Wednesday, 3 August 2011

'பழ'மொழிகள் பத்து..

(படத்துக்கு நன்றி -இணையம்)
1. மாம்பழத்தை மரத்துலே பார்த்தா,..ஊறுகாயை பாட்டில்ல பார்க்கலாம்

2. மாமியார் உரிச்சா பலாப்பழம் .. மருமகள் உரிச்சா வாழைப்பழம்.

3. கூரை ஏறி கொய்யாப்பழம் பறிக்கமுடியாதவன்,..ஆல்ப்ஸ் மலைஏறி ஆப்பிள் பறிச்சேன்னானாம்..

4. ஒரு பெட்டி திராட்சைக்கு ஒரு பழம் பதம்..

5. ஆயிரம் ரூபாய்க்கு அன்னாசி வாங்குனவன்,.. அஞ்சு ரூபாய்க்கு கத்தி வாங்க யோசிச்சானாம்.

6. அக்கடை வாடிக்கையாளருக்கு இக்கடைப்பழம் சிறப்பு.

7. பேரீச்சம்பழம் களவுபோனா கணக்கு பார்ப்பான்.. பேரீச்சைமரம் போன இடம் தெரியாது.

8. பண்டிகை காலத்துல பஞ்சாமிர்தத்துலயும் அஞ்சாறு வகையாம்.

9. பழச்சாறு பிழியறப்ப சும்மா இருந்துட்டு, குடிக்கிறப்ப கிளாசை தூக்கிக்கிட்டு வந்த கதையால்ல இருக்கு!!!..

10.அலங்காரக்கூடையாம், ஜரிகைத்தாளாம்.. உள்ளே இருக்குமாம் அழுகலும் புளிப்பும்.



டிஸ்கி: இதுமாதிரி உங்களுக்கு தெரிஞ்ச பழமொழிகளை ரீமிக்ஸ் செஞ்சு 'பழ'மொழிகளாக்கி பின்னூட்டத்துல எடுத்துவிடுங்க :-))





53 comments:

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... பழ ஜூஸ் ரெடி!

மாய உலகம் said...

ஆஹா பழமொழிகள் பத்து அனைத்தும் சொத்துக்கள் என்று சொல்லவா முத்துக்கள் என்று சொல்லவா.. அருமை

மாய உலகம் said...

பழமொழி 1 :பகலில் பசுமாடு தெரியாதவனுக்கு இருட்டில் எப்படி எருமை மாடு தெரியும்

மாய உலகம் said...

2. பிரியமில்லாத பெண்டிரை விட பேய் நன்று

மாய உலகம் said...

3. குழந்தை தன்னை தூக்கி வச்சி கொஞ்சுகிறவனைத்தான் தெரியும். உண்மையான அன்பு வச்சிருக்கிறவனுக்குத் தெரியாது.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

சித்துவுக்கு ஒரு ஜூஸ் பார்சேல்ல்ல்ல் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாய உலகம்,

பழமொழிகள் சொன்னீங்க.. அதுல பழத்தைக்காணோமே :-)))

ப.கந்தசாமி said...

ரொம்ப யோசிச்சிருப்பீங்க போல. எங்களுக்கு அவ்வளவு பத்தாதுங்க.

Mahi_Granny said...

எனக்கு எல்லாமே புது மொழிகள்

ராமலக்ஷ்மி said...

புதுமொழிகள் அத்தனையும் பொன்மொழிகள்:))!

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா பிரமாதமா சொல்லிட்டீங்க....!!!

MANO நாஞ்சில் மனோ said...

பழ'மொழிகள் அனைத்தும் சூப்பர் ஜூஸ்.....!!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஹா ஹா.. சூப்பர் பா!!!

(சரி சரி.. நா கேள்விப்பட்ட ஒரு ரீமிக்ஸ் பழமொழி சொல்றேன்.. அடிக்க ஆள் அனுப்பிராதீங்க...!! :)))) )

"கேக்குறவன் கேனையனா இருந்தா..
கே.ஆர். விஜயா கொண்டைல..
KTV தெரியுமாம்!! "

எப்புடி ரீமிக்ஸ்? ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பண்டிகைன்னா பஞ்சாமிர்தத்துல அஞ்சாறாம்.. தமிழ்மணத்துல ஸ்டார்ன்னா எவ்ளோ பதிவு ? :)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கந்தசாமி ஐயா,

இது உங்க தன்னடக்கத்தைக்காட்டுது :-)

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மஹி,

எல்லாமே புதுசா.. இப்பத்தான் பறிச்சுட்டு வந்தேன்.. :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

நன்றிங்க :-))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மனோ,

எக்கச்சக்க விட்டமின்கள் அடங்கிய ஜூஸாக்கும் :-)))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆனந்தி,

செம கலக்கல் ரீமிக்ஸ்..

ரூம் போட்டு ஜிந்திச்சிருப்பீங்களோ :-))))))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

அட நீங்க வேறங்க.. நா கேள்விபட்டது தாங்க. ;))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

எவ்ளோ பதிவுன்னு இன்னும் கணக்குப்பார்க்கலை. மின்சாரம்மன் துணையும், கேபிளாண்டவர் அருளும் இருந்தா இன்னும் ஒரு நாலஞ்சு போட்டுத்தாக்கலாம்ன்னு ஐடியா :-))))

சக்தி கல்வி மையம் said...

Nice.,
Mobilil comment poduvathaal template comment thaan. sorry.

RVS said...

ஆப்பிளும் நெல்லியும் உடம்புக்கு உறுதி :-))

சாரல் பழமொழி சரியா?

