ராக்கி கட்டி, நாரியல் பூர்ணிமா கொண்டாடி.. 'ஆலா ரே ஆலா.. கோவிந்தா ஆலா' என்று கிருஷ்ண ஜெயந்தியுடன் தொடங்கும் பண்டிகைக்காலம், எங்க ஊர் பிள்ளையார் சதுர்த்தியின்போது களை கட்டிவிடும். வீட்டுக்கு வீடு பிள்ளையார் வந்து ஜம்முன்னு உக்காந்துடுவார். ஹாஸ்டல்லேர்ந்து வீட்டுக்கு லீவுக்கு வந்த மகனைப்போல, ராஜ உபச்சாரம்தான் அவருக்கு :-)))
சதுர்த்திக்கு ஒன்றிரண்டு மாசத்துக்கு முன்னாலேயே.. அதாவது வெய்யில் காலத்துலயே, ஏற்பாடுகளெல்லாம் ஆரம்பிச்சுடும். ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸில் வடிவமைப்பதும், வர்ணமடிச்சு அழகுபடுத்துவதுமாக தொழிலாளர்களெல்லாம் பிஸியோபிஸியாகிடுவாங்க... இப்பல்லாம் காகிதக்கூழில் செஞ்சு, வாட்டர் கலர் அடிச்ச eco friendly புள்ளையார் மார்க்கெட்டுக்கு வந்துட்டார். நிறையப்பேர் கேட்டு வாங்கிட்டுப்போறாங்க.. ஆனாலும், ஜிகுஜிகுன்னு பெயிண்டில் ஜொலிக்கிற பிள்ளையாருக்கு ஒரு சில மக்கள் மத்தியில இன்னும் வரவேற்பு இருக்குது..
நம்மூர்ல பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்றது மாதிரிதான் இங்கியும் புள்ளையார வீட்டுக்கு கூட்டிட்டு வரமுன்னாடி வீட்டை சுத்தம் செய்வோம். அவரை உட்கார வைக்க சின்னதா மண்டபம் கட்டி, அலங்காரமெல்லாம் செஞ்சு.. ரெடியா வெச்சு, புள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு, 'கண்பதி பப்பா.. மோரியா!! மங்கள்மூர்த்தி மோரியா' என்ற கோஷத்தோட அவரை கூட்டிட்டு வந்து உட்கார வெச்சு, பத்து நாளும் உபச்சாரமெல்லாம் செய்வோம். தினம் ரெண்டுதடவை அவருக்கு ஆரத்தி நடைபெறும். வீட்டுல உள்ளவங்களெல்லாம் ஒன்னா சேர்ந்து பாட்டுப்பாடி ஆரத்தி எடுப்போம். அபார்ட்மெண்ட்களில், எல்லோருக்கும் பொதுவான பிள்ளையார் வெச்சு,.. கூட்டு வழிபாடு நடக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தர் அவங்க வீட்டுல இருந்து பிரசாதமா, ஷீரா, கரஞ்சி,மோதகம், லட்டுன்னு செஞ்சு கொண்டு வருவாங்க.
பிள்ளையார் வந்ததும், 'சத்ய நாராயண பூஜை' கண்டிப்பா நடக்கும். அபார்ட்மெண்டின் மிக மூத்த தம்பதியோ அல்லது, புதிதாக திருமணமான தம்பதியோ இந்த பூஜையை தம்பதி சமேதரா செய்வாங்க. அன்னிக்கு, லஞ்ச் அல்லது டின்னர் ஏற்பாடு செஞ்சிருப்பாங்க. இதை மஹாபிரசாதம்ன்னு சொல்லுவாங்க. தமிழ்க்குடும்பங்கள் நிறைய இருக்கும் இடங்களில் கணபதி ஹோமம் நடக்குறதுண்டு.
