Monday 7 May 2012

சித்திரை மாதத்து நிலவு..

வழி விடு மேகமே.. வழி விடுன்னு பாடத்தேவையில்லாதபடிக்கு நேத்து வானம் தெள்ளத்தெளிவா மப்பெல்லாம் இறங்கி இருந்தது :-) உடனேயே சுட்டுட்டேன்.
புளிக்காத ஆரஞ்சுப்பழம் :-)
எல்லோரும் சித்ரா பௌர்ணமியை சுட்டுக்கிட்டு இருக்க, நான் மறு நாளைக்கு மிச்சம் மீதி இருந்ததைச் சுட்டேன். முதல் நாள் எல்லோருக்கும் போஸ் கொடுத்துக்கொடுத்து கொஞ்சம் களைப்பா இருந்தாலும் காமிராவைக் கண்டதும் அலுக்காம, டக்குன்னு சூப்பர் மாடலாட்டம் பளீர்ன்னு சிரிச்சா. நேத்து ஏன் உன்னைக்காணலைன்னு என்னைக்கேட்டா. அவளைச் சுடறதுக்காக புது லென்ஸ் வாங்கியாரப் போனேன்னு அவ கிட்டயே சொல்ல முடியுமா?.. அதான் உங்க கிட்டச் சொல்றேன் :-)

என் பீரங்கியோடு கிடைச்ச வைட் ஆங்கிள் லென்ஸில் படம் எடுக்கும்போது ஒரு சில செட்டிங்குகளில் மட்டும் ஓரளவு தெளிவான நிலவு கிடைச்சது. அதுவும் கூர்ந்து கவனிச்சா மட்டுமே லேசான விவரங்கள் தெரியும்படியா இருந்தது. அதனால், புது லென்சுக்கு அடி போட ஆரம்பிச்சேன் (அதெல்லாம் நல்ல லென்ஸ் இருந்தா அருமையா நிலவைப் படம் பிடிக்கலாம் தெரியுமோன்னு அப்பப்ப டயலாக் விடணும்)

சந்தடி சாக்குல மார்ச் மாதம் வந்த சூப்பர் மூனையும் இங்கே பதிச்சிட்டேன்..
ஆனா, டயலாக் விடத் தேவையில்லாதபடிக்கு, என்னை ஒரு நிபுணர் ஆக்கியே தீரணும்ன்னு ரங்க்ஸ் கங்கணம் கட்டிக்கிட்டிருந்ததால் வேலை சுலபமா முடிஞ்சது. மும்பையில் ஃபோட்டோஃபேர் நடந்தப்பவே ட்ரைபாட் வாங்கி வெச்சுக்கிட்டு, அப்பப்ப காமிராவை அதில் மாட்டிக்கழட்டி பயிற்சி எடுத்ததால் நேத்து சட்ன்னு ரெடியாகவும் முடிஞ்சது.

அலசி ஆராய்ந்து canon EFS 55-255mm லென்ஸ் சரியா இருக்கும்ன்னு வாங்கியாந்து வீட்டுக்கு வரப்ப நிலா உச்சி வானத்துக்குப்போயிருச்சு. உதய நிலாவில்தான் விவரங்கள் ரொம்ப அருமையாவும், நிலாவின் அளவும் பெருசா இருக்கும்ன்னும் நிபுணர்கள் சொல்ல வாசிச்சிருந்ததால், மறு நாளைக்காகக் காத்திருந்து ஃபோகஸ் தகராறில் இருக்கும் காமிராவை தாஜா செஞ்சு, ஃபோகஸ் செஞ்சப்ப,.. ஹைய்யோ!! கண் கொள்ளாக் காட்சி. பாட்டி வடை சுடுற மணம் மும்பை வரை வருதுங்க :-)). ஓரளவு தேத்துனதை உங்கள் பார்வைக்காகக் கொண்டாந்துருக்கேன்.
ஜூப்பரா இருக்கும் சூப்பர்மூன்-2012
இந்த நிலாவைக் கொஞ்ச நேரம் முந்திதான் பிடிச்சேன்..
வழக்கத்தை விட அளவில்14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் பிரகாசமாவும் இருக்கும் இந்த நிலாவுக்கு "சூப்பர்மூன்- 2012"ன்னு நாசா விஞ்ஞானிகள் பெயரிட்டிருக்காங்க. சூப்பர்மூன் ஜூப்பராத்தான் இருக்குது :-))

