Monday 19 August 2013

கிளைத்துச்செழித்த மரம்..

சிலரிடம் நேரிடையாகப் பேசும்போதுதான் அவர்களைப்பற்றி அதுகாறும் நாம் கொண்டிருந்த மதிப்பீடும் புரிதலும் மறுமதிப்பீட்டிற்குள்ளாகிறது.

ஒரு செயலில் இறங்கும்போது, அந்த ஆர்வத்திற்கு அணை போடுவதற்குக் காரணமாக அமைவது அழுக்காறா அக்கறையா என்பது அதைச்செய்பவர்களுக்கும் நமக்குமான உறவைத்தீர்மானிக்கிறது.

பயத்தைக் களைந்து, துணிச்சலை வார்த்து வந்தால் தன்னம்பிக்கை மரம் கிளைத்து வளரும்.

எதிர்பாராத இடத்திலிருந்து கிடைக்கும் ஒரு துளி உதவி கொடுக்கும் நிம்மதியைப் பெருஞ்செல்வம் கூட சில சமயங்களில் கொடுத்து விட முடிவதில்லை.

கடனே என்று கடமையைச் செய்வதை விட சும்மா இருப்பது மேலானது. சும்மா இருப்பதை விட மன நிறைவுடன் கடமையைச் செய்வது அதிமேலானது.

வியாபாரம் போன்ற தொழில்களில் உறவுகள் உருவானால் இரண்டும் செழிக்கும். அதுவே உறவுகளுக்கிடையே வியாபாரம் நுழைந்தால் இரண்டும் இல்லாமற்போய்விடும்.

நெல்லிடை வளரும் புல் களையெனக் கொள்ளப்படுகிறது. இருந்தும் கால்நடைகளுக்குத்தீவனமாய் பிறருக்குப் பயன்படும்படி அதன் வாழ்வு அமைகிறது. அவ்வாறே மனிதருக்கும் தத்தம் பிறவிப்பயன் என்று ஒன்றுண்டு.. கண்டறிவோம்.

பிரச்சினைகளைக் குறித்து வெறுமனே கவலைப்படுவது நம்மைக் கட்டிப்போடுகின்றது. அவற்றைத் தீர்க்கும் சிந்தனை ஒன்றே அதிலிருந்து நமக்கு விடுதலை தருகிறது.

இதழ்களில் ஏந்திக்கொள்ளும் சிறுபுன்னகை, மோசமான தினத்தைக்கூட ஓரளவு சீரமைக்கும் வல்லமை கொண்டது.

கடமை சமைக்கிறது.. அன்பும் பாசமும் ருசியைக்கலக்கின்றன.

4 comments:

வல்லிசிம்ஹன் said...

ஹ்ம்ம். இன்றுமுதல் சாரல் ஞானபீடத்தில் மெம்பராகிவிட்டேன்.
உண்மை தான். அத்தனை வரிகளுலும் கரிசனமும் நேர்மையும் பளிச்சிடுகின்றன. வாழ்த்துகள் மா.

ஸ்ரீராம். said...

எல்லாமே அருமை. நான்காவது காலத்தினால் செய்த உதவியை நினைவு படுத்துகிறது.

ராமலக்ஷ்மி said...

அத்தனை துளிகளும் அருமை. இந்தச் சாரலில் கிழைத்துச் செழிக்கும் மரம்.

மாதேவி said...

நல்ல சிந்தனைத் துளிகள்.

LinkWithin

Related Posts with Thumbnails