முன்னெல்லாம் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு செய்ற மாதிரியே, நவராத்திரி வர்றதுக்கும் பத்துப்பதினஞ்சு நாளுக்கு முன்னாடியிருந்தே பரபரப்பு தொத்திக்கும். இந்தவருஷம் என்ன பொம்மை புதுச்சா வாங்கலாம்.. எத்தனை படிகள் அமைக்கலாம், எப்படியெல்லாம் அலங்காரம் செய்யலாம்ன்னு மனசுக்குள்ளயே கணக்குகள் ஓடிக்கிட்டிருக்கும். இப்பல்லாம் படிகள் கட்றதுக்கு கூட மெனக்கெட வேண்டியதில்லை. ரெடிமேடா படிகள் கிடைக்குது. கொலுவெல்லாம் முடிஞ்சு ஏறக்கட்டினதும், அதை ஷெல்பா மாத்திக்கலாம். ஆனாலும், எங்கூட்ல இன்னும் பழைய முறைப்படி, கிடைச்ச பொருட்களைக்கொண்டுதான் படி கட்டுவோம். பசங்களுக்கு க்ரியேட்டிவிட்டியை கத்துக்கொடுக்கிறோமில்ல :-)))). இப்பவும், தையல்மிஷின், புக் ஷெல்ப், அட்டைப்பெட்டிகள்ன்னு சகலமும் படிக்கட்டா மாறியிருக்கு.
கொலுவின் முழுத்தோற்றம்.
இதுல அந்த தவழும் கிருஷ்ணர், விவேகானந்தர், மற்றும் தாத்தா,பாட்டி பொம்மைகள் எங்க வீட்டுல இருபத்தெட்டு வருஷமா இருந்திட்டிருக்கு. மத்தவங்களையெல்லாம் அப்பப்ப டூர் அடிக்கும்போது, நவராத்திரியை மனசுல வெச்சிக்கிட்டு வாங்கிப்போட்டுக்கிட்டு வந்தேன்.
வழக்கம்போல் முதல்படியில் புள்ளையாரும் கலசமும்.
பெரிய வூட்டுக்கல்யாணம்..
முளைப்பாரி இப்பத்தான் லேசா தலை காட்டுது..
மும்பையில் நவராத்திரி விழா களை கட்டிடுச்சு. இரவு ஏழுமணியளவில் மக்களெல்லாம் அங்கங்கே கூடி கர்பா(கும்மி) , மற்றும் தாண்டியா(கோலாட்டம்) ஆடி சந்தோஷப்படறாங்க. பத்துமணிக்கு மேல எங்கியும் பாட்டுச்சத்தம் கேக்கக்கூடாது. எங்காவது யாராவது மீறினா, போலீஸ் வந்து லேசா எச்சரிக்கை செஞ்சுட்டு போறாங்க. அஷ்டமி என்பதால் இன்னிக்கு மட்டும் விதிவிலக்காக, பன்னிரண்டு மணிவரைக்கும் ஆட்டம் போடலாம். பாரம்பரியமான தாண்டியா நடனங்களைப்போலவே 'டிஸ்கோ தாண்டியா'வும் பிரபலமாகிக்கிட்டு வருது. அதாவது ரீமிக்ஸ் பாடல்களுக்கு தாண்டியா நடனம் ஆடுறதைத்தான் அப்படி சொல்றாங்க :-))
தினமொரு சுண்டலும், நாளொரு கர்பாவும், பொழுதொரு பாராயணமுமாக நவராத்திரி நல்லாவே போயிட்டிருக்கு. தீமைகளை அழித்து, நன்மையை நிலை நிறுத்தும் இந்த பண்டிகை எல்லோர் வாழ்விலும் நன்மைகளை கொண்டுவரட்டும்..
62 comments:
கொலு மிக அழகு. நவராத்திரி வாழ்த்துக்கள் அமைதிச்சாரல்!
//தீமைகளை அழித்து, நன்மையை நிலை நிறுத்தும் இந்த பண்டிகை எல்லோர் வாழ்விலும் நன்மைகளை கொண்டுவரட்டும்//
என் வாழ்த்தும்!
கொலு.. சுண்டல்.. முளைப்பாரி.. ம் ம்.. நிறைய மிஸ் பண்றேன் :(
கொலுபாக்கவந்தோமே..:)
படி கட்டறதே ஒரு ஜாலி அனுபவம் ..