பொதுவா, இங்கே 'விசர்ஜன்' எனப்படும் பிள்ளையாரை கரைக்கும் நிகழ்ச்சி, சதுர்த்திக்கான மறு நாள்(ஒன்னரை நாள்ன்னு கணக்கு), மூணாம் நாள், ஐந்தாம் நாளான 'கௌரி கண்பதி' , ஏழாம் நாள், மற்றும் ஒன்பதாம் நாள்.. அதன்பின் பத்தாம் நாளான ஆனந்த சதுர்த்தி அன்று நிறைவு பெறும். 'கௌரி கண்பதி' அன்னிக்கு மகனைப்பார்க்க பார்வதி தேவி வருவதாக ஐதீகம். அன்னிக்கு சிலவீடுகளில், கௌரிபூஜையும், விருந்துச்சாப்பாடும் நடக்கும்.அது முடிந்தபின், கௌரி, மற்றும் கண்பதியை விசர்ஜன் செய்வார்கள். விசர்ஜன் செய்யப்படும் நாட்களில் சாலைகளில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுவிடும். ஊரிலுள்ள எல்லாப்புள்ளையார்களையும் அன்னிக்கு ஆர அமர பார்த்து.. 'பை..பை' சொல்லிட்டு வரலாம்.
ஆனந்த சதுர்த்தி அன்னிக்கு ரோட்டுல எள் போட்டா விழ இடமிருக்காது!!!(எள்ளை ஏன் போடணும்ன்னு சொல்றாங்கன்னே புரியலை.. இருந்தாலும் நானும் சொல்லி வைக்கிறேன் :-))). அவ்வளவு நாள் பயபக்தியா ஆராதிச்ச புள்ளையார்களை அன்னிக்கு க்ரேன்ல கட்டி ஆழமான கடல்ல தூக்கிப்போட்டுடுவாங்க. (அம்பூட்டு உசரமா இருப்பாருங்க). ஆனாலும், கரைச்சுட்டு வீட்டுக்கு வந்ததும் மனசுக்கு ஒரு வெறுமை வருமே... அதை சொல்லத்தெரியலை.
எங்க ஊர்ல புள்ளையார் ஆரத்திக்குன்னே ஸ்பெஷல் பாட்டு இருக்குது. இங்கே புள்ளையார் சதுர்த்தி பிரபலமானதுக்கும்.. இந்திய விடுதலைப்போருக்கும் சம்பந்தமிருக்குது. வெள்ளைக்காரன் ஆண்ட காலத்துல, கூட்டம் கூட தடை போடப்பட்ட காலத்துல...நம்ம பாலகங்காரதர திலகர் கண்டுபிடிச்ச வழிதான் இது. 1892 -லிருந்து இது சமூகவிழாவா கொண்டாடப்பட ஆரம்பிச்சது. அதுக்கு முன்னாடி, மராட்டிய பேஷ்வாக்கள் மட்டுமே, சிறிய அளவில் கொண்டாடியிருக்காங்க.. பேஷ்வாக்களின் அழிவுக்குப்பின்னால, க்வாலியர் மற்றும் குஜராத் அரசர்கள் இதை சாதாரண மக்களிடம் கொண்டு வந்தாங்க.
இங்கெல்லாம் கூடும் கூட்டத்தை பார்த்த திலகருக்கு, இது மக்களை ஒருங்கிணைக்கும் வழியாக தோன்றியது. கடவுளைக்கும்பிட்ட கையோட, அங்கிருந்த கூட்டத்துக்கிட்ட விடுதலை தாகத்தை உண்டாக்க, புள்ளையார் சதுர்த்தி, திலகருக்கு ரொம்பவே வசதியா இருந்தது. இப்பவும், மக்களெல்லாம் ஆரத்தி முடிஞ்சதும், 'பாரத் மாதா கீ... ஜெய்' ன்னு கோஷம் எழுப்ப தவறுவதில்லை. மும்பையில் 'லால்பாக்' என்னும் இடத்துல வைக்கப்படும் புள்ளையார் ரொம்பவே பிரபலமாயிட்டார். திருப்பதி மாதிரியே அங்கியும் வரிசையில நின்னுதான் தரிசனம் செய்யணும். விலையுயர்ந்த நகைகள், பொருட்களெல்லாம்கூட காணிக்கையா கொடுக்கப்படுதாம். இங்கே வந்து போகாத மும்பை வி.ஐ.பிக்களே இருக்கமுடியாது. அவர்கிட்ட கேட்கும் வேண்டுதல்களெல்லாம் நிறைவேறுதுன்னு ஒரு புதுப்பேச்சு கிளம்பியிருக்கு. 'லால்பாக்ச்சா ராஜா' ன்னுஅவருக்கு செல்லப்பேரும் உண்டு. இந்தப்பேருக்கு பேடண்ட் எடுத்திருக்காங்கன்னா அவரு எவ்வளவு பிரபலம்ன்னு பாத்துக்கோங்க.
