Thursday 17 September 2015

துன்பம் நீக்கும் தும்பிக்கையான்

வழக்கமான வழக்கப்படி இந்த வருடமும் மேளதாளங்கள், பேண்ட் பாஜா முழங்க பிள்ளையார் மும்பைக்கு வந்து விட்டார். சென்ற வருடத்திலிருந்து எங்கள் வீட்டிற்கும் விஜயம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

இந்த வருடம் வந்த சதுர்புஜன்.


இவர் போன வருடம் எங்கள் வீட்டிற்கு மஹாராஷ்ட்ராவின் குறு நில மன்னர்களான பேஷ்வாக்களின் ஆடையலங்காரத்தில் வந்த பிள்ளையார்.



மூஞ்சூறை மஹாராஷ்ட்ர மக்கள் செல்லமாக "உந்தீர் மாமா" என்று அழைப்பார்கள் :-))



வேழ முகத்தான் அனைவரின் வாழ்விலும் இன்னல்களை நீக்கி வாழ்வினை கன்னல் போல் இனிதாக்கட்டும். அலங்கரிக்கும் பொறுப்பை தான் ஏற்றுக்கொண்டு சிரத்தையோடு தெர்மோகூல் மண்டபத்தை அலங்கரித்து, பிரசாதமாக உலர்பழ ஷீராவையும், மோதகத்தையும் தயார் செய்து என் வேலையை எளிதாக்கிய மகளுக்கு என் நன்றிகள் :-).

அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

10 comments:

துளசி கோபால் said...

அப்படியே அள்ளிக்கிட்டுப் போறார்ப்பா!!!

ஹுஸைனம்மா said...

இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

//சதுர்புஜன்//

அப்படின்னா என்ன அர்த்தம்?

அப்புறம் //எங்கள் வீட்டிற்கு வந்த பிள்ளையார்// - நீங்க வாங்கியது அல்லது செய்ததைத்தான் இப்படி குறிப்பிடுறீங்களா அல்லது பரிசாக வந்ததைச் சொல்றீங்களா?

//உலர்பழ ஷீராவையும், மோதகத்தையும் தயார் செய்து என் வேலையை எளிதாக்கிய மகளுக்கு//

மகள்கிட்ட வேலைகளைக் கொடுத்துட்டு, பதிவு போடுற ஈஸி வேலையை மட்டும் செஞ்சிருக்கீங்க... ம்ம்...

ஆமா, மகளோட கைவண்ணத்தில் தயாரான ஷீராவையும், மோதகத்தையும் படம் பிடிச்சு போடலையே? உங்களைவிட சிறப்பா செய்திருந்தாங்களோ? :-))))))

வெங்கட் நாகராஜ் said...

அழகான படங்கள்......

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

அருமையான லைட்டிங். அழகான படங்கள். அலங்காரமும் சிறப்பு.

குடும்பத்தினர் அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.

துபாய் ராஜா said...

அழகான பிள்ளையார். அருமையான படங்கள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துள்சிக்கா,

அலங்கரித்த மகளுக்கு பாராட்டுகளைச் சொல்லி விட்டேன் :-)

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹூஸைனம்மா,

சதுர்புஜன் என்றால் நான்கு புஜங்களை உடையவர் என்று அர்த்தம். சதுர்த்திக்காக வாங்கி வரப்பட்டவர்தான் இந்தப்பிள்ளையார்.

இளைய தலைமுறைக்கு தானாகவே ஆர்வம் இருக்கிறது. முன் வந்து செய்கிறாள். தடுப்பானேன் ;-) ஷீராவும், மோதகமும் தனிப்பதிவாக வரும் :-)

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

உங்களுக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலக்ஷ்மி,

பாராட்டுதல்களை மகளிடம் சொல்லி விட்டேன் :-)

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துபாய் ராஜா,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails