Saturday, 6 February 2010

போகும் வழி வெகு தூரமில்லை.

ஸ்ட்ராபெர்ரி,வெனிலா,சாக்லெட்.. எந்த ஃப்ளேவர் வேணும்ன்னாலும் எடுத்துக்கலாம்.உறங்கப்போகும் நேரத்தில் ஐஸ்க்ரீம் தேவையான்னு நினைச்சாலும்,கை தானா நீண்டு,ஸ்டராபெர்ரியை எடுத்துகிட்டது.மத்தியானம் வெனிலாவும், சாக்லெட்டும் வந்தது.மத்தியானம் சரி.. டின்னருக்காவது, சூடா ஏதாவது குடிக்கணும்ங்கிறவங்களுக்காக,மெனுவை ச்சாய்ஸில் விட்டா நல்லாருக்கும்.

இதென்னா.. திடீர்ன்னு காதுக்குள்ள கச்சேரி நடக்குதா!!!! அடிச்சுப்பிடிச்சு எழுந்தா மொபைல் அலாரம் பாடிக்கிட்டிருக்கு!!!. வழக்கமான 'டைட்டானிக்' கை மாத்திட்டதை மறந்துட்டேன்.கொஞ்ச நேரத்தில், 'யாத்ரிகள் கவனத்துக்கு'ன்னு ஆரம்பிச்சு,திருவனந்தபுரம் வரப்போவதை,ஒரு அக்கா சொன்னாங்க.ஒவ்வொரு ஸ்டேஷன் வருவதற்கும்,ஐந்து நிமிஷங்கள்முன்பு அந்தந்த ஸ்டேஷங்கள் பெயரை அறிவிக்கிறாங்க.இது ஒரு நல்ல ஏற்பாடு.

சரியா ஐந்துமணி, நாப்பது நிமிஷத்துக்கு எங்க ரயில் திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேஷனுக்குள்,மூக்கை நுழைத்தது.ரயிலைவிட்டு இறங்கி, காத்திருக்கும் நேரத்தில்,'கடுப்பம் கூடுதலாயிட்டு ஒரு ச்சாய'.பையருக்கு, நான் மலையாளத்தை பிச்சு ஒதறி,காயப்போடுவதைப்பாத்து சிரிப்பு தாங்கலை.

திருநெல்வேலிக்கு இங்கிருந்து இன்னும் மூன்றரை மணி நேரப்பயணம்.மாமா கூட வந்ததால் கலகலப்பா இருந்தது. நாலு வருஷத்துக்கு அப்புறம் பாக்கிறோம். அவுங்ககிட்ட குவைத் செய்திகளும், எங்ககிட்ட மும்பை செய்திகளும் இருந்ததால் ஒரு ந்யூஸ் சேனலே ஓடிக்கிட்டிருந்தது.திருவனந்தபுரம் எல்லை தாண்டியதும் பேச்சு மூச்சில்லை. கண்ணுக்கு விருந்து கொட்டிக்கிடக்கிறப்ப ,காது கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கட்டுமே.

உலகத்துல உள்ள எல்லா அழகுக்கும்,பிறந்தகம் இதுதான் என்பதுமாதிரி இருக்கு. தென்னந்தோப்புகளும், வயல்வெளிகளும், நீர்நிலைகளும்,கேரளத்துக்கே உரிய அந்த அதிகாலை நேர குளிர் காற்றும் மனசெல்லாம் நிறைஞ்சு போச்சு.வயல்வெளிகளில் பயிர்பச்சைகளுக்கு மேல்,சாம்பிராணி புகை மாதிரி பனி நிக்குது.வழியில் ஐயப்பன் கோவிலில்,வெடிவழிபாடை ஆச்சரியமா பார்த்த மாமாவுக்கு விளக்கி சொன்னேன்.

நாகர்கோவில் அருகே சுங்கான் கடைஎன்னும் இடத்தில் 'ஹோட்டல் கௌரிசங்கர்' புதுசா இருக்கு.அருமையான மெனு. மும்பையில் சில ஹோட்டல்களில் இருப்பதை போலவே, சின்னகடை ஒன்னும் அட்டாச்டா இருக்கு.சாக்லெட் ,பிஸ்கட்,மக்ரோன்,...'பானங்கள்'கூட இருக்குப்பா.. வெளியே இடதுபக்கமா ஜூஸ் செண்டரும் இருக்கு.காலை உணவை முடிச்சிகிட்டு, பயணத்தை தொடர்ந்தோம்.


வேளிமலையின் ஒரு தோற்றம்.
நாகர்கோவிலில் புகுந்து புறப்பட்டு, தோவாளையில் மல்லிப்பூ வாங்கிகிட்டு,ஆரல்வாய்மொழியை கடந்தோம்.முப்பந்தல் முன்னாடி இருக்கிற அந்த ரோட்டில் ரெண்டு பக்கமும்,அடர்த்தியா மரம் வளர்ந்து,பகல்லேயே இருட்டா,ஒருமாதிரி அழகா இருக்கும்.இப்போ ஏதோ பேருக்கு இருக்கு. பக்கத்துல இருந்த பொட்டல்காடெல்லாம்,காத்தாடி ஆலை வந்தபிறகு ஏதோ கொஞ்சம் மரம்,மட்டையோட இருக்கு. இப்போதான் ஆட்களுக்கான குடியிருப்பும் வர ஆரம்பிச்சிடுச்சே. ஆட்கள் வரவர, கொஞ்சமாவது முன்னேறத்தானே வேணும்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு குடியிருப்பையும் பார்த்தேன்.

