Tuesday, 1 May 2012

புளிக்கும் காயில் செஞ்ச இனிக்கும் சர்பத்..

சந்தையில் மாங்காய், வரத்தொடங்கியிருக்கும் வேனிற்காலத்தில் இவற்றை உபயோகப்படுத்தி, மாங்காய் ஊறுகாய், தொக்கு போன்றவை மட்டுமல்ல, சர்பத்தும் செய்யலாம். பொதுவாக ஜூஸ் செய்ய மாம்பழத்தையே உபயோகப் படுத்துவது நம் வழக்கம். ஆனால், மாங்காயையும் உபயோகப்படுத்தி சத்துள்ள சர்பத் செய்யலாம். பி-1,பி-2, நியாசின், மற்றும் வைட்டமின் சி போன்ற உயிர்ச்சத்துகளைக் கொண்ட மாங்காய், நம் உடல் கோடைக்காலத்தில் இழக்கும் சோடியத்தின் அளவை ஈடு கட்டுகிறது. உடலில் தேங்கும் நச்சுகளை வெளியேற்றி இரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது.

இதில் இரும்புச் சத்து நிறைந்திருப்பதால் இந்த சர்பத்தைத் தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் இரத்த சோகையைக் கட்டுப்படுத்த முடியும். உடற்சூட்டைத் தணிப்பதுடன், சூட்டினால் வரும் வயிற்று உபாதைகள், செரிமானக் கோளாறுகள் போன்றவையையும் தவிர்க்கலாம். “ஆம் பன்னா” என்ற பெயருடன் வட மேற்கு மாநிலங்களிலும், “கைரி கா சர்பத்” என்ற பெயரில் மராட்டிய மாநிலத்திலும் வழங்கப்பட்டு வரும் இந்த சர்பத்தைச் செய்வது மிகவும் எளிது. வேண்டிய அளவு செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொண்டு, தேவைக்கேற்ப அவ்வப்போது கலந்து கொள்ளலாம்.
தேவையானவை:
மாங்காய் – 1 (பெரியது)
வெல்லம் – கால் கிலோ
வறுத்துப் பொடித்த சீரகம் – 1 தேக்கரண்டி
காலா நமக் (இந்துப்பு அல்லது ராக் சால்ட் என்றும் சொல்வார்கள்) – கால் தேக்கரண்டி.
செய்முறை:
மாங்காயை நன்கு கழுவித் துடைத்து விட்டுக் கத்தியால் அதன் மேல் அங்கங்கே லேசாகக் கீறி விட்டுக் கொள்ளவும். பின் அதைத் தோல் நன்கு மிருதுவாகும் வரை வேக வைத்துக் கொள்ளவும். குக்கரில் வைப்பதனால் ஒரு விசில் போதும்.
வெந்த மாங்காயை நன்கு ஆற விட்டு, பின் தோலுரிக்கவும். ஒரு கரண்டியின் உதவி கொண்டு, சதைப்பற்றான பாகத்தை நன்கு வழித்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும். இதை மிக்ஸியில் நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.
சர்க்கரையை ஒரு கப் தண்ணீரில் கரைய விட்டு, கல் மண் போக வடிகட்டிக் கொள்ளவும். பின் இந்தக் கரைசலுடன் மேலும் மூன்று கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். வெல்லக் கரைசல் நன்கு கொதி வந்ததும், அரைத்த மாங்காய், சீரகப்பொடி, இந்துப்புப்பொடியைச் சேர்க்கவும். லேசாகக் கொதிக்க விட்டு இறக்கி ஆற விடவும். நன்கு ஆறியதும் பாட்டில்களில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் சேமித்துக் கொள்ளலாம். வெளியில் வைத்திருந்தால் சீக்கிரமே கெட்டு விடும்.
பரிமாறும்போது அரை கப் சர்பத்துடன், அதன் அடர்த்திக்கேற்பக் குளிர் தண்ணீரைக் கலந்து, அத்துடன் பொடியாக நறுக்கிய புதினா இலைகளைத் தூவிப் பரிமாறவும்.

43 comments:

Ramani said...

