Wednesday 11 January 2012

மும்பை-2012 புகைப்படக் கண்காட்சியும் நானும்..

அடுத்த வருஷங்களுக்கான அறிவிப்பு..
ஏதாவது ஒரு பொதுவான தொழில்ல இருக்கற நண்பர்கள் உதவி தேவைப்படும் சமயங்களில், தங்களுக்குள்ளயே ஒருத்தருக்கொருத்தர் உதவிக்கறது சகஜம்தான். இப்ப நம்ம பதிவுலகத்தையே எடுத்துக்குவோம். நமக்கு தெரிஞ்ச தொழில் நுட்பங்களை இடுகையிடறது மூலமா, நிச்சயம் ஒருத்தருக்கொருத்தர் உதவிக்கறோம்தானே.

1970-களில் மும்பையின் ஃபோர்ட் பகுதியில் போட்டோ ஸ்டுடியோ வெச்சிருந்த சில நண்பர்களும் அப்படித்தான் தங்களுக்குள்ளேயே தொழில் முறையில் உதவி செஞ்சுக்கறதை வழக்கமா வெச்சிருந்தாங்க. புகைப்படத் துறையில் நாளுக்கு நாள் எவ்வளவோ புதுப்புது முயற்சிகள் நடக்குது, புகைப்படக் கருவிகள், லென்சுகள்ன்னு சந்தைக்கு தெனமும் எவ்வளவோ விதவிதமா வந்துக்கிட்டே இருக்குது. இது தவிர, எடுத்த படத்தை டெவலப் செய்யறது, ப்ரிண்ட் போடறது, அதுகளை ஆல்பமாக்குறதுன்னு எவ்வளவோ வேலைகள் இருக்குது. (அப்ப டிஜிட்டல் காலம் வரலைங்கறதை நினைவில் கொள்க).


அந்த வேலைகளில் ஏற்படற சந்தேகங்களை நிவர்த்தி செய்யறதுல ஆரம்பிச்சு, ஆல்பம் தயார் செய்யறதுக்கான தரமான பொருட்கள், பிலிம், எங்கே டெவலப் செய்யக் கொடுத்தா வேலை தரமானதா இருக்கும்கற தகவல் உதவிகள் உட்பட எல்லோரும் ஒருத்தருக்கொருத்தர் பகிர்ந்துக்குவாங்க. இப்ப நம்ம ‘பிட்,ஃப்ளிக்கர்’ எல்லாம் ஆத்துதே.. அதே கடமையைத்தான் அப்ப அவங்களும் ஆத்திக் கிட்டிருந்துருக்காங்க.

