Tuesday, 7 September 2010

மழைத்துளிகள்...

ஒவ்வொரு வருஷமும், ' ஸ்.. அப்பாடா!!! என்ன வெயில்.. என்ன வெயில்!!. போன வருஷத்தைவிட இந்த வருஷம், வெயில் ஜாஸ்தியாத்தான் இருக்குது இல்லே!!!. ஒரு மழை வந்தா எவ்ளோ நல்லாருக்கும்'ன்னு ஏங்க வைக்கத்தான் செய்கிறது இந்த மழை. லேசாக மாறும் தட்பவெப்பமும், காற்றின் போக்கும், திடீர் புழுக்கமும் சொல்லிவிடும்.. மழை வரப்போவதை..
லேசான காற்றுடன், 'சொட்'டென விழுந்ததும், அப்படியே கம்ம்ன்னு எழுமே மண்மணம். ஆஹாஹா!!!. இதுக்காகவே எப்போடா மழை வரும்ன்னு இருக்கும் :-). முதல் மழையில் நனைஞ்சா, நல்லதாம். வெய்யிலினால் வந்த வேர்க்குரு, இன்னபிற சரும பிரச்சினைகளெல்லாம் ஓடிப்போயிடுமாம். இந்த ஊர்ல சொல்லிக்குவாங்க. அதனால மழைத்துளி விழுந்ததுமே,'ஹே...'ன்னு கூப்பாடோட, பசங்களெல்லாம் ஓடிப்போயி.. மழையில ஆட ஆரம்பிச்சுடுவாங்க. ஆட்டம் மட்டுமல்ல.. பாட்டும் உண்டு :-))


"யே..ரே, யே..ரே பாவுஸா,
துலா தேத்தோ பைஸா;
பைஸா ஜா(zha)லா கோட்டா,
பாவுஸ் ஆலா மோட்டா".


இது குழந்தைகளுக்கான ஒரு மராட்டிப்பாடல். இதுகளை பார்க்கும்போது, நமக்கே உற்சாகமாக இருக்கும். நாமளும் சின்னப்புள்ளையா இருக்கச்சே இப்படித்தானே மழையில் நனைஞ்சு விளையாடியிருப்போம். அதுவும் பள்ளிக்கூடத்துக்கு புறப்படும்போதுதான், கரெக்டா மழை வரும். வகுப்புக்கு லேட்டா போறதுக்கு ஒரு சாக்கு சொல்லலாம் :-)). பள்ளி விட்டு வரும்போது மழை வந்தா, இன்னும் ஜாலி. வீட்டுக்கு நனைஞ்சுக்கிட்டே வந்து, திட்டெல்லாம் வாங்குறதும் ஒரு இனிய அனுபவம்தானே. நமக்கு ஜூரம் வருதோ இல்லியோ, அம்மாக்களுக்கு டென்ஷன் ஜூரம் விறுவிறுன்னு ஏறும். ஆனா..அவங்க கொடுக்கிற சுக்குக்காப்பிக்காகவே அடிக்கடி மழையில் நனையலாம் :-))


எப்போடா வரும்ன்னு ஏங்க வைக்கிற மழைதான், சிலசமயம்.. ஏன்தான் இப்படி பழிவாங்குதோன்னு தோணவைக்கும். தேவையான அளவு பெஞ்சாத்தானே நல்ல முறையில விவசாயம் செய்ய முடியும், குடிதண்ணீருக்கும் தட்டுப்பாடு இருக்காது. மழைக்கப்புறம், பச்சைப்பசேல்ன்னு சுத்துவட்டாரமும், பூத்துக்குலுங்கும் பெயர்தெரியா காட்டுச்செடிகளுமா, ஒரே அமர்க்களமாத்தான் இருக்கு. காத்துல மிதந்து வர்ற சுட்ட மக்காச்சோள வாசனை , மும்பையின் மழைக்காலத்துக்கே இன்னும் அழகைக்கூட்டும்...


