Thursday, 11 August 2011

பூந்தோட்டம்.. (11-8-11 அன்று பூத்தவை)

(படம் கொடுத்து உதவிய இணையத்துக்கு நன்றி).
மல்லிகை:
மழைக்காலத்துல தேங்கி நிக்கிற தண்ணீர்ல கொசுக்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யறதால, மழைக்காலம் முடிஞ்சதுமே கொசுக்காலம் தொடங்கிடும்ன்னு தெரியும்தானே.. இப்படி தண்ணீரை தேங்கவிடாம நம்மால முடிஞ்சவரைக்கும் எச்சரிக்கையா இருந்தாலும், அதையும் மீறி குண்டு குழிகள்ல, சாக்கடைகள்லன்னு தேங்கி நிக்கிற தண்ணியில மண்ணெண்ணெய், பெட்ரோல்ன்னு ஊத்தி லார்வாக்களை அழிச்சுட்டு இருந்தோம். அரிதாகிட்டு வர்ற இயற்கை வளங்களை இப்படி வீணாக்குறதும் நியாயமில்லைதானே..

இப்ப அதுக்கு ஒரு மாத்து வழி கண்டுபிடிச்சிருக்காங்க. நம்மூர்ல விளக்கெரிக்கவும், உள்ளுக்கு குடிக்கவெச்சு வயித்துப்பூச்சிகளை ஒழிக்கவும் நம்ம பாட்டிகள் பயன்படுத்திவந்த ஆமணக்கெண்ணெய்யையும் இதுக்கு பயன்படுத்திக்கலாமாம். கொசுக்கள் பெருக வாய்ப்பா பெருகி நிக்கிற தண்ணீர்ல இதை ஊத்தினா கிட்டத்தட்ட 50% வரைக்கும் கொசுவோட லார்வாக்கள் அழியுதாம். இதனால பூச்சிக்கொல்லிகளோட உபயோகமும் மறைமுகமா தவிர்க்கப்படுது.

இப்போ பரிசோதனை முறையில் இருக்கும் இந்த ஆராய்ச்சி மட்டும் வெற்றியடைஞ்சா,..அதுக்கான காப்புரிமையையும் நிச்சயமா வாங்கிடுவோம்ன்னு மும்பையில் பரேல் என்னுமிடத்திலிருக்கும் Haffkin Institute for Training, Research and Testing-ன் டைரக்டரான டாக்டர். அபய் சௌத்ரி வாக்கு கொடுத்திருக்கார். இந்தியாவின் மத்த வளங்களின் காப்புரிமையை கோட்டைவிட்டமாதிரி இதையும் விடாம இருக்காங்களான்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும். விளக்கெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெய்யில் விளக்கெரிச்சா பூச்சிகள் கொசுக்கள் நம்ம கிட்டயே அண்டாதுன்னு, நம்மூர் பாட்டிகள் அந்தக்காலத்துலயே கண்டுபிடிச்ச பெருமைக்குரிய விஷயத்தை, இவங்க இப்பத்தான் கண்டுபிடிச்சிருக்காங்க..

ரோஜா:
ஒரு ஊர்ல ஒரு ஆட்டுக்குட்டியும், நாய்க்குட்டியும் ரொம்ப நெருக்கமான நண்பர்களா இருந்தாங்க.. அந்தச்சமயம் 'நண்பர்கள் தினம்' வந்தது. தன்னோட நண்பனுக்கு விருந்தளிக்க ஆசைப்பட்ட நாய்க்குட்டி, ஆட்டுக்குட்டியை விருந்துக்கழைச்சது. விருந்துக்கு வரும், நண்பனுக்காக, அசைவ வகை உணவுகளா சமைச்சுவெச்சுருந்தது. விருந்துக்கு வந்த ஆட்டுக்குட்டி பாவம், எதையும் சாப்பிடப்பிடிக்காம வெறும் ஜூஸைமட்டும் குடிச்சுட்டு கிளம்பிடுச்சு. அதை ரசிச்சுக்கிட்டே நாய்க்குட்டி விருந்தை ஒரு பிடி பிடிச்சுட்டிருந்தது.