அப்பத்தான், இதை மாதிரி தகவல் உதவிகள் தேவைப்படற மத்த புகைப்பட ஆர்வலர்களுக்கும் உதவியா இருக்கற மாதிரி நம்ம வட்டத்தை பெரூசாக்கினா என்னான்னு அவங்களுக்கு தோணியிருக்கு. மளமளன்னு ஏற்பாடுகள்ல இறங்கி, 1973-ம் வருஷம் ஜூன் 23-ம் தேதியன்னிக்கு சுமார் இருபத்தஞ்சு நண்பர்கள் கூடி, Photographic Dealers Association(PDA)ன்னு ஒரு அமைப்பை ஏற்படுத்தினாங்க. காலப்போக்குல வட்டம் 3400 மெம்பர்களைக் கொண்டதா வளர்ந்து தன்னோட பேரை All India Photographic Trade & Industry Association அப்டீன்னு மாத்திக்கிடுச்சு.
கண்காட்சிக்குள் ஒரு கண்காட்சி..
புகைப்படக் கலையை ஊக்குவிக்கறதுக்காகவும், லேட்டஸ்டான டெக்னிக்குகளை மக்கள் கிட்ட பகிர்ந்துக்கவும் என்ன வழின்னு யோசிச்சப்பதான் மக்களெல்லாம் ஒரு கூரையின் கீழ் கூடி எக்ஸிபிஷன் நடத்தினா என்ன?ன்னு தோணியிருக்கு. புகைப்படக் கலை சம்பந்தமா இருக்கற எல்லா விஷயங்களும் ஒரு கூரையின் கீழ் கிடைக்குதுன்னா நல்லதுதானே.. அப்படியே மக்கள் தாங்கள் எடுத்த புகைப்படங்களையும் கண்காட்சியா வெச்சாங்கன்னா, புது விஷயங்களையும் கத்துக்கிடலாம்ன்னு முடிவெடுத்து 1978-ம் வருஷம் முதற் கொண்டு ‘போட்டோ ஃபேர்’ நடத்த ஆரம்பிச்சுருக்காங்க. அப்பலேர்ந்து இன்னி வரைக்கும் அதே கோரேகாவ் (Goregaon) NSE மைதானத்துல இருக்கற Bombay Exhibition Centre-லதான் இது நடக்குதுங்கறது ஒரு விசேஷச் செய்தி. இங்கே மட்டும் இன்னும் மும்பையாக்காம விட்டு வெச்சிருக்காங்களேன்னு யோசனையோட பார்த்தேன். ஒரு கேட்ல மட்டும் Bombay-ஐ சுரண்டி எடுத்துட்டு, வெறுமே எக்ஸிபிஷன் செண்டரை மட்டும் விட்டு வெச்சிருக்காங்க. மத்த கேட்ல இன்னும் பாம்பேயோட அதிகாரம்தான் நடக்குது.
கண்காட்சி நடக்குற இடத்துல உள்ளே ஸ்டால் போடறவங்களுக்காகவும், அதெல்லாம் சரியாயிருக்கான்னு செக் செய்யறதுக்காக வந்து போற பார்வையாளர்களுக்கும் தனித்தனியா ஆன்லைன்ல ரெஜிஸ்ட்ரேஷன் வசதி செஞ்சுருந்தாங்க. அதெல்லாம் வெளியூர்லேர்ந்து வரவங்களுக்குத்தான். உள்ளூர்க் காரங்க நமக்கெதுக்கு? நாம நேரடியா டீல் செஞ்சுக்குவோம்ன்னுட்டு கிளம்பிட்டோம். நீள நீளமான மேசைகள்ல விண்ணப்ப படிவங்களை வெச்சுக்கிட்டு நமக்காகக் கால் கடுக்க காத்துட்டிருக்காங்க. படிவத்தை நிரப்பிக்கிட்டு, பக்கத்துலயே இருக்கற ஜன்னல்ல நூறு ரூபாயையும் சேர்த்துக் கொடுத்ததும், கொஞ்சம் இந்தப் பக்கம் வந்து காமிராவைப் பாருங்கன்னு சொல்லி நம்மைப் படம் எடுத்துக்கறாங்க. ஆச்சு.. ஐடி தயார். அதையும் ஐடியை கழுத்துல போட்டுக்கறதுக்காக ரிப்பனில் கோர்த்த கார்டையும் ஒரு பையில் போட்டுக் கொடுத்துடறாங்க. வாங்கிட்டு நேராப் போயி க்யூவில் நின்னு உள்ளே நுழைஞ்சோம்.

பீரங்கியை.. அதாங்க.. நம்ம கேனானை தவிர மத்தவங்க எல்லாம் ஸ்டால் போட்டுருக்காங்க. ஒலிம்பஸ், ஃப்யூஜியோட நம்ம நிகானும் அங்கே நிக்கார். மொதல்ல ஒவ்வொரு வரிசையா பார்த்துட்டே வருவோம். வேணுங்கறதை மனசுல முடிச்சுப் போட்டு வெச்சுக்கிட்டு, பொருளை கம்பேர் செஞ்சு வாங்கிக்கலாம்ன்னு முடிவு எடுத்திருந்தேன். அதான் ஒவ்வொரு பொருளுக்கும் நாலஞ்சு கடைகள் தொறந்து வெச்சுருக்காங்களே..
ஸ்டால்கள்..
முந்தின தடவை போயிருந்தப்ப போட்டோ, வீடியோ காமிராக்கள், லென்சுகள்ன்னு நிறைய கடைகள் இருந்தது. இப்ப ஒரே ஒரு கடையை தவிர மத்த இடங்கள்ல காமிராக்களை காணோம். ஜூம் லென்சுகள் பார்க்கலாம்ன்னு ஒரு ஐடியா இருந்தது. ஆனா sigmaவுல மட்டும்தான் லென்சுகள் வெச்சிருந்தாங்க. நாலஞ்சு கடைகள் பார்த்துட்டு, ஒரு கடையில் வாங்கினாத்தானே நமக்கு திருப்தி. வெறுமே ஒரே ஒரு கடையில் பார்த்துட்டு வாங்கினா நம்ம கொளுகையை விட்டுக் கொடுத்துட்டதா ஆகிடாதோ.. அதனால வெறுமே ட்ரைபாட் மட்டும் வாங்கிக்கிட்டேன். லென்ஸ் வேணும்னா இங்கே இருக்கற வாஷிக்குப் போனா ஆச்சு. இன்னொரு சமயம் வாங்கிக்கலாம். மொதல்ல எனக்கு எந்த மாதிரி லென்ஸ் தேவைங்கறதை மொதல்ல முடிவு செஞ்சுட்டு அப்றம் போகலாம்ன்னு ஒத்திப் போட்டுட்டேன்.

