Saturday, 15 February 2014

கடப்போம்.. நடப்போம்..

வெறுமனே கடந்து சென்றதாய் நினைத்துக்கொள்ளும் அந்த நாளின் ஏதோவொரு நொடித்துளியில் ஒளிந்திருக்கக்கூடும் மிக இனிய நினைவொன்று.

பொறுப்புகளையும் முயற்சியையும் தட்டிக்கழிப்பவர்களை வெற்றி தேவதையும் தட்டிக்கழித்து விடுகிறாள்.

கரைந்து விட்ட சூரியனுக்காக வருத்தப்படுபவர்களை ஆறுதல் படுத்தவென்று உருக்கொண்டெழுகிறது நிலா.

ஒருமுறை கூட விழாமலிருப்பதிலல்ல, விழும் ஒவ்வொரு முறையும் மேலும் உறுதியாக எழுவதில்தான் இருக்கிறது பெருஞ்சிறப்பு.

பூவின் வாசனைக்கு எளிதில் மயங்கிவிடும் மெல்லிய மனமே முட்களாலும் எளிதில் காயப்பட்டு விடுகிறது, ஆகவே உறுதியை வளர்த்துக்கொள்வோம்.

எல்லாவற்றையும் கடந்து நடப்போம் மென்மேலும் உறுதியாக அடியெடுத்து வைத்தபடி.

தகுந்த காலம், வாய்ப்பு வசதிகள் போன்ற அனைத்தையும் விட முக்கியமானது, எப்படியாவது செய்து முடிக்க வேண்டுமென்ற தன்னார்வமே.

பின்விளைவுகளையும் தீர அலசி ஆராய்ந்தபின் ஆரம்பிக்கும் செயல்கள் பெரும்பாலும் தோற்றுப்போவதில்லை.

சலனமுற்ற மனதில் தீர்வுகளும் நிலைபெறாமல் தளும்பிக்கொண்டேதான் இருக்கும்.

மகிழ்ச்சியையும் அமைதியையும் பெற வேண்டுமாயின், முதலில் அதை மற்றவர்க்குக் கொடுக்கப் பழக வேண்டும்.

17 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// உறுதியாக அடியெடுத்து வைத்தபடி // அருமை...

முடிவில் சிறப்பு... வாழ்த்துக்கள்...

ஸ்ரீராம். said...

பத்துமே நன்று.

வல்லிசிம்ஹன் said...

பின்விளைவுகளையும் தீர அலசி ஆராய்ந்தபின் ஆரம்பிக்கும் செயல்கள் பெரும்பாலும் தோற்றுப்போவதில்லை.

சலனமுற்ற மனதில் தீர்வுகளும் நிலைபெறாமல் தளும்பிக்கொண்டேதான் இருக்கும்.
நன்றி சாந்தி.

Thenammai Lakshmanan said...

அனைத்தும் அருமைடா சாந்தி.

Kasthuri Rengan said...

கவிதை நடையில் ஒரு கட்டுரை தொடர்க வாழ்த்துக்கள்...

**
வடிவமைப்பு அருமை..

****
கொஞ்சம் கவிதைகளையும் தருக

அல்லது உங்கள் காமிராக் கவிதைகளையும் ....
நன்றி..

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் அருமை. முதலாவது அழகு.

கோமதி அரசு said...

பத்துமே மிக அருமை சாந்தி.

ஞா கலையரசி said...

சிந்தனைத் துளிகள் அனைத்தும் அருமை; குறிப்பாக ஐந்தாவது வாசகம் (பூவின் வாசனைக்கு) என்னை மிகவும் கவர்ந்தது.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தனபாலன்,

மிக்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

வாசித்தமைக்கு மிக்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

வாசித்தமைக்கு மிக்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தேனக்கா,

வாசித்தமைக்கு மிக்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மது,

கவிதைகளெல்லாம் இங்கே இருக்கின்றன. அப்படியே சுட்டியின் விரல் பிடித்துப்போனால் போதும், கொண்டு விட்டு விடும் :-))
http://amaithichaaral.blogspot.com

வாசித்தமைக்கு மிக்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலக்ஷ்மி,

வாசித்தமைக்கு மிக்க நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதிம்மா,

வாசித்தமைக்கு மிக்க நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கலையரசி,

முதல் வரவுக்கும் வாசித்தமைக்கும் மிக்க நன்றி..

வெங்கட் நாகராஜ் said...

அத்தனையும் அருமை.....

பாராட்டுகள்.

LinkWithin

Related Posts with Thumbnails