இந்த வருஷம், மும்பையில் ஓரளவு மழை பெஞ்சிருக்கு. ரொம்பவும் அடிச்சிப்பெஞ்ச மாதிரியே எனக்குத்தெரியலை. இந்தத்தடவை , மழையில் வெளியில் சுத்த அதிகம் வாய்ப்பு கிடைக்காததும் ,  அப்படி நினைக்கிறதுக்கு ஒரு காரணமா இருக்கலாம் :-))). "ரெண்டு மூணு நாள் விடாம பெஞ்சாத்தான், மழைக்கு அழகு :-)))). இந்தத்தடவை அப்படி ஒண்ணும் பெஞ்ச மாதிரியும் தெரியலை"..   இப்படி சலிச்சுக்கிட்டது அந்த மழைக்கே கேட்டிருச்சோ என்னவோ,.. கிருஷ்ண ஜெயந்திக்கு முந்தின நாள் காற்றும், மழையுமா கொட்டோ கொட்டுன்னு கொட்டித்தீர்த்துட்டது.. கண்ணன் பிறந்தப்ப, இதேமாதிரிதான் புயலும் மழையுமா இருந்திச்சாம். அதனால, கிருஷ்ண ஜெயந்தி சமயம், மழை இப்படித்தான் பெய்யும்ன்னு இங்கே வந்தப்புறம்தான் தெரிஞ்சிக்கிட்டேன் :-))


ஜூனில், மழை ஆரம்பிக்கும்போதே மழைக்காலத்துக்கான ஷாப்பிங்கும் ஆரம்பிக்கும். பள்ளிகளில் கறுப்பு நிற ரெயின் சேண்டல்கள்தான் கட்டாயம் போடணும். யூனிபார்ம் ஷூ போட்டுக்கிட்டுப்போனா, அபராதம் கட்டச்சொல்லும் பள்ளிகளும் உண்டு. மழையில் ஷூக்களின் உள்ளே, ஊறிப்போன கால்களுடன், கஷ்டப்பட்டுக்கொண்டு குழந்தைகள் இருப்பது இதனால் தவிர்க்கப்படுது. 


எங்கூர்ல 'நாரியல் பூர்ணிமா' வந்தாச்சுன்னா மழைக்காலம் முடியப்போவுதுன்னு அர்த்தம். மழைக்காலத்தில் கடலின் சீற்றம் அதிகமா இருப்பதால், மீன்பிடித்தொழிலுக்கு போகமுடியாம இருக்கிற மீனவ சகோதரர்கள், மறுபடியும் தொழிலுக்கு போகும்முன் கொண்டாடும் பண்டிகை இது. அனேகமா, ரக்ஷா பந்தனும், நாரியல் பூர்ணிமாவும் ஒரே தினத்தில்தான் வரும். அன்னிக்கி மேளதாளத்தோட, சொந்தபந்தம் சூழ கடற்கரைக்கு போவாங்க. அங்கே மழையின் அதிபதியான வருணதேவனுக்கு பூஜை செஞ்சுட்டு, கடலில் ஒரு தேங்காயை காணிக்கையா விட்டுட்டு வருவாங்க.  அதுக்கப்புறம் அவங்க தொழிலுக்கு போக ஆரம்பிச்சுடுவாங்க.


வினாயகர் சதுர்த்தியின் கடைசி நாளை, ஆனந்த சதுர்த்தின்னு சொல்லுவாங்க. அன்னிக்குத்தான் மிச்சம் மீதியிருக்கிற புள்ளையார்களையும் கரைப்பாங்க. அத்துடன் மழையும் முடிஞ்சுடும்ன்னு ஐதீகம். இந்த வருஷம் இப்பவே மழை முடியறதுக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிச்சாச்சு. போன வாரம் ரெண்டு நாளா காலையில ஒரே பனிமூட்டம். பனி வர ஆரம்பிச்சாச்சுன்னா, மழை பொட்டியை கட்ட ஆரம்பிச்சாச்சுன்னு அர்த்தம். அணையப்போற விளக்கு கட்டக்கடைசியா சுடர்விட்டு எரியுற மாதிரி, ஜன்னலுக்கு வெளியே இடியும் மின்னலுமா வெளுத்துக்கட்டிக்கிட்டு இருக்கு. பெய்யும்போது அலுத்துக்கிட்டாலும், இனி இந்த மழையை ரசிக்க, சுட்ட சோளம் சாப்பிட.. அடுத்த வருஷம் வரை காத்திருக்கணுமேன்னு ஏக்கமா இருக்கு. சேர்ந்து விளையாடி, மகிழ்ந்து இருந்த தோழி திடீர்ன்னு ஊருக்கு கிளம்பின மாதிரிதான் இருக்கு :-)). அடுத்த வருஷமும் வரணும்ன்னு சந்தோஷமா சொல்லிக்கிறோம்...
60 comments:

எல் கே said...

mazhai anaivarukum thozan

ராமலக்ஷ்மி said...