வித்தியாசமான சர்பத்தாக இருக்கிறது
நிச்சயம் செய்து பார்த்துவிடுகிறோம்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

பாச மலர் / Paasa Malar said...

படிக்கும்போதே ஜில்லுன்னு இருக்கு சாரல்..

ஹேமா said...

வெயில்காலத்துக்கு ரெடி பண்றீங்கபோல சாரல்.நல்லாத்தான் இருக்கும்.இங்க இன்னும் நல்ல வெக்கை வரேல்ல.அதோட நல்ல மாம்பழமும் கிடைக்காது.நீங்களே செய்து குடிச்சுக்கோங்க.வயிறு வலிக்கட்டும் !

ஹுஸைனம்மா said...

மாங்காய் சர்பத்!! ஆச்சர்யம். இப்போத்தான் கெள்விப்படுறேன்.

சதைப்பற்றுள்ள மாங்காயைச் சேர்த்திருந்தாலும்கூட, இந்த சர்பத், சர்பத் மாதிரியே - அதாவது ஸ்மூத்தி மாதிரி திக்காயில்லாம - இருக்குது. நல்லாருக்குங்க. குடிக்கணும்போலத்தான் இருக்குது, ஆனா யாரு எனக்காகச் செஞ்சுத் தரப்போறாங்க, போங்க!!

இராஜராஜேஸ்வரி said...

புளிக்கும் காயில் செஞ்ச இனிக்கும் சர்பத்.. சூப்பர்..

துளசி கோபால் said...

அட! அட்டகாசமா இருக்கே! என்னங்க நீங்க.... நான் சண்டிகரில் இருந்தப்போ இதை போட்டுருக்கக் கூடாது?


இப்போ மாங்காய்க்கு எங்கே போவேன்?

பேசாம க்ரீன் ஆப்பிளில் செஞ்சு பார்க்கவா?

கோவை2தில்லி said...

ஆம் பன்னா பிரமாதம். மாங்காய் பற்றிய சிறப்புகளையும் தெரிந்து கொண்டேன்.


டீச்சர் கிரீன் ஆப்பிள்ல செய்து பார்த்துட்டு ஷேர் பண்ணுங்க.

கணேஷ் said...

ஹய்... புளிக்கிற காய்ல இப்படி ஒரு இனிக்கிற சர்பத் செய்ய இயலுமா? படிச்சதும் ட்ரை பண்ணிப் பாக்கணும் போல இருக்கு. முயற்சிக்கறேன் சாரல் மேடம்!...

கோமதி அரசு said...

மாங்காய் சர்பத் செய்முறைக்கு நன்றி சாந்தி.
புளிக்கும் காயில் இனிக்கும் சர்பத் தலைப்பே அசத்தல்.
சர்பத் இன்னும் ருசியாக இருக்கும்.

Asiya Omar said...

புதுசாக இருக்கு,கொஞ்சம் வேலைப்பாடு தான் ஆனால் சர்பத் சூப்பர்.

வெங்கட் நாகராஜ் said...

வாவ்... இரண்டு சுவையும் சேர்ந்த ஒரு பானம்... நல்லாத் தான் இருக்கும்!

Lakshmi said...

மாங்காய் சீசன் தொடங்கியதுமே பன்னா சர்பத்தும் ஒவ்வொருவர் வீட்டிலும் இடம் பெறுமே.பகிர்வுக்கு நன்றி

RAMVI said...

உபயோகமான சர்பத் செய்முறை குறிப்பு. நன்றி சாந்தி.

கணேஷ் said...

உங்கள் பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். சமயமிருப்பின் பார்த்து கருத்துக் கூறவும். ந்ன்றி.

http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_03.html

savitha said...

வலைச்சரம் மூலமா வந்தேங்க. இதுவரை கேள்விபடாத ஒரு சர்பத்.பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.கண்டிப்பாக செய்து பார்கிறேன்.

Kanchana Radhakrishnan said...

வித்தியாசமா இருக்கிறது.
பகிர்வுக்கு நன்றி.

S.Menaga said...

வித்தியாசமான சர்பத்க்கா...ஆனா மாங்காய்க்கு இப்போ நான் எங்க போவேன்,காலா நாமக் பதில் சாதா உப்பு பயன்படுத்தலாம் தானே??

