Friday 5 April 2013

நெல்லை ஹலோ எஃப்.எம்மில் எனது பேட்டி.. (கடைசிப்பகுதி)


முதல்லயே பேட்டியில் என்னென்னல்லாம் கேப்பாங்கன்னு கேட்டு வெச்சுக்கலாமான்னு ஒரு யோசனை இருந்துச்சு. அப்றம், 'கேட்டு வெச்சுட்டுப் பதில் சொன்னா அதெல்லாம் தயார் செய்யப்பட்ட பதில்களாப் போயிருமே. அது இயற்கையா வர்ற பதிலா இருக்காதே, அதனால் கேக்க வேண்டாம்'ன்னு நினைச்சுக் கேக்காமலேயே விட்டுட்டேன். 

ஜெயா பேட்டியை ஆரம்பிக்கிற வரைக்கும் பரீட்சை ஹாலில் கேள்வித்தாளுக்காகக் காத்திருக்கும் ஒரு மாணவியின் மனநிலைதான் எனக்கும் இருந்துது. ஆனா, அவங்க கூட பேச ஆரம்பிச்ச அடுத்த நிமிஷமே எல்லாத்தையும் உதறிட்டு இயல்பாகிட்டேன். பேட்டிங்கற மாதிரியே இல்லாம இயல்பா ஒரு ஃப்ரெண்டோட பேசற மாதிரியே தோண வெச்சது அவங்களோட திறமைன்னே சொல்லலாம். ஆனாலும் பாவம் அவங்க,.. ப்ரேக் பிடிக்காத வண்டி மாதிரி நான் பாட்டுக்குப் பேசிட்டே இருந்தேன். அவங்களைப் பேசவே விடலையோன்னு அப்றமாத் தோணிச்சு.  பேட்டியெல்லாம் முடிஞ்ச அப்புறமாத்தான் என்னோட ட்யூப்லைட் மூளைக்கு இன்னொண்ணும் உறைச்சது. வழக்கமா என்னோட ப்ளாகின் பேரான “அமைதிச்சாரலை”எல்லா இடத்துலயும் சொல்லி அறிமுகப்படுத்திக்கறதுண்டு. இங்கே ஒரு தடவை கூட ‘அமைதிச்சாரல்’ன்னு ஒரு தடவை கூட உச்சரிக்காம “என் ப்ளாக், என் ப்ளாக்”ன்னே சொல்லிட்டிருந்துருக்கேன் அவ்வ்வ்வ்வ்..

அதே மாதிரி, சந்தர்ப்பம் கிடைச்சா, என்னோட ஒரு கவிதையையும் வாசிக்கணும்ன்னு தீர்மானம் வெச்சிருந்தேன். கடைசியில அதையும் வாசிக்கலை. (நெல்லை, குமரி மாவட்ட மக்கள் தப்பிச்சாங்க) உங்களுக்கு வேற என்னல்லாம் விருப்பங்கள் உண்டுன்னு ஒரு பந்தைப்போட்டுத் தந்தப்ப கூட, “நான் ஒரு கவிதாயினி, எளுத்தாளர்”ன்னெல்லாம் சொல்லி அதை சிக்ஸர் அடிக்காம கோட்டை விட்டிருக்கேன். சரி போகட்டும்,.. இப்ப எடுத்திருக்கறது போட்டோகிராபர் அவதாரம். அதுக்குண்டான கடமையை சரி வரச் செய்யணும். அதான் முக்கியம். எழுத்தாளினி அவதாரத்தில் இன்னொரு தடவை கூப்பிட்டா அப்பப் பார்த்துக்கலாம். (ஜெயா.. கவனியுங்க :-)))

