொல்லியிருக்கார். ஆண் குழந்தைகள்தான் பெத்தவங்களைக் காப்பாத்தும், பெண் குழந்தைகள் பெத்தவங்களுக்குச் சுமைங்கற இந்த மன நிலையிலிருந்து மக்கள் வெளி வரணும். அப்பத்தான் இதுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்.

40 comments:

VijiParthiban said...

ஆஹா நல்ல பயனுள்ள தகவலாக இருக்குதே இன்று காலையிலேயே ... சிவப்பு மிளகாயில் இவ்வளவு நன்மைகள் இருக்கே...
நல்ல குறிப்பு..

VijiParthiban said...

ஆமாம் அக்கா காலையிலேயே எங்கு எடுத்த புகைப்படம் "பூந்தோட்டம்" அழகாக இருக்கிறது..

VijiParthiban said...

//நல்லாத்தான் இருக்கு. நடைமுறைக்கு வருமான்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்.//

நல்ல திட்டம் பொருத்திருந்து பார்ப்போம்....

VijiParthiban said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் .. இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்...

VijiParthiban said...

ஆமாம் அக்கா நானும் பார்த்தேன் .. ஆபத்திற்கு பாவம் இல்லையாம்....
பெண்குழந்தை வேண்டாம் வேண்டாம் என்று சொல்லி வருகிறார்களே .... வருங்காலத்தில் இருக்கு ஆண்களுக்கு எப்படித்தான் திருமணம் நடக்க போகிறதோ ஹி ஹி ஹி ஹி .... (கண்டிக்க பட வேண்டிய விஷயம் தான் இது. கடுமையாக தண்டிக்க பட வேண்டும் ).
அனைத்தும் அருமை..

CS. Mohan Kumar said...

சிகப்பு மிளகாய்க்கு பச்சை கொடி காட்டிடுவோம்

வல்லமையாருக்கு வாழ்த்துகள்

pudugaithendral said...

காரம் அதிகம் சாப்பிட்டா வயிற்றுவலியும் வரும்!!! :((

விருதுக்கு வாழ்த்துக்கள் :))

துளசி கோபால் said...

அதென்ன உடல் இளைக்கும் குறிப்பைத் துளசிக்குச் சொல்லி இருக்கீங்க?

அதுவும் காரமே ஆகாதுன்ற துளசிக்கு....ஙே.......

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துக்கள் .

கோமதி அரசு said...

பூந்தோட்டத்தில் உள்ள மலர்கள் எல்லாம் அழகு.

அது சொல்லும் செய்திகளும் அருமை.
விருது பெற்றதற்கு வாழ்த்து சாந்தி.

ராமலக்ஷ்மி said...

சிகப்பு மிளகாய் தகவல் புதிது.

அகற்றப்படா குப்பைக் கூளங்களின் படங்கள் அடிக்கடி செய்தித்தாள்களில் வந்தபடி. இங்கேயும் உங்க ஊரு திட்டம் வந்தால் நல்லது.

வல்லமையாளருக்கு வாழ்த்துகள்!

வேப்பம்பூ , எருக்கம்பூ கொடுமைகள் எப்பதான் மாறுமோ?

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான பயனுள்ள பதிவு.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

அமுதா கிருஷ்ணா said...

ஆந்திரா மக்கள் அவர்கள் சாப்பிடும் காரம் உடம்புக்கு நல்லது என்றே எப்போதும் வாதிடுவார்கள்.என்ன இப்படி சொல்கிறார்களே என்று யோசித்து இருக்கிறேன். உண்மை தான் போலும்.

குறையொன்றுமில்லை. said...

பூந்தோட்டம் பலசிறப்பான மலர்களால் வாசம் அடிக்குது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பொள்ளாச்சியில் டாக்டர் பூங்கொடியோட அறைக்கு வெளியே.. நீங்க் சந்திக்கக் காத்திருக்கும் டாக்டர் இவங்க தான்.. இவங்களைபோல வர வாய்ப்பு உள்ள குழந்தையாக இருக்கலாம் உங்க குழந்தை. ஆணா பெண்ணான்னு கேக்காதீங்கன்னு எழுதி இருந்தது..

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் பயனுள்ள பதிவு... பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (த.ம.4)

வெங்கட் நாகராஜ் said...

மணம் வீசும் பூந்தோட்டம்!!

