Sunday 16 February 2020

சாரல் துளிகள்

கிடாரின் தந்தியென விட்டு விட்டு அதிர்ந்து கொண்டிருக்கும் புறாவோடு, சுதி சேராமல் இணைந்திசைக்கிறது இன்னொரு புறா.

ஒருவருக்கொருவர் உதவியும் கைத்தாங்கலுமாக இருக்க வேண்டும் மனித வாழ்வு. ஒருவழிப் பாதையாக அல்ல.

அத்தனை மொட்டுகளும் மலர்ந்தபின் தனக்கானதைத் தேர்ந்தெடுக்கவெனக் காத்திருக்கிறது பட்டாம்பூச்சி, சிறகுகள் வெளிறி உதிர்ந்து கொண்டிருப்பதை உணராமல்.

எருதை மேன்மேலும் புண்படுத்திக்கொண்டிருக்கும் காக்கைகள் ஒருபோதும் அறிவதில்லை, அவற்றுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் கரிச்சான்களை.

அரவமற்ற பின்னிரவில் இரைச்சல் அதிகம்.

எல்லா மொழியும் தெரிந்த கடவுளுக்கு எந்த மொழியில் சொன்னாலும் புரிவதில்லை. ஆகவே, செவி சாய்ப்பதுமில்லை.

ஆட்டோ கேப்பில் சைக்கிளில் போய்விட நினைப்பவரை, சைக்கிள் கேப்பில் நடந்து போக வைக்கிறது வாழ்க்கை.

அளவுக்கு மீறிய செயற்கையான பணிவுடன் காலில் விழுவதெல்லாம் காலை வாரி விடத்தானேயன்றி வேறெதற்குமல்ல.

நீட்டவும் குறுக்கவும் வேண்டியிருக்கும்  தாமரைத்தண்டுக்கு யாதொரு கவலையுமில்லை. கவலையெல்லாம், வற்றவும் பெருக்கவுமாயிருந்து அவதிப்படும் குளத்துக்குத்தான்.

கொந்தளிக்கும் நடுக்கடலில் அலைவுறும் படகில், துடுப்பு வலிப்பதை நிறுத்தி, பேரமைதியுடன் நிமிர்ந்து அமர்கிறான். விதி வழிப் பயணிக்கிறது படகு.

3 comments:

Yaathoramani.blogspot.com said...

ஆஹா...ஆழமான சிந்தனையில் விளைந்த அற்புதமான படைப்பு..மிக முக்கிய்மாய் முதல் வாக்கியமும் நிறைவான வாக்கியமும்...வாழ்த்துகளுடன்..

Prabu M said...

Beautifully written akka...
After a long long time I'm visiting blogs :(
Very happy to see you posting actively... I heard Tamilmanam is NOT active anymore.... is there any other aggregator available for Tamil blogs now a days?

வெங்கட் நாகராஜ் said...

முகநூல் இற்றைகள் அனைத்தும் சிறப்பு.

இங்கேயும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

LinkWithin

Related Posts with Thumbnails