நேபாள-திபெத்திய எல்லையிலிருக்கும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச் சாதனை புரிய வேண்டுமென்று ஆசைப்படாத மலையேறுபவர்களே இருக்க முடியாது. அவர்கள் தம் வாழ்நாளில் ஒரு முறையாவது இம்முயற்சியில் இறங்காமல் இருக்க மாட்டார்கள். அவர்களைத்தவிர உலகிலேயே மிக உயர்ந்த அந்தச் சிகரத்தைக் கண்ணால் கண்டு திருப்திப் பட்டுக்கொள்ளும் நம்மைப் போன்ற சாமானியர்களும் இனிமேல் எவரெஸ்டைத் தொடலாம். தொடுவதென்ன?.. நம் கையிலும் எளிதாக எடுத்துச் செல்லலாம். ஆம்,.. எவரெஸ்டிலிருந்து எடுத்து வரப்பட்ட கற்கள் பதிக்கப்பட்ட கைக்கடிகாரங்கள் இப்போது விற்பனைக்கு வந்திருக்கின்றன. “கோபோல்ட் ஹிமாலயா வாட்சஸ்” என்று பெயரிடப்பட்டிருக்கும் அக்கடிகாரங்களை, கைக்கடிகாரங்கள் உற்பத்தியில் பெயர் போன கோபோல்ட் கம்பெனியினர் தயாரித்திருக்கின்றனர்.
கம்பெனியின் உரிமையாளரான மைக்கேல் கோபோல்ட் என்பவர் இரண்டாண்டுகளுக்கு முன் நேபாளத்தைச் சேர்ந்த Ang namgel, Lakpa Thundu ஆகிய இரண்டு மலையேறும் வீரர்களின் துணையுடன் எவரெஸ்டுக்குச் சென்று அங்கிருந்து சில கற்களைக் கொண்டு வந்தார். இக் கம்பெனியின் தயாரிப்புப் பொருட்களுக்கான தூதுவரான Sir Ranulph Fiennes-ன் யோசனையின்படி, எவரெஸ்ட் கற்கள் முகப்பில் பதிக்கப்பட்டிருக்கும் இக்கடிகாரங்களின் விலை அதிகமில்லை. இந்திய மதிப்பில் வெறும் 8.42 லட்சங்கள் மட்டுமே.
இக்கடிகாரங்கள் எவரெஸ்ட் சிகரம் இருக்கும் நேபாளத்தில் தயாரிக்கப்பட்டிருப்பதால் அங்கே மட்டும் மலிவு விலையில் விற்கப்படுகிறது. எவரெஸ்டின் உயரத்தை நினைவு படுத்தும் வகையில் $ 8,848(இந்திய மதிப்பில் 4.5 லட்சம்)என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இக்கடிகாரங்கள் மொத்தம் 25 மட்டுமே தயாரிக்கப்பட்டிருப்பதால் விற்றுத் தீருமுன் வாங்கி விடுதல் நல்லது(வீடு வாங்க வீட்டு லோன் மாதிரி, வாட்ச் வாங்க வாட்ச் லோன் ஏதாவது கிடைக்குமா ஆப்பீசர்)
ஆகவே, மக்களே.. போனா வராது, பொழுது போனா திரும்பாது.. ஐயா வாங்க.. அம்மா வாங்க..
ஆகவே, மக்களே.. போனா வராது, பொழுது போனா திரும்பாது.. ஐயா வாங்க.. அம்மா வாங்க..
டிஸ்கி: வல்லமையில் எழுதுனதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்..
21 comments:
தமிழக அரசாங்கம் தரும் இலவசப் பொருட்களில் இதையும் சேர்க்குமாறு பரிந்துரை செய்யுங்களேன் சாரல் மேடம். எனக்கும் ஒண்ணு கிடைக்கும்ல... ஹி... ஹி...
/நம் கையிலும் எளிதாக எடுத்துச் செல்லலாம்/
வாங்கதுக்குக் கட்டுக் கட்டாக எடுத்துச் செல்லணும் போலயே:)! நல்ல பகிர்வு சாந்தி.
//இக்கடிகாரங்களின் விலை அதிகமில்லை. இந்திய மதிப்பில் வெறும் 8.42 லட்சங்கள் மட்டுமே.//
வாக்குற அளவுக்கு என் டைம் ஒர்க் அவுட் ஆகவில்லையே?
ஆகவே, மக்களே.. போனா வராது, பொழுது போனா திரும்பாது.. ஐயா வாங்க.. அம்மா வாங்க.. //எவ்வளவு சிம்பிளா அழைப்பு விடுத்து இருக்கீங்க!!!!!!!!!!!
