Wednesday 6 October 2010

இதெல்லாம் சில்லறை விஷயம்..

விஷயம் என்னவோ சிறுசுதான்.. ஆனா, விஷயமில்லைன்னு ஒதுக்கிடமுடியாது. சிறுதுளி பெருவெள்ளமாச்சே.. இந்தவிஷயத்தில் சில்லறைத்தனமா நடந்துக்கிடறவங்களைப்பார்க்கும்போது பத்திக்கிட்டு வருது. ஆமாம்,.. சில்லறை விஷயத்தில் சில கடைகளிலும், பிற பொது இடங்களிலும் நடக்குற விஷயம்தான் இது.


மும்பையில் நாலணாவை பார்க்கவே முடியறதில்லை.  நான் சின்னப்பிள்ளையா இருக்கச்சே, ஒரு பைசா, ரெண்டு பைசா, மூணுபைசா, அஞ்சு பைசா, பத்துப்பைசா, இருபது பைசால்லாம் வழக்குல இருந்திச்சு. அப்பல்லாம் சில பத்துபைசா நாணயங்கள் பித்தளையில் இருக்கும்.இப்ப ஐந்துரூபாய் நாணயம் இருக்குதில்லியா.. அதுமாதிரி!!.  அப்ப சேர்த்து வெச்சிருந்த ஒரு சில நாணயங்கள் இன்னும் எங்கிட்ட ஒரு ஞாபகார்த்தமா இருக்கு. பசங்களுக்கு அதைப்பார்க்கும்போதெல்லாம் ஆச்சரியமா இருக்கும்.


சின்னசின்ன கடைகளிலோ, அல்லது டி-மார்ட் போன்ற அங்காடிகளிலோ என்ன பண்றாங்கன்னா, பொருட்கள் வாங்கினபிறகு, நமக்கு ஐம்பது காசு மீதி தரவேண்டியிருந்தா, அதுக்குப்பதிலா எட்டணா மதிப்பிலுள்ள சாக்லெட்டை கொடுத்துடறாங்க. தமிழ் நாட்டில் இப்பல்லாம் நாலணான்னு பேச்சுவழக்கில் சொல்லப்படற இருபத்தஞ்சு காசு வழக்கொழிய ஆரம்பித்துவிட்டது. அங்கியும் இப்படித்தான் நடக்குதாம். கிட்டத்தட்ட இந்தியா முழுக்க அங்கொன்றும் இங்கொன்றுமா நடந்துக்கிட்டிருந்தது, இப்ப பரவலா நடக்க ஆரம்பித்துவிட்டது.


நம்மூர்ல பஸ்ஸில் பாக்கி சில்லறையை கரெக்டா வாங்கினவங்க அதிர்ஷ்டசாலி. அதேமாதிரி இங்கியும் நடக்க ஆரம்பிச்சாச்சு. நேத்திக்கு பக்கத்து ஊருக்கு போகவேண்டியிருந்தது. வழியில் ரெண்டு இடங்களில் டோல் கட்டிட்டு, பாக்கியை வாங்கி எண்ணிப்போட்டுக்கிட்டு பறந்துட்டோம். ரெண்டாம் இடத்தில் பாக்கியை வாங்கும்போது லேசா கணக்கு உதைச்சமாதிரி இருந்தது. வண்டியை ரங்க்ஸ்தானே ஓட்டுறார். நாம, சும்மா இருக்கிறதுக்கு கணக்கை பார்க்கலாமேன்னு ரசீதுகளை எடுத்து சரிபார்த்தேன். நினைச்சது சரிதான்.. ஒவ்வொரு இடத்திலும் பாக்கி ஐம்பது பைசாவை கொடுக்கலை. ஆட்டைய போட்டுட்டாங்க :-))


புத்தம்புதுசா மும்பை-பூனா நெடுஞ்சாலை இருந்தாலும், பழைய மும்பை-பூனா நெடுஞ்சாலையான இதுவும் உபயோகத்தில் இருக்கு. கனரக வாகனங்கள், நாலுசக்கர வாகனங்கள்ன்னு, ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் வாகனப்போக்குவரத்து நடைபெறும். சிங்கிள், ரிட்டர்ன்ன்னு நமக்கு வேண்டியபடி சுங்கவரி கட்டி ரசீது வாங்கிக்கலாம். நம்ம ஒருத்தர்கிட்டயே ஒரு ரூபாயை சுட்டுருக்காங்கன்னா, ஒரு நாளைக்கு மொத்த வசூல் எவ்வளவு ஆகும்.. புள்ளிவிவரமெல்லாம் சொல்ல நான் கேப்டன் இல்லை, அதனால நீங்களே கணக்குப்போட்டுக்கோங்க :-)))