சாரலில் நனைய வாருங்கள் எனக் கூப்பிடுகிறது படம்:)!

நாரியல் பூர்ணிமா-புதிய விவரம்.

//சேர்ந்து விளையாடி, மகிழ்ந்து இருந்த தோழி திடீர்ன்னு ஊருக்கு கிளம்பின மாதிரிதான் இருக்கு :-))//

மாதம் மும்மாரிப் பொழியாவிட்டாலும், வருடம் தவறாமலாவது வாம்மா தோழின்னு அடிக்கடி மின்னஞ்சல் செய்வோம்ங்க:))!

சந்தனமுல்லை said...

வாவ்! வெகு சுவாரசியம்! அதுவும் சாரல் அடிக்கிற படத்தோட!!

அப்படியே அந்த சோளத்தை இங்கே பார்சல் பண்ணிடுங்க..ஏன்னா, சென்னைலே இப்போ தூறல்..சாரல்..:))

சசிகுமார் said...

எங்க ஊருல ஒரு பாட்டு இருக்கு சின்ன புள்ளைல நாங்களும் அதை தான் பாடி விளையாடுவோம்.
"மழை வருது மழை வருது நெல்லை வாருங்க...........
முக்கா படி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க.......
ஏர் உழுற மாமனுக்கு எண்ணி வையுங்க ......
சும்மா இருக்கிற மாமனுக்கு சூடு வையுங்க ....."

வெங்கட் நாகராஜ் said...

தில்லியில் இன்னும் மழை விட்ட பாடில்லை. நேற்று கூட நல்ல மழை இருந்தது. லேட்டா ஆரம்பிச்சு லேட்டா முடியும் போல! பகிர்வுக்கு நன்றி!

வெங்கட்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப வருசம் கழிச்சி மழை மாசத்துல மழை நல்லா பெய்யறதை பாக்கறேன்ப்பா.. தில்லியில்.. மகிழ்ச்சி .. காமன்வெல்துக்காக வச்ச சின்ன செடியெல்லாம் இந்த மழையால் கொஞ்சம் செழிப்பா ஆகி இருக்கு.. வீட்டுகு பின் பக்கம் மயில்கள் கொண்டாட்டமா ஆடிக்கிட்டிருக்கு. நானும் இனி ஒவ்வொரு வருசமும் இப்படி மழை நல்லபடியா பெய்யனும்ன்னு வேண்டிக்கிறேன்.. சுட்ட சோளம் இங்க இன்னும் நிறையநாள் கிடைக்குமே வாங்க தில்லிக்கு.

மாதவராஜ் said...

ஆஹா...!

Gayathri said...

azhaga ezhudhirukenga..neenga potrukara padam arumai..mazhai eppovume manathukku magizhchithaan...vazhthukkal

Anonymous said...

மழை போல ஒரு இதமான பதிவு! :)

Ahamed irshad said...

நான் ஊரில் இருந்தபோது மழை வராததால் எனக்கு மழை மேல் கோபம்.

சுந்தரா said...

நேரடியா மழையில் இறங்கி நடந்த அனுபவம். அழகா சொல்லியிருக்கீங்க சாரல்.

வல்லிசிம்ஹன் said...

மழைச் சாரல் அழகு. அதைப் பத்தின பதிவும் சோள வாசனையோடு ரசிக்க வைக்கிறது. எங்க ஊர் பீச்சில் எப்ப வேணா சோளம் கிடைக்கும்பா. கொஞ்சம் மணலும் சேர்த்துக் கிடைக்கும்:)
ரசிக்கத் தெரிஞ்சவங்களுக்கு எப்பவும் எதுவும் அழகு. பகிர்தலுக்கு நன்றி சாரல்

ADHI VENKAT said...

நானும் மழையில் நனைந்ததுக்காக அம்மாகிட்ட திட்டு வாங்கியிருக்கேன். நண்பர் சசிகுமார் சொல்லியிருப்பது போல் நாங்களும்
“மழை வருது மழை வருது நெல்லு குத்துங்க
அரிசி மாவும் உளுந்த மாவும் போட்டு
முறுக்கு சுத்துங்க” என்று பாடுவோம்.
இதை என் பெண்ணும் இப்போது பாடுகிறாள்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

இதமான பதிவு..

"உழவன்" "Uzhavan" said...

அழகான பகிர்வு

நாடோடி said...

