Monday 21 June 2010

மழையே மழையே..

2005-ல் வெள்ளம்( உதவி கூகிள்)

மும்பையில் மழை பெய்ய ஆரம்பிச்சுடுச்சு. உஸ்ஸ்.. அப்பாடா!! என்ன வெய்யில்... ரெண்டு துளி மழைத்தண்ணி பூமில விழுந்திச்சின்னா நல்லாருக்குமே!!ன்னு நினைக்கிற அளவுக்கு வெய்யில் வாட்டி எடுத்தது போக, இப்போ ஜிலீர்ன்னு நல்ல க்ளைமேட்டா இருக்கு. பொதுவா ஜூன் மாத முதல்வாரத்தில் ஆரம்பிக்கும் மழை, ஒரு காட்டு காட்டிட்டுத்தான் ஓயும்.இப்பவே மும்பையில் நிறைய இடங்களில் தண்ணீர் தேங்க ஆரம்பிச்சு, போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பையும் ஏற்படுத்துது.

ஒவ்வொரு வருஷமும் மழை ஆரம்பிச்சப்புறம் , ஒன்றிரண்டு நாளுக்காவது அங்கங்க தண்ணி தேங்கி, தண்டவாளங்கள் மூழ்கி, ட்ரெயின் லேட்டாவது நடக்கும். ஏதாவது ஒரு நாளுக்காவது,"இன்னிக்கு ட்ரெயின் ஓடாதாம்.. மழை காரணமா ரத்தாம்"ன்னு செய்தி வரும். அப்பத்தான் எங்களுக்கு, 'இந்த வருஷம் நல்லா மழை பெஞ்சிருக்கு'ன்னு திருப்தியாகும். இயந்திர வாழ்க்கையில் எதிர்பாராம கிடைக்கிற ஒரு நாள் லீவு அடடா!!!! அனுபவிச்சாத்தான் தெரியும்.

ஆனா,... கடந்த சில வருஷங்களா மழை ஆரம்பிச்சிட்டாலே, எல்லோர் மனசிலும் அந்த கறுப்பு வருஷத்தின் நினைவுகள் எட்டிப்பாக்கும். ஜூலை 2005ஐ மும்பை மக்கள் வாழ்நாளில் ஒரு போதும் மறக்க மாட்டார்கள்.. மறக்கவும் முடியாது.
ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒரு வழியில் பாதிக்கப்பட்ட, அல்லது பாதிக்கப்பட்டவர்களை பார்த்த அனுபவம் இருக்கும்.

எப்பவும் போல்தான் அந்த நாளும்,.. எல்லோருக்கும் போல் எங்களுக்கும் விடிந்தது. அந்த சமயத்தில் பசங்களுக்கு பரீட்சை நடந்துக்கிட்டிருந்தது. பரீட்சை சமயத்தில் ஸ்கூலுக்கு நானே கொண்டு போய் விட்டுட்டு, அப்றம் மறுபடி போய் அழைச்சிட்டு வர்றது பழக்கம். அன்னிக்கும் அப்படித்தான்... ஸ்கூலுக்கு போய் பசங்களை அழைச்சுட்டு வர்றதுக்காக கிளம்பினேன். மொத நாள் இரவிலிருந்தே மழை பெஞ்சுக்கிட்டிருந்தது. ஏதோ ஒரு உள்ளுணர்வில், ரங்க்ஸ் கிட்ட, 'இன்னிக்கி ஆப்பீசுக்கு லீவு போட்டுடுங்களேன்'னு சொன்னேன். எப்படா சொல்லுவான்னு காத்துக்கிட்டிருந்தாரோ என்னவோ....'சரி'ன்னு சொல்லிட்டு விட்டதூக்கத்தை தொடர போயிட்டார்.

பொண்ணோட பரீட்சை முடிஞ்சு, காத்துக்கிட்டிருந்தா,.. பையருக்கு பரீட்சை முடிய இன்னும் நேரமிருக்கு. அதுவரை காத்திருக்க வேணாம். அவர் ஸ்கூல் பஸ்லயே வந்துடட்டும்ன்னு நாங்க ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பினோம். ரோடெல்லாம் ஒரு முழம் உசரத்துக்கு தண்ணி நிக்குது. வண்டியெல்லாம் வேகமா போகமுடியாம நத்தை மாதிரி ஊர்ந்து போகுது. ஏன்னா,.. தண்ணிக்குள்ள பள்ளம், மேடு தெரியாது. ஒரு வழியா வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். ஆனா... மணி ரெண்டாகியும் பையர் வீட்டுக்கு வரலை. எனக்கோ கலக்கமா இருக்கு. பேசாம ஸ்கூல்லயே வெயிட் பண்ணி ரெண்டு பேரையும் சேத்து கூட்டிட்டு வந்திருக்கலாமேன்னு தோணுது.

