Thursday, 2 September 2010

இந்த கொசுத்தொல்லை தாங்கலைங்க.. - பாகம் இரண்டு.

ரிங் பால், அதாவது schizont க்குள்ள இருக்கும் கருதான், அடுத்த தலைமுறை கிருமிகளை உருவாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்குது. இந்தக்கருக்கள் பல்கிப்பெருகி, merozoites ஆக வெளிவருகின்றன. இவற்றில், ஒரு பாதி மறுபடியும் ரத்தத்தில் கலந்து சிவப்பணுக்களை கபளீகரம் செய்ய ஆரம்பிக்குது. மீதிப்பாதி gametocytes ஆக உருமாறுது. ஏன் இப்படி இதுகள் உருமாறுதுன்னு.. இன்னும் யாராலயும் கண்டுபிடிக்க முடியல. இந்த gametocytes தான் கொசுவின் உடம்பில் புகுந்து, மறுபடியும் மலேரியா கிருமிகளா வெளிவருது.

ஒவ்வொரு வகை மலேரியா கிருமியின் gametocyte-ம் ஒவ்வொரு வடிவத்தில் இருக்கும். உதாரணமாக,
Plasmodium falciparum - நீள்வடிவமாக சாஸேஜ் போல இருக்கும்.
Plasmodium malaria - நீள்வட்ட வடிவமாக,
Plasmodium vivax - உருண்டையாக இருக்கும்.

இரத்தப்பரிசோதனையின் போது, நம்மை எந்த கிருமி தாக்கி இருக்கக்கூடும்ன்னு, இந்த வடிவத்தை வச்சுத்தான் சுமாரா கண்டுபிடிக்கிறாங்க.

gametocytes-ல் ரெண்டு வகைகள் இருக்குது. micro gametocytes,மற்றும் macto gametocytes. முதல் வகையில் உள்ள கரு பெரிதாகவும், பின்னதில் சிறிதாகவும் இருக்கும். இவற்றில் மைக்ரோ, ஆண் அணுவாகவும், மேக்ரோ பெண் அணுவாகவும் பங்கு வகிக்கின்றன.இதுவரைக்கும் மனுஷ உடம்பில் வளர்ந்த இவை இதுக்கு மேல வளரணும்ன்னா கட்டாயம், கொசுவின் உடம்புக்கு போயே ஆகணும். மலேரியாவால பாதிக்கப்பட்ட ஒருத்தரின் ரத்தத்தை கொசு உறிஞ்சும்போது இவை, கொசுவின் வயிற்றுக்குள்ளே போகின்றன.

கொசுவின் உடம்புக்குள்ளே போன இந்தக்கிருமிகளில், மைக்ரோவின் கரு,செல்பிரிதல் என்னும் நிகழ்ச்சி மூலம் ஆறு கருக்களா மாறுது. அவற்றுக்கு வாலும் முளைச்சு, நல்லா வளர்ந்தப்புறம் இவை gametocyteக்கு வெளியே வந்து பிரிஞ்சு போயிடுது.

மேக்ரோ முதிர்ந்து, கருவுறுதலுக்கு தயாராகுது. மைக்ரோவும், மேக்ரோவும் இணைஞ்சதால கரு உண்டாகி, வளருது. இது மொதல்ல உருண்டையாத்தான் இருக்கும். மெதுவா இது புழுவின் வடிவத்துக்கு மாறுது. இது கொசுவின் வயிற்றுப்பகுதியை துளைச்சிக்கிட்டு வெளியேறி, வயிற்றுக்கும்.. கொசுவின் மேல்தோலுக்கும் இடைப்பட்ட இடத்துல ரெஸ்ட் எடுக்குது. ரெஸ்ட் காலத்துல வேணுங்கிற ஊட்டச்சத்தை கொசுவிலிருந்தே எடுத்துக்குது. இதை 'oocyst'ன்னு சொல்லலாம்.

வளரும்போதே, கரு மறுபடியும் நிறைய தடவை பிரிஞ்சு, தனித்தனி உயிர்களாகுது.இவைதான் 'sporozoites'ன்னு சொல்லப்படற கிருமிகள். வளர்ச்சிப்பருவம் முடிஞ்சதும், 'oocyst' உடைஞ்சு, sporocytes கொசுவின் வயிற்றுப்பகுதி திரவத்துல கலக்குது. கொசுவோட உடம்புல புகுந்ததிலிருந்து, இந்த வளர்ச்சிப்பருவம் வர்றதுக்கு மொத்தம் 10 ,12 நாட்களாகும்.