38 comments:

CS. Mohan Kumar said...

படங்கள் நிஜமா நல்லாருக்குங்க

ஹேமா said...

அழகா வந்திருக்கு படங்கள் சாரல் !

துளசி கோபால் said...

WOW Super Moon, Super Yaar!!!!!

அன்புடன் நான் said...

சிறப்பொளி நிலா மிகை அழகு. நன்றி.

பால கணேஷ் said...

‘அந்த நிலாவைத்தான் நான் கையில புடிச்சேன்’ன்னு ஒரு பாட்டு கேட்டிருக்கேன். இப்ப நீங்க கேமராவுல புடிச்சு எங்க கண்ணுக்குக் கொடுத்திருக்கற நிலாவை ரொம்ப ரசிச்சேன். அருமையா சுட்டிருக்கீங்க சாரல்!

ராமலக்ஷ்மி said...

திருவினையாகும் முயற்சிகள்:)!

நான் பாட்டியைப் பிடித்த கதையும் இப்படி தொடர் படையெடுப்புதான்.

சூப்பர் மூன் ஜூ.....ப்பர் சாந்தி!!!!

வல்லிசிம்ஹன் said...

அம்புலி மாமா ஷொக்குப் பார்க்க ஆத்தங்கரைக்குப் போலாமா , மச்சான் போலாமான்னு ஒரு பழைய பாட்டு.
அன்பு சாரல்,
நீங்கள் இணையத்துக்கு வரவழைத்துவிட்டீர்கள். வெகு அருமை. மனத்தை அள்ளிக் கொண்டு போகிற சந்திரனைக் கண்ணுக்கு விருந்து படைத்தீர்கள்.வாழ்த்துகள் மா.

மனோ சாமிநாதன் said...

புகைப்படங்கள் அழகாய் வந்திருக்கின்றன அமைதிச் சாரல்!!

ஹுஸைனம்மா said...

அக்கா, அந்தக் கடைசி படம்!! வாவ்... ரியல்லி அற்புதம்!! நிலாவில் உள்ள cratersதான் அப்படி தெரியுதுன்னு நினைக்கிறேன், இல்லியா? மேலும், அந்தப் படத்துல, நிலா வழக்கமா தெரியிற மாதிரி வட்டமா இல்லாம, உருளையாத் தெரியுது. சூப்பர்க்கா!!

உமா மோகன் said...

v nicema

RAMA RAVI (RAMVI) said...

படங்களும் தகவலும் அருமை. கடைசி படத்தில் craters மிக அழகாக தெரியுதே. சிறப்பாக இருக்கு.

குறையொன்றுமில்லை. said...

சாந்தி அந்த நிலாவுக்கே போயி படம் பிடிச்சுட்டு வந்தியா?

VijiParthiban said...

மிகவும் அருமையான காட்சி " சூப்பர் மூன் " நானும் அதை ரசித்து பார்த்தேன்
அழகான படங்கள் ....

Jaleela Kamal said...

ஆஹா என்ன அருமையான நிலா
ரொம்ப அழகாக இருக்கு

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மோகன் குமார்,

பாராட்டுகளுக்கு ரொம்பவும் நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

ரொம்ப நன்றிங்க பாராட்டுக்கும் படங்களை ரசிச்சதுக்கும்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துள்சிக்கா,

ரொம்ப ரொம்ப நன்றிக்கா :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கருணாகரசு,

ரசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கணேஷ்,

வெறுங்கண்ணால் பார்க்கறதை விட காமிராக்கண்ணில் பார்க்கறப்ப தகதகன்னு வைரம் மாதிரியே மின்னுச்சு நிலா..

