Thursday, 6 February 2014

சாரல் துளிகள்

அனுமார் வாலில் கட்டிய மணியாய் சப்தித்துக்கொண்டிருக்கிறது, வாலின் நுனியில் நின்று கொண்டிருக்கும் வாகனமொன்று..

ஊம்.. ஊம் என்று மிரட்டுகிறது காற்று, ஆம்.. ஆம்.. என்று ஆமோதிக்கிறது கடல். பயப்படாத ஆட்டுக்குட்டியாய் துள்ளிக்குதித்துக் கொண்டிருக்கிறது சிறுபடகு.

இப்பக்கமும் அப்பக்கமும் தாவாமல், நெடுக நடந்து சென்றது பூனை.. மதில் நுனியில் பூனைக்குட்டி.

அத்தனை விதமான மருந்துகளாலும் ஆயுதங்களாலும் துரத்தப்பட்ட கொசு சொன்னது.. "நாராயணா.. இந்த மனுசங்க தொல்லை தாங்கலைடா. அவ்வ்வ்வ்வ்வ்.."

வரப்போகும் வெயில் காலத்திற்குப் பூத்துக்குலுங்கிக் கட்டியம் கூறுகின்றன மாமரங்கள்.

ஸ்வெட்டரைப் போட்டுக்கொள்ளவா? அல்லது மழைக்கோட்டைப் போட்டுக்கொள்ளவா? என்று சற்று நேரம் மும்பை மக்களைக் குழப்பி விட்டுச் சென்று விட்டது பருவம் தப்பி வந்த மழை..

குழந்தைகளாக இருக்கும்போது சீக்கிரம் வளர்ந்து விட மாட்டோமா என்று ஆசைப்படுவதும், வளர்ந்தபின் குழந்தைகளாகவே இருந்திருக்கக்கூடாதா!! என்று ஏங்குவதும் என்ன மாதிரியான மனநிலையைச்சாரும்??..

தவளையை விழுங்க வரும் பாம்பாய் சிவப்பு விளக்கு மின்னும் நாற்சந்தியில் மெதுமெதுவே ஊர்ந்து பாதுகாப்பான தொலைவைக்கடந்தபின், சிறுத்தையாய்த் தலைதெறிக்க ஓடுகிறது வாகனமொன்று..

புகைத்துகள்களில் கரி குளித்து, மேலும் கருமையழகுடன் மினுமினுக்கின்றன நகரத்துக்காக்கைகள்..

மங்கி குல்லா போட்ட குட்டிப்பாப்பாக்களுக்கென்று தனியழகு வந்து விடுகிறது.

டிஸ்கி: சாரல் துளிகள் மட்டுமன்றி அவ்வப்போது ஃபேஸ்புக்கில் மொழிந்தவையும் இனிமேல் இவ்வாறு பகிரப்படும் என்று பகிரங்க மிரட்டல் விடுக்கப்படுகிறது :-)))))

10 comments:

Yaathoramani.blogspot.com said...

இதத்தை தண்மையை உணர்ந்தேன்
படத்துடன் பதிவும் உணர்த்திப்போனது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

இதத்தை தண்மையை உணர்ந்தேன்
படத்துடன் பதிவும் உணர்த்திப்போனது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...


முகநூலிலேயே படித்திருக்கிறேன். இரண்டாவதைப் படித்தபோது பாரதியின் 'ஓம் ஓம் என்று உறுமிற்று வானம்' நினைவுக்கு வந்தது.

திண்டுக்கல் தனபாலன் said...

மங்கி குல்லா, என்ன மாதிரியான மனநிலை, மாமரங்கள் - ரசித்தேன்...

மிரட்டல் தொடரட்டும்...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

கற்பனைகள் சிறப்பு... வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கோமதி அரசு said...

குழந்தைகளாக இருக்கும்போது சீக்கிரம் வளர்ந்து விட மாட்டோமா என்று ஆசைப்படுவதும், வளர்ந்தபின் குழந்தைகளாகவே இருந்திருக்கக்கூடாதா!! என்று ஏங்குவதும் என்ன மாதிரியான மனநிலையைச்சாரும்??..//
அருமை.
அடிக்கடி இப்படி பகிர வலைத்தளம் வர வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

ரசனை! அனைத்தும் அருமை. இரண்டாவது மிகப்பிடித்தது.

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை..... ரசித்தேன்.

த.ம. +1

Asiya Omar said...

அழகான படம், கண்ணை படத்டஹி விட்டு எடுக்க முடியலை, முன்பே வாசித்திருக்கிறேன்.நல்ல பகிர்வு.

மகேந்திரன் said...

ரசிக்க வைக்கும் துணுக்குகள்...

LinkWithin

Related Posts with Thumbnails