Tuesday, 28 February 2012

கட்டாந்தரையும் காரணிகளும்..


ஒரு மனிதனின் செல்வச் செழிப்பைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருப்பவை அவனது தேவைகளும் விருப்பங்களும் மட்டுமே.

பொறுமை, நம்பிக்கை, பொறுப்புணர்வு இவைகளை வளர்த்துக் கொள்ள ஆசைப்படுகிறீர்களா?…. ஒரு செடியை வளர்க்க ஆரம்பியுங்கள். பொறுப்பில்லாமல் ஒரு நாள் தண்ணீர் ஊற்ற மறந்தால் கூட, வாடி வதங்கி இது பிழைக்குமா இல்லையா என்று நம் பொறுமையையும், எப்படியும் பிழைத்து விடும் என்ற நமது நம்பிக்கையையும் ரொம்பவே சோதித்து விடும்.

நாம் எப்போதும் வளமான எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காண்பவர்களாக இருக்கிறோம்,.. அதற்கான விதைகள் நிகழ்காலத்தில் மட்டுமே ஊன்றப்படுகிறது என்பதை மறந்து விட்டு.

வளர்ந்தபின் இந்த உலகத்தையே மாற்றி குறைகளில்லாத ஒரு புது உலகைப் படைப்பேன் என்பதே ஒவ்வொரு இளம் மொட்டின் கனவாக இருக்கிறது. வளர்ந்தபின்தான் புரிகிறது, உலகத்தில் நாமும் அடக்கமென்பது. சோப்பானது தன்னையும் சுத்தமாக வைத்துக் கொண்டு நம்மையும் சுத்தப்படுத்துவதைப் போல், முதலில் நாம் குறையில்லாத மனிதராய் மாறி உலகைக் குறைகளற்றதாக்குவோம்.

அறைகளில் அடைத்து வைத்துக் கற்பிக்கப்படுவது மட்டுமல்ல, நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்து விஷயங்களையும், பொறுமையையும் தன்னம்பிக்கையையும் இழந்து விடாமல் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கற்றுக்கொள்வதும் கல்வியே.

அளவுக்கு மீறிப் பராமரித்தாலும் கெடும், பராமரிப்பின்றி விட்டாலும் கெடும் மனித உறவுகளும் தாவரங்களும் ஒன்றே. ‘பீலிபெய் சாகாடும்’  என்று வள்ளுவரும் ‘அளவுக்கு மிஞ்சினால்’ என்று தமிழ்ப்பாட்டியும் எச்சரித்தது இதைத்தானோ..

அன்றைய தினத்தை மிகவும் மன நிறைவுடனும் திருப்தியுடனும் கழித்தவனுக்குத் தூக்கம் வர மெத்தையின் சொகுசும், மாத்திரையின் துணையும் தேவையில்லை.

நம்மீது உண்மையான அன்பு கொண்டவர் மனதில் நமக்கென்று விசாலமான நிலையான இடத்தை விடவும் விலையுயர்ந்த சொத்தை, வாழ்நாளில் நம்மால் சம்பாதித்து விட முடிவதில்லை.

உள்ளுணர்வென்பதும் கடவுளின் கொடைதான். கணவன் தன்னிடம் ஏதோ மறைக்கிறான் என்பதை மனைவியும், மனைவி அதைக் கண்டுபிடித்து விட்டாள் என்றறிந்து எதிராளி தன்னைக் கேள்வி கேட்குமுன் கணவனும் உள்ளுணர்வால் எச்சரிக்கப்பட்டுச் சுதாரித்துக் கொள்கிறார்கள்.

கட்டாந்தரையைப் பார்த்துப் பூந்தோட்டம் அழகாயில்லை என்பவனும், வாழ்க்கையில் சுவாரஸ்யமே இல்லை என்று அலுத்துக் கொள்பவனும், அதை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்பதைக் கடைசிவரை புரிந்து கொள்வதேயில்லை.

டிஸ்கி: வல்லமையில் எழுதியதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்.


27 comments:

ராமலக்ஷ்மி said...

/நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்பதை/ மிக அருமையாக உணர்த்துகிற கட்டுரை. நன்றி சாந்தி.

Yaathoramani.blogspot.com said...

கட்டாந்தரையைப் பார்த்துப் பூந்தோட்டம் அழகாயில்லை என்பவனும், வாழ்க்கையில் சுவாரஸ்யமே இல்லை என்று அலுத்துக் கொள்பவனும், அதை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்பதைக் கடைசிவரை புரிந்து கொள்வதேயில்லை.//

அருமையான பதிவு
முத்தாய்ப்பாய் சொல்லியுள்ள வாசகங்கள்
அனைவரும் அவசியம் மனதில் ஏற்றி கொள்ளவேண்டியவை
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

மிக அருமையான பகிர்வு....

வல்லமையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்...

குறையொன்றுமில்லை. said...

நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்பதை/ மிக அருமையாக உணர்த்துகிற கட்டுரை. நன்றி சாந்தி.

ஹேமா said...

எமக்கேற்றபடி எம் நிலைக்கேற்றபடி வாழ்வை அழகாக்கவேண்டியது நாம்தான் !

பால கணேஷ் said...

நம்மை நாம்தான் செதுக்கிக் கொள்ள வேண்டும். அன்றைய நாளை நிறைவாய் கழித்தவனுக்கு தூக்கம் வர பட்டு மெத்தையும், தலையணையும் தேவையில்லை என்ற உங்கள் சிந்தனை மிகவே நிதர்சனம்! எனக்கும் பிடிச்சிருந்தது. மற்ற விஷயங்களும் அருமை. வல்லமையில் இது வெளியானதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சாரல்!

RVS said...

சுய முன்னேற்ற தன்னம்பிக்கை கட்டுரை வகையில் இது சேர்கிறது. நல்லா இருக்குங்க. :-)

ADHI VENKAT said...

நல்லதும், கெட்டதும் நாம் பார்க்கும் விதத்தில் தான் இருக்கிறது என்று சொல்வார்களே.....

அதே மாதிரி தான்.... எல்லாம் நம்மிடம் தான் இருக்கிறது.

நல்ல பகிர்வு. அருமையான வரிகள்.

ஸ்ரீராம். said...

சுய அலசல் கட்டுரை நன்றாக இருக்கிறது. இழந்த மற்றும் நிச்சயமில்லா சொர்க்கங்களுக்காக ஏங்குவதை விட இன்றில் வாழ்பவனுக்கு நிம்மதியான உறக்கம் நிச்சயம்.

மாதேவி said...

"நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்" நிச்சயமாக.
நல்ல பகிர்வு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

வாசிச்சதுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கணேஷ்,

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆர்.வி.எஸ்,

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆதி,

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

வாசிச்சதுக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

Sankar Gurusamy said...

அற்புதமான கருத்துக்கள்.. மனிதன் மகிழ்ச்சியை அவனேதான் உருவாக்கிக்கொள்ளவேண்டும் என அழகாக எடுத்துரைத்திருப்பது அருமை..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

பாச மலர் / Paasa Malar said...

நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும்....உண்மை

ஹுஸைனம்மா said...

நல்ல கட்டுரைங்க. வரவர பெரிய எலக்கியவாதி ஆகிட்டு வர்றீங்க!! (பின்ன, இதை ஒரு மூணு தரம் வாசிச்சப்புறம்தான் புரிஞ்சுது) :-)))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கர்,

வருகைக்கும் வாசிச்சதுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாசமலர்,

வருகைக்கும் வாசிச்சதுக்கும் நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

இதை இலக்கியம்ன்னு நீங்களாவது சொன்னீங்களே.. எனக்கு ஆனந்தத்துல அழுவாச்சியா வருது.. ஆனா மூணே தடவையில் புரிஞ்சுருச்சுன்னு சொல்றீங்களே அதான் கொஞ்சம் இடிக்குது.. இன்னும் கொஞ்சம் உழைக்கணுமோ :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கரலிங்கம் அண்ணா,

தாமசமான நன்றிகள் :-)

LinkWithin

Related Posts with Thumbnails