இல்லையா..
அழகு..
தீமைகளை அழித்து, நன்மையை நிலை நிறுத்தும் இந்த பண்டிகை எல்லோர் வாழ்விலும் நன்மைகளை கொண்டுவரட்டும்..
=கொலுவும் அருமை,வாசகமும் சூப்பர்.
நவராத்திரி வாழ்த்துகள். எங்க வீட்டு கொலுவ திங்கட்கிழமைப் பார்க்க வாங்க:)
கொலு அழகா இருக்குங்க.
தாண்டியா, கர்பா பற்றி பகிர்வும் அருமை. நவராத்திரி வாழ்த்துக்கள்.
பாரம்பரியமான தாண்டியா நடனங்களைப்போலவே 'டிஸ்கோ தாண்டியா'வும் பிரபலமாகிக்கிட்டு வருது. அதாவது ரீமிக்ஸ் பாடல்களுக்கு தாண்டியா நடனம் ஆடுறதைத்தான் அப்படி சொல்றாங்க :-))
....Cool!
.....கொலு அழகாக இருக்கிறது.... பொம்மைகளும் அழகாக இருக்கிறது.... நவராத்ரி வாழ்த்துக்கள்!
நவராத்திரி நாட்களில் புனாவில் இருந்ந அனுபவம் நினைவுக்கு வருகிறது. நான் இருந்த பகுதியில் மிகப்பிரமாண்டமான சிவபெருமானின் சிலையும் அவர்தலையில் கங்கா நீர் வடிவதையும் அவ்வளவு தத்ருபமாக வைத்திருந்தார்கள். இன்னும் நிறைய இந்தமாதிரி....எதையும் போட்டோ புடிக்காம வுட்டேன்னு இப்ப feel பண்றேன்...
நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!
naan potta comment enga?
வாழ்த்துக்கள்
உங்கள் கொலு அழகு
நல்லா கொலு பார்த்தாச்சு நன்றி
கொலு நன்றாக இருக்கிறது. பிரசாதம் சுண்டலா? பொங்கலா?
அழகான கொலு...உங்களுக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள் அமைதிச்சாரல்!
பெரிய வீட்டுக் கல்யாணம் சூப்பரா இருக்கு!!!!!
ஒரு ரெடிமேட் படிகள் வாங்கிட்டு போகலாமுன்னு ஐடியா இருக்கு.
இங்கே கிடைக்காது. சென்னையில் சீஸன் முடிஞ்சபிறகு கிடைப்பதில்லை.
பேசாம போன வருசம் அங்கே இருந்தப்பவே வாங்கி இருக்கலாம்.
அருமையான கொலுக்கள்! நவராத்திரி வாழ்த்துக்கள்!
ரொம்ப நாளைக்கு பிறகு வீட்டுச்சாப்பாடு சாப்பிட்டது போல இருந்தது உங்கள் பதிவு... வாழ்த்துக்கள்...
கொலு அழகா இருக்குங்க.வாழ்த்துக்கள்!
கொலு அழகா இருக்குங்க.. பகிர்விற்கு நன்றி. ஹைதிராபாத்தில் இருக்கும் போது தெருவில் மகிழ்ச்சியுடன் தாண்டியா ஆட்டம் ஆடுவதை பார்த்திருக்கிறேன்.. :)
உங்கள் வீட்டுக் கொலுவில் கலந்து கொண்டோம்.
தாண்டியா ஆட்டமா.. ஆகா நமக்குப் பார்க்கப் பிடிக்கும்.
அருமையான கொலு ... வாழ்த்துக்கள்.
கொலு நல்லருக்கு. பெரிய வீட்டு கல்யாணத்தில் அழைப்பில்லாமலே கலந்து கொண்டேன்.
மும்பையில் தசரா கொண்டாட்டமாயிருக்குமே? தாண்டியா ஆட்டம் ஆடுவீங்களா? நா பாக்கணுமே!!!
அன்பின் அமைதிச் சாரல் கொலு - அது வைப்பதற்கு செய்யும் முன்னேற்பாடுகள் - ஒரு வார காலம் அதனை இடையூறு இல்லாமல் நடத்தி முடிப்பது = அத்தனையும் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அழகான கொலு!! நல்வாழ்த்துக்க்கள்!
சாரல்,கொலு மிக அழகு. இந்த ஒரு வாரம் போனதே தெரியவில்லை.