விருந்துக்கு கூப்பிட்டுட்டு, பட்டினி போட்ட நாய்க்குட்டிக்கு பாடம் புகட்ட நினைச்ச ஆட்டுக்குட்டி, அதுக்கடுத்தாப்ல வந்த ராக்கி பண்டிகைக்கு தன்னோட வீட்டுக்கு நாய்க்குட்டியை விருந்துக்கு அழைச்சது. நாய்க்குட்டியும் ஜம்பமா போய் இறங்கியது. அங்கே அருமையான கல்யாணவிருந்தே காத்திட்டிருந்தது.  நாய்க்குட்டியோட வலது கையில ஒரு அழகான பட்டுக்கயிறைக்கட்டிய ஆட்டுக்குட்டி, 'இன்னிலேர்ந்து நீ என்னோட சகோதரனும்கூட'ன்னு சொல்லி இனிப்பை ஊட்டிவிட்டு, நாய்க்குட்டிக்கும் பிரியமான காய்கறிவிருந்தை அளித்தது.  தான் முதலில் நடந்துக்கிட்டதை நினைச்சு வெக்கப்பட்ட நாய்க்குட்டி மனசு திருந்தி அதுக்கப்புறம் உண்மையான மனசோட நட்பு பாராட்ட ஆரம்பிச்சது.
(நாய்க்குட்டி, ஆட்டுக்குட்டி ரெண்டும் வர்றதால இது குட்டிக்கதை என்று கொள்க :-))

பவளமல்லி:
சமீபத்துல பன்னிரண்டாம் வகுப்புல 90%க்கும் மேல எடுத்து சாதனை செஞ்ச சில மாணவர்களுக்கு CET-ன்னு சொல்லப்படும் நுழைவுத்தேர்வு முடிவுகள்ல அதிர்ச்சி காத்திருந்தது.  நிறையப்பேரு 70% சதவீதம் மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்திருக்காங்க. வெறும் 50% மட்டுமே எடுத்த மாணவர்களும் உண்டு. தொழில்நுட்பப்படிப்புகள்ல சேரணும்ன்னா குறைஞ்சது 95%  மதிப்பெண்ணாவது வேணுங்கற நிலையில இது நிஜமாவே அதிர்ச்சியூட்டக்கூடியதா இருந்திருக்கு. பொதுத்தேர்வு மாணவர்களுடைய நினைவாற்றலை மட்டுமே அடிப்படையா கொண்டிருப்பதும் நுழைவுத்தேர்வு அவங்களோட உண்மையான அறிவாற்றலை சோதனை செய்வதாகவும் அமைஞ்சிருப்பதே இதுக்கு காரணம்ன்னு வல்லுனர்கள் சொல்றாங்க.

சாமந்தி:
தீவிர உணவுக்கட்டுப்பாடும், உடல் எடையை கூட்ட ஒரு காரணியா அமையலாம்ன்னு இப்போ கண்டுபிடிச்சிருக்காங்க. ஓரளவுக்கு மேல் பட்டினி கிடந்தா, மூளையிலிருக்கும் பசியைத்தூண்டும் நரம்புகள் தங்களைத்தாங்களே தின்று தனக்கு வேண்டிய சத்தை எடுத்துக்கொள்ளுமாம். அதனால தீவிரப்பசி தூண்டப்பட்டு, நாம நிறைய சாப்பிட ஆரம்பிச்சுடுவோமாம். அவ்வ்வ்வ்வ்..... ஒல்லிக்குச்சி உடம்புக்கு ஆசைப்படுபவர்கள் கவனிக்க...

சம்பங்கி:
'அய்யய்யோ!!!... என் கெணத்தைக்காணலைங்க..' இப்படி கூப்பாடு போட்டு காவல்துறையையே ஆட்டம் காணவைத்த வடிவேலுவின் நகைச்சுவை மும்பைக்கருகே உண்மையாவே நடந்துருக்கு.  பக்கத்திலிருக்கும் ஒரு கிராமத்துல, ஒரு இளைஞர் கிராம பஞ்சாயத்தை அணுகி, கெணறு வெட்டியிருக்கறதா, ரிக்கார்டுகளெல்லாம் பக்காவா இருக்கே.. எங்கே கிணறுன்னு நியாயம் கேக்க,  'அங்க எங்கியாச்சும் இருக்கும்.. இல்லைன்னா திருட்டுப்போயிருக்கும்'ன்னு அலட்சியமா பதில் வந்துருக்கு. வெறுப்பான மனுஷர் சத்தம்போடாம காவல் துறைக்கு மனு அனுப்பிட்டு உக்காந்துட்டார்.

காவல்துறை வந்து விசாரிச்சப்பதான், பஞ்சாயத்துல உள்ள அத்தனை பேரும் சேர்ந்து, வெட்டாத கிணறை வெட்டியதா காமிச்சு அதுக்கென ஒதுக்கப்பட்டிருந்த 70000 ரூபாயை முழுங்கினது தெரியவந்திருக்கு. தன்னோட அதிகாரத்தை உபயோகப்படுத்தி, தன் அம்மாவோட பேர்ல இந்த கடனுதவியை வாங்கின பஞ்சாயத்து தலைவர் உட்பட எட்டுபேர் இப்போ 'மாமியார்வீட்டுல விருந்தாடிட்டிருக்காங்க'

கொசுறு:
 நாங்க பள்ளிக்கூடத்துல படிக்கறச்சே, தினமும் பள்ளி முடிஞ்சதும் சாயந்திரம் வகுப்பறையை முறைவெச்சு சுத்தம் செய்வோம். ஒவ்வொரு பெஞ்சிலும் கிட்டத்தட்ட அஞ்சு பேராவது இருப்போம்.. இன்னிக்கு முதல்பெஞ்சுல இருக்கறவங்க சுத்தம் செஞ்சாங்கன்னா, நாளைக்கு அடுத்தபெஞ்ச்ல இருக்கறவங்க செய்வாங்க. இதுல பசங்க வகுப்புல தொலைச்சுட்டுப்போற பொருட்களை பொறுப்பா எடுத்துவெச்சு, மறுநாள் உரியவங்ககிட்ட சேர்க்கற கடமையும் உண்டு.

இந்த கொசுவத்திய ஏத்திவெச்ச புண்ணியத்தை இங்கே மாதுங்காவிலிருக்கும் ஒரு பள்ளிக்கூடம் கட்டிக்கிட்டது. அங்கியும் வகுப்பறையை சுத்தம் செய்ய தொழிலாளி வேணாம். நாங்களே செஞ்சுக்கிறோம்ன்னு துடைப்பத்தை பசங்க கையில் எடுத்துட்டாங்க. இவங்களைப்பார்த்து இன்னும் சில வகுப்புகள்லயும் இதை கடைப்பிடிக்கிறாங்க. 'நம்ம நண்பர்கள் சுத்தம் செய்யறாங்க' என்ற நினைப்பே மாணவமாணவிகளை வகுப்பில் குப்பை போடுவதை தடுக்குதாம். வகுப்பறைகள் முன்னெப்போதையும் விட இப்ப ரொம்பவே சுத்தமா இருக்குதாம்.. பாராட்டப்படவேண்டிய விஷயம்.


டிஸ்கி: பார்த்த, படித்த, கேட்ட விஷயங்களில் மனசில் இடம்பிடிச்சவை இனிமே இந்த பூந்தோட்டத்தொகுப்பில் வரும் :-)))



35 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல ஐடியா பூந்தோட்டம் பூத்துக்குலுங்கட்டும்..

வடிவேலு தான் சொல்லிட்டாரே நாட்டுல நடக்கிறத கவனிச்சுத்தான் நான் செய்யறேன்னு.:))

நாங்களும் வகுப்பு க்ளீனிங்க் செய்வோம்.இப்பயும் அப்படி ஒரு பள்ளியா ஆச்சரியம் தான்..

ஸாதிகா said...

பூந்தோட்டம் மணமணக்கின்றதே.ஜமாய்ங்க சாரல்.வாழ்த்துக்கள்.இன்னிக்கு என்னுடைய அஞ்சறைப்பொட்டி யையும் திறந்தாச்சு.

'பரிவை' சே.குமார் said...

பூந்தோட்டம் வாசனையுடன்...
வாழ்த்துக்கள் அக்கா.

rajamelaiyur said...

Good news collection. . ..

தமிழ் உதயம் said...

பூந்தோட்டம் மணமணத்தது. ஆட்டுக்குட்டி கதை அற்புதம்.

மாய உலகம் said...

