வாராவாரம் ஃபேஸ்புக்கில் புகைப்படப்பிரியன் நடத்தும் தீம் போட்டி அனைவரும் அறிந்ததே. சென்ற வாரத்துக்கு முந்தைய வாரம் "வாகனங்கள்" என்ற தலைப்பில் போட்டி நடந்தது. கை வசம் இருந்த வாகனங்களை அங்கே கண்காட்சிக்கு வைத்திருந்தேன். இருக்கிற விலைவாசியில் இத்தனை வாகனங்களுக்கும் பெட்ரோல் போட முடியாதே.. ஆகவே மற்ற வாகனங்களோடு போட்டி போடாமல், பரிசெல்லாம் எதுவும் கொண்டு வராமல் சும்மாவே நின்று விட்டு வந்து விட்டன :-). கலந்து கொண்டவர்களுடன் ஷெட்டில் நின்றவர்களையும் சேர்த்து ஒவ்வொருத்தரையுமாக அறிமுகப்படுத்துகிறேன் வாருங்கள்..
இவர்களை மும்பை புகைப்படக்கண்காட்சியிலிருந்து இரவல் வாங்கி வந்தேன். மஞ்சக்காட்டு மைனாவுக்கு அருகில் கம்பீரமாக நிற்கும் மிஸ்டர் ரெட்.
அந்தேரி-குர்லா ரோட்டில் ஜெரிமெரி என்னும் பகுதியில் ரோட்டை ஒட்டினாற்போல் மும்பை விமான நிலையத்தின் ஒரு பகுதி அமைந்துள்ளது. அங்குதான் விமானங்கள் தரையிறங்குவது வழக்கம். அதாவது லேண்டிங் பாயிண்ட் என்றும் சொல்லலாம். கீழே பாலத்தில் சாலைப்போக்குவரத்து இருக்கும் அதே சமயம் நம் தலைக்கு மேல் தொட்டு விடலாம்போல் தூரத்தில் பறக்கும் விமானங்கள் தரையிறங்க ஆரம்பிப்பது மெய் சிலிர்க்க வைக்கும். விமான நிலையத்தில் நுழையாமல் விமானங்களைப் படம் பிடிப்பதற்காக டபுள் டெக்கர் பஸ் ஒன்றில் ஏறி மேல் பகுதியில் அமர்ந்து கொண்டோம்.விமான நிலையத்தைக் கடக்கும்போது கரெக்டாக விமானமொன்று எங்கள் பஸ்ஸைக்கடந்து இறங்கியது. சந்தர்ப்பத்தைத் தவற விடக்கூடாதென்பதற்காக முன் கூட்டியே காமிராவில் ஸ்போர்ட்ஸ் ஆப்ஷனையும், மழைக்காலமாதலால் isoவை 800க்கும், continuous shooting-ம் தேர்வு செய்து வைத்திருந்ததால் சட்.. சட்டென்று ஷூட்டித்தள்ளினேன்.
வீட்டருகே இருக்கும் ரயில்வே க்ராஸிங்கில் அடிக்கடி கேட் மூடிக்கிடப்பதால், வாகனங்கள் இருபக்கமும் காத்துக்கிடப்பதும் பொதுமக்கள் இன்னல்களை அனுபவிப்பதும் வழக்கமாக இருந்தது. க்ராஸிங்கில் காத்துக்கிடக்க வேண்டியிருக்கும் என்பதாலேயே அந்தப்பக்கமிருந்து இந்தப்பக்கத்துக்கு ஆட்டோரிக்ஷாக்களும் வர மறுப்பதுண்டு. அல்லது அதிகத்தொகை கொடுத்தால்தான் வருவார்கள். அந்தப்பக்கமிருக்கும் டிமார்ட்டிலிருந்து ஷாப்பிங் முடித்து இந்தப்பக்கம் வருவதென்பது சிரமமான ஒன்றாகவே ஆகிவிட்டது. ஒன்றிரண்டு பலிகளும் வாங்கியது அந்த ரயில்வே க்ராஸிங். இதனால் ஏராளமான மரங்களைப்பலி கொடுத்து அந்த ரோட்டில் மேம்பாலம் கட்டப்பட்டது. அந்த மேம்பாலத்தின் மேலிருந்து எடுத்ததுதான் இந்தப்படம். விரைந்து வந்து கொண்டிருந்த ரயிலை "ஸ்போர்ட்ஸ்" ஆப்ஷனைத் தேர்வு செய்து எடுத்தேன்.