ஆர்.ஜேயை விட நீங்க வேகமாப் பேசறீங்க. ஆன்ட்டிக்கு செம போட்டிதான்னு மகளும் கலாய்ச்சா. எனக்கென்னவோ எப்பவும் போல பேசற மாதிரிதான் தோணுது. கேள்விகளென்னவோ வழக்கம்போல்தான். ஆர்வம் எப்படி வந்தது? எப்படி திறமையை வளர்த்துக்கிட்டீங்கன்னெல்லாம் கேட்டாங்க. அதான் ரெண்டு மார்க் கேள்விக்கு அம்பது மார்க் அளவுல பதில்களை குங்குமம் தோழியிலும் சொல்லியிருக்கேனே. அதனால புதுசா சொல்றதுக்கு ஏதுமில்லாத மாதிரி ஒரு தோணல். இன்னும் கத்துக்கவும் திறமைகளை வளர்த்துக்கவும் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிற இந்தத் துறையில் உங்க லட்சியம் என்னன்னு கேட்டப்ப மட்டும் உள்மனசுல இருக்கற ஆசை வெளியில வந்திருச்சு போல. என்னன்னு பேட்டியில் கேளுங்க :-))))

என்னதான் எம்பி எம்பிக்குதிச்சுப் பார்த்தும் Mp3-க்கு இங்கே இணைப்புக்கொடுக்க எனக்குத் தெரியலை. கடைசியில் சவுண்டுக்ளவுடில் சேமிச்சேன். அங்கிருந்து ஃபேஸ்புக், டம்லர், மெயில், வேர்டுப்ரெஸ் எல்லாத்துலயும் பகிர்ந்துக்க முடியுது. ஆனா, ப்ளாகில் மட்டும் பகிர முடியாதுன்னு சொல்லிருச்சு. ஆகவே சேமிச்சு வெச்சுருக்கும் இடத்துக்கு வழி காமிச்சுக் கொடுத்திருக்கேன். கேட்டுட்டு வந்து சொல்லுங்க. அப்டியே ப்ளாகில் எப்படி எம்பி த்ரீயை எம்பாமலேயே இணைக்கலாம்ன்னு தொழில் நுட்பம் அறிஞ்சவங்களும் சொல்லுங்க :-)

                                                             

எம்பி த்ரீயை எப்படி ப்ளாகில் இணைக்கறதுன்னு குழுமத்தில் வழிகாட்டிய பாலராஜன் கீதாவுக்கு மிக்க நன்றி..

க்ளவுட்ஸில் கேட்க லிங்கைக் க்ளிக்கவும்.

https://soundcloud.com/santhymariappan-1/interview-in-nellai-hello-f-m

16 comments:

மனோ சாமிநாதன் said...

மனமார்ந்த‌ வாழ்த்துக்கள் சாந்தி!

பால கணேஷ் said...

ரொம்ப காக்க வெக்காம உடனே பதிவிட்டதுக்கு தாங்க்ஸ் சாரல் மேடம்! நீங்க குடுத்திருக்கற லிங்க்ல பதிவிறக்கி முழுமையா பேட்டியைக் கேட்டேன். எக்ஸ்பிரஸ் வேகத்துல பேசியிருக்கீங்க... இன்னும் கொஞ்சம் நிதான ஸ்பீட்ல பேசியிருக்கலாமேன்னு தோணிச்சு. லைஃப்‌ல முதன்முதலா காமிராவை ஹேண்டில் பண்ற எனக்கு உபயோகமான டிப்ஸ் நிறையக் கிடைச்சது உங்க பேட்டில! உங்களின் லட்சியம் நிறைவேற நானும் மனம் நிறைய வாழ்த்தறேன்!

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த முறை விட்டுப்போனதை அடுத்த முறை பேசிக்கலாம்...

ஆரம்பம் இது தானே... நல்லா இருக்கு... வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

http://www.bloggernanban.com/2010/11/how-to-add-music-in-blogger.html

இந்த இணைப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்...

இதில் உள்ளது போல் நானும் செய்துள்ளேன்...

திண்டுக்கல் தனபாலன் said...

என் தளத்தில் இணைத்துள்ள ஒரு பகிர்வு (DD Mix):

எண்ணங்களை மேம்படுத்தும் தாரக மந்திரம் எது ?

பதிவின் மேல் சொடுக்கவும்...

நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

சந்தேகம் இருப்பின் ஒரு தகவல் to

dindiguldhanabalan@yahoo.com

ஆச்சி ஸ்ரீதர் said...