பூந்தோட்டமே பூத்துக்குலுங்குதே சாரல் அடிப்பதாலா...குட்டிக்கதை... நட்பில் அன்பு மட்டுமே இருக்கவேண்டும் என்பதை அழகாக சொல்லியிருப்பதே அழகு தான்... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Unknown said...

செய்திப்பூக்களை தொகுத்தவிதம் அருமை. பாராட்டுக்கள்.

ஹுஸைனம்மா said...

நாங்களும் படிக்கும்போது, க்ளாஸ் ரூம் நாங்கதான் பெருக்குவோம். அதுக்கான “உபகரணங்கள்” வாங்குறதுமுதல், எல்லாம் எங்க பொறுப்புதான். அதுக்குன்னு காலைல சீக்கிரமே வேற வரணும். எவ்ளோ அனுபவிச்சு செஞ்சோம்!! (ஆனா, இதையே வீட்டுல செஞ்சா ‘குறுக்கு உடைஞ்சிடுமோ’னு அசைய மாட்டோம்ல!!)

இப்ப இருக்க பள்ளிகளில் அப்படியொரு ரூல் வந்துச்சுன்னா, பெற்றோர்களே (என்னையுஞ் சேத்துத்தான்) அடிக்க வந்துடுவாங்க!! ஏன்னா, ஃபீஸ், தரம் அப்படி ஆக்கிடுச்சு. பள்ளிக்கும், பிள்ளைகளுக்கும் அப்ப இருந்த நெருக்கம் இப்ப இல்ல!!

ADHI VENKAT said...

பூந்தோட்ட தொகுப்பு நல்லாயிருக்குங்க.
நாங்களும் எங்க பள்ளியில் சுத்தம் செய்திருக்கிறோம்.

பாட்டிகள் முன்பே சொல்லி வைத்ததை இப்ப செயல்படுத்தறாங்களா!!!!!

Chitra said...

பொதுத்தேர்வு மாணவர்களுடைய நினைவாற்றலை மட்டுமே அடிப்படையா கொண்டிருப்பதும் நுழைவுத்தேர்வு அவங்களோட உண்மையான அறிவாற்றலை சோதனை செய்வதாகவும் அமைஞ்சிருப்பதே இதுக்கு காரணம்ன்னு வல்லுனர்கள் சொல்றாங்க.


.... This reflects the flaws in the educational system. :-(

Chitra said...

பூந்தோட்டம் - அழகான பதிவு தோட்டம். பாராட்டுக்கள்!

மனோ சாமிநாதன் said...

உண்மைதான் அமைதிச்சாரல்! இதெல்லாம் நம் பாட்டிகள் எப்போதோ கண்டு பிடித்த விஷயம் தான்!

பூந்தோட்டத்தின் அத்தனை பூக்களுக்குமே வாசம் அதிகம் தான் என்றாலும் அந்த கொசுறு செய்தி தனியாக மணத்தது!

ஸ்ரீராம். said...

குட்டிக்கதை இன்னா செய்தாரை... என்கிறது!
டயட் இருப்பவர்கள் கவனத்திற்கு பயமுறுத்துகிறது!
கிணறைக் காணோம் விஷயம் நல்ல படிப்பினை.
கொசு பற்றி ஆரம்பித்ததால கடைசியில் கொசுறு வந்ததா இல்லை கடைசியில் கொசுறு வந்ததால் முதலில் கொசு மேட்டரோடு ஆரம்பித்தீர்களா...!!!

Mahi_Granny said...

பயனுள்ள பூந்தோட்டம் மற்றும் பழத் தோட்டம் வாழ்த்துக்களுடன் வரவேற்கப்படுகிறது.

தமிழ் said...

பூந்தோட்டத்துல, பூ பூக்க ஆரம்பிச்சுருச்சதுக்கு வாழ்த்துகள்!

எல்லா பூவும் சூப்பரா இருக்கு, தனித்துவமான மணத்துடன்....


-முகில்

pudugaithendral said...

தோட்டத்துக்கு வந்தேன். நல்லா மணக்குது. வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

பூத்தோட்டத்தில் உள்ள பலவண்ண மலர்கள் மனதை கவர்கிறது.

பாட்டி வைத்தியம் எப்போது கை கொடுக்குமே!

