புறத்தால் அகம் விழிக்கிறது, அகத்தால் புறம் செயல் புகுகிறது.
பொரிந்து தள்ளுவதை விட புரிந்து கொள்ளும்படி பேசப்படுவதே கவனத்தில் நிற்கும்.
பயத்தை வெல்ல ஒரே வழி அதனுடன் தோழமை ஏற்படுத்திக்கொள்வதுதான்.
ஒட்டிக்கொண்டிருந்த கல்துணுக்குகளைத் தூசாய்த்தட்டி விட்டு விட்டு எழுந்து நின்றது சிற்பம்.
ஆர்வத்தாலோ ஆர்வக்கோளாறாலோ, எப்படி ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் முழுமூச்சுடன் உழைக்க ஆரம்பிக்கும் ஒரு கட்டத்தில் இரு பாதைகளும் இரண்டறக்கலந்து வெற்றியை நோக்கிப் பயணத்தைத் தொடர்கின்றன.
பிறர் தோளில் சவாரி செய்யும் குழந்தைகள் கூட ஓர் நாளில் சுயமாய் நடக்கத்துவங்கி விடுகிறார்கள். சொகுசு கண்ட சோம்பேறிகளோ அதிலேயே உறைந்து விடுகிறார்கள்.
பிடிமானம் உறுதுணையாக இல்லாத இடமானால் அங்கே உறுதிக்கு இலக்கணமான நாணலாலும் தாக்குப்பிடிக்க இயலாது.
சொல்பவர்கள் இறைத்துவிட்டுப் போய்விடுகிறார்கள். சொற்கள்தாம் கிடந்து அரைபடுகின்றன.
நம் அழுத்தங்களையும் சுமையையும் தாங்குமளவு பிறர் தோள்கள் வலுவுள்ளவையா என்பதைப் பெரும்பாலான சமயங்களில் நாம் அறிவதேயில்லை.
"என்னைத்தூக்கிக்கோ.." என்று கைகளை உயர்த்தும் குழந்தையை நோக்கி நீள்கின்றன ஒன்றுக்கும் மேற்பட்ட தாய்க்கரங்கள்.
11 comments:
அனைத்தும் அருமை அக்கா...
அற்புதமான அனுபவ மொழிகள்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
அனைத்துமே அருமை. கடைசியில் சொன்னது பிடித்ததில் முதலாய்!
arumai vazhthukkal sagothari
arumai vazhthukkal sagothari
பத்துமே அரசிக்க வைத்த முத்துகள்.
/அரசிக்க வைத்த //
"ரசிக்க வைத்த"
தவறுக்கு வருந்துகிறேன்!
தனித்துக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதபடி அத்தனை மொழிகளுமே சிறப்பாக அமைந்திருக்கின்றன. அருமை.
அருமையாக எழுதி இருக்கிறீர்கள். சோம்பேறிகள் தங்களை உணர்ந்து கொள்வார்களா என்பது சந்தேகமே ஷாந்திமா.
பொன்மொழிகள்....
அனைத்தும் அருமை சாந்தி
Post a Comment