போட்டோ ஸ்டுடியோ வெச்சுருக்கறவங்களுக்கு இந்தத் தடவை நடந்த கண்காட்சி ரொம்பவே உபயோகமா இருந்துருக்கும்.ஃப்ளாஷ் லைட்டுகள், ரிஃப்ளெக்டர்கள், ட்ரைபாடுகள், பின்னணிக்கான துணிகள், அப்றம் வீடியோவுலயும், போட்டோக்கள்லயும் உபயோகப் படுத்தறதுக்கான எக்கச்சக்கமான தீம்களுக்கான சாப்ட்வேர்கள், போட்டோ ஃப்ரேம்கள், வீடியோ எடிட்டிங்குக்கான சாப்ட்வேர்ன்னு கொட்டிக் கிடந்துது. இப்பல்லாம் கல்யாண வீடியோக்கள், போட்டோக்களை 3D தொழில் நுட்பத்துல தயாரிக்கிறதுதான் லேட்டஸ்ட் ட்ரெண்டு. விருப்பமிருக்கறவங்க பேரைப் பதிஞ்சுகிட்டா, எப்படித் தயாரிக்கிறதுன்னு பயிற்சி கொடுப்பாங்க. பயிற்சி எடுத்தப்புறம் அந்த முறையில் வீடியோக்கள், போட்டோக்கள்ன்னு தயார் செஞ்சு அசத்தலாம். அதுக்குன்னு இருக்கும் கண்ணாடியைப் போட்டுக்கிட்டு வீடியோக்களைப் பார்த்து எஞ்சாயலாம் :-)

இப்பல்லாம் யாரும் பெயர் பொறிக்கறதில்லையாம்...
இப்பல்லாம் கப், தலையணை, ப்ளேட், பொம்மை இத்யாதிகள்ல தங்களோட போட்டோக்களை பதிஞ்சு வெச்சுக்கற வழக்கம் பெருகிட்டு வருது. முக்கியமா குட்டீஸ் இதை ரொம்பவே விரும்பறாங்க. அதுக்கான கருவிகளும் காணக்கிடைச்சது. அதே மாதிரி சினிமா, டெலிவிஷன் ஷூட்டிங்குகளுக்கு உபயோகப் படுத்தற கிரேன்கள் அங்கங்கே கொக்கு மாதிரி தலையை நீட்டி எட்டிப் பார்த்துட்டு இருக்குது. ‘ஸ்டெடிகேம்’ன்னு ஒரு வகை காமிரா. இது கூடுதல் அதிர்வுகள் இல்லாம ஷூட் செய்ய ஏதுவா இருக்குமாம். மத்த காமிராக்கள் மாதிரி இதை ட்ரைபாடிலோ, ட்ராலியிலோ வைக்க தேவையில்லை. காமிராமேன் உடம்புல கட்டிக்கிட்டு நடிகர், நடிகைகள் கூடவே நடந்து போய் நடிப்பைப் படம் பிடிக்க ஏதுவா Garrett Brown என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டிருக்கு. இதை உடம்புல கட்டிக்கிட்டு ரெண்டு பேர் அங்கியும் இங்கியும் நடந்து டெமோ கொடுத்துட்டிருந்தாங்க.
ஸ்டெடியாப் படம் புடிக்கும் ஸ்டெடிகேம்..
கண்காட்சி நடந்த நாட்கள் முழுசும், பிரபல போட்டோகிராபர்கள் வந்து, வொர்க் ஷாப்கள் நடத்துனாங்க. அழகழகான போட்டோக்களெல்லாம் கண்காட்சிக்கு வெச்சிருந்தாங்க. விட்டுட்டு வர மனசேயில்லை. போன தடவை ஃபேஷன் ஷோ சமயத்துல மாடல்கள் ஒவ்வொரு கம்பெனிகளோட காமிராக்களைக் கையில் பிடிச்சுட்டு பூனை நடை நடந்துட்டிருந்தாங்க. இந்தத் தடவை portrait மாடலிங்காம். அங்கங்கே நின்னு போஸ் கொடுத்துட்டிருந்தாங்க. தொழில் முறை போட்டோ கிராபர்கள் சந்தர்ப்பத்தை உபயோகிச்சுக்கிட்டு சுட்டுத் தள்ளிட்டிருந்தாங்க. என்னை மாதிரி கத்துக்குட்டிகள் ‘ஞே’ன்னு வேடிக்கை பார்த்துட்டு நகர்ந்து போயிட்டோம்.
வளைச்சு வளைச்சு படம் எடுத்தாலும் அசராம போஸ் கொடுத்தவங்க..
காஃபிடோரியா பரவாயில்லாம இருக்கு.இன்னும் நாலு டேபிள் சேர் போட்டுருந்தா, அலைஞ்சு திரிஞ்சு அலுத்த கால்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துட்டு, வாய்க்கு வேலை கொடுத்துருக்கலாம். இல்லாததால மியூசிக் சேர் விளையாண்ட மாதிரி, உக்காந்துர்ந்தவங்கள்ல யாரு எழுந்திரிச்சுப் போறான்னு கவனிச்சுட்டு இருந்துட்டுக் காலியான நாற்காலியைக் கபால்ன்னு கவ்விட்டு வர வேண்டியதாப் போச்சு.