மஹாராஷ்ட்ராவில் பிரபலமானஆரத்திப்பாட்டு இது.....
இது எங்கவீட்டு புள்ளையார்...
டிஸ்கி: எங்கூர்ல இன்னும் புள்ளையார் சதுர்த்தி முடியலை. இவர் எங்க குடியிருப்பின் பொதுவான புள்ளையார்.கௌரி கண்பதி வரைக்கும் இருப்பார் :-)))))))
64 comments:
nalla irukku amaithi
அந்த மண்டபங்களும் கடையில் வாங்குவீங்களா இல்லை செய்வீங்களா?
ஒரு நல்ல தொகுப்பு!
அந்த மண்டபம் அழகா இருக்கு :)
நன்றாக இருந்தது பதிவு, ஆனா கொஞ்சம் லேட்டா போச்சி தகவல் சேமிக்க லேட் ஆயிடுச்சோ
உங்க வீட்டு பிள்ளையார் சூப்பரா இருக்கார்..
பிள்ளையாரும், மண்டபங்களும் ரொம்ப அழகு.
பிள்ளையாரும் உங்கள் விளக்கங்களும் அருமை
என்ன கொழுக்கட்டை பண்ணினீங்க
புள்ளையார் அழகா இருக்கார் :). அந்த மண்டபம் நீங்களே செய்தீங்களா?!
எல்லாம் சொன்னீங்க பிரசாதம் தரவே இல்லையே :(
வாங்க எல்.கே,
நன்றிப்பா.. உங்க வீட்டுல பண்டிகை நல்லபடியா நடந்துச்சா...
வாங்க ஹுஸைனம்மா,
பார்ட் பார்ட்டா பிரிச்சும், செட்டாகவும் தெர்மோகோல் துண்டுகள் கிடைக்கும். வாங்கிட்டு வந்து நாமே செஞ்சுக்கலாம். சிலது நாமே சொந்தமா டிஸைன் செஞ்சுக்கலாம்... பத்திரப்படுத்தி வெச்சா கொலுவுக்கும் ஆச்சு :-))
நன்றிங்க.
வாங்க பாலாஜி சரவணா,
நன்றிங்க.
வாங்க சசிகுமார்,
எங்கூர்ல இன்னும் சதுர்த்தி கொண்டாட்டம் முடியலை. ஸோ.. லேட் இல்லை :-))
திலகர் ஆரம்பிச்ச வருஷம் மட்டும்தான் தேடவேண்டி வந்துச்சு.. மத்தபடி தகவல்கள் இங்கே வந்ததிலிருந்து கேட்டுக்கிட்டிருப்பதுதான் :-))
நன்றி.
வாங்க காயத்ரி,
நன்றிப்பா..
வாங்க அம்பிகா,
நன்றிங்க..
வாங்க அருண்பிரசாத்,
நன்றிங்க.
வாங்க சின்ன அம்மிணி,
தேங்கா கொழுக்கட்டை.. புள்ளையாருக்கும், எங்க வீட்டு பிள்ளையாருக்கும் ரொம்ப பிடிக்கும். மறு நாள் விசர்ஜன்போது மோதக் செய்தேன்...
வாங்க கவிசிவா,
எங்க வீட்டுமண்டபம், செட்டா வாங்கிட்டு வந்து, நானே ஒட்டி செஞ்சது.. பில்டிங்கில் உள்ள புள்ளையார் மண்டபத்தோட அலங்காரத்துலயும் என்னோட சின்ன பங்களிப்பு உண்டு :-)))
சதுர்த்திக்கொண்டாட்டம் இன்னும் முடியலைப்பா.. ஸோ, பிரசாதம் வெயிட்டிங். டிஸ்கி பாத்தீங்கல்ல :-))
ரொம்ப அழகா இருக்குங்க உங்க பதிவு , மண்டபம் இரண்டும். திலகர் ஆரம்பித்த பண்டிகை என்பது இப்போது தான் கேள்விப்படுகிறேன். தகவலுக்கு நன்றி.