நாங்கள் பள்ளியில் படிக்கும் போது வகுப்பரைசுத்தம், கரும்பலகைக்கு ஊமத்தை இலை கரி சேர்த்து அரைத்து கறுப்பாக்குவது, மண்பானையில் தண்ணீர் பிடித்து வைப்பது போன்ற வேலைகளை எல்லோரும் பகிர்ந்து செய்வோம். மாலை செடிகளுக்கு தண்ணீர் விடுவதும் உண்டு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

வடிவேலு நடிச்சபடம் வந்து ரொம்ப நாளாச்சுல்ல.. இந்த சம்பவம் சமீபத்துல நடந்துருக்கு. ஒருவேளை படத்தைப்பார்த்தப்புறம் ஐடியா வந்திருக்குமோ என்னவோ :-))))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

வடிவேலு நடிச்சபடம் வந்து ரொம்ப நாளாச்சுல்ல.. இந்த சம்பவம் சமீபத்துல நடந்துருக்கு. ஒருவேளை படத்தைப்பார்த்தப்புறம் ஐடியா வந்திருக்குமோ என்னவோ :-))))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸாதிகா,

செம வாசனைங்க உங்க அஞ்சறைப்பொட்டியில :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குமார்,

வாசனை ஆளையே தூக்கிடும்போல இருக்குது :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜா,

தோட்டத்தை சுத்திப்பார்த்ததுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தமிழ் உதயம்,

என் பசங்களுக்கு, அவங்க சின்னவங்களா இருக்கச்சே,.. இதே கதையை வேற வடிவத்துல சொன்னதுண்டு :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாய உலகம்,

சாரலுக்கென்னங்க பஞ்சம்.. நம்மூட்ல பூனையும் கோழிக்குஞ்சும் குடைபிடிச்சுக்கிட்டு மழையை எஞ்சாய் செய்யறாங்க :-))

பிரதிபலன் எதிர்பாராததுதானே உண்மையான நட்பு..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாய உலகம்,

சாரலுக்கென்னங்க பஞ்சம்.. நம்மூட்ல பூனையும் கோழிக்குஞ்சும் குடைபிடிச்சுக்கிட்டு மழையை எஞ்சாய் செய்யறாங்க :-))

பிரதிபலன் எதிர்பாராததுதானே உண்மையான நட்பு..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க விஜயன்,

பூந்தோட்டத்தை எட்டிப்பார்த்ததுக்கு நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க விஜயன்,

பூந்தோட்டத்தை எட்டிப்பார்த்ததுக்கு நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹூஸைனம்மா,

//பள்ளிக்கும், பிள்ளைகளுக்கும் அப்ப இருந்த நெருக்கம் இப்ப இல்ல//

அதைச்சொல்லுங்க.. ரொம்ப கரெக்ட்.

வெங்கட் நாகராஜ் said...

பூந்தோட்டம் அழகிய பூக்களுடன் பூத்துக்குலுங்குகிறது... அட.. இது தொடரப்போகிறதா? வாசனை பரவட்டும். காத்திருக்கிறேன் நானும்....

Unknown said...

பூவின் வாசனை வலைவழி
வருதே
பொலிவினை பதிவும் மிகமிக
தருதே
புலவர் சா இராமாநுசம்

குறையொன்றுமில்லை. said...

ஏ அப்பாடி, ஒரே பதிவிலேயே இத்தரை
விஷயஙக்ளா. இதுவும் நல்லாதான் இரூகு.

த. ஜார்ஜ் said...

'குட்டி'கதை அருமை.

naanani said...

பூந்தோட்டத்தின் பல வகை மலர்களின் கதம்ப மணம் கும் ன்னு வீசுது. இன்னும் விதவிதமான மலர்களின் மணம் நுகர ஆவல். கலக்குங்க.

இராஜராஜேஸ்வரி said...

அழகாய் பூத்துக்குலுங்கி மணம் வீசும் அருமையான பாந்தோட்டத்திற்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

கருத்து தெரிவிச்ச அனைவருக்கும் நன்றிங்கோ :-)
[im]http://2.bp.blogspot.com/_ZcYFYOw24wU/Ss73MPmpEdI/AAAAAAAAAUs/0b198Tbo5UI/s400/thanx-for-the-add5.gif[/im]

LinkWithin

Related Posts with Thumbnails