இங்கிருந்து ஆரம்பிச்சு,வள்ளியூர் தாண்டியும் காத்தாடி பறக்குதாமே. முப்பந்தல் தாண்டும்போது, லேசா வலதுபக்கம் பாத்தா.. காத்தாடிக்கடலே இருக்கு.அன்னிக்கு நல்ல காத்து போலிருக்கு. சும்மா..விர்..விர்.ன்னு சுத்துது.

ஆத்தாடி..காத்தாடி!!!
நல்லாத்தான் இருக்கு 'தங்க நாற்கரச்சாலை' இந்தப்பக்கம் ரெண்டுலேன், அந்தப்பக்கம் ரெண்டுலேன், நடுவில் டிவைடர்..அந்தப்பகுதிகளின் அடையாளமே மாறிட்டது போலிருக்கு.எப்படியோ ..விபத்து நடப்பது குறைஞ்சா சரின்னு சொல்லி வாய் மூடலை..ரோட்டோரத்தில் ஆக்ஸிடெண்ட் ஆகிக்கிடந்த வேன் கண்ணுல பட்டுத்தொலைச்சது.முந்தின நாள் ராத்திரியிலிருந்து அங்கே கிடக்குதாம்.பாவம்... ஒருத்தருக்கும் ஒன்னும் ஆகாம இருக்கணும்.


நாற்கரச்சாலை.
வழியில் மூன்றடைப்பு வந்ததும்,பறவைகள் ஏதாவது தென்படுதான்னு பாத்தா, அங்க தண்ணியே ,ரொம்ப கொஞ்சமாத்தான் இருக்கு.பறவைகள் ஒன்னையும் காணல்லை. ஊருக்குள்ள போயிருக்கோ என்னவோ!!!.

வீட்டுக்கு போய் சேர்ந்து,ரிலாக்ஸாகி,டைம் பாத்தா... அச்சச்சோ!!!! அந்த இடத்துக்கு சாயங்காலம்தான் போக முடியும் போலிருக்கு.






10 comments:

சந்தனமுல்லை said...

ஆஹா...நாங்களும் கூட வந்தமாதிரி இல்லே இருக்கு! படங்கள் சூப்பர்! கேரளா போக எனக்கும் ஆசையை கிளப்பி விட்டுட்டீங்க! :-)

எல் கே said...

hmm nalla poitruku ... continue pannunga.. pavam antha ayyarkitta neenga hindila ketrukalam

sathishsangkavi.blogspot.com said...

படங்கள் அனைத்தும் அருமை...

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லா எழுதியிருக்கீங்க படிக்க படிக்க சுவாரஸ்யமா இருந்துச்சுங்க...

(திருநெல்வெலின்னதும் ஒரு பயம் வந்துடுச்சு அம்புட்டுத்தேன்)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தனமுல்லை,

கண்டிப்பா போயிட்டு வாங்க. உங்களுக்கு ரொம்பவே பிடிச்சுப்போகும்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க L.K.

அச்சச்சோ!! பையரை அய்யராக்கிட்டீங்களே :-)).சிரிச்சது என் பையர்தான். மலையாளம் மறந்து போச்சுன்னு சொல்லிக்கிட்டே, நல்லாப்பேசறீங்களேன்னார்.

வேறொன்னுமில்லை.. எதுக்கும் இருக்கட்டுமுன்னு நானாவே,சின்னப்புள்ளையிலயே மலையாளம் எழுத,படிக்க, பேச கத்து வெச்சிருந்தேன்.இவ்வளவு வருஷ இடைவெளியில், எனக்கும் அதுக்கும் இடைவெளி விழுந்துவிட்டது. அதுதான் ஜாஸ்தி தெரியாதுன்னு சொல்லிடறது.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கவி,

நன்றிப்பா!! மீண்டும் வருக.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்த்,

வந்ததுக்கு நன்றி.

நாங்கல்ல்லாம் ரொம்ப நல்ல புள்ளைங்கப்பா :-))). அருவாளை பென்சில் சீவ மட்டும்தான் எடுப்போம். :-)))).

ஹுஸைனம்மா said...

நீங்க டிக்கட் புக் பண்ணதுல இருந்தே உங்ககூடத்தான் வந்துகிட்டு இருக்கேன். ராஜ்தானியில பயணம் செய்யணும்கிறா ஆசையை மேலும் அதிகப்படுத்திவிடுறீங்க.

எங்க ஊரான திருநெல்வேலிக்கு வந்திருக்கீங்க போல!!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன!!!

அப்பப்ப ஒரு அட்டண்டென்சும் போட்டுகிடுங்க :-).

பத்து நாளா அங்கன தங்கியிருந்தோம்லா.

LinkWithin

Related Posts with Thumbnails