"வழி நடத்தும் கோடுகள்".. இதான் நம்ம பிட் குழுவினர் நடத்தும் போட்டிக்கான இந்த மாதத்தலைப்பு.. ஒரு காட்சியை அழகான புகைப்படமாப் பதிவு செய்யறப்ப கவனத்துல கொள்ள வேண்டிய முக்கியமான அம்சத்தையே இந்த மாசத்தலைப்பாக் கொடுத்துருக்காங்க.
கோடுகள் நம்மை எப்படிங்க வழி நடத்தும்ன்னு கேக்கறீங்கதானே?.. பிட் நடத்தும் பாடங்களை வகுப்பறையின் ஒரு ஓரமா நின்னுக்கிட்டுக் கவனிச்சுட்டு வரும் மாணவிங்கற முறையில் உதாரணத்தை வகுப்பறையிலிருந்தே ஆரம்பிக்கிறேன்.
இப்ப ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்துற, நம்ம சின்னவயசுப் பள்ளிக்கூட அனுபவத்தை மறுபடியும் ஞாபகத்துக்குக் கொண்டாங்க.. கரும்பலகையில் எழுதியிருக்கறதை அப்படியே வாசிச்சுட்டுப் போனா, அரைகுறைத் தூக்கத்துல இருக்கற என்னை மாதிரி மாணவச் செல்வங்களுக்கு, எந்த வரியை விளக்கறார்ன்னு புரியாது. அதனால, ஒரு பிரம்பை வெச்சுக்கிட்டு எந்த வரியை வாசிக்கிறாரோ அந்த வரியை பிரம்பால தொட்டுத்தொட்டு விளக்குவார் இல்லையா?.. அப்படி விளக்கறப்ப நம்ம கண்ணுக்கு எழுத்துகளை நோக்கி பிரம்பு இட்டுச் செல்லும்.
இந்தக் காட்சியில் வரிங்கறது நம்ம சப்ஜெக்ட். பிரம்புங்கறது வழி நடத்திச் செல்லும் கோடு. அதே மாதிரி நாம ஒரு பொருளைப் புகைப்படமாப் பதிவு செய்யறப்ப அதை நோக்கி இட்டுச் செல்லும் கோடுகளாக வேறு பொருட்களோ, நபர்களோ, பாதைகளோ அமைஞ்சா அந்தப் புகைப்படம் ரொம்ப அழகா அமையும்ன்னு நிபுணர்கள் சொல்றாங்க.
ஜெயிக்கிறோமோ இல்லையோ, நாமும் இங்கே இருக்கோம்ங்கறதைத் தெரிவிச்சுக்கறதுக்காகவாவது இந்த மாசமாவது படம் அனுப்பணும்ன்னு முடிவு செஞ்சு படமும் அனுப்பியாச்சு. அதுக்காக நான் சுட்டெடுத்த மத்த படங்களை உங்களுக்குக் காட்டாம வெச்சுக்க முடியுமோ? :-)
கோயிலை நோக்கிக் கூட்டிட்டுப் போற ரோடு..
போட்டியில ஜெயிக்கணும்ன்னு கோயில்ல போயி பிரார்த்தனை செய்யலாம்.. ஆனா, அதுக்குப் பதிலா கோயிலையே போட்டிக்கு அனுப்பிட்டா என்ன?.. அதான் முதல் படத்தைஅனுப்பிட்டேன் :-)
மும்பையின் கமலா நேரு பூங்காவின் உட்பக்கத்துக்குக் கூட்டிட்டுப் போகுது..
நடைபாதையும் இருபக்கத்திலும் இருக்கும் தடைக் கற்களும் பையரை நோக்கிக் கூட்டிப்போகுது..( என் பையர்தான் :-))
ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் சிறுவர்களை நோக்கிப்போகும் கைப்பிடிச் சுவர்
கடலை நோக்கிக் குறிவைக்கும் அலிபாக் கோட்டைப்பீரங்கிகள்..
விவேகானந்தர் மண்டபத்தை நோக்கிக் கூட்டிப்போகும் படிக்கட்டுகள்..
ஷிங்கனாப்பூர் கோயிலுக்கு வெளியே கூட்டிப்போகும் கோடுகள்..
நீலப்பாம்புகளா.. பலூன்களா?.. இட்டுச்செல்லும் கோடுகள் வழியே போய்ப்பார்ப்போம்..
18 comments:
எல்லாப் படங்களும் அருமை. என் சாய்ஸ்: பீரங்கிகளிலிருந்து நம்ம கண்களே குண்டுகளாப் பாயற மாதிரி ஃபீலிங்:)!