மும்பையிலெ கேட்கணுமா. நானானி சொல்கிறமாதிரி டாண்டியா பார்க்க ஆசையா இருக்கு. வட இந்தியாவிலியே இருந்தவங்க, இப்ப அவங்க வீட்டுத் திருமணத்துக்கும் ரிசப்ஷன்ல கார்பா நடனம் வைத்திருந்தாங்க.அசந்து போய்விட்டேன் அவங்களோட எனர்ஜி லெவலைப் பார்த்து.!! கொலுப்படி ரொம்ப குறுகலா இருக்குப்பா. பெரிய பொம்மையெல்லாம் வைக்க சிரமம்பா. நம்ம எப்பவும் இப்படியே இருக்கலாம்:) விஜயதசமி வாழ்த்துகள்.
நல்லாருக்குப்பா... வாழ்த்துகள்..
கொலு மிக அழகு அமைதிச்சாரல்!
ஜூலை மாத ‘தேவதை’ இதழ் என்று நினைக்கிறேன்.- உங்களைப்பற்றி வந்திருப்பதைப் படித்தேன். வாழ்த்துக்கள் அமைதிச்சாரல்!!
வாங்க ராமலஷ்மி,
சுண்டல் மொத போணி உங்களுக்குத்தான் :-))))))
உங்களுக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.
நன்றி.
வாங்க பாலாஜி சரவணா,
நவராத்திரி வாழ்த்துக்கள்..
நன்றி.
வாங்க முத்துலெட்சுமி,
வீட்டுல இருக்கிற டேபிள், இன்னபிறவெல்லாம், உசரம் சரியாயிருக்கான்னு சரிபார்த்து, அட்ஜஸ்ட் செஞ்சு, படிகட்டி.. செம வேலை வாங்கும். எல்லாம் முடிச்சு,கொலு வைச்சப்புறம் மனசுக்கு ஒரு நிறைவு வருதே.அடடா!!! நல்லதொரு அனுபவம்ங்க :-)))))
ரெடிமேட் படிகளில் இந்த வேலையே இல்லை. சும்மா படிகளை நட், போல்ட் போட்டு சேர்த்துட்டா போதும்..
நன்றி.
வாங்க வெறும்பய,
உங்களுக்கு ஒரு கிண்ணம் சுண்டல் எக்ஸ்ட்ரா உண்டு :-))
நன்றி.
வாங்க ஆசியா,
நன்றிங்க.
வாங்க வித்யா,
கண்டிப்பா வரேன். சுண்டல் திங்க கசக்குமா என்ன :-)))
விஜயதசமி முடிஞ்சப்புறம் கொலு பார்க்க கூப்புடுவதன் ரகசியம் என்னவோ?? :-))
நன்றி.
வாங்க அம்பிகா,
நன்றிங்க. உங்கூட்ல பூஜை முடிஞ்சதா...
வாங்க சித்ரா,
கொலு பார்க்க வந்ததுக்கு நன்றி.
வாங்க பிரதாப்,
இங்கியும் சுத்துமுத்தும் நிறைய துர்க்காமா சிலைகளை வெச்சிருக்காங்க.. புள்ளையார் சதுர்த்தியைவிட இப்பல்லாம் துர்க்காபூஜை களைகட்டுது :-)
நன்றி.
வாங்க வெள்ளையம்மாக்கா(ஸ்வேதான்னா தமிழ்ல வெள்ளையம்மான்னுதான் அர்த்தம் :-),
உங்க தளத்துக்கு வரமுடியலை.. என்னன்னு பாருங்க..
வந்ததுக்கு நன்றி.
தீமைகளை அழித்து, நன்மையை நிலை நிறுத்தும் நல்லுணர்வுடன் நிறைவு செய்தது நன்றாக இருந்தது.
கொலு அழகு.
வாங்க எல்.கே,
காக்கா தூக்கிட்டு போயிடுச்சோ என்னவோ :-))
நன்றி.
வாங்க அருண்பிரசாத்,
கொலு பார்க்க வந்ததுக்கு நன்றி.
வாங்க சசிகுமார்,
கொலு பார்க்க வந்ததுக்கு நன்றி சகோ..
வாங்க ஜெயந்தி,
சர்க்கரைப்பொங்கல் காலையிலேயே ஆச்சு.. இது பால்,நெய்,தேன்,தயிர்,மற்றும் சர்க்கரை கலந்த பஞ்சாமிர்தமும்,சுண்டலும்.