அடுத்த வருஷத்துக்கான புகைப்படக் கண்காட்சி இந்தியத் தலை நகர்ல நடக்கப் போவுதாம். துண்டு போட்டு இடம் புடிக்க ரெடியா இருந்துக்கோங்க. அதுக்கு அடுத்த வருஷம் அதாவது 2014-ல் மறுபடியும் மும்பை வருதாம்.


24 comments:

குறையொன்றுமில்லை. said...

படங்களும் பகிர்வும் நல்லா சொல்லி இருக்கே. உன்க்கு போட்டோகலையில் நிறைய ஆர்வம் இருப்பது புரியுது. வாழ்த்துகள்.

ஆமினா said...

கேமரா பத்தி என்னமோ சொல்றீங்க... நானும் ஙேன்னு கேட்டுட்டிருக்கேன் :-)

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு.

ஆம், அடுத்த லென்ஸ் அப்படி சட்டுபுட்டுனு முடிவு செய்து வாங்கிட முடியாது. நம்ம தேவை என்ன என்பதை ரொம்ப ஆராய்ந்து வாங்கணும்தான்.

நல்ல பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி சாந்தி.

/அடுத்த வருஷத்துக்கான புகைப்படக் கண்காட்சி இந்தியத் தலை நகர்ல நடக்கப் போவுதாம். துண்டு போட்டு இடம் புடிக்க ரெடியா இருந்துக்கோங்க. அதுக்கு அடுத்த வருஷம் அதாவது 2014-ல் மறுபடியும் மும்பை வருதாம்./

எப்பதான் பெங்களூர் வருதாம்:)?

RAMA RAVI (RAMVI) said...

பல நல்ல தகவல்களை தொகுத்து கொடுத்திருக்கீங்க.படங்களும் அருமை.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நண்டு,

வரவுக்கும் வாழ்த்துகளுக்கும் ரொம்ப நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

புதுசா ஒரு நல்ல விஷயத்தை தெரிஞ்சுக்கணும்ங்கற ஆர்வம்தான் அடிப்படை. அதுவும், நுணுக்கங்களைச் சொல்லித்தர நம்ம பிட்டும், பார்த்துட்டு நல்லாருக்கா இல்லையான்னு சொல்ல நீங்களும் இருக்கறீங்கங்கற தைரியம்தான் இதுல இறங்க வைச்சிருக்குது :-)

Thoduvanam said...

Super..very informative..

Yaathoramani.blogspot.com said...

அறியாத தகவல்கள் பலவற்றை தங்கள் பதிவன் மூலம்
அறிந்து கொள்ள முடிந்தது
படங்களும் விளக்கிச் சொன்னவிதமும் மிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

நிறைய புதிய விஷயங்களை அறிந்து கொண்டோம்..

