Tuesday 8 November 2011

இந்த மும்பை மாநகரத்திலே ....


மும்பை மாநகராட்சிக்கு சேனைக் கட்சியின் சார்புல போட்டியிட்டு ஜெயிச்சு வந்து, இப்ப மும்பையின் மேயரா இருக்காங்க 'ஷ்ரத்தா ஜாதவ்'. இவங்க மும்பையின் அஞ்சாவது பெண் மேயர். இவங்க ஏற்கனவே பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், பூங்காக்கள், மும்பையின் மார்க்கெட்டுகள் இப்படி மும்பை மாநகராட்சியின் சில துறைகளை நல்லா நிர்வகிச்சு, நல்ல பேரு வாங்கியிருக்காங்க. 'உலக மேயர் விருது'க்காகவும் பரிந்துரைக்கப்பட்ட பெருமை இவங்களுக்கு உண்டு.


பெயருக்கேத்த மாதிரி, புதுசா வந்துருக்கற மேயரம்மா 'ஷ்ரத்தா ஜாதவ்' மும்பையை முன்னேத்தணும்கற ஷ்ரத்தாவோட வேலை செய்யறாங்க. ச்சும்மா ரெண்டு தூறல் விழுந்தாலே போதும், நம்ம நாட்டுல ரோடுகளோட நிலைமை பல்லாங்குழி மாதிரியாகிடுதுன்னு சொல்லவே வேணாம். அதுவே பெருமழையானா அவ்ளோதான். இதுக்கு நடுவுல ஒவ்வொரு துறையினரும் ஒவ்வொரு இடத்துல பள்ளம் பறிச்சு வெச்சுட்டுப் போயிருப்பாங்க. இதெல்லாம் சரி செஞ்சு முடிக்கிறதுக்குள்ள அடுத்த மழைக்காலம் வந்துடும். அப்புறமென்ன?..  மறுபடியும் முதல்லேர்ந்து ஆரம்பிக்க வேண்டியதுதான். இதுல ரோட்டுல பயணம் செய்யறவங்க நிலைதான் பரிதாபமானது. விழுந்து எந்திரிச்சுப் போனவங்க, உயிருக்கோ உடலுக்கோ ஆபத்து ஏற்பட்டவங்கன்னு அந்த லிஸ்ட் ரொம்பப் பெரிசு. இந்தப் பரிதாப நிலையைப் பத்தி ரொம்ப நாளுக்கு முன்னாடி ஒரு கவிதை கூட எழுதியிருந்தேன். (ஹி..ஹி..ஹி.. எல்லாம் ஒரு வெளம்பரந்தேன் :-))
                                         
எங்க மேயரம்மா இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கிறதுக்காக ஒரு திட்டம் கொண்டாந்துருக்காங்க. விஷயம் சிம்பிள்தான். ரோடு எஞ்சினீயர்களை நியமிச்சாப் போச்சு. சிவில், கிரிமினல் ச்சே!!.. மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல்ன்னு எஞ்சினீயர்கள் இருப்பாங்கன்னு தெரியும். அதென்ன ரோடு எஞ்சினீயர்கள்?.. ரோட்டைக் கவனிச்சுக்கற எஞ்சினீயர்கள்தான் ரோடு எஞ்சினீயர்களாம். அவங்களுக்குன்னு ஏரியாக்கள் ஒதுக்கப்பட்டு, குறிப்பிட்ட பகுதிகள்ல இருக்கற அத்தனை ரோடுகளையும் அவங்க பொறுப்பில் விட்டுடுவாங்க. அப்றம் அந்த ரோட்டுல உடைக்கிறது, குழி பறிச்சுட்டு காணாமப் போறது, மழை நீர் வடிகால்களைச் சுத்தம் செய்யறதுன்னு எல்லாத்துக்கும் அனுமதி கொடுக்கற உரிமை அந்த எஞ்சினீயர்களுக்கு ம்ட்டுமே உண்டு. ரோட்டுல இருக்கற விளக்குகளைப் பராமரிக்கிறது, மக்கள் ரோட்டைக் கடக்கறதுக்கான ஜீப்ரா க்ராஸிங் எங்கே வரணும்ன்னு முடிவெடுக்கறதுன்னு எல்லாத்துக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவங்களுக்கு ஒத்துழைப்பும் கொடுத்தாகணும். மொத்தத்துல இந்த எஞ்சினீயர்கள்தான் அந்த ஏரியாக்களோட குறுநில மன்னர்கள்.