நன்றி.
வாங்க சுந்தரா,
உங்களுக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்..
கொலு பார்க்க வந்ததுக்கு நன்றி.
வாங்க துளசியக்கா,
திர்னேலில கோயில் எதிர்க்க ஒரு மண்டபத்துல அருமையான கொலுபொம்மைகள் செம சல்லிசா கிடைக்குது. அடுத்ததடவை இந்தப்பக்கம் வந்தீங்கன்னா அள்ளிட்டு போகலாம். நவராத்திரிக்கு பக்கமா வந்தீங்கன்னா நிறைய செட்கள் கிடைக்கும்..
உங்களுக்குத்தான் கம்ப்யூட்டர் காலத்துக்கேத்தமாதிரி எலக்ட்ரானிக்ஸ் கொலுப்படி இருக்கே :-)))))
நன்றி.
கொலு படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.
கொலு பார்க்க லேட்டா வந்திருக்கேன். ரொம்ப அழகா இருக்கு.
சுண்டல் ஏதாச்சும் மீதி இருக்கா :-)
வாங்க எஸ்.கே,
உங்களுக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்
வாங்க பிலாஸபி பிரபாகரன்,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
வாங்க நாடோடி,
கும்மி, கோலாட்டமெல்லாம் நம்மூர்லயும் இருக்கு, ஆனா, மத்த மாநிலத்து மக்கள் அளவுக்கு நம்மூர்ல கண்டுக்கிடறதே இல்லை.
நன்றி.
வாங்க மாதேவி,
கொலுவில் கலந்துக்கிட்டதுக்கு நன்றி.
வாங்க ஈரோடு தங்கதுரை,
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி.
வாங்க நானானிம்மா,
பெரியவூட்டு கல்யாணத்துக்கு பொது அழைப்பாம்.வர்றவங்களுக்கு குறுக்கே யாரும் நந்தி மாதிரி நிக்க மாட்டாங்களாம். அதனால தாராளமா வரலாம்.
தசராவை இங்கே தாண்டியா,கர்பாவுக்காகவே எதிர்பார்த்துக்கிட்டு இருப்போம். பத்து நாளும் வயசு வித்தியாசமில்லாம, கூச்சமெல்லாம் விட்டு அவங்க ஆடுறதை பார்க்கணுமே.. அடடா!!
நன்றி.
வாங்க சீனா ஐயா,
பெரியவுக கொலு பார்க்க வந்திருக்கீங்க.ரொம்ப சந்தோஷம் :-).உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுக்கு நன்றி.
வாங்க தெய்வசுகந்தி,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
வாங்க வல்லிம்மா,
தாண்டியா,கர்பா உண்மையிலேயே அசரவைக்கும். அதுக்குன்னு தனியா மூவ்மெண்ட்செல்லாம்கூட உண்டு. முறையா கத்துக்கிட்டவங்க ஆடுறதை இன்னிக்கெல்லாம் பார்த்துக்கிட்டே இருக்கலாம் :-))
எங்கூட்லயும் கொலுப்படி கொஞ்சம் நீளம்குறைவுதான். அதனாலதான் கொஞ்சூண்டு பொம்மைகளை வெச்சே நிறைவா காமிக்க முடிஞ்சது :-))
உங்களுக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்.
வாங்க ஹூஸைனம்மா,
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.
வாங்க மனோ சாமிநாதன்,
அது ஆகஸ்ட் 1-15 இதழில் வந்துருக்கும்மா :-))
வாழ்த்துக்களுக்கும் வரவுக்கும் நன்றி.
வாங்க ஸ்ரீஅகிலா,
கொலு பார்க்க வந்ததுக்கு நன்றிங்க :-)
வாங்க கவிசிவா,
என்னப்பா,.. ரொம்ப நாளா காணாம போயிட்டீங்க :-)))
சுண்டல்பாத்திரம் அள்ள அள்ளக்குறையாத அட்சய பாத்திரமாக்கும். எவ்வளவு வேண்ணாலும் எடுத்துக்கோங்க :-)
நன்றி.
வாங்க டாக்டர்,
என் தளத்துக்கு மொததடவையா.. அதுவும் கொலு பார்க்க வந்திருக்கீங்க. ரொம்ப சந்தோஷம் :-)))
நன்றிங்க.
ொலு ்ம்ப நல்ல இருக்கு.
Post a Comment