நவிமும்பையின் நெருலில் தற்பொழுது புதிதாக ஆரம்பித்துள்ள வொண்டர்ஸ் பார்க்கில் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த டாய் ட்ரெயின். குழந்தைகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பெரியவர்களும் எஞ்சாய் செய்யும் இந்த ட்ரெயினில் ட்ரைவர் மட்டும் டிக்கெட் எடுக்காமல் ஜாலியாகப் பயணம் செய்யலாமாம். பற்றாக்குறைக்கு மாசம் பிறந்தால் பணமும் கொடுப்பார்களாம். கரும்பும் கொடுத்து கூலியும்.. ஹூம். ஒய் திஸ் ஓரவஞ்சனை யுவர் ஆனர்? :-))
மும்பையின் "கேட் வே ஆஃப் இந்தியா"விற்கு வரும் உல்லாசப்பயணிகளை கடலுக்குள்ளும் படகுப்பயணமொன்றை ஏற்பாடு செய்து அழைத்துச் செல்கிறார்கள்.கரையிலிருந்து கடலைப்பார்ப்பது ஒருவிதமென்றால் கடலுக்குள்ளிருந்து மும்பையையும், தாஜ்ஹோட்டல், கேட்வே ஆஃப் இந்தியா போன்ற கட்டிடங்களைப்பார்ப்பது இன்னொரு விதமான பார்வை. மீன் பிடிப்படகுகளைத்தாண்டிச்சென்றால் மும்பையின் தனவான்களின் உல்லாசப்படகுகள் பார்க்கிங்கில் விடப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றிரண்டும், கடலைச்சுற்றிக்காண்பிக்கும் இன்னொரு படகும்.
கடற்கரைக்கு வருபவர்கள் கடலில் போடும் குப்பைகளில் விழுங்கியது போக மீதமானவற்றைக் கடல் துப்பி விடும். இவையெல்லாம் கரையில்தான் கடைசியில் வந்து சேரும். அப்போதைக்கப்போது இதையெல்லாம் சுத்தம் செய்யவில்லையென்றால் அந்தப்பகுதியே நாறி விடும். மும்பையின் ஹிந்துஜா ஆஸ்பத்திரியின் அருகிலிருக்கும் சிறிய கடற்கரையை நன்றாகவே பராமரிக்கிறார்கள். நீண்ட துடைப்பத்தால் கடல் சேர்த்த குப்பைகளை பணியாட்கள் ஒரு மூலையில் குவித்து வைத்ததும் பொக்லைன் வந்து வாரிக்கொண்டு போய்விடும். அப்படி வாரிக்கொண்டு போவதற்காக வந்தவர்தான் இவர்.
வாகனங்களில் பயணம் செய்யும்போது காமிராவைத்தயார் நிலையில் வைத்துக்கொள்வது நல்லது என்று முன்னொரு இடுகையில் சொல்லியிருந்தேன். என் பேச்சை நானே கேட்டு எடுத்த படம் இது. நான் பிடித்த பஸ்சுக்கு ரெண்டே டயர்தான். வேண்டுமென்றால் எண்ணிப்பார்த்துக்கொள்ளுங்கள். :-). முன்பெல்லாம் பள்ளி வாகனங்கள் க்ரீம், நீலம் அல்லது மஞ்சள் கலரில் வரும். அப்போதெல்லாம் மஞ்சள் கலர் பஸ்களில் வரும் குழந்தைகளைப்பார்த்து,
"யெல்லோ யெல்லோ டர்ட்டி ஃபெல்லோ..
சிட்டிங் ஆன் அ பஃபெல்லோ'
என்று மற்ற பஸ்களில் வரும் குழந்தைகள் ஓட்டுவது வழக்கம். இப்போதென்னவென்றால் எல்லா பஸ்களுமே மஞ்சள் கலரில் ஓடுகின்றன :-)))))
இந்தக்கார்கள் விற்பனைக்கல்ல.. :-))
வாகனங்களைச் சாலைகளில் பாதுகாப்பாகவும் கவனத்துடனும் செலுத்துங்கள். நமது ஒரு நிமிடத்தவறு ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே பாழடித்து விடக்கூடும்.
32 comments:
வழக்கம்போல அசத்தும் படங்கள். கடலில் மினி ‘டைட்டானிக்’ அழகு. கடலிலும் பொக்லைனா??!! அங்கயும் மணல் அள்ளுறங்களோன்னு பகீர்னு இருந்துது. குப்பை எடுக்கவா!! இருந்தாலும் ஒரு கண்ணு வச்சுக்கோங்க, பழக்க தோஷத்துல மண்ணை அள்ளிடாம!!
ஆமா, காமிராவும் கையுமாவே எப்பவும் இருக்கதப் பாத்தா, வீட்டுல புள்ளைகளுக்கு புவ்வா கிடைக்குதா இல்லியான்னே சந்தேகமா இருக்கு!! :-))))))
ellamey super....
அத்தனை படங்களும் அருமை. ஆறாவது படத்து உல்லாசக் கப்பல், மிக அழகாகப் படமாக்கியிருக்கிறீர்கள். ஒளி அமைப்பு மனதைக் கவர்ந்தது.
மிகவும் அழகான படங்கள்.
அற்புதமான விளக்கங்கள்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
எல்லாம் சூப்பரா இருக்கு.
முதல் இரண்டி பள பளக்கும் காரும், கடைசியில் வரிசையாக இருக்கும் கார்களும் மிக அழகு. மற்ற படங்களும் அழகுதான்.
பாலத்திலிருந்து எடுத்த இரண்டு ரயில்களும் அழகுதான்.