கடைகளிலோ இவங்க பாக்கியை கணக்குப்போடுறவிதமே தனி. இப்ப, பொருட்கள் வாங்கினதுக்கான பில் 45 ரூபா அம்பது காசு, நாம ஐம்பது ரூபாய் நோட்டை கொடுக்கிறோம்ன்னு வெச்சிக்கோங்க. அம்பது காசை நம்ம கிட்ட வாங்கிக்கிட்டு அஞ்சு ரூபாயை மிச்சம் கொடுப்பாங்க. இல்லைன்னா,.. நாலு ரூபா அம்பது காசை திரும்ப கொடுப்பாங்க. இப்பல்லாம் என்ன செய்றாங்கன்னா, நாலுரூபாயை கொடுத்துட்டு அம்பது காசுக்கான சாக்லெட்டை கொடுத்துடறாங்க.  சாக்லெட்டை விற்பனை செய்றதுக்கு, இந்த மறைமுகமான வழியை கண்டுபிடிச்ச புண்ணியவான் யாருன்னு தெரியலை. 


நானும் கொஞ்ச நேரம் புலம்பிக்கிட்டே இருந்தேன். கடைசியில ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். இனிமேல் நானும் கைப்பையில் நிறைய சாக்லெட்டுகளை வெச்சுக்கப்போறேன். கடைகளில் ஐம்பது பைசா கேட்டாலோ, டோல் கட்டுமிடத்தில் தேவைப்பட்டாலோ, ஒரு சாக்லெட்டை எடுத்து கொடுத்துடப்போறேன். அவங்க கொடுக்கும்போது , நாம வாங்கிக்கிறோம்.. நாம கொடுத்தா, அவங்க வாங்கிக்க மாட்டாங்களா என்ன?? என்ன ஒரு சிக்கல்ன்னா??, அந்த சாக்லெட்டுகளை நான் முழுங்காம விட்டு வெச்சிருப்பேனா இல்லையான்னு தெரியலை :-))








57 comments:

எல் கே said...

nan erkanave itha pannitu iruken hihjihi

Ahamed irshad said...

ennatha solrathu..:)

வேங்கை said...

நான் சில சமயம் சாக்லேட் கொடுத்து இருக்கேன்

நீங்க கண்டிப்பா சாக்லேட் தரலாம் வெக்கம் இல்லாம வாங்கிபானுங்க (max halls or candyman வச்சுக்குங்க )

Anonymous said...

சில்லறை விஷயம்னு தலைப்பு வச்சுக்கிட்டு ரொம்ப கனமான விஷயத்த சொல்லிட்டீங்க சாரல்!

ஹுஸைனம்மா said...

//கடைகளில் ஐம்பது பைசா கேட்டாலோ, டோல் கட்டுமிடத்தில் தேவைப்பட்டாலோ, ஒரு சாக்லெட்டை எடுத்து கொடுத்துடப்போறேன்.//

இது நடைமுறையில எப்படி இருக்குதுன்னு செஞ்சுட்டு சொல்லுங்களேன்.

நசரேயன் said...

நீங்க சொன்னா சரிதான்

சசிகுமார் said...

நாளனாவா அதெல்லாம் இப்ப எந்த கடைலையும் வாங்குறது இல்லை நண்பா

அருண் பிரசாத் said...

//கடைகளில் ஐம்பது பைசா கேட்டாலோ, டோல் கட்டுமிடத்தில் தேவைப்பட்டாலோ, ஒரு சாக்லெட்டை எடுத்து கொடுத்துடப்போறேன்.//

கொடுத்துப்பார்த்து ரிசல்ட் சொல்லுங்க...

Asiya Omar said...