ரோடு போடறப்ப சரியான திட்டமிடல், செயற்படுத்துதல், அப்றம் மேற்பார்வை இல்லாததால்தான் மும்பை மழைக்காலத்துல மிதக்குது, ரோட்டுலயும் ஆங்காங்கே குண்டும் குழியுமா ஆகுதுன்னு ரூம் போட்டு யோசிச்சு கண்டு பிடிச்சுருக்காங்க எங்கூரு அதிகாரிகள். இந்தக் குறைபாடுகளெல்லாம் இனிமேலாவது தவிர்க்கப்படும்(ன்னு நம்புவோமாக). இதெல்லாத்தையும் கணக்கெடுத்து, எத்தனை குண்டு குழிகளைச் சரி செஞ்சுருக்காங்க, எந்தெந்த இடங்கள்ல ரிப்பேர் வேலை நடந்துருக்குதுன்னு கணக்கு வெச்சுக்கறதுக்காகவே RMMS(Road Maintanance And Management System)ன்னு ஒரு மென்பொருளை உருவாக்கியிருக்காங்க. கடமையிலிருந்து யாராவது தவறினா இது காட்டிக் கொடுத்துடும்.

மும்பையின் இன்னொரு பெரிய தலைவலி, அங்கங்க கிடக்கிற குப்பைக் கூளங்கள். என்னதான் நகரின் முக்கியமான பகுதிகள்ல ரோட்டுல குப்பை போட்டா அபராதம்ன்னு எல்லாம் பயமுறுத்தி வெச்சாலும் மக்களும் அதைக் காதுல போட்டுக்கணுமில்லையா?.. மும்பை மாதிரியான காஸ்மோபொலிட்டன் நகரத்துல சுத்தத்தைப் பராமரிக்கிறதுங்கறது ரொம்பவே சிரமமான விஷயமா இருக்குது.

குப்பைத்தொட்டின்னு எழுதி வெச்சாலும், அந்த டப்பாவுல கொட்டாம அது பக்கத்துல குப்பைகளைக் கொட்டி மத்தவங்களையும் டப்பாவுல கொட்ட விடாதபடிக்கு வழி நெடுகக் குப்பையாக்கி வைக்கிறதுன்னா நம்ம மக்களுக்கெல்லாம் வடா பாவ் சாப்டற மாதிரி. அதெல்லாத்தையும் வாரிக்கிட்டுப்போய் நகருக்கு வெளியே அதுக்குன்னு நிர்மாணிச்சுருக்கற இடத்துல கொட்றதுன்னா லேசுப்பட்ட காரியமா?.. சரியான இடம் அமையறதுக்குள்ளயே தாவு தீர்ந்துடும். அப்டி அமைஞ்சதும் நகருக்குள்ள இருக்கற குப்பைகளை வாரிக்கிட்டுப் போய் நகரைச் சுத்தமா வெச்சுக்கலாமில்லையா. இது சில இடங்கள்ல மட்டுமே ஒழுங்கா நடக்குது.
இயற்கையுரம் தயாராகுது..
இந்தக் குப்பைகளை வெச்சு இயற்கையுரம் தயாரிக்கலாம்ன்னும் எங்கூரு மாநகராட்சிக்கு ஐடியா இருக்குது. பொதுவா நம்ம வீடுகள்ல சாமிக்குப் போட்ட பூச்சரங்களைச் சேர்த்து வெச்சு எங்கியாச்சும் தண்ணியில விட்டுடறது வழக்கம். இப்படிப் போடறதுனால அந்தக் குப்பைகள் காலப் போக்குல தண்ணீரை மாசுபடுத்துதுன்னும், தண்ணீர்ல இருக்கற மீன்கள் போன்ற உசுருகளுக்கு இதனால ஆபத்து வருதுன்னும் இப்ப சமீப காலமாத்தான் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கு. இதனால இங்கே நீர் நிலைகள், முக்கியமா கோவில்களுக்குப் பக்கத்துல குளங்கள் இருந்தா, அங்கெல்லாம் ரெண்டாள் உசரத்துக்கு கலசம் மாதிரி ஒரு பெரிய பானையை வெச்சு அதுல இதெல்லாத்தையும் சேமிக்கிறாங்க. "நிர்மால்ய கலசம்"ன்னே அதுக்குப் பேரும் இருக்கு. இப்ப சமீபத்துல புள்ளையார் சதுர்த்தி சமயத்துல கடற்கரைகள்ல ஆங்காங்கே நிறையக் கலசங்கள் வெச்சு மக்கள் தினப்படி பூஜை முடிச்சு சேர்த்து வெச்சிருந்த பூச்சருகுகளைக் கொண்டாந்து அதுல போடும்படிக் கேட்டுக்கிட்டாங்க. அப்படியும் சில ஆட்கள் ரோட்டுலயும் கடற்கரையிலும் ஆங்காங்கே வீசிட்டுப் போகத்தான் செஞ்சாங்க. ஜூஹூ கடற்கரையில் இப்படி சேர்ந்த குப்பைகள் டன் கணக்குல இருந்ததாம். அதைச் சுத்தம் செய்யும் பொறுப்பை சில அமைப்புகள் ஏத்துக்கிட்டுப் புண்ணியம் கட்டிக்கிட்டன.
படங்கள் கொடுத்துதவியதுக்கு நன்றி இணைய தேவதையே..
இதுக்காகவே இந்த அக்டோபர் ஒன்னாம் தேதியிலிருந்து 'Zero Garbage'ன்னு ஒரு திட்டத்தைக் கொண்டாந்திருக்காங்க. குப்பையில்லா நகரம்கறது கேக்கவே எவ்ளோ நல்லாருக்குது. இந்த திட்டத்தை நல்ல முறையில் நிறைவேத்தணும்ன்னா, நல்ல முறையில் செயல் படுத்தவும் செய்யணும். அதுக்காகவே இதோட நிர்வாக வசதிக்காக மும்பையை ஏழு பகுதிகளாப் பிரிச்சு அஞ்சு ஒப்பந்தக்காரர்களை நியமிச்சிருக்காங்க(ஏழுக்கு அஞ்சா?.. கணக்கு எங்கியோ இடிக்குதில்லெ :-)). வண்டிகளை வெச்சு குப்பையை அள்ளுறதுலேர்ந்து அதை நகருக்கு வெளியே ஒதுக்கப்பட்ட அதுக்கான இடங்களுக்குக் கொண்டு போயிக் கொட்டற வரைக்கும் இவங்கதான் பொறுப்பேத்துக்கணும்.