கடைசியில் கவனமாய் இருக்க சொன்ன செய்தி அருமை. சாலையில் கவனமாய் போய் எல்லோர் நலத்தையும் பாதுக்காப்போம்.
அழகான படங்கள்... சூப்பர்... பாராட்டுக்கள்...
வாங்க ஹுஸைனம்மா,
ஹி..ஹி.. எப்பவுமே சமையக்கட்டுலயே குடியிருக்க முடியுமா?.. அப்பப்ப வெளியில வந்துதானே ஆகணும். அப்படிப்பட்ட சமயங்களில் பிடிச்சதுதான் இதெல்லாம் :-))
சமையல் குறிப்பு போட்டு ரொம்ப நாளாச்சுன்னு ஞாபகப்படுத்துனதுக்கு நன்னி :-)
அனைத்துமே அருமையான படங்கள் சகோ....
வாழ்த்துகள்.
Ellame super.But my fav manjakaattu maina and mr. red...:)
//ஸ்போர்ட்ஸ் ஆப்ஷனையும், மழைக்காலமாதலால் isoவை 800க்கும், continuous shooting-ம் தேர்வு செய்து//
ஓ.... பாடம் ஒன்று.
படங்கள் அனைத்தும் துல்லியம். அருமை. மும்பை தனவான்களின் படகு கவர்கிறது.
எல்லாப் படங்களுமே அருமையாக இருக்கு...பாராட்டுகள். வாழ்த்துகள்.
படங்கள் அனைத்தும் அற்புதமாக இருக்கு.
அத்தனை படங்களும் அருமை.
எனக்கு ரொம்பவும் பிடித்த படம் கூ...கூ...ஜிகு ஜிகு தான்!
என்ன கம்பீரம்! ஒண்ணு இந்தப் பக்கம் வருது; இன்னொன்னு அந்தப் பக்கம் போகுது! வாவ்! புகைப்படம் கண்களைக் கட்டி நிறுத்தி விட்டது!
படங்கள் நன்றாக இருக்கின்றன.
5,6 ரொம்ப அழகாக வந்திருக்கின்றது.
வாங்க ஃபாயிஸா,
வாகனங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றிங்க.
வாங்க ராமலக்ஷ்மி,
படகில் போயிட்டிருக்கும்போதே க்ளிக்கினது. அதுவும் பாயிண்ட் அண்ட் ஷூட் காமிராவில். என்னதான் செட்டிங் எல்லாம் சரி செஞ்சு படம் எடுத்தாலும், அலையின் ஆட்டத்தில் எடுத்ததால் எப்படி வந்திருக்குமோன்னு டவுட்டாவே இருந்தது. நல்லா வந்துருக்குதுன்னு பார்த்தப்புறம்தான் நிம்மதி :-)
ரசித்தமைக்கு நன்றிகள்.
வாங்க வை.கோ ஐயா,
ரசித்தமைக்கு மிக்க நன்றிகள்..
வாங்க அமுதா,
படங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றிகள்.
வாங்க கோமதிம்மா,
ரசித்த படங்களைப் பட்டியலிட்டுச் சொன்னது ரொம்பவும் பிடிச்சிருக்கு. நன்றிகள் :-))
வாங்க தனபாலன்,
படங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றிகள்.
வாங்க வெங்கட்,
வாழ்த்துகளுக்கு நன்றிகள்.
வாங்க அப்பாவி,
ரங்கமணி கிட்டே நிக்கிற தங்கமணியின் வெட்கப்புன்னகை நல்லாருக்கு, பார்த்தீங்களா :-))
ரசித்தமைக்கு நன்றிகள்..
வாங்க ஸ்ரீராம்,
அந்த தனவான்கள் இந்தியா முழுக்கப் புகழ் பெற்றவர்கள்தான் :-))
ரசித்தமைக்கு நன்றிகள்.
வாங்க ஆதி,
படங்களை ரசித்தமைக்கு நன்றிகள்.
வாங்க தமிழ் இளங்கோ,
வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு இன்னொருக்கா நன்றி சொல்லிக்கிறேன்.
வாங்க தனபாலன்,
வாழ்த்துகளுக்கு நன்றிங்க.
வாங்க ரமா,
படங்களை ரசித்தமைக்கு நன்றிகள்..
வாங்க காஞ்சனா,
படங்களை ரசித்தமைக்கு நன்றிகள்.
வாங்க ரஞ்சனிம்மா,
ரயிலை விரும்பாதவர்களே இருக்க மாட்டாங்க இல்லையா :-)
எதிரெதிரா வர்றப்ப எடுக்கணும்ன்னு மணிக்கணக்கா காத்துக்கிடந்து எடுத்த படம் அது. எல்லோருக்கும் பிடிச்சிருந்ததுல ரொம்ப சந்தோஷம் :-)
ரசித்தமைக்கும் நன்றிகள்.
வாங்க மாதேவி,
படங்களை ரசித்தமைக்கு நன்றிகள்..
Post a Comment