ப‌ள்ளிச் செல்லும் போது ம‌ழையில் ந‌னைந்து விளையாடுவ‌து ஒரு த‌னி சுக‌ம் தான்.. :)

Chitra said...

மழையின் அழகை ரசித்து, மழை காலத்து பாரம்பரிய பழக்கங்களையும் பகிர்ந்து, அதிக மழையால் வரும் இன்னல்களையும் சொல்லி..... ஒரு கருத்து மழையில் நனைய வைத்து விட்டீர்கள்!

நசரேயன் said...

//"யே..ரே, யே..ரே பாவுஸா,
துலா தேத்தோ பைஸா;
பைஸா ஜா(zha)லா கோட்டா,
பாவுஸ் ஆலா மோட்டா".//

அக்கா இந்தி கவுஜையா ?

Prathap Kumar S. said...

பதிவு சாங்லா ஆஹே...

//யே..ரே, யே..ரே பாவுஸா,
துலா தேத்தோ பைஸா;
பைஸா ஜா(zha)லா கோட்டா,
பாவுஸ் ஆலா மோட்டா".//

அக்கா இந்தி கவுஜையா///

தமிழ்ல எழுதுனா தமிழ் கவுஜைதான....நசரேயனுக்க ஏன் இந்த டவுட்டு..

அப்பாவி தங்கமணி said...

nalla malai... super post

ப்ரியமுடன் வசந்த் said...

ரெயின் ரெயின் கோ அவே!

ஜெய்லானி said...

ஆத்தாடி...பம்பாய்ல மழைநாள நினைச்சாலே பயமா இருக்கு ....!!!

Easwaran said...

//முதல் மழையில் நனைஞ்சா, நல்லதாம். வெய்யிலினால் வந்த வேர்க்குரு, இன்னபிற சரும பிரச்சினைகளெல்லாம் ஓடிப்போயிடுமாம்.//

ஆமாம். ஆனால் அது பத்து, இருபது வருடங்களுக்கு முன்னால். இப்போதெல்லாம் முதல் மழை பலவித திராவகத் தன்மையோடு வருகிறது. எனவே, இரண்டாம் மழைதான் இப்போது நல்லதோ?
எதுவாக இருப்பினும் இனிது! இனிது! மழையில் நனைவது இனிது.

வேங்கை said...

நல்லா இருக்குங்க பதிவு

இதை ஒரு அழகான கவிதையா போடுங்க இன்னும் அருமையா இருக்கும்

Anonymous said...

உங்க ஊரு விசேஷங்கள் எல்லாம் ரொம்ப அருமையா சொன்னிங்க ..நாரியல் பூர்ணிமா பத்தி நான் ஹிந்தி சீரியல் ல பார்த்தேன் ..

கொச்சியிலும் நாங்க மழை வந்தா ரொம்ப சந்தோஷ பெடுவோம் நீங்க சொன்னது போல தான் அங்கும் ஸ்கூல் டைம் ல கரெக்டா மழை வரும் அதே போல் விடும்போதும் வரும் ..அதெல்லாம் இப்போ நினைக்கும்போதும் மனதுக்கு ரொம்ப நல்லா இருக்கு ..

பகிர்வுக்கு நன்றி

புதியஜீவன் said...

விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்!! என் ப்ளாக் வந்து குறை, நிறை சொல்லுங்க

http://idhunammaviidu.blogspot.com/2010/09/blog-post.html

சாந்தி மாரியப்பன் said...

சதுர்த்திக்கான ஏற்பாடுகளில் கொஞ்சம் பிஸியாகிட்டேன். ஆகவே தாமதமான பதில்களுக்கு மாப்பு ப்ளீஸ்.. :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

கரெக்டுதான்..

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

ஆமாங்க..இப்பல்லாம் சொன்ன நேரத்துக்கு வரதேயில்லை :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தனமுல்லை,

ஒரு துண்டு எலுமிச்சையை உப்பு தொட்டு, நல்லா தணல்ல சுட்டெடுத்த சோளத்தின் மேல, அப்படியே கரகரன்னு தேய்ச்சு பார்சல் பண்ணியிருக்கேன்... சுடச்சுட சாப்பிடுங்க :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சசிகுமார்,

அட.. அருமையான பாட்டு இல்லே :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

பருவகாலங்களெல்லாம் இப்போ ரொம்பவே தப்பிப்போயிட்டு இருக்கு, இல்லியா...