கணபதி எல்லாருக்கும் இஷ்டக்கடவுள்...க்யுட் கணபதி...:)
நான் அங்க இருந்தபோது கண்பதி டைம்ல ஊர் சுத்தப்போவோம்... கூத்தும்,நாடகமும், கச்சேரின்னு சும்மா ஜகஜோதியா இருக்கும்...ம்ஹும்...எல்லாம் போச்சு...:(
இரண்டு படமும் அழகா இருக்கு.. :)
ரொம்ப நல்லாயிருக்கு... அலங்காரங்களும்... பிள்ளையாரும்..
அட்டகாசமா இருக்காருங்க!
அஞ்சு வருசப் பூனா வாழ்க்கையில் இந்தப் பத்து நாட்களும் ராத்திரி பூராவும்
புள்ளையார் பார்க்கப்போறதுதான். இரவு மூணு நாலு ஆகிரும் வீடுவர!
இங்கே நம்ம கோவிலில் 9 நாள் வைக்கப்போறாங்க. தினமும் மாலை போய் ரெண்டு பாட்டு பாடிட்டு வர்றோம்.
ஏர்ஃபோர்ஸ் மராத்தியர்கள் சேர்ந்து கோவில் எதிரில் கூடாரம் போட்டு புள்ளையார் வச்சுருக்காங்க.
அவருக்கும் தினம் ஒரு நமஸ்தே உண்டு!
அருமையான தொகுப்பு. படங்களும் அழகா இருக்குதுங்க.
எவ்வளவு அழகான சமய சமாசாரங்கள்.எனக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை சாரல்.நிறைய அறிகிறேன் பதிவில்.
அன்பு சாரல், உங்க பிள்ளையாரும் அவர் மண்டபமும் வெகு அழகு. எங்க வீட்டில் சிம்பிள் பிள்ளையார். அவருக்குத் தினம் பழமும் பாலும் உண்டு.தேங்காய் உடைத்துச் சூடம் ஏற்றுவதும் வழக்கம். மும்பையில் மகன் இருக்கும் போது நாங்களும் பந்தல் பந்தலாக அலங்காரம் பார்க்கப் போவது உண்டு. இப்ப சென்னையிலியே பிள்ளையார் படு ஜோராக வருகிறார்.
நீங்கள் விவரித்திருக்கும் விதம் மிகப் பாந்தம்.நிறைய விஷயங்களைத் தொடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துகள் மா.
நிறைய தெரிஞ்சுகிட்டோம் அமைதிச்சாரல்..
மக்களை சுதந்திரபோராட்டத்துக்காக
இப்படி பெரிசா குழுமவச்சாஙகன்னா
இன்னனக்கு இதாலேயே அடிச்சசக்கவும்
செய்யறாங்கன்னும் போது
:(
அன்னிக்கு ஒற்றுமைக்கும் ,
இன்றைக்கு வேற்றுமைக்கும் எப்படி தலைவர்கள் ஒரே விசயத்தை
பார்க்ககறாங்க:(
கயலு,
வெள்ளைக்காரன் ஆட்சியில் சுதந்திரப்போராட்ட சமயம் அரசியல் கூட்டம் கூடக்கூடாதுன்னு அடக்குமுறை இருந்துச்சு.
அதனால் மதவிழா என்னும் போர்வையில் பத்து நாள் மக்களைக்கூட்டி சுதந்திரப்போராட்ட சேதிகளை அறிவிக்க பாலகங்காதர திலகர் செஞ்ச ஐடியா இது.
(வெள்ளைக்காரனுக்கு அடுத்த மதங்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்க மனசாட்சி உறுத்தும். இதை நான் நியூஸியில் பயன்படுத்திக்கிட்டேன்)
கண்பதி பப்பா மோர்யா! அருமையான பகிர்வு! :-)
மும்பை வாசியாவே ஆகிட்டீங்க. நீங்க செய்துள்ள மண்டபம் சூப்பரா இருக்கு.
அழகான தொகுப்பு
உங்கள் பார்வை என் புதிய வலை பதிவுக்கு தேவை
http://nsmanikandan.blogspot.com/
- கலக்கல் கலந்தசாமி
வாங்க பிரதாப்,
கணபதி கொண்டாட்டங்களுக்கு மும்பைக்கு அடுத்தபடியா பூனாதான் பிரபலம். வருஷா வருஷம் மும்பையிலிருந்து கலையுலக ஆட்களை கூட்டிக்கிட்டு வந்து கலை நிகழ்ச்சிகளெல்லாம் நடக்கும். கண்பதி அலங்காரங்களும் வித்தியாசமா இருக்கும். நான் ஒருதடவை கண்பதியின் போது பூனா வந்திருந்தபோது, கொஞ்சம் சுத்திப்பாக்க சந்தர்ப்பம் கிடைச்சது.