கடையில் தரும் மிச்சத்தை நாம எண்ணி பார்த்தால் நம்மை அவனுங்க ரொம்ப சீப்பா பார்ப்பாதை பார்க்கனுமே,அதை விடுங்க,சிலபேர் பணத்தை வாங்கி கல்லாவில் போட்டுவிட்டு திரும்பி கையை நீட்டுவாங்க,நாம தான் உசாராக இருக்கனும்.இப்பதானே ருபாய் கொடுத்தேன்னு சொன்னால் அசடுவலிவாங்க.இங்கே ஒரு லேடி காசை வாங்கிட்டு பில் தரலை,நானும் வந்திட்டேன்,மறுநாளும் அப்படியே செய்துச்சா,பில் கேட்டதுக்கு அப்படியொரு படபடப்பு.இது மாதிரி நிறைய பேருகிட்ட அடிச்சிருக்கும் போல.

வல்லிசிம்ஹன் said...

ஒரு நூறு ரூபாய்க்குச் சில்லறை கேட்டா எவ்வளவு சாக்கலேட் கொடுப்பீங்க சாரல்:)

அன்புடன் அருணா said...

அட!ட்ரை பண்றேன்!

அன்புடன் அருணா said...

அட!ட்ரை பண்றேன்!

Chitra said...

, அந்த சாக்லெட்டுகளை நான் முழுங்காம விட்டு வெச்சிருப்பேனா இல்லையான்னு தெரியலை :-))

......ஏன் நீங்க இன்னும் retail store பிசினஸ் ஆரம்பிக்கலை என்று தெரிஞ்சுக்கிட்டேன்



..... சில்லறை மேட்டர் - சரியாக டீல் பண்ணி இருக்கீங்க!

Prathap Kumar S. said...

// நான் சின்னப்பிள்ளையா இருக்கச்சே, ஒரு பைசா, ரெண்டு பைசா, மூணுபைசா, அஞ்சு பைசா, பத்துப்பைசா, இருபது பைசால்லாம் வழக்குல இருந்திச்சு//

அடேங்கப்பா....:))

சில்லறை காசையெல்லாம் சேர்த்து உருக்கி பிளேடு தயாரிக்கிற கூட்டம் இந்தியாவுல இருக்குன்னு தெரியுமா? 500 ருபாயை சில்லறையா கொடுத்தா ஆயிரம் ருபாய் நோட்டா தருவானுங்க...அந்த அளவுக்கு சில்லறை கிராக்கி...சில்லறை காசுகள் காணாமல் போக இதுவும் ஒரு காரணம்.

kavisiva said...

என் மாமியார் நீங்க சொல்ற மாதிரி சாக்லேட் கொடுப்பாங்க. ஆனா என்ன வாங்க மாட்டேங்கறாங்களாம் :(. ஆனாலும் என் மாமியார் விடுவதில்லை. நீங்க கொடுத்தா நாங்க வாங்கிக்கணும் நாங்க கொடுத்தா வாங்க மாட்டீங்களான்னு சொல்லிகிட்டே தனியா எடுத்து வச்சிருக்கற 50பைசாவை எடுத்து கொடுப்பாங்க. அப்புறம் என்ன அந்த கடைகளில் எல்லாம் என் மாமியாரைப் பார்த்தா மட்டும் கேஷ் கவுண்டரில் சாக்லேட் காணாம போய் 50பைசா வந்துடும் :)

Anisha Yunus said...

//என்ன ஒரு சிக்கல்ன்னா??, அந்த சாக்லெட்டுகளை நான் முழுங்காம விட்டு வெச்சிருப்பேனா இல்லையான்னு தெரியலை :‍))//
அது சரி, பிரச்சனையே அதானே :)) நல்ல முடிவு. செயல்படுத்த முடியறப்ப மறக்காம அப்டேட் பண்ணுங்க :)

Gayathri said...

inga sharjah layum ithe than taxi karanga silarai bhaaki tharathe illai..inga idea super chocolate vachukarthu...

ஹேமா said...

சாக்லெட் குடுத்துப் பாத்திட்டு அந்த அனுபவத்தையும் எழுதுங்க சாரல் !

நாடோடி said...

சாக்லெட் ப‌திவு இதுதானா... :)))))))

சந்தனமுல்லை said...

சில்லறை விஷயம்னாலும் ரொம்ப டீடெய்ல்ட் போஸ்ட்! இப்போல்லாம், 50 காசு வாங்கிட்டு 5 ரூ சாக்லேட்டை கொடுக்கிற நிலைமைக்கு வந்துட்டாங்க.....அவ்வ்வ்! :-)

erodethangadurai said...