கொசுவின் உடம்புல, ஒரு டூர் அடிச்சிட்டு.. கடைசியா இவை கொசுவின் உமிழ்நீர் சுரப்பிகளுக்கு வந்து சேருதுகள். பிறகென்ன.. இப்போ, கொசு யாரையாச்சும் கடிக்கும்போது, எச்சிலும்.. அதோட சேர்ந்து கிருமிகளும் உடம்புக்குள்ள போயிடும். மறுபடியும் ஆட்டம் ஆரம்பம்......

ஒருத்தருக்கு மலேரியா அட்டாக் ஆகியிருக்குன்னு சில அறிகுறிகளை வெச்சு தெரிஞ்சுக்கலாம். கடுமையான காய்ச்சல், நடுக்கம், குளிர்தல்,அளவுக்கு மீறிய வியர்வை, கடுமையான உடல்வலி, மற்றும் தசை வலி, வாந்தி, மற்றும் கடுமையான அசதி இதெல்லாம் இருக்கும். சிவப்பணுக்களை இதுகள் தாக்குவதால இரத்தத்தில் ப்ளேட்லட்ஸின் எண்ணிக்கை ரொம்பவே குறையும். சிலசமயம் ஆபத்தான நிலைக்கும் கொண்டுபோயிடும். மருந்து கொடுத்தும் சரியாகலைன்னா,.. அப்பேர்ப்பட்ட சந்தர்ப்பங்களில் ஆஸ்பத்திரியில் அட்மிட் செஞ்சு ரத்தம் ஏத்த வேண்டி வந்துடும். என் பையருக்கும் மலேரியா வந்தப்ப ப்ளேட்லட்ஸ் வெறும் 35,000 த்துக்கு போயிட்டது. நல்ல வேளையா மருந்து கொடுத்ததில் கூடுதலாக ஆரம்பிச்சதால, பயமில்லாம போச்சு. ஆனாலும் பக்க விளைவாக உடம்புவலி ரொம்ப நாள் இருந்தது.

இந்தக்கொசுக்களால மலேரியா மட்டுமல்ல.. யானைக்கால் வியாதி,டெங்கு போன்ற வியாதிகளும் பரவுது. கொசுக்களை நம்மால முடிந்தவரை கட்டுப்படுத்தலாம். 

விடியற்காலை, மற்றும் மாலைக்கருக்கல் நேரங்களில்தான் இவை ரொம்பவே உலாத்தும். இந்த நேரங்களில் வெளியே சுத்துறதை குறைச்சிக்கலாம்.

சுத்துனாலும், உடம்பு முழுக்க மூடியிருக்கிற மாதிரி உடை அணிஞ்சிக்கலாம். முக்கியமா சிறு குழந்தைகளுக்கு..

 நல்ல தரமான கொசுவிரட்டி, கொசுவலைகளை உபயோகிக்கலாம்.

இப்பல்லாம் கொசுவலை அடிச்ச ஜன்னல்கள் புழக்கத்துக்கு வந்துட்டது. அவற்றை உபயோகப்படுத்தி, வாசல் கதவுகளை சாயந்திரங்களில் இறுக்க மூடி வைக்கலாம்.

எல்லாத்தையும்விட முக்கியமானது, தண்ணீரை தேங்க விடக்கூடாது. அங்கேதான் கொசுப்பண்ணையே இருக்கும். வீடுகளிலோ, அக்கம்பக்கங்களிலோ உடைஞ்ச டப்பா, டயர், குண்டு குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறதை பார்த்தா அப்புறப்படுத்தலாம். சிலபேர் அதில் மண்ணெண்ணெய் விடுவாங்க. எதுக்குன்னா,.. கொசுக்கள் செத்துடுமாம்.

அப்படியும் கொசு கடிச்சால் என்ன ஆகும்.. இங்கே வாங்க..

இன்னும் விளக்கமா புரியணும்ன்னா,.. வீடியோவா பாருங்க.


29 comments:

புதுகைத் தென்றல் said...

aamanga nejamave thollai thaanga mudiyala

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

போன மாதம் என் தந்தைக்கு வந்து இப்பொழுதுதான் சற்று குணமாகி இருக்கார். கொடுமையான ’கொசு’!!

அருண் பிரசாத் said...

malaria நமக்கு அலர்ஜிப்பா

நாடோடி said...

கொசுத்தொல்லையில் இவ்வ‌ள‌வு விச‌ய‌ம் இருக்கா?.. ப‌ல‌ த‌க‌வ‌ல்க‌ளை கொடுத்திருக்கிறீர்க‌ள்.. ப‌கிர்விக்கு ந‌ன்றி ச‌கோ.