நன்றி.
வாங்க வெறும்பய,
நன்றிப்பா.
வாங்க துளசியக்கா,
பூனாவுக்கு ஒரு கண்பதியின் போது வந்து பார்க்க சந்தர்ப்பம் கிடைச்சது. க்ரியேட்டிவிட்டியில கலக்குவாங்க :-))
நன்றி.
வாங்க சித்ரா,
நன்றிங்க.
வாங்க ஹேமா,
நானும் இன்னும் கரையில்தான் நின்னுக்கிட்டிருக்கேன். எதிர்ல ஒரு பெரிய சமுத்திரமே இருக்கு. பெரியபெரிய ஞானிகளே ஒருதுளியையே ருசித்திருக்கும்போது நாம் எம்மாத்திரம் :-))
நன்றி.
வாங்க வல்லிம்மா,
புள்ளையாரே சிம்பிள்தானேம்மா,.. மஞ்சள் பொடியில் பிடிச்சிவெச்சா கூட ஆவாஹனமாயிடுவார் :-))
நன்றி.
வாங்க முத்துலெட்சுமி,
அதேதான்.. அன்னிக்கு ஒற்றுமைக்கு பயன்பட்டது இன்னிக்கு பலத்தைக்காட்ட பயன்படுது :-)). அது தானா சேர்ந்த கூட்டம்.. இது அன்பளிப்பு கூட்டும் கூட்டம் :-)
டீச்சரக்கா எவ்வளவு அழகா விளக்கியிருக்காங்க.. பாருங்களேன் :-))
நன்றி.
துளசியக்கா,
சரித்திரத்தை விளக்குவதில் உங்களுக்கு இணை நீங்கதான்.. சூப்பர்,:-)
நன்றி.
வாங்க சேட்டைக்காரன்,
மங்கள்மூர்த்தி மோரியா..
நன்றிங்க.
வாங்க ஜெயந்தி,
ரோமில் இருக்கும்போது ரோமானியராக இருன்னு ஒரு பழமொழி இருக்கே.. ஆனாலும், நம்ம வேர் தமிழ் நாட்டுலதானே இருக்கு :-)))
நன்றி.
வாங்க கலக்கல் கலந்தசாமி,
மொதல்ல டக்குன்னு பார்க்கும்போது உங்கபேரை கந்தசாமின்னு வாசிச்சுட்டேன்ப்பா..:-)))
உங்க பக்கம் கண்டிப்பா வரேன்.
இங்கே எட்டிப்பார்த்ததுக்கு நன்றி.
அருமை.
அருமையான விவரிப்பு. மும்பை பக்கம் தானேயில் இருந்தபோது கொண்டாடிய இரண்டு பிள்ளையார் சதுர்த்திகளை நினைவு படுத்தியது உங்கள் பதிவு.
மணிமண்டபம் மிக அழகு.
வாங்க ஆசியா,
நன்றிங்க.
வாங்க ராமலஷ்மி,
ஆமாங்க, தானாவிலும் சதுர்த்தி சமயம் ஜெகஜ்ஜோதியா இருக்கும் :-))
நன்றி.
பிள்ளையாரும், நீங்கள் செய்துள்ள மண்டபங்களும் ரொம்ப நல்லாயிருக்கு...
வாங்க ஜிஜி,
ரெண்டாவது மண்டபம் முழுக்க நான் செய்யலை. என்னுடையது சின்ன பங்களிப்பு மட்டுமே :-))
முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பிள்ளையாரும் மண்டபங்களும் ரொம்ப அழகு. அதைவிட உங்க விவரிப்பு ரொம்பரொம்ப அழகு.
அழகு கொஞ்சும் பிள்ளையார்..:))
பிள்ளையார் அலங்காரம் அழகு.