எதுக்கும் மறுபடி பள்ளிக்கூடத்துக்கு போய் பாத்துட்டு வரலாம்ன்னு ஆட்டோ நிறுத்தம்வரை வந்தேன். அப்பாடா!!! எதிர்க்க ஸ்கூல் பஸ் வருது. 'ஏண்டா லேட்டாச்சு'ன்னு பையரை கேட்டா...'ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் பயங்கர வெள்ளம். தண்ணி பஸ்ஸுக்குள்ள அலையடிச்சு வருதுன்னா பாத்துக்கோங்க. மெதுவா நின்னு... நின்னு வந்தோம்'ன்னார். அன்னிக்கு முழுக்க மழை விட்ட பாடில்லை..அதுவும், வழக்கத்தைவிட அதிகமா பெய்யுது. ஆனா.. அப்ப ஒண்ணும் பெரிசா தோணலை.ஏன்னா.. சீசன்ல 24 மணி நேரம்,30 மணி நேரத்துக்கு மேல விடாமழை பெய்றது சகஜம். இந்த வருஷம் குடிதண்ணீருக்கு தட்டுப்பாடு வராதுன்னு சந்தோஷப்பட்டுக்கிட்டோம். அவரவர் ஒர்ரீஸ் அவரவருக்கு :-)))

மறு நாளும் பரீட்சை இருந்ததால், சீக்கிரமே எழுந்து எல்லாம் ரெடி பண்ணிட்டு எனக்கான காபியுடன் பால்கனிக்கு வந்து வெளியே பார்த்தா.. ஐயோ!!! இதென்ன... அப்ப திடீர்ன்னு தடால்ன்னு ஒரு சத்தம்...

(மழை பெய்யும்...)

49 comments:

pudugaithendral said...

மும்பை மழை எனக்கும் ஃப்ரெண்டுதான். அதை வெச்சு நிறைய்ய கொசுவத்தி சுத்தியிருக்கேன். தண்டவாளத்துல தண்ணி நிறைஞ்சுபோச்சுன்னு வீட்டுக்கு போக முடியாம அந்தேரில மாட்டிகிட்டது, ஆபீஸ்ல மாட்டிகிட்டது, வீட்டுல மாமாக்களுடன் கொட்டம் அடிச்சுகிட்டு சுடச்சுட பஜ்ஜி போடச் சொல்லி சாப்பிட்டதுன்னு நிறைய்ய...

pudugaithendral said...

http://pudugaithendral.blogspot.com/2009/07/blog-post_4939.html

namma kosuvathi

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பரே. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

நாலு நாளா 44 டிகிரி செண்டிகிரேட் வெயில் இங்கே. நாலு மணி நேரமாவது மழை பெய்யாதா என்ற ஏக்கத்துடன் நாங்கள். உங்க ஊரில் நல்ல மழையா? சந்தோஷம். ”தடால்” என்ற சத்தம்? என்ன சத்தம் என்ன சத்தம் சீக்கிரம் சொல்லுங்க! : )

ஜெயந்தி said...

இம் அப்புறம், சொல்லுங்க. நல்லா போகுது வெள்ளம் மாதிரியே எழுத்தும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்...

Prathap Kumar S. said...

// அப்பாடா!! என்ன வெய்யில்... ரெண்டு துளி மழைத்தண்ணி பூமில விழுந்திச்சின்னா நல்லாருக்குமே!!ன்னு நினைக்கிற அளவுக்கு வெய்யில் வாட்டி எடுத்தது போக, இப்போ ஜிலீர்ன்னு நல்ல க்ளைமேட்டா இருக்கு. பொதுவா ஜூன் மாத முதல்வாரத்தில் ஆரம்பிக்கும் மழை, ஒரு காட்டு காட்டிட்டுத்தான் ஓயும்.இப்பவே மும்பையில் நிறைய இடங்களில் தண்ணீர் தேங்க ஆரம்பிச்சு, போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பையும் ஏற்படுத்துது//


வெயில் அடிச்சாலும் கஷ்டம்றீங்க.... மழை பெஞ்சாலும் கஷ்டம்கறீங்க...
இரண்டு இல்லாம ஏதுங்க உலகம்... வாழ்க்கை கூட அதுமாதிரிதான் (சே...பின்றடா பிரதாப்பு)

Anonymous said...

யதார்த்தமான பதிவு. என் வலைப்பக்கம் வந்ததுக்கு நன்றி.பாலோ பட்டனை கிளிக் செய்து விட்டேன்

சந்தனமுல்லை said...

எனக்கும் அந்த 2005 நல்லா நினைவு இருக்கு..சில நண்பர்கள் மற்றும் செய்திபடங்களாலே!