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.. நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆமினா,

மொதல்ல அப்படித்தான் முழிப்போம்.. போகப்போக எல்லாம் சரியாயிடும் :-)))))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

இந்த ஜூம் லென்சுகளைப்பத்தி 'பிட்'டில் யாராவது பாடம் நடத்தினாத் தேவலை. டெலிபோட்டோ, வைட் ஆங்கிள்ன்னு என்னன்னவோ படிச்சு குழம்பிட்டிருக்கேன். நீங்களாவது சொல்லிக் கொடுங்க டீச்சர் :-)))

டெல்லிக்கும் மும்பைக்கும் மாத்தி மாத்தி போட்டோஃபேரும்,ஆட்டோஃபேரும் பயணிக்குது. ஆமா,.. ஏன் பெங்களூருக்கு வர மாட்டேங்குது. எனக்கும் இதான் கேள்வி???

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமா,

அருமைன்னு சொன்னதுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்கீஸ் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க காளிதாஸ்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி :-)

ராமலக்ஷ்மி said...

ஆட்டோ ஃபேர் வருடம் தவறாமல் வருது. ஃபோட்டோ ஃபேர் ஒருவேளை வந்தும் நான் கவனிக்கலையா தெரியலை.

லென்சு அனுபவம் எனக்கு அதிகமில்லை. DSLR-கு மாறி ஒரு வருஷம்தானே ஆகுது. என்னென்ன தேவைகளுக்கு எந்த லென்சு பெட்டர்னு சீனியர்கள் யாரையாவது பதிவு போட வச்சுடலாம்:)!

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு. தகவல்கள் உபயோகமா இருக்கும்.

Kanchana Radhakrishnan said...

அருமையான பகிர்வு.

Menaga Sathia said...

படங்கள் கலக்கல்,பகிர்வுக்கு நன்றிக்கா!! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

உணவு உலகம் said...

ரொம்ப லேட். இருந்தாலும் படிச்சிட்டேன். நல்லா சுத்திப் பார்த்திருக்கீங்க. பகிர்வு நல்லா இருந்தது. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள், சகோ.

அன்புடன் நான் said...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Thoduvanam said...

படித்தேன்.ரசித்தேன்.கோவை பற்றிய காணொளி ரொம்ப அருமைங்க.வாழ்த்துக்கள்

ஹுஸைனம்மா said...

முதல்ல ஸாரி ஃபார் லேட் கமிங். புது வருஷம் ஆரம்பிச்சதுலருந்து, சோம்பேறியாப் போன மாதிரி ஃபீலிங். நிறைய பதிவுகள் இன்னும் பாக்கி இருக்கு!! :-((((

புகைப்படக் கண்காட்சின்னதும், புகைப்படங்கள் வைத்திருக்கும் கண்காட்சின்னு நினைச்சு, நேஷனல் ஜியோகிரஃபி லெவலுக்குப் படங்களை எதிர்பார்த்து அடிச்சுப் புடிச்சு ஓடியாந்தா.... “புகைப்படக் கருவிகள்” கண்காட்சியா... அவ்வ்வ்வ்..... இது நம்ம ஏரியா இல்லை.... க்ர்ர்ர்ர்ர்ர்...

ஆனாலும், நீங்க புடிச்ச படங்கள் நல்லாத்தான் இருக்கு. அதுவும், அந்த “ரெட் மக்” (Mug) படத்துல வரிசையா அடுக்கிருக்கிற மக்குகள் (நானில்லை) ஒரு கோணத்துல பாக்கறதுக்கு பூட்டுகள் மாதிரி இருக்கு.

ஸ்டெடிகேம் - சுவாரஸ்யம்.

//portrait மாடலிங்காம்.//
இதுக்குக் கீழேயுள்ள படத்துல இருக்கவங்க பொம்மையா நிஜ மனுஷங்களா?

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

இப்பத்தான் முழிப்பு வந்துச்சான்னு திட்டாம ஏதோ இப்பவாவது நீங்க கமெண்டினதை முழிச்சுப் பார்த்தேனேன்னு சந்தோஷப்பட்டுக்கணும் :-))

கண்காச்சி நடத்தணும்ன்னு கழுத்து மட்டும் ஆசையிருக்கு. பார்ப்போம்,.. உங்க வாய்முகூர்த்தம் பலிக்குதான்னு.

பொம்மையாட்டம் அசையாம நிக்கிறாங்க இல்லே இந்த மாடல்கள் :-))

LinkWithin

Related Posts with Thumbnails