பிரம்பு மேட்டர் சூப்பர்:)!
அனைத்துமே அருமையான தேர்வுகள்.
எனக்கு மிகவும் பிடித்தது அந்த செம்பருத்திபூவிலிருந்து நேர்கோடாக நீண்டு, மகரந்தங்களைக் காட்டியுள்ள அழகோ அழகான படம் தான்.
அது இயற்கை அழகன்றோ! ;)))))
பகிர்வுக்கு நன்றிகள், பாராட்டுக்கள்.
பரிசுபெற அன்பான வாழ்த்துகள்.
சும்மாச் சொல்லக்கூடாது..... இருத்தலின் அடையாளமே இந்தப் போடு போடுதுன்னா.......!!!!!!
//ஆகவே உங்கள் பொன்னான கருத்துகளைக் கூறுமாறு தாறுமாறாக மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்//
நீங்கள் தாறுமாறாக மன்றாடிக் கேட்டுக் கொண்டாலும், யாருன் தாறுமாறாகக் கருத்துக்கூறாமல், அழகாக வரையப்பட்ட நேர் கோடுகள் போன்றே
நேர்மையாகவே பாஸிடிவ் ஆகவே தான் கருத்துக்கூறுவோம். ;)))))
படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு சாந்தி வாழ்த்துகள்.
"கோயிலையே போட்டிக்கு அனுப்பிட்டா" :)) ரசித்தேன்.
படங்கள் அருமையாக இருக்கின்றன.
கோயிலை நோக்கிப் போகும் கோடுகளும், உங்க பையர் நடக்கிற கோடு படமும் என்னோட சாய்ஸ். அதுக்காக மத்த படங்கள் குறைஞ்சதுன்னு அர்த்தமில்ல சாரல் மேடம்! பீரங்கி படம் உட்பட எல்லாமே சூப்பர்ன்னாலும் இந்த ரெண்டு ஸ்பெஷல்!
அனைத்துப் படங்களும் அருமை சாரல்.
நீங்கள் கட்டும் பதையில் உங்கள் பையனார் நடக்கும் படமே எனக்குப் பிடித்தது!! அழகான படமெடுத்த கைகளுக்கு என் வாழ்த்துகள்.
எல்லாப் படங்களும் அருமையான தேர்வு. ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கிறது.
பிரம்பு ஞாபகமெல்லாம் வருது சாரலுக்கு.வெற்றிதான் வேறயென்ன !
அனைத்துப் படங்களுமே அருமை. பீரங்கி படமும் நடைபாதை படமும் எனக்கு மிகவும் பிடித்தது.
வெற்றி பெற வாழ்த்துகள்.
அனைத்துமே அழகென்றாலும், மகரந்தத்தை நோக்கி செல்லும் கோடு அழகு.
வெற்றிகு வாழ்த்துக்கள்.
aஅருமையான படங்கள்.ரசனையுடன் எடுத்துள்ளீர்கள்.
ஒரு பிரம்பை வெச்சுக்கிட்டு எந்த வரியை வாசிக்கிறாரோ அந்த வரியை பிரம்பால தொட்டுத்தொட்டு விளக்குவார் இல்லையா?.. அப்படி விளக்கறப்ப நம்ம கண்ணுக்கு எழுத்துகளை நோக்கி பிரம்பு இட்டுச் செல்லும்.
இந்தக் காட்சியில் வரிங்கறது நம்ம சப்ஜெக்ட். பிரம்புங்கறது வழி நடத்திச் செல்லும் கோடு. //
வழி நடத்துச் செல்லும் கோடுக்கு விளக்கம் அருமை.
படங்கள் எல்லாம் அழகு. முதல் படம் படு பொருத்தம்.
எல்லாமே படங்களுமே அழகாக இருக்கிறது. பிரம்பு மேட்டர் அருமை.
அருமையான படங்கள்.எல்லாமே ஒவ்வொரு விதத்தில் அழகு.
போட்டியில ஜெயிக்கணும்ன்னு கோயில்ல போயி பிரார்த்தனை செய்யலாம்.. ஆனா, அதுக்குப் பதிலா கோயிலையே போட்டிக்கு அனுப்பிட்டா என்ன?.. அதான் முதல் படத்தைஅனுப்பிட்டேன் :-)
அருமையான சிந்தனை..
பரிசு பெற வாழ்த்துகள்
கருத்துரையிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி..
Post a Comment