விறுவிறுப்பா எழுதியிருக்கீங்க!

எல் கே said...

//வெயில் அடிச்சாலும் கஷ்டம்றீங்க.... மழை பெஞ்சாலும் கஷ்டம்கறீங்க...
இரண்டு இல்லாம ஏதுங்க உலகம்... வாழ்க்கை கூட அதுமாதிரிதான் (சே...பின்றடா பிரதாப்பு)//

சரியாய் சொல்ற மச்சி (முதல் முறையா )

எல் கே said...

//ஐயோ!!! இதென்ன... அப்ப திடீர்ன்னு தடால்ன்னு ஒரு சத்தம்...//

அஹா என்னது இது இப்படி சஸ்பென்ஸ்

ஆடுமாடு said...

நானும் ரெண்டு மூணு வருஷம் செம்பூர் திலக் நகர்ல குப்பை கொட்டியிருக்கேன்.
அதனால மும்பை மழை பழக்கம்தான்.

அடுத்தாப்ல என்ன சொல்ல போறீங்க?

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல அருமையான பகிர்வு அக்கா.. மழை இறைவனின் வரம்முன்னு சொல்வாங்க.. மழை இல்லை எதுவும் இல்லைன்னு சொல்வாங்க.. ஆனால் அளவுக்கு மீறும்போது போதும்போதும் என்றாகிவிடுகிறது. சரியா அக்கா. நல்ல பகிர்வு.

அம்பிகா said...

நல்லா மழைய அனுபவிச்சு எழுதியிருக்கீங்க...
மழை தொடர்கிறதா?

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

ஏற்கனவே உங்க கொசுவத்தியை படிச்சிருக்கேன். இன்னிக்கு திரும்பவும் படிச்சேன். சுவாரஸ்யமா சுத்தியிருக்கீங்க.

இங்கியும் வடாபாவுடன் எஞ்சாய் பண்றோம் :-))

வரவுக்கு நன்றி.

அன்புடன் நான் said...

மழை அனுபவம்... நல்ல தூரல்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சசிகுமார்,

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

டெல்லிக்கு மழையை அனுப்பி வெச்சுட்டோமே.. இன்னும் வந்து சேரலையா :-))))

அடுத்த பகுதியில் தெரிஞ்சுக்கலாம்...

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அஹமது

நன்றிப்பா.

ராமலக்ஷ்மி said...

பொழிந்த எழுத்து மழையும் நிற்கவில்லை போலிருக்கிறதே. அதென்ன ‘தடால்’ சத்தம்? நல்லா போட்டீங்க தொடரும்:)!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெயந்தி,

அப்புறம் என்னாச்சுன்னா....

அடுத்த பகுதியில் தெரிஞ்சுக்கோங்க:-))).

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பிரதாப்,

நம்மூர் ஆனியாடி சாரல் மாதிரி இருந்தா நல்லாருக்கும். இங்கே வெய்யிலோ,மழையோ extremeதான் :-))))

//(சே...பின்றடா பிரதாப்பு)//

எதைப்பின்றீங்க :-))))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

சொல்றேன்....

தொடர்ந்து வாங்க :-))).

சாந்தி மாரியப்பன் said...

வாங்க திரவியம் ஐயா,

ரொம்ப அழகா எழுதறீங்க,நகைச்சுவை கலந்து.

வரவுக்கும் ஃபாலோயர் ஆனதுக்கும் நன்றி.

செ.சரவணக்குமார் said...

அருமை. நல்லா எழுதியிருக்கீங்க.

Chitra said...

மழை - - - வெள்ளமாய் உங்கள் கருத்துக்கள் ....... தொடர்ந்து சொல்லுங்க....!!!

நசரேயன் said...

இன்னும் எங்க ஊரிலே மழை வரலை

ப்ரியமுடன் வசந்த் said...

//எங்களுக்கு, 'இந்த வருஷம் நல்லா மழை பெஞ்சிருக்கு'ன்னு திருப்தியாகும். //

:)))

அப்பிடியே கொஞ்சம் கத்தார் பக்கம் மழைய திருப்பிவிடுங்க மேடம் உங்களுக்கு புண்ணியமாப்போகும்....

sathishsangkavi.blogspot.com said...

மழையாய் கொட்டுகிறது உங்கள் பதிவு....

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தனமுல்லை,

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

சஸ்பென்ஸ் அடுத்த இடுகையில் உடையும்.

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

எல்.கே,

ஆஹா... கூட்டணியா :-))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆடுமாடு,

மும்பைல இருந்திருக்கீங்களா.. அப்ப நான் சொல்லாமலேயே உங்களால் புரிஞ்சிக்க முடியும்.