அழகான தொகுப்பு
mee the first...
pillyarappa ellarukum nalla padhivu podanum...
ellarum nallaerukkanum
மொத்தப்பதிவும் சீரியசா படிச்சுட்டு வந்தேங்க /லால்பாக்ச்சா ராஜா/ படிச்சதும் என் சிரிப்ப அடக்கமுடியலை எப்டில்லாம் பேர் வைக்கிறாய்ங்கப்பா..
விட்டா கப்பன்பாக்ச்சா ராஜான்னு கூட பேர் வைப்பாய்ங்கபோல
வாங்க சுந்தரா,
ரொம்ப நன்றிங்க.
வாங்க தேனம்மை,
ஆமாங்க.. விதவிதமான ஸ்டைல்களில் செய்யறாங்க இப்பல்லாம் :-))
நன்றி.
வாங்க மாதேவி,
வரவுக்கு நன்றிங்க.
வாங்க தியாவின் பேனா,
நன்றிங்க.
வாங்க சிவா,
கடைசியிலிருந்து நீங்கதான் ஃபர்ஸ்ட்டுன்னு சொல்லலாம்ன்னா, வசந்த் இடத்தை பிடிச்சிக்கிட்டாரே.. இனிமேலாவது சீக்கிரம் வாங்க..
உங்க பிரார்த்தனைகளுக்கு புள்ளையார் செவி சாய்க்கட்டும் :-)
நன்றி.
வாங்க வசந்த்,
புள்ளையார்களை கரைக்கிறதுக்கு ஊர்வலமா எடுத்துக்கிட்டு போகும்போது, இங்கெல்லாம் நேரடி ஒளிபரப்பு நடக்கும். அப்போதைய வர்ணனையில் சும்மா சொல்ல ஆரம்பிச்சாங்க.. இப்ப என்னடான்னா, லால்பாக் என்னுமிடத்தில் வைக்கப்படும் புள்ளையாருக்கு லால்பாக்ச்சா ராஜான்னு பேரு நிரந்தரமாகவே ஆகிடுச்சு :-))
நன்றி.
சாரல் அக்கா..பிள்ளையார் சதுர்த்தி தமிழ்நாட்டில் கூட இவ்வளவு ஆர்பாட்டமா கொண்டாடுறது இல்லை தானே...நாம வீட்டலவுக்கு பூஜை,சுண்டல்,பொங்கல்,கொழுக்கட்டை பண்ணி முடிச்சுக்குவோம்.(எங்க ஏரியாவில் பிள்ளயார கோவிலில் இந்த வாட்டி அன்னதானம் செஞ்சாங்க..).ஆனால் நாங்க பெங்களூர் இல் இருந்தபோது ரொம்பவே உற்சாகமாவும்,ஆர்ப்பாட்டமாகவும் கொண்டாடினாங்க...உங்க பதிவை பார்த்தபோது அந்த நினைப்பு வந்தது..நல்ல பதிவு..
வாவ்... உங்க வீட்டு புள்ளையார் அழகோ அழகு..சூப்பர் போஸ்ட்... நெறைய விஷயங்கள்
(என்னங்க அக்கா பதிவே காணோம் பிள்ளையார் சதுர்த்திக்கு அப்புறம்... மறந்து போய் நீங்க செஞ்ச கொழுகட்டய நீங்களே சாப்ட்டுடீங்களா? ஹா ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்...)
வாங்க ஆனந்தி,
ஆமாங்க.. அதுவுமில்லாம நம்மூர்ல ஒரு நாள் கொண்டாட்டத்தோட முடிஞ்சிடும். ஆனா, இங்கெல்லாம் பத்து நாள் கொண்டாட்டமா நடக்கும். ஒவ்வொரு நாளும் தெருவெல்லாம் திருவிழாதான் :-))
வரவுக்கு நன்றி.
வாங்க அப்பாவி,
எனக்கும் அதான் சந்தேகம் :-)))). ஆனா, கொழுக்கட்டையை தமிழ்மணமும் சாப்ட்டுடுச்சு போலிருக்கு. என்னைக்கண்டாலே அலறியடிச்சுக்கிட்டு ஓடிடுது. இடுகையை இணைச்சுக்கவே மாட்டேங்குது.. அதான் சத்யாக்கிரகம் பண்ணிக்கிட்டிருந்தேன் :-))))))
நினைவு வெச்சிருந்து விசாரிச்சதுக்கு நன்றி :-))
Post a Comment