ரசிச்சதுக்கு நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலக்ஷ்மி,

வைட் ஆங்கிள் லென்சுலயே ஓரளவு செட்டிங்குகள் பிடிபட்டுருச்சு,. ஆகவே இப்ப சூப்பர்மூனைச் சுடறப்ப ரெண்டு மூணு க்ளிக்குகளிலயே பளிச்சுன்னு வந்துருச்சு. ஆனாலும், ஒரு டவுட்டோடதான் இருந்தேன். படத்தைக் கணினியில் போட்டுப்பார்த்தா பாட்டியோட வடை வியாபாரம் அமோகமா நடந்துட்டிருக்குது. உங்களையும் விசாரிச்சதாகச் சொல்லச்சொன்னாங்க :-))

ரொம்ப நன்றிங்க ரசிச்சதுக்கு..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

ஆஹா, இந்தப் பாட்டு இணையத்துல இருக்கா?.. தேடணுமே. ஷோக்கான பாட்டா இருக்கே :-))

ரசிச்சதுக்கு ரொம்ப நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மனோம்மா,

ரொம்ப நன்ரிங்க ரசிச்சதுக்கு..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

அந்த நிலா முகத்துல இருக்கும் பருக்கள் க்ரேட்டர்ஸேதான் :-)))
உருளை வடிவம் நானும் ஆச்சரியப்பட்டேன்,. நிலா என்னவோ கருணை காட்டிட்டாள்..

ரசிச்சதுக்கு நன்றிங்க..

'பரிவை' சே.குமார் said...

அருமை...
அழகு...
நிலவு கவர்கிறது.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சக்தி,

ரசிச்சதுக்கு மிக்க நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராம்வி,

ரொம்ப நன்றிங்க ரசிச்சதுக்கும் கருத்துக்கும்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

ஆஹா.. அப்படியொரு வாய்ப்புக் கிடைச்சா நிலாவுக்குப் போய் நம்ம பூமியை படம் பிடிச்சுட்டு வருவேன் :-))))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க விஜி,

ரசிச்சதுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜலீலா,

ரொம்ப நன்றிங்க ரசிச்சதுக்கும் கருத்துக்கும்..

மாதேவி said...

உங்கள் "சூப்பர் மூன் 2012"
மிகவும் அருமை.

ஸ்ரீராம். said...

"அந்த நிலாவத்தான் நான் கேமிரால பிடிச்சேன்.... என் பதிவுக்காக..." என்று பாடலையா...! படம் உங்க பாஷைல ஜூப்பருங்க...

VijiParthiban said...

மிகவும் அருமை அக்கா . என்னுடைய வலைப்பூவை சற்று திறந்து பார்க்கவும். எனது வலைப்பூவின் உறவினராக வாருங்கள் அக்கா. நம் நட்பு மீண்டும் மலரட்டும்.

Asiya Omar said...

அருமையான பகிர்வு,ஏதோ நிலவு கிட்ட போய் வந்த மாதிரி இருக்கு.சூப்பர்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குமார்,

வருகைக்கும் ரசிச்சதுக்கும் ரொம்ப நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி..

ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

பாடலாம்தான்.. நிலா மயங்கி வுழுந்துருச்சுன்னா :-))))))

ரசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க விஜி,

நீங்களும் மும்பைக்கரா?.. ரொம்ப சந்தோஷம்ங்க :-)

இவ்ளோ அன்பா வரவேற்கறப்ப வராம இருப்பேனா!!

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

ரொம்ப நன்றிங்க ரசிச்சதுக்கு.

LinkWithin

Related Posts with Thumbnails