அதேமாதிரி மும்பையில் ஒரு நாளைக்கு எவ்ளோ குப்பை சேருதுன்னு சரியா கணக்கெடுக்கறதுலேர்ந்து , விடிகாலைல தெருவைக் கூட்டும் துப்புரவுத் தொழிலாளிகள் சரியா வேலை செய்யறாங்களான்னு கண்காணிக்கிறது வரைக்கும் இவங்க செஞ்சாகணும். இதுல ஏதாவது குறை தென்பட்டா அடுத்தாப்ல ச்சான்ஸ் கிடைக்காது. ஆப்புதான் கிடைக்கும். எங்கம்மா அதுல ஸ்ட்ரிக்ட்டு.. ஸ்ட்ரிக்ட்டு.. ஸ்ட்ரிக்ட்டு. ஏற்கனவே கோல்மால் செஞ்சவங்களை அவங்க கட்டம் கட்டிட்டதால அதிகாரிகளும் கொஞ்சம் பயந்துதான் இருக்காங்க. மக்களுக்குச் சேவை செய்யறதுக்குக் கூட அதிகாரிகள் கிட்ட சில சமயங்கள்ல அன்பையும், சில சமயங்கள்ல அதிகாரத்தையும் காட்ட வேண்டிதான் இருக்குது போல. எப்படியோ நல்லது நடந்தாச் சரி.

மும்பையை ஷாங்காய் மாதிரி ஆக்குவோம்ன்னு சொல்லித்தான் எங்கூரு அரசியல் வாதிகள் பதவிக்கு வர்றாங்க. அதென்னவோ அவங்க எந்தவொரு முயற்சியும் எடுக்காமலேயே ஒவ்வொரு மழைக்காலத்துலயும் மும்பை பார்க்கறதுக்கு அப்படித்தான் இருக்குது. இதுக்கு முக்கியமான காரணங்களான ரோடுகளையும், குப்பையையும் சரி செஞ்சுட்டாலே மும்பைக்கு விமோசனம் கிடைச்சுடும்.  பொருளாதாரத்துல மட்டுமில்லாம சுத்தத்துலயும் இந்தியாவோட தலைநகர்ன்னு மும்பை சொல்லப்படற அந்த நாள் எந்த நாளோ!!!

39 comments:

VANJOOR said...

இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ

கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.


**** ஆதாமின்டே மகன் அபு *****


.