எஸ்.வி. சேகர் ஒரு ட்ராமால.. பழமொழி சொல்ற ஒரு வயசான கேரக்டரை...
”அது சொல்றதெல்லாம் பழமொழி இல்ல.. கிழமொழி...” அப்டின்னு கிண்டல் பண்ணுவாரு...

நாடோடி said...

பழங்களுக்கு பழமொழியா?... :))

ரெம்ப நல்லயிருக்கு சகோ..

நிரூபன் said...

கூரை ஏறி கொய்யாப்பழம் பறிக்கமுடியாதவன்,..ஆல்ப்ஸ் மலைஏறி ஆப்பிள் பறிச்சேன்னானாம்..//

நம்ம ஊரில் இதனைக்
‘கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன்,
வானம் ஏறி வைகுண்டம் போனானாம்’
என்று சொல்லுவார்கள்.

நிரூபன் said...

ஒரு பெட்டி திராட்சைக்கு ஒரு பழம் பதம்//

இதனை நாங்கள்
’ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’’ என்று சொல்லுவோம்.

நிரூபன் said...

6. அக்கடை வாடிக்கையாளருக்கு இக்கடைப்பழம் சிறப்பு.//

இது இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை தானே...

ஹி...ஹி...

நிரூபன் said...

வித்தியாசமான முறையில் பழ மொழிகளைப் ரீமிக்ஸ் பண்ணியிருக்கிறீங்க.

டிஸ்கியைப் பார்க்க முன்னாடி, நான் நினைச்சேன், எங்கள் தாய்த் தேசத்தில் உள்ள பழமொழிகளுக்கும், எங்கள் நாட்டில் வழக்கத்திலுள்ள பழமொழிகளுக்கும் நிறைய வேறுபாடு என்று.

சூப்பரா...ஒவ்வோர் பழமொழியின் பொருளும் பொருந்து வரும் வண்ணம் ரீமிக்ஸ் பண்ணியிருக்கிறீங்க.

ஹேமா said...

எழுதத் தெரியாதவன் இணயம் கோணல்ன்னானாம்.எப்பூடி !

ஹுஸைனம்மா said...

நல்லா ரசிச்சேன்; சிரிச்சேன்.

பாச மலர் / Paasa Malar said...

நல்லா வித்தியாசமாருக்கு சாரல்....பழங்கள் சுவை

அமைதி அப்பா said...

//அக்கடை வாடிக்கையாளருக்கு இக்கடைப்பழம் சிறப்பு.//

ஆமாம், நான் அடிக்கடி இப்படி நினைப்பதுண்டு!

நல்ல முயற்சி. பாராட்டுகள்!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வேடந்தாங்கல் கருன்,

மொபைலில் படிச்சு கருத்திட்டதுக்கு, ரொம்ப நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க RVS,

ஆஹா!!.. ஜூனியர் சுஜாதான்னா கேக்கணுமா?.. ஜூப்பரு 'பழ'மொழி :-)))

பழுத்த பழங்கள் சொல்றதால நாம அதையும் பழமொழின்னே சொல்லலாமே
இல்லைன்னா, நாம சொல்றது நமக்கே பூமராங் மாதிரி திரும்பிவரும் :-))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நாடோடி,

பழங்கள் ரொம்ப நல்லதாச்சே :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நிரூபன்,

க.க.க. போங்கள் :-)))

ரீமிக்ஸின் ஒரிஜினல்களை போட்டு தாக்கிட்டீங்க!!... அசத்தல் .

யாருக்கும் குழப்பம் வரக்கூடாதுன்னுதான் டிஸ்கியே போட்டேன்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நிரூபன்,

க.க.க. போங்கள் :-)))

ரீமிக்ஸின் ஒரிஜினல்களை போட்டு தாக்கிட்டீங்க!!... அசத்தல் .

யாருக்கும் குழப்பம் வரக்கூடாதுன்னுதான் டிஸ்கியே போட்டேன்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

ஜூப்பரப்பு :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

ஜூப்பரப்பு :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

அப்படியே ரெண்டொண்ணை உங்க ட்ரங்குப்பொட்டியில இருந்து எடுத்துவுட்ருக்கலாமில்ல :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாசமலர்,

இப்பத்தான் ஃப்ரெஷ்ஷா பறிச்சுட்டு வந்தது.. அதான் அத்தனை சுவை :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமைதி அப்பா,

The great people think alike-ன்னு கேள்விப்பட்டிருப்பீங்க இல்லையா.. அதான் இது :-))

வெங்கட் நாகராஜ் said...

பழ மொழி இது கூட நல்லா இருக்கே.... :)

மூ.ராஜா said...

சுவையான பழச்சாறுகள்

மூ.ராஜா said...

சுவையான பழச்சாறுகள்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

இது ஏதோ வடிவேலு ஸ்டைல் பழமொழியாவில்ல இருக்கு... சூப்பர்....:))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

புளிக்கலைதானே.. :-))

ரொம்ப நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மூ.ராஜா,

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அப்பாவி,

நான்..நான்.. நானே ஜிந்திச்சது :-)))))

vetha (kovaikkavi) said...

சூப்பர் சிரிக்க வைச்சிட்டீங்க. நல்லது...
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

கோமதி அரசு said...

புது பழமொழி சூப்பர்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வேதா,

வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும்ன்னு சொல்லி வெச்சிருக்காங்களேப்பா :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதிம்மா,

ரொம்ப நன்றிம்மா :-)

LinkWithin

Related Posts with Thumbnails