போட்டோகிரபி பத்தின பேட்டியா .ஓகே,ஓகே,கெனான் கமிரா மண்டைய போட்டுட்டா !!!எம்மோ !!கொஞ்சம் பதட்டமும் தெரியுற மாதிரி இருந்தது.ப்ளாகர் ஒருத்தவங்க ரேடியோவில் பேட்டி கொடுத்துருக்காங்கன்னு சிலரிடம் பீத்த வேண்டியுள்ளது,சோ போயிட்டு வரேன்.வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

பேட்டியை கேட்டு மகிழ்ந்தேன்.
பி.சி. ஸ்ரீராம் போல , பாலுமகேந்திரா போல் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.
ஜெயா அப்படித்தானே வாழ்த்தினார்கள்.

Prathap Kumar S. said...

ரைட்டு :)

pudugaithendral said...

பதிவை படிச்சதற்கு இந்த பின்னூட்டம். உங்க குரலை போய் கேட்டுட்டு வர்றேன்

pudugaithendral said...

பேட்டி கேட்டாச்சு, நல்லா இருக்கு. நெர்வஸால்லாம் இல்லைப்பா. கலக்கல்.

VijiParthiban said...

அருமை அருமை அக்கா.... ரொம்ப ரொம்ப நல்ல இருந்தது உங்கள் குரலும் , திறமையும் ம்ம்ம்ம் சூப்பர் அக்கா .... வாழ்த்துக்கள்.......

ராமலக்ஷ்மி said...

நன்றாகப் பேசியிருக்கிறீர்கள் சாந்தி. பேட்டி அருமை. விரைவில் உங்கள் புகைப்படக் கண்காட்சி நடைபெறவும் என் நல்வாழ்த்துகள்!

ஸ்ரீராம். said...

1) செல்லில் அப்படியே ரெகார்ட் செய்யப் பட்டதா? இணையத்திலிருந்து அப்புறம் ரெகார்ட் செய்யப் பட்டதா??

2) வேகமாகப் பேசினாலும் புரிகிற வேகத்தில்தான் பேசியிருக்கிறீர்கள். ஒரு சமயம் பார்க்கும்போது உங்களைப் பேச விட்டு விட்டு கேள்விகளையும், சிரிப்பையும் அப்புறம் நடுவே 'பாஸ்' செய்து இணைத்திருப்பார்களோ என்று நகைச்சுவையாகத் தோன்றியது.

3) வேகமாகப் பேசுவது இந்த இடத்தில் அவசியம்தான். ரொம்ப நிதானமாகப் பேசினால் கொடுக்கப்பட்டுள்ள குறுகிய நேரத்தில் கொஞ்ச விஷயங்களையே பகிர்ந்திருக்க முடியும். பேச, பகிர நிறைய விஷயம் வைத்திருக்கிறீர்கள் என்ற எண்ணமே அந்த வேகத்தைக் கொடுத்திருக்கும்.

வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகள் சாந்தி. பேட்டி நல்லா தான் இருந்தது. முதல் தரம் இல்லையா. படபடப்புக் கொஞ்சம் தெரிகிறது. நீங்கள் நெல்லைக்குச் சென்று பேட்டி கொடுத்தீங்களா. சாரி கொஞ்சம் குழப்பம்.:(
ஓ.மொபைல்ல பேட்டியா.படனக்களில் தெரியும் அழகும் அமைதியும் உங்கள் மனத்தில் பதிந்திருந்ததால் பேட்டியும்
அதுபோலவே அமைந்திருக்கிறது.அவங்களுக்கு உங்கள் ப்ளாக் பெயரை மெயிலுடுங்க!!
மனமார்ந்த வாழ்த்துகள் மா.

Asiya Omar said...

பேட்டி மிக அருமை சாந்தி. இயல்பாக இருந்தது.பேட்டி எடுத்தவர் சொன்னபடி பாலும்கேந்திரா,பி.சி.ஸ்ரீ ராம் போல் வர மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்கள் புகைப்பட கண்காட்சி விரைவில் நடைபெறவும் வாழ்த்துக்கள்.தொடர்ந்து அசத்துங்க சாந்தி.ஆர்வம் இருந்தால்
எப்படியும் கற்றுக் கொள்ளலாம் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம் சாந்தி.

LinkWithin

Related Posts with Thumbnails