RAMA RAVI (RAMVI) said...

மும்பையின் புதிய மேயர்,ஷ்ரத்தா ஜாதவ்'.பற்றியும்,அவரது திட்டங்கள் பற்றியும் தெரிந்து கொண்டேன்.நல்ல பதிவு.பகிர்வுக்கு நன்றி.

MANO நாஞ்சில் மனோ said...

பொருளாதாரத்துல மட்டுமில்லாம சுத்தத்துலயும் இந்தியாவோட தலைநகர்ன்னு மும்பை சொல்லப்படற அந்த நாள் எந்த நாளோ!!!//

நானும் சின்ன வயசுல இருந்தே பார்த்துட்டுதான் இருக்கேன், மும்பையில் பில்டிங் எக்கசக்கமா வருதே அல்லாமல் குப்பைகள் அப்பிடியேதான் இருக்கு இப்பவும்...!!!

rajamelaiyur said...

இதுபோல சென்னைல செய்வாங்களா ?

வெங்கட் நாகராஜ் said...

நல்ல முயற்சி இது. நிர்மால்ய கலசம் இது நல்ல ஐடியாவா இருக்கே. இங்கே யமுனாவை எவ்வளவு அசுத்தம் செய்ய முடியுமோ அவ்வளோ செய்யறாங்க....

நல்லது நடந்த சரி.

Yaathoramani.blogspot.com said...

அவர்களது செயல்களும் திட்டங்களும்
தாங்கள் சொல்லிச் செல்லும் விதமும்
நம்பிக்கையூட்டும் படியாகத்தான் தெரிகிறது
நல்லதே நினைப்போம் நிச்சயம் நடக்கும்
த.ம 3

Asiya Omar said...

நல்ல முயற்சி,முயற்சி கைகூடட்டும்..அருமையாக பகிர்ந்திருக்கீங்க.

pudugaithendral said...

நல்லா டீடெயிலா சொல்லியிருக்கீங்க. மும்பை அழகானா வேணாம்னா சொல்லுது. எனது பிரார்த்தனைகள் ( வேலை நல்லா நடக்க இல்ல. நல்லபடியா வேலை செய்ய விடனுமே அதுக்காக)

வல்லிசிம்ஹன் said...

நிர்மால்ய கலசம் நல்ல ஐடியா.
இவ்வளவு தீவிரமா முயற்சி எடுத்தப்ப்புறம் மும்பையை வந்து பார்க்கலாம்:)
வாழ்த்துகள் சாரல்

Hemma said...

இப்படியானவர்கள் சொல்லில் இல்லாமல் செயற்பட்டால் நல்லது !

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல பயனுள்ள பதிவு. குப்பைகளற்று மும்பை படு சுத்தமானதும் சொல்லுங்கள். நாங்கள் எல்லோரும் பார்க்க வருகிறோம், [மும்பையைப் பார்க்க மட்டுமல்ல, உங்களையும் சந்திக்கத்தான்.]

vgk

RVS said...

பயனுள்ள பதிவு. மும்பை ஒரு உறங்கா நகரம் என்று தெரியும்.

பெண்கள் நாட்டின் கண்கள். :-)

ஷ்ரத்தாவோட சேர்ந்து பணியாற்றுவீர்களா? :-))))

குமரி எஸ். நீலகண்டன் said...

மக்களின் விழிப்புணர்வும் அவர்களின் ஒத்துழைப்பும் இருந்தால் சுத்தமான பூமியில் சுகமாக வாழலாம்...

'பரிவை' சே.குமார் said...

.நல்ல பதிவு.பகிர்வுக்கு நன்றி

உணவு உலகம் said...

விழிப்புணர்வு மற்றும் சமுதாயப் பார்வை கலந்த பகிர்வு.

உணவு உலகம் said...

இதில் நம் அனைவரின் பங்கும் இன்றிமையாதது. உங்கள் பகிர்வு அனைவரின் பொறுப்புகளை உணர்த்தட்டும்.

குறையொன்றுமில்லை. said...

மும்பையின் புதிய மேயர்,ஷ்ரத்தா ஜாதவ்'.பற்றியும்,அவரது திட்டங்கள் பற்றியும் தெரிந்து கொண்டேன்.நல்ல பதிவு.பகிர்வுக்கு நன்றி.


நல்ல பதிவு சாந்தி.

Anonymous said...

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

ரசிகன் said...