ஹுஸைனம்மா said...

ரொம்ப டீடெய்லா பொறுமையா விளக்கியிருக்கீங்க, இதுக்குன்னு தேடிப் படிச்சீங்களா இல்லை பையனுக்கு மலேரியா வந்ததால நடந்த ஆராய்ச்சியா?

எதுவா இருந்தாலும் எல்லாரையும் எச்சரித்ததற்கு நன்றி.

Chitra said...

ஹுஸைனம்மா said...

ரொம்ப டீடெய்லா பொறுமையா விளக்கியிருக்கீங்க, இதுக்குன்னு தேடிப் படிச்சீங்களா இல்லை பையனுக்கு மலேரியா வந்ததால நடந்த ஆராய்ச்சியா?

எதுவா இருந்தாலும் எல்லாரையும் எச்சரித்ததற்கு நன்றி.


.... repeat!

சசிகுமார் said...

நாராயண இந்த கொசுக்கேல்லாம் கொசுமருந்து அடிடா

அஹமது இர்ஷாத் said...

நல்ல பதிவு...சுளீர்'ன்னு இருக்கு..

ஜெய்லானி said...

அடங்கொக்கா மக்கா ...வீடியோவை பார்தாலே கை கால் நடுங்குதே...... அப்ப ஊருக்கு போனா இனி பினாயில்லதான் குளிக்கனும் போல இருக்கு ...அவ்வ்வ்வ்வ்வ்...!!

ஜெயந்தி said...

//அடங்கொக்கா மக்கா ...வீடியோவை பார்தாலே கை கால் நடுங்குதே...... அப்ப ஊருக்கு போனா இனி பினாயில்லதான் குளிக்கனும் போல இருக்கு ...அவ்வ்வ்வ்வ்வ்...!!//

இப்ப இருக்கற இடத்துல கொசு இல்லயா?

நசரேயன் said...

ம்ம்ம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அம்மணி விட்டு
வகுப்பே எடுத்துட்டீங்க :)

தேனம்மை லெக்ஷ்மணன் said...

நல்ல விலாவாரியான செய்திகள் அமைதிச்சாரல்..

ஜெய்லானி said...

@@@ஜெயந்தி --//இப்ப இருக்கற இடத்துல கொசு இல்லயா? //

ஷார்ஜா வில இருக்கிறதால இங்கு கொசு இல்ல .

கோவை2தில்லி said...

தக்க சமயத்தில் எல்லாரையும் எச்சரிச்சிருக்கீங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க புதுகைத்தென்றல்,

புது வீட்ல கொசுத்தொல்லை இல்லாம இருக்க முன்னேற்பாடெல்லாம் செஞ்சுக்கோங்க :-)

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஷங்கர்,

மலேரியாவின் பின்விளைவுகள் ரொம்பவே கஷ்டம் கொடுக்கும்.. பத்திரமா பார்த்துக்கோங்க.

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க அருண்பிரசாத்,

வரவுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க நாடோடி,

வரவுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஹுஸைனம்மா,

ஏற்கனவே படிச்சு பட்டமும் வாங்கியாச்சு. பையருக்கு மலேரியா வந்தப்ப அவருக்கு விளக்கிச்சொன்னதை இப்ப உங்களுக்கும் சொல்றேன் :-))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க சித்ரா,

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க சசிகுமார்,

இப்பத்திய கொசுக்கள் கொசுமருந்த டானிக்கா குடிச்சு இன்னும் ஊட்டமா வளருதுங்க :-))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க அஹமது இர்ஷாத்,

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஜெயந்தி,

ஷார்ஜாவுல கொசு கிடையாதாமே.. நம்மூர்லேர்ந்து அன்பளிப்பா அனுப்பி வைக்கலாமா :-)))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க நசரேயன்,

வந்ததுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க முத்துலெட்சுமி,

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க தேனம்மை,

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க ஜெய்லானி,

நம்மூர் பினாயிலுக்கெல்லாம் கொசுக்கள் அடங்குமா என்ன :-))))

நன்றி.

அமைதி அப்பா said...

நீங்க ஆசிரியையாக பணி புரிந்திருக்கிறீர்களா? எளிதில் விளங்க வைக்கும் திறமை உங்களிடம் உள்ளது. பாராட்டுக்கள்.
பி.கு.இரண்டு பாகமும் படித்துவிட்டு பின்னூட்டமிடுவதால் காலதாமதம்.

LinkWithin

Related Posts with Thumbnails