ரொம்ப இனிப்பான பதிவுன்னா .... அது இதுதான்.....! வாழ்த்துக்கள்.

ஜெயந்தி said...

சாக்லேட்டெல்லாம் நமக்குத்தான் தருவாங்க அல்வா தர்ர மாதிரி. அவங்க வாங்க மாட்டாங்க. அனுபவத்த அப்புறம் வந்து சொல்லுங்க.

Anonymous said...

உங்க சாக்லேட் ஐடியா சூப்பர்... நானும் பண்ணலாம்-னு இருக்கேன்.. :)

ஜெய்லானி said...

நல்ல ஐடியா தான் ..ஊருக்கு போனா டிரை பண்ணும் ..!! :-)

Jaleela Kamal said...

சாக்லேட் கொடுத்து பார்த்து ரிச்ல்ட் சொல்லுங்கல்
நான் ரெடியா சில்லரைக்குக்குன்னு ஒரு பர்ஸ் தனியா வைத்து இருப்பேன் அதிலிருந்து எடுத்து கொடுப்பது,

5பைசா பார்த்ததும் என் தோழி சித்ரா 5 பைசா நிறைய சேர்த்து ஷோ கேசில் வைக்கும் ஒரு கப்பல் செய்தால் ரொம்ப அருமையாக இருந்தது

ப்ரியமுடன் வசந்த் said...

//நான் சின்னப்பிள்ளையா இருக்கச்சே, ஒரு பைசா, ரெண்டு பைசா, மூணுபைசா, அஞ்சு பைசா, பத்துப்பைசா, இருபது பைசால்லாம் வழக்குல இருந்திச்சு//

அக்கான்னலாம் இனி சொல்ல மாட்டொமே சரியா பாட்டி :))

நாங்க அஞ்சு பைசால இருந்துதான் பார்த்திருக்கோம்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஆஹா... நம்ம ஊரு காச கண்ணுல பாத்து எத்தன நாளாச்சு... ஹும்... ஆஹா சில்லற பிரச்சன பெருசா இருக்கும் போலியே... நானும் சின்னதுல நெறைய சேத்தி வெச்சுருக்கேன்...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

சாக்லெட் கொடுக்கறீங்களா, இல்லை கிடைச்சதை தின்னு தீர்த்துடறீங்களா.. தெளிவா சொல்லுங்க.ரெண்டாவதுன்னா திவ்யாகிட்ட எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு :-)))

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க இர்ஷாத்,

அடுத்ததடவை சாக்லெட் வேணாம்ன்னு சொல்லிப்பாருங்க :-)

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வேங்கை,

ஐடியாவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாலாஜி,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

உங்களுக்கு பிரச்சினையே இல்லை. சாக்லெட்டை காலிசெய்ய வீட்ல ஆளு இருக்கே :-))

நன்றிங்க.

Unknown said...

:)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

கண்டிப்பா செஞ்சு பார்த்துட்டு, யாரு முழிச்சாங்கன்னு வந்து சொல்றேன் :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

எந்திரன் விமர்சனத்துக்கப்புறம் ஆளையே காணோம்.. அடுத்த இடுகையை சீக்கிரம் போடுங்க :-)

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சசிகுமார்,

நாலணாவை மும்பையில் பார்க்கமுடியலை. ஆனா, தமிழ் நாட்டுல இன்னும் இருக்காம்.. சாக்லெட் வடிவில் :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அருண்பிரசாத்,

நிச்சயமா சொல்றேன் :-)

நன்றி.

மாதேவி said...

//என்ன ஒரு சிக்கல்ன்னா??, அந்த சாக்லெட்டுகளை நான் முழுங்காம விட்டு வெச்சிருப்பேனா இல்லையான்னு தெரியலை :‍))//

:)))))))))))))))

Unknown said...