அடுத்த இடுகையில் சொல்றேன்.

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்டார்ஜன்,

அதேதான்.. அளவுக்கு மீறினா அமிர்தமும் நஞ்சுதானே!!.

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அம்பிகா,

எனக்கு மழைல நனையுறது பிடிக்கும் :-)))

அப்றம் காய்ச்சலும் பிடிக்கும்.மழை தொடர்ந்து பெய்யும்.தொடர்ந்து வாங்க.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கருணாகரசு,

சிறு தூறல் நல்லாத்தான் இருக்கும்.

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

மழை ஒரு நாளில் நிற்கக்கூடியதில்லையே :-))

தொடர்ந்து வாங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசர்,

வந்துக்கிட்டே இருக்கு.

நன்றி.

துளசி கோபால் said...

நல்லாத் தேறிட்டீங்க!!!!!

சரியான இடத்தில்...'தொடரும்'


ம்....அப்புறம்?

வல்லிசிம்ஹன் said...

நானும் மும்பை மழைல மாட்டி இருக்கேன். சுகமான நாட்கள் 1996ல.
மகன் ஆபீஸுக்குப் போய் விடுவான். இவருக்கோ தொலைக்காட்சி போதும்.
எனக்கு புத்தகமும் ,பால்கனியும் புறாக்கள் ஒடுங்கும் கூண்டும் போதும்.
அந்த நாட்களில் மகனைக் கார் எடுக்க வேணாம்னு சொல்லிடுவோம். .பாண்ட்ரா ஸ்டேஷன்ல இருந்து நாரிமன் பாய்ண்டு போய் வருவான்.

வீட்டைச் சுத்தம் செய்ய வரும் மாயி பெண்ணுடன் அரட்டை. குடையோடு சப்ஜிவாலாவோடு அரைகுறை இந்தியில் சம்சாரிப்பு.
வெள்ளங்கள் வரும்முன்னால் சென்னை வந்துவிடுவோம்.
வெகு அருமை சாரல்,மழையைத் தொட்ருங்கள். தடால்னா என்ன.
அடுத்த பதிவு உடனே. ஏதாவது சிந்தனை தோன்றுகிறது:(

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்த்,

இந்த வருஷம் பயங்கர வெய்யிலாமே.. பாவம், எப்படித்தான் சமாளிக்கிறீங்களோ!!.. மழையை அந்தப்பக்கமும் எட்டிப்பாக்கச்சொல்லியிருக்கேன். சீக்கிரமே வந்துடும்.. கவலைப்படாதீங்க.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கவி,

சீசனில்லையா :-)))

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துளசிடீச்சர்,

படிச்ச பள்ளிக்கூடத்து பேர காப்பாத்திட்டேனா :-)))

சொல்றேன்.. வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

எப்பவுமே மும்பை மழை இதமாத்தான் இருக்கும்.எங்க வீட்டுக்கு தண்ணி குடிக்க எப்பவும் புறா, மைனா,காகம் எல்லாம் வரும். மழைங்கிறதால இப்ப ஒண்ணும் வர்றதில்லை. வேணுங்கிறதுதான் அதுகளுக்கு ஏற்கனவே கிடைச்சுடுதே:-)))

மழைக்காலங்களில் காரைவிட பஸ்ஸும், ரயிலும்தான் பாதுகாப்பு.

வருகைக்கு நன்றி.

ஹுஸைனம்மா said...

என்னங்க, இப்பிடி தடால்னு தொடரும் போட்டுட்டீங்க?

/(சே...பின்றடா பிரதாப்பு)/

பிரதாப்பு, கூடையெல்லாம் பின்னுவீங்களா நீங்க? இல்ல வலை பின்னுறதா? ம்ம்.. கைவசம் ஒரு தொழில் இருக்கு... பர்வால்ல..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

சஸ்பென்ஸ் வைக்கத்தெரியுதான்னு சோதனை.. எனக்கு :-))))

//பிரதாப்பு, கூடையெல்லாம் பின்னுவீங்களா நீங்க? இல்ல வலை பின்னுறதா? ம்ம்.. கைவசம் ஒரு தொழில் இருக்கு.//

பிரதாப் தம்பி, பதில் சொல்லுங்க :-))

ஸாதிகா said...

மழை அனுபவம் அருமை.பொருத்தமான இடத்தில் தொடரும் போட்டு விட்டு பி டி சாமி ரேஞ்சுக்கு போய் விட்டீர்கள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸாதிகா,

உண்மையிலேயே நல்ல அனுபவம்தான்.பி டி சாமி மர்மக்கதை எழுதுவதில் புலி, நான்???.. சுண்டெலி :-))))))

வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாங்க.

LinkWithin

Related Posts with Thumbnails