பயனுள்ள பதிவு. ஒரு நகராட்சி நிர்வாகத்தையே கண் முன்ன காட்டிடீங்க. என் நண்பர் ஒருவர் ஊராட்சி மன்ற தலைவரா தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கார். அவர் கிட்ட குப்பைகள்ளேருந்து எரு தயாரிக்கறதா பத்தி பேசறேன். தகவலுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

//குப்பையில்லா நகரம்கறது கேக்கவே எவ்ளோ நல்லாருக்குது.//

இந்தப் பதிவை வாசிக்கவும் நல்லாருக்கு. இது போன்ற மேயர்கள் இந்தியாவின் ஒவ்வொரு நகருக்குமே தேவை. நல்லன நடக்கட்டும்.

அருமையான பகிர்வு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வாஞ்சூர் ஐயா,

வருகைக்கும் சுட்டி கொடுத்ததுக்கும் நன்றி

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வலைச்சர ஆசிரியரே :-))

வருகைக்கும் வாசிச்சதுக்கும் ரொம்ப நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மனோ,

மும்பைக்காரரான உங்களுக்குத்தெரியாததா என்ன :-))

நாடு முழுக்க இருந்து ஆயிரக்கணக்குல மக்கள் வந்து குவியுற இடம்.. அரசாங்கம் மட்டுமல்ல மக்களும் மனசு வெச்சா நிச்சயம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுண்டு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜா,

தாராளமா செய்யலாமே அங்கேயுள்ள அதிகாரிகள் :-))

பயனுள்ள மென்பொருளைப்பத்தி பகிர்ந்திருக்கீங்க. எனக்கு நிச்சயம் உபயோகப்படும் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

சமீப காலமா நீர் நிலைகள் இருக்கற இடங்கள்ல இதை கட்டாயமா வைக்கிறதுனால மக்களும் பூச்சருகுகளை அதுல போடறதுக்கு பழகிப்போயிட்டாங்க. இப்பல்லாம் நீர் நிலைகளும் கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வருது.

அரசாங்கமும் மக்களும் கை கோத்துக்கிட்டுச் செயல்பட்டா எவ்வளவோ சாதிக்கலாம்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

எங்களுக்கும் நம்பிக்கை துளிர் விட ஆரம்பிச்சிருக்குது.

ரொம்ப நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

வாசிச்சதுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

வேலை கண்டிப்பா நல்லபடியா நடக்கும்ன்னு எதிர்பார்ப்போமே.. ஏன்னா எப்பவும் மத்தவங்களுக்கு முட்டுக்கட்டை போடறவங்கதானே இப்ப 'அங்க' இருக்காங்க. தன்னோட வேலைகளை சரியாச் செய்வாங்கன்னு எதிர் பார்ப்போம் :-)

அம்ச்சி மும்பை அழகான மும்பையாகட்டுமே..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

உங்களை வரவேற்கறதுக்காகவாவது மும்பையை சீக்கிரம் சுத்தப் படுத்தச் சொல்லிடலாம் :-))

வாசிச்சதுக்கு நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க hemma,

உங்க ஆதங்கமும் ஞாயமானதுதான்..

வரவுக்கு நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வை.கோ ஐயா,

கண்டிப்பா வாங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆர்.வி.எஸ்,

வீட்டுப் பணியிலிருந்துதானே நாட்டுப் பணி ஆரம்பிக்குது.. அந்தக் கணக்குல பார்த்தா நாங்கல்லாம் ஷ்ரத்தாவுக்கு வீட்ல இருந்தே ஆதரவு தர்றோமாக்கும் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குமரி நீலகண்டன்,

உண்மைதான்.. என்னதான் அரசாங்கம் உத்தரவு போட்டாலும், மக்களோட ஒத்துழைப்பு இல்லைன்னா அது வெற்றி பெறாதுதான்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குமார்,

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கரலிங்கம் அண்ணா,

நல்ல திட்டங்களை உருவாக்கறது அரசோட கடமைன்னா, அதுக்கு ஒத்துழைப்பு கொடுத்து செயல்படுத்தி வெற்றி பெறச் செய்யறது நம்மை மாதிரி குடிமக்களோட கடமை.
இதுல எது பிசகினாலும் கஷ்டம் நமக்குத்தான்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

வாசிச்சதுக்கு நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாய உலகம்,

வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரசிகன்,

ரொம்ப நல்லதுங்க.. உங்க நண்பர் ஒரு உதாரணத் தலைவரா விளங்க வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

வாசிச்சதுக்கு நன்றிங்க.

LinkWithin

Related Posts with Thumbnails