//
நானும் கொஞ்ச நேரம் புலம்பிக்கிட்டே இருந்தேன். கடைசியில ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். இனிமேல் நானும் கைப்பையில் நிறைய சாக்லெட்டுகளை வெச்சுக்கப்போறேன். கடைகளில் ஐம்பது பைசா கேட்டாலோ, டோல் கட்டுமிடத்தில் தேவைப்பட்டாலோ, ஒரு சாக்லெட்டை எடுத்து கொடுத்துடப்போறேன். அவங்க கொடுக்கும்போது , நாம வாங்கிக்கிறோம்.. நாம கொடுத்தா, அவங்க வாங்கிக்க மாட்டாங்களா என்ன??//

சாக்லேட்டெல்லாம் நமக்குத்தான் தர்றாங்க.. அவங்க வாங்க மாட்டேங்கறாங்க ..
நான் அனுபவப்பட்டிருகேங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

ஆமாம்ப்பா... இந்த பில் கொடுக்கிற சமாச்சாரம் இருக்கே.ரொம்ப கவனமா இருக்கணும். பெரிய கடைகளில் கூட சிலசமயம் பில்லை தவிர்க்கிறாங்க.எதுக்குன்னா,.. பில்போட்டா வரியை சேர்க்கிறதால பொருளோட விலையில் நாம கொஞ்சம் காசு கூடுதலா கொடுக்கணும், அதுவே அவங்களுக்கு, எல்லாம் கணக்கில் வந்துடும்.பின்னாடி வருமானவரி கட்டறதுல கொஞ்சம் அப்படியிப்படி அட்ஜஸ்ட் செய்யமுடியாது பாருங்க.

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

அது உங்களுக்கு எந்த சாக்லெட் பிடிக்கும் என்பதை பொறுத்தது :-)))))

நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அருணா,

செஞ்சுட்டு, உங்க அனுபவத்தை பகிர்ந்துக்கோங்க.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

பிசினஸ் ஆரம்பிச்சா நமக்கு நாமே திட்டம்தான்.. அப்புறம் பிசினஸ் பணால் :-))))))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பிரதாப்,

இப்ப புதுசா தகதகன்னு தங்கக்கலர்ல அஞ்சு ரூபா நாணயம் வந்துருக்கே.. அதுக்கு பிளேடு தயாரிப்பவர்கள் கிட்ட செம கிராக்கி இருக்கு தெரியுமா??.. அப்றம் புதுசா பத்துரூபா நாணயம் வந்துருக்கே.. அதுக்கும் அப்படித்தான்.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கவிசிவா,

அருமையா டீல் பண்றாங்கப்பா உங்க மாமியார்..

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அன்னு,

நிச்சயமா செய்றேன்.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க காயத்ரி,

நம்மூர் பஸ்கண்டக்டர்கள் கிட்ட பயிற்சி எடுத்திருப்பாங்க போலிருக்கு :-)))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

நிச்சயம் செஞ்சு பார்க்கணும்ப்பா.. அவங்க எக்ஸ்பிரஷன் எப்படியிருக்கும்ன்னு பார்க்கணும் :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நாடோடி,

சாக்லெட்ங்குற பேர்ல அல்வா கொடுக்கிறாங்கப்பா :-)))))))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தனமுல்லை,

அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவது என்பது இதான் போலிருக்கு :-)))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஈரோடு தங்கதுரை,

ரொம்ப நன்றி...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெயந்தி,

நிச்சயமா சொல்றேன்..(சந்தர்ப்பம் கிடைக்காமயா போயிடும் :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ப்ரேம்,

முயற்சி செஞ்சுட்டு உங்க அனுபவத்தை பகிர்ந்துக்கோங்க :-)

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெய்லானி,

ஏர்போர்ட்லேர்ந்து வீட்டுக்கு போற டாக்சிக்கு பணம் கொடுப்பீங்கல்ல.. அதுலேர்ந்தே உங்க கலாட்டாவ ஆரம்பியுங்க :-)))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜலீலா,

பணக்கப்பலா.. கேக்கவே அருமையாயிருக்கு.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க Mr.Spring,

நீங்க அஞ்சுபைசாவெல்லாம் பார்த்திருக்கீங்களா.. அப்ப நம்ம செட்டுதான்.. அக்கான்னே கூப்டலாம்:-))))))

நன்றி.

cheena (சீனா) said...

சில்லறை - நெரெய இடத்துல சாக்லேட் - - இல்லங்க - இப்படித்தான் பதில் - என்ன செய்யறது ? ம்ம்ம் - நாம ரொம்பப் பாவம்

LinkWithin

Related Posts with Thumbnails