மாதேவி said...

ஆகா... அருமையான சர்பத்.

ஸ்ரீராம். said...

மாங்காய் என்பது வயிறு வலிக்கும், சூடு என்பார்கள்... இப்படிச் செய்தால் அதே சூட்டினால் வரும் வயிற்று வலிக்கு நல்லதா.. அட... அப்புறம் ஸ்வீட் ஜூசுக்கு புதினா இலை போட்டு பரிமாறுவதா... வித்தியாசமா இருக்கே... மாங்காய்க் கிடைப்பதில் கஷ்டமில்லை. இந்துப்புதான் மாம்பலம் போகணும்! பார்த்துடுவோம்...

ஸ்ரீராம். said...

"இந்த தளத்தில் படங்களுடன் பின்னூட்டமிடும் வசதி செய்யப் பட்டுள்ளது" --- அதென்ன?

Jaleela Kamal said...

மிக அருமை நான் இது போல் பதப்படுத்தி வைப்பதே கிடைட்\யாது,.செய்ததும் இரண்டே நாளில் காலி பண்ணிவிடுவது.

இது போல் மாங்காய் கிடைத்தால் பதப்படுத்தி பார்க்கனும்.

Jaleela Kamal said...

மாங்காய் சர்பத் செய்ததில்லை

அமைதிச்சாரல் said...

வாங்க ரமணி,

சீசன் முடியறதுக்குள்ளே செஞ்சு பார்த்துருங்க. பிடிச்சிருந்தா ரெண்டு பாட்டில் செஞ்சு ஃப்ரிஜ்ஜில் வெச்சுக்கோங்க. குறைஞ்சது ஒரு மாசத்துக்காவது தாங்கும் :-)

அமைதிச்சாரல் said...

வாங்க பாசமலர்,

சர்பத்தைக் குடிச்சாலும் ஜில்லுன்னு இருக்கும்,.. உடலுக்கு நல்லது.

வாசிச்சதுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஹேமா,

இதுக்கு பழம் தேவையில்லை,.. காயே போதும்ப்பா..

உங்கூர்ல கிடைக்காதுன்னு வேற சொல்றீங்க,.. உங்க பேரைச்சொல்லி ரெண்டு கப் கூடுதலாவே குடிச்சுக்கறேன் :-))))))

அமைதிச்சாரல் said...

வாங்க ஹுஸைனம்மா,

அடப்பாவமே.. துபாய் வரும் ஃப்ளைட்டில் டாப்புல போட்டு அனுப்பறேன். லக்கேஜ் கட்டி எடுத்துக்கோங்க. கண்டக்டர் நமக்குத் தெரிஞ்சவர்தான்.. அலுங்காம குலுங்காம கொண்டாந்துருவார் :-)))))

இந்த சர்பத் வடக்கே ரொம்ப பிரபலமானது,.. அதுவும் ராஜஸ்தானியர்கள், மராட்டியர்கள், குஜராத்தியர்கள் ரொம்பவே விரும்பும் அயிட்டமும் கூட..

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜேஸ்வரி,

வாசிச்சதுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

அமைதிச்சாரல் said...

வாங்க துள்சிக்கா,

க்ரானி துணையிருக்க எல்லாமே நல்லதாவே முடியுமே.. பேசாம இவங்களை மாங்காயோட தோழிப்பொண்ணா அறிவிச்சுடலாமா??..

ஆப்சூர் பொடி, ஆப்பிள் ஊறுகாய், ஆப் பன்னா,.. விதவிதமாச் செய்யலாமே..

உங்கூட்டு ஆப்பிளில் செஞ்சு பார்த்துட்டு பகிர்ந்துக்கோங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க ஆதி,

நீங்க முன் மொழிஞ்சதை நானும் வழி மொழிஞ்சுட்டேன்.

நன்றிப்பா,.. வரவுக்கும் கருத்துக்கும்.

அமைதிச்சாரல் said...