த.ம. 5

மாதேவி said...

பல மலர்களைப் பறித்துவிட்டோம். :))

வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

ரசிக்கவைத்த பூந்தோட்டம் !

ஹுஸைனம்மா said...

//சோன் டக்கா//
இது என்ன பூ?

கசப்பான செய்திக்கு வேப்பம்பூ, பெண் சிசுக் கொலைக்கு எருக்கம்பூ...

வல்லமையாளருக்கு வாழ்த்துகள்.

உணவு உலகம் said...

//ஆண் குழந்தைகள்தான் பெத்தவங்களைக் காப்பாத்தும், பெண் குழந்தைகள் பெத்தவங்களுக்குச் சுமைங்கற இந்த மன நிலையிலிருந்து மக்கள் வெளி வரணும்//
உண்மைதான் சகோ.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க விஜி,

சிவப்பு மிளகாய் நல்லதுதான்.. அதுக்காக கிலோ கணக்குல உள்ளே தள்ளிராதீங்க.. பிடுங்கிக்கும் :-)))

பூந்தோட்டத்தை இணையத்தில் சுட்டேன்.

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மோகன் குமார்,

பச்சைக்கொடி காட்டறதெல்லாம் சரிதான். ஆனா அளவோடு காட்டுங்க. இல்லைன்னா காட்டு காட்டுன்னு காட்டீரும் :-))

வாசிச்சதுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

அதெல்லாம் நம்ம மக்கள் அளவோட சாப்பிடுவாங்கப்பா..

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துள்சிக்கா,

துளசி மாதிரியே மிளகாயும் உடலுக்கு நல்லதுன்னு எடுத்துச்சொல்லத்தான் அந்த ஒப்பிடல். மத்தபடி வேறொண்ணுமில்லை :-)

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நண்டு,

வாழ்த்துகளுக்கும் வாசிச்சதுக்கும் நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதிம்மா,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலக்ஷ்மி,

இந்தக்கொடுமைகள் கூடிய சீக்கிரமே அழியும்ன்னு நம்புவோம்..

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வை.கோ ஐயா,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமுதா,

நம்மூர்லயும் அந்தக்காலத்துல பச்சை மிளகாய், காய்ஞ்ச மிளகாய்ப்பழத்தைக் கடிச்சிக்கிட்டு பழையது குடிக்கும் வழக்கம் உண்டே. நம்ம முன்னோர்களுக்கும் இதெல்லாம் தெரிஞ்சு இருக்கலாமோ என்னவோ..

ஆந்திரா காரம் உச்சியில் நட்டுக்கிட்டு நிற்கும்ன்னு சொல்லுவாங்க. உண்மையான்னு நம்ம தென்றலைத்தான் கேக்கணும் :-))

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லக்ஷ்மிம்மா,

வாசம் நுகர்ந்ததுக்கு நன்றிம்மா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

என்ன சொன்னாலும் நம்ம மக்கள் கேக்கற வழியைத்தான் காணோம் :-(

வாசிச்சதுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தனபாலன்,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

பூந்தோட்டத்தில் வலம் வந்து மணம் நுகர்ந்ததுக்கு நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

ரொம்ப நன்றிங்க வருகை தந்தமைக்கும் வாழ்த்துகளுக்கும்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

பூந்தோட்டத்தை ரசித்தமைக்கு நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கரலிங்கம் அண்ணா,

வாசிச்சதுக்கு மிக்க நன்றிண்ணா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

இந்தப்பூவோட பேருதான் "சோன் டக்கா"..

டக்கரான பேரா இருக்குதில்லே :-))

[im]http://2.bp.blogspot.com/-ZofAWK3s89o/TzECqyvbCbI/AAAAAAAACGQ/R3gEd-JR-ho/s400/sontaka.JPG[/im]

pudugaithendral said...

ஆந்திரா காரம் உச்சியில் நட்டுக்கிட்டு நிற்கும்ன்னு சொல்லுவாங்க. உண்மையான்னு நம்ம தென்றலைத்தான் கேக்கணும் :-))//

சூப்பரா பதிவு போட்டுடுவோம். :))

pudugaithendral said...

http://pudugaithendral.blogspot.in/2012/07/blog-post.html

பதிவு போட்டாச்சு. உங்க பதிவுக்கான சுட்டியும் கொடுத்திருக்கேன்.

LinkWithin

Related Posts with Thumbnails