கடிகாரத்தின் விலைய நான் படிக்கவே இல்லை .....
விஷயம் ரொம்ப நல்லாத் தான் இருக்கு. விலையும் ரொம்ப கம்மியா இருக்கு. இருந்தாலும் செல்போனில மணி பார்த்துகிட்டா பத்தாது..... எதுக்கு கையில எல்லாம் கட்டி அசிங்கமா.....
சீச்சீ, இந்தப்பழம் புளிக்கும்.
தங்கள் தயவால் அதை பார்க்கவாவது முடிந்ததே என
சந்தோஷம் கொண்டேன்
அரிய தகவலை பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
/இக்கடிகாரங்களின் விலை அதிகமில்லை. இந்திய மதிப்பில் வெறும் 8.42 லட்சங்கள் மட்டுமே.//
எவெரெஸ்டையே வாங்கிரலாமா?
இமயமாய் உயர்ந்த விலை!
அடப் பாவமே!!!
//, எவரெஸ்ட் கற்கள் முகப்பில் பதிக்கப்பட்டிருக்கும் இக்கடிகாரங்களின் விலை அதிகமில்லை. இந்திய மதிப்பில் வெறும் 8.42 லட்சங்கள் மட்டுமே.
//
அடடா... நாமளும் வாங்கிடலாம் போலையே!
சாந்தி
பத்துலட்சம் எடுத்து வையுங்க! நா வந்து வாங்கிக்கிறேன் :-)
//ஆகவே, மக்களே.. போனா வராது, பொழுது போனா திரும்பாது.. ஐயா வாங்க.. அம்மா வாங்க.. //
நான் வரலீங் இந்த வெளாட்டுக்கு. நமக்கு சக்தி கம்மிங்க சாரல்.
அது சரி!பதிவின் அகலம் கணினி மானிட்டர் அகலத்தை விட அதிகமா
இருக்கறதால லைனுக்கு லைன் நகத்தி நகத்தி படிக்க வேண்டியதாருக்கே சாரல்!
சாரல்...எனக்கும் ஒண்டு ஓடர் பண்ணிடுங்க கண்டிப்பா !
வணக்கம்! தகவலுக்கு நன்றி! நாலரை லட்சம் செலவு செய்து என்னால் நேரம் தெரிந்து கொள்ள முடியாது.. அப்படியே வாங்கினாலும் நம் மக்கள் அதில் உள்ளது உண்மையான கற்களா என்று கேட்பார்கள்.
//(வீடு வாங்க வீட்டு லோன் மாதிரி, வாட்ச் வாங்க வாட்ச் லோன் ஏதாவது கிடைக்குமா ஆப்பீசர்)//
விலை நம்ம ரேஞ்சுக்கு இல்லாம கொஞ்சம் கம்மியா இருக்கே! அதனால எனக்கு வேணாம்.
விண்டோ ஷாப்பிங்கா நாங்க கடிகாரத்தைப் பாத்துக்கிட்டோம்..
நாங்க வாட்சே கட்டுறதில்லங்க..:)
நான் கூட கயிலாய யாத்திரை அது இது என்று எண்ணி வந்தேன்! டைம் பத்திரிகையில் வெளிவந்த ஒரு வாட்ச் விளம்பரம் பற்றி என் மாமா சொன்னார். அது வாங்கினால் என்னென்ன இலவசம் என்று பட்டியலிட்டார். அலைபேசி, பேனா என்று தொடர்ந்த லிஸ்ட்டில் பி எம் டபிள்யூ கார், பிளாட் என்றேல்லா வந்த போது தலை சுற்றியது. கடைசியில் வாட்சின் விலையைச் சொன்னார்...26 கோடி ரூபாயாம்!
யம்மாடியோவ்...
நாமெல்லாம் இதைக் கட்டினால் எவ்வளவு லட்சம் கொடுப்பார்கள்னு சொல்லணும். அப்ப யோசிக்கணும்:)
தான்க்ஸ் சாரல்.
தன்னம்பிக்கை கட்டுரைன்னு நினைச்சு உள்ளே வந்து ஏமாந்துட்டேன்
நானும் ஒரு கடிகாரப்பதிவு போடுவதாக உள்ளேன். அதைப்பார்த்தீர்களானால், நீங்கள் சொல்லும் இந்த கடிகாரம் கொள்ளை மலிவு என்று உங்களுக்கே புரியவரும்.
Post a Comment