வாங்க கணேஷ்,

அருமையாயிருக்கும் ஆம் பன்னா.. செஞ்சுட்டுச் சொல்லுங்க.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஆசியா,

சுமாரா பத்துப்பதினஞ்சு நிமிஷத்துல முடிஞ்சுரும்ப்பா. காய் வெந்து ஆறும்போது வெல்லக்கரைசல் ரெடி செஞ்சுட்டா,. இன்னும் சுருக்கா முடிக்கலாம்.

நன்றிங்க.. வருகைக்கும் கருத்துக்கும்..

அமைதிச்சாரல் said...

வாங்க மேனகா,

சாதா உப்பும் சேர்க்கலாம்ப்பா,.. காலா நமக் மருத்துவக் குணங்கள் கொண்டதுங்கறதால இது சேர்க்கப்படுது.

நன்றி..

அமைதிச்சாரல் said...

வாங்க வெங்கட்,

டேஸ்ட்டுக்குக் கேப்பானேன்.. செயற்கையான பானங்களை கூடிய மட்டும் தவிர்த்துட்டு இது மாதிரி வீட்லயே செஞ்சா ருசிக்கு ருசி, ஆரோக்கியமும் கெடாது, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா :-)

கருத்துக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க லக்ஷ்மிம்மா,

'சீசன் உள்ள போதே அருந்திக்கொள்'ங்கறதை இங்கே உள்ளவங்க கொள்கையாவே வெச்சுருக்காங்க.. எந்த வீட்டுக்குப் போனாலும் "கைரி கேணார் கா"ன்னு அன்போட உபசரிப்பாங்க.

வருகைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ராம்வி,

போனவாரம் உங்களுக்குப் புரையேறியிருக்கணுமே,...உங்கூருக்கு வந்துருந்தேன். உங்களை நினைச்சுக்கிட்டேன். அடுத்த தடவை கட்டாயம் சந்திப்போம்.

வாசிச்சதுக்கு நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க சவிதா,

உங்களைக் கூட்டியாந்ததுக்கு வலைச்சரத்துக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

செஞ்சு ருசிச்சுட்டுச் சொல்லுங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க காஞ்சனா,

வாசிச்சதுக்கு நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க மாதேவி,

வாசிச்சதுக்கும் வந்ததுக்கும் நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க ஸ்ரீராம்,

இனிப்பு,புளிப்புன்னு இருக்கும் ஜூஸுக்கு புதினா இன்னும் வாசனையா இருக்கும்.

வாசிச்சதுக்கு நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

@ ஸ்ரீராம்,..
இப்படித்தான் வசதி செய்யப்பட்டிருக்கு :-)))

[im]http://img1.coolspacetricks.com/images/glittertexts/thank_you/406.gif[/im]

அமைதிச்சாரல் said...

வாங்க ஜலீலாக்கா,

இந்த சர்பத்தையும் ஃப்ரிஜ்ஜில் வெச்சா மட்டுந்தான் கெட்டுப்போகாம இருக்கும். வெளியே வெச்சா ஒரு நாளைக்கு மேல் தாங்காது.

வாசிச்சதுக்கு நன்றிக்கா.

geethasmbsvm6 said...

இந்துப்பு என்பதும் ராக் சால்ட் என்பதும் வேறு., காலா நமக் வேறு அமைதி. இந்துப்பு வெள்ளையாக இருக்கும், இந்துப்புவும் மருத்துவ குணம் கொண்டது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களை இந்துப்புச் சேர்த்துச் சாப்பிடச் சொல்வார்கள். வாங்கி இடிச்சு வைச்சுக்கிறது தான் கஷ்டம். ஆனால் இப்போப் பொடியாகவே கிடைக்குது.

காலா நமக் தான் சாட் மசாலா, சர்பத், சாஸ் எனப்படும் மோரில் கலப்பது, சமோசாவின் சட்னியில் சேர்ப்பது எல்லாம். சாட் மசாலாவில் ஒரு குறிப்பிட்ட அளவு காலா நமக் சேர்த்தே செய்துடுவாங்க.

naanani said...

இப்பத்தான் பாக்கேன். மாங்காய் சீசன் வந்துடுத்தே..! நல்லாத்தானிருக்கும் செஞ்சுபுடுவோம்.

LinkWithin

Related Posts with Thumbnails