வர்ற மார்ச் 8-ம் தேதியன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுதுன்னு எல்லோருக்கும் தெரியும்.வெறுமே ஒரு நாள் மட்டும் கொண்டாடுனாப் போதுமா,.. போதாதுன்னுதான் கொண்டாட்டத்தை ஒரு வாரத்துக்கு நீட்டிச்சிருக்கோம். இன்னியிலிருந்து மார்ச் 8-ம் தேதி வரைக்கும் மகளிர் வாரம் வல்லமை மின்னிதழில் கொண்டாடப்படுது.
இந்த ஒரு வாரமும் பெண் படைப்பாளிகளின் படைப்புகள் மட்டுமே வல்லமையில் வெளியாகும். கதை, கவிதை, கட்டுரை, சின்னச்சின்ன துணுக்குச் செய்திகள், பயணக் கட்டுரைகள், சமையல் குறிப்புகள்ன்னு எதை வேணும்னாலும் எழுதலாம்.
பெண்களின் நிலையை, அவங்க தினமும் சந்திக்க நேரிடும் பிரச்சினைகளை மையமாக் கொண்டதாகவோ இல்லைன்னா நீங்க சந்திச்ச ஒரு அற்புதமான பெண்மணியைப் பற்றியதாவோ கூட எழுதலாம். நம் குரலை ஒலிக்க வைக்க ஒரு அருமையான வாய்ப்பு , தவற விடாமக் கலந்துக்கோங்க சகோதரிகளே..
சகோதரர்கள் மன்னிச்சுக்கோங்க :-))
படைப்புகளை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்க. மகளிர் வாரத்தைக் கொண்டாடுங்க.
10 comments:
பெண்கள் தினம்ன்னு வருஷத்துல ஒரு தினத்தைக் கொண்டாடறதுல எனக்கு உடன்பாடில்லை சாரல் மேடம். இது பத்தின கருத்தை இந்த ஆண் பெண்கள் தினத்தன்னிக்கு எழுதலாம்னு இருக்கேன். (அப்பத்தானே லேடீஸ் தவறாம படிப்பாங்க.) பெண்கள் வாரம் கொண்டாடுற உங்களுக்கெல்லாம் என் நல்வாழ்த்துக்கள்.
வல்லமையில்,
வல்லமை பொருந்திய மகளிர் அணி எழுத்தாளர்களின் கொண்டாட்டங்கள் மிகச்சிறப்பாக வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.
அன்புடன் vgk
வாழ்த்துகள்.... கலந்து கொள்ளப்போகும் அனைத்து மகளிர்க்கும்!
தகவலுக்கு நன்றி.
நல்லது சாந்தி.
சகோதரர்கள் எல்லாம் வாசிப்பாங்க:)!
வாழ்த்துகள்.... கலந்து கொள்ளப்போகும் அனைத்து மகளிர்க்கும்!
தகவலுக்கு நன்றிங்க. கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ஆண்களுக்கு இடமில்லையா....பின்னூட்டம் இடும் ஆண்களைத் தண்டிக்க என்ன யோசனை வைத்திருக்கிறீர்கள்..?!! :)))
வாழ்த்துக்கள்.பகிர்வுக்கு நன்றி.
படைப்புகளை அனுப்பி வெச்ச மகளிர்க்கும், வாசிச்சு ஆதரவு கொடுத்த மகனர்க்கும் ரொம்ப ரொம்ப நன்றிகள் :-)
Post a Comment