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

வீட்டுக்கு பக்கத்துல மயிலாடுதா!!!.. அடடா.. செம அழகா இருக்கும் இல்லே..

சோளம் இங்கேயும் குளிர்காலம் முடியறவரையும் கிடைக்கும். ஆனா, மழைக்காலத்துல சாப்டற சுகமே தனி :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதவராஜ் அண்ணா,

ரசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க காயத்ரி,

இந்தப்படம் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒண்ணு..

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாலாஜி,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அஹமது,

கவலையை விடுங்க. அடுத்ததடவை நல்ல மழை சமயமாப்பார்த்து ஊருக்கு போயிட்டு வாங்க :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுந்தரா,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

உங்க ஊர் சோளத்தை சாப்பிடணும்ன்னா பல்செட் கட்டிக்கிட்டாத்தான் முடியும்.பயங்கர கடக். மெரீனா பீச் சோளத்தை ரொம்ப ஆசப்பட்டு சாப்பிட்டு.. நொந்த அனுபவம் எனக்குண்டு :-))

நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோவை2தில்லி,

திட்டு வாங்கினாலும் மறுபடியும் நனையத்தூண்டும் மகிழ்ச்சியும் குழந்தைப்பாடல்களும், யாரும் சொல்லிக்கொடுக்காமலேயே வர்றது ஆச்சரியம்தான் :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெறும்பய,

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க உழவன்,

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நாடோடி,

அதேதான்ப்பா.. ஸ்கூலுக்கோ, வீட்டுக்கோ லேட்டா போறதுக்கு காரணம் தானாவே கிடைச்சுடும் :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

அடிப்படையில் இது குழந்தைகளுக்கான மராட்டி கவுஜ. ஆனா.. தமிழ்ல எழுதியிருக்கதுனால, தமிழ்க்கவுஜன்னு சொல்லலாம்ன்னு பிரதாப் தம்பி சொல்றதை நான் வழி மொழியறேன். இன்னொரு விஷயம், இதை நான் எழுதலை :-)))))))))

நன்றி.

மாதேவி said...

மழைச்சாரலில் இதமாய் நனைந்தேன்.

அமைதி அப்பா said...

மழை என்றாலே ஒரு மகிழ்ச்சி தானாகவே வருகிறது.

நல்ல பதிவு.

ஸாதிகா said...

மழை= மகிழ்ச்சி
உங்கள் பதிவு= குளிர்ச்சி

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பிரதாப்,

ஐக்கூன் ஆனந்த் வாட்தோ :-)))

நன்றிப்பா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அப்பாவி,

நன்றிப்பா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்த்,

ஏம்ப்பா.. உங்களுக்கு மழை வேணாமா??.. சரி, தேனிக்கு அனுப்பிட்டேன் :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெய்லானி,

மும்பை மழை உங்களுக்கும் பரிச்சயமுண்டா.. நல்லது :-)).

ஆனா, எவ்வளவு பயப்படுத்துமோ அவ்வளவு ஜாலியா இருக்கும் :-)
நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஈஸ்வரன்,

ரொம்ப நாளா ஆளையே காணோமே.. நல்லாருக்கீங்களா??

நீங்க சொல்றதும் உண்மைதான்.. இப்பல்லாம் பசங்களும் ரெண்டாம், மூணாம் மழைக்குத்தான் வெளிய வராங்க. மும்பையில் மாசு எவ்வளவு கூடுதலா இருக்கும்ன்னு சொல்லணுமா என்ன :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வேங்கை,

நன்றிங்க.. வரவுக்கு.

ஐடியாவுக்கும் நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தியா,

ஸ்கூல் டைம்ல எஞ்சாய் பண்றமாதிரி அப்புறம் வரவே மாட்டேங்குதே...ஏன்னு தெரியலை :-)

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முரளி,

நிச்சயமா வரேன்..

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

நனைஞ்சதுக்கு நன்றிங்க. ஜலதோஷம் பிடிச்சுக்காம பார்த்துக்கோங்க :-)))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமைதி அப்பா,

அதே.. அதே..

இங்கே இப்போ வழியனுப்பு விழா நடந்துக்கிட்டிருக்கு :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸாதிகா,

நன்றிங்க.

Anisha Yunus said...

ஆஹா...மழைப்பாட்டு நல்லா இருக்கே...அதோட அர்த்தத்தையும் சேர்த்து போடுங்க ப்ளீஸ்.

LinkWithin

Related Posts with Thumbnails