இங்கே மும்பையில் கண்ணனின் பிறந்த நாள் அன்னிக்கு 'தஹி ஹண்டி'ன்னு ஒரு உற்சவம் தெருவுக்குத் தெரு நடக்கும். நம்மூர் உறியடித் திருவிழாதான் அது. உயரத்தில் தொங்கவிடப் பட்டிருக்கும் ஒரு அலங்கரிக்கப்பட்ட பானையில், பாலும் தயிரும், சில்லறைக் காசுகளும் இருக்கும். சில இடங்களில் சாயம் கலக்கப்பட்ட தண்ணீரையும் நிரப்புவதுண்டு.
பானையின் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி இரண்டு பக்கமும் ரொம்ப உயரமான மாடிகள்ல இழுத்துக் கட்டியிருப்பாங்க. இந்த தயிர்ப் பானை கட்டப்படும் உசரம் முன்னெல்லாம் இரண்டு மாடிகள் அளவுல இருந்தது,.. இப்பல்லாம், ஏழெட்டு மாடிகள் உசரத்துக்கும், சில இடங்கள்ல அதுக்கும் மேல, க்ரேன் கொண்டும் உசரத்தை கூட்டிக்கிறாங்க. இந்த உசரம் சர்வ சாதாரணமா முப்பது நாற்பது அடி உசரம் வரைக்கும் போகும்.
உறியடிக்கிறவங்களை இங்கே கோவிந்தாக்கள்ன்னு சொல்லுவோம். கண்ணனோடு சேர்ந்து வெண்ணெய் திருடித் தின்ன, அவனது நண்பர்கள் குழாமும் போகுமாம்.அவங்களைத்தான் கோவிந்தாக்கள் ஞாபகப்படுத்தறாங்க. உறியடிக்கிறதுக்கு ஒவ்வொரு குழுக்களா சேர்ந்துதான் கோவிந்தாக்கள் போவாங்க.
ஒவ்வொரு குழுவிலும் சுமார் 100 அல்லது 150 கோவிந்தாக்களோ, அதுக்கு மேலயோ இருப்பாங்க. உறியடிக்க வந்ததும், ஒவ்வொரு குழுவா தங்களோட புஜபல பராக்கிரமத்தோடு, தங்களால பானை கட்டப்பட்டிருக்கும் உசரத்தை எட்ட முடியுமான்னும் காட்டறதுக்காக ஒருத்தர் தோள்ல ஒருத்தர் ஏறி நின்னு பிரமிட் செஞ்சு காமிச்சு, ஒரு சின்ன டெமோ கொடுப்பாங்க. ஒவ்வொரு குழுவா, பானையை உடைக்க முயற்சி செய்வாங்க.

இதுல எந்த குழு, பானையோட உசரத்தை எட்டற அளவுக்கு, பிரமிட் செஞ்சு காமிக்குதோ அவங்கதான் அனேகமா ஜெயிப்பாங்க. அந்த உசரத்தை எட்ட முடியாதவங்க, அங்கிருந்து பின்வாங்கி வேற இடங்கள்ல, உறியடி உற்சவத்துக்கு போயிடுவாங்க. சிலசமயங்கள்ல ரெண்டு சம பலமுள்ள குழுக்களுக்கிடையில போட்டி நடக்கும். அதுல ஜெயிக்கிறவங்களுக்கு பரிசுத்தொகை கிடைக்கும். ஜெயிக்கலைன்னா.. அதான் ஜெயிக்கலையே.. ஒண்ணும் கிடைக்காது.
இதில், தானாவருகே மஸ்காவ் என்ற இடத்தில்தான் உலகிலேயே மிக உயரமான பிரமிட்ன்னு கின்னஸ் சாதனை அந்தஸ்து பெற்ற ஒன்பது நிலை பிரமிட் அமைச்சிருக்காங்க. போன வருசத்துல நடத்துன தங்களோட சாதனையை தாங்களே முறியடிக்கணும்ன்னு இந்த வருசம் பத்து நிலைகள்ல பிரமிட் அமைக்க முயற்சி செஞ்சுருக்காங்க. ஆனா, முயற்சி வெற்றி பெறலை.
ல்அ
எல்லா கோவிந்தாக்களும் பிரமிட் மாதிரி ஒருத்தர் தோள்ல இன்னொருத்தர் ஏறி நின்னுக்க, கடைசியா, ஒரு சின்னப்பையன் எல்லாத்துக்கும் மேல ஏறி, பானையில் வைக்கப்பட்டிருக்கும் தேங்காயை எடுத்து, பானையை 'டமார்....'ன்னு உடைக்க, பானையிலிருக்கும் தயிர் அத்தனை பேர் மேலயும் சிந்தும். உறியடிக்கறப்ப, அவங்களை உற்சாகப்படுத்த, "ஆலா ரே.. ஆலா. கோவிந்தா ஆலா.."ன்னு பாடுவாங்க. 'கோவிந்தன் வந்து விட்டான்' என்பதே இதன் பொருள்.

இதுல, கோவிந்தாக்கள் மேல தண்ணீர் ஊத்தணும்ங்கற சம்பிரதாயத்துக்காக, சுத்தியிருக்கற கட்டிடங்கள்ல இருந்து வாளி வாளியா தண்ணீரை ஊத்திக்கிட்டே இருப்பாங்க. அதையெல்லாம் சமாளிச்சு ஜெயிக்கறதுதான் சாகசம். (சில இடங்கள்ல பசங்க,கேட்டு வாங்கி தண்ணீரை தங்களோட மேல ஊத்திக்கிறதுண்டு). சில சமயங்கள்ல, பிரமிட்ல மேல இருக்கறவங்க வழுக்கி விழுந்து மொத்த அமைப்பும் 'டமடம' ன்னு சரியும். சில சமயங்கள்ல காயமும் படுமாம். இந்த வருசம் குறைஞ்ச பட்சம் 250 பேருக்கும் மேலே,இப்படி காயம் பட்டதால மருத்துவ மனைகள்ல அனுமதிக்கப் பட்டிருப்பதா புள்ளி விவரம் சொல்லுது.
இப்பல்லாம் அவங்களுக்கு மட்டுமல்ல, சுத்தி நின்னு வேடிக்கை பார்க்கறவங்களுக்கும் காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கு. இது எதுக்குன்னா, மனித பிரமிடு கீழே விழும்போது, அதை உருவாக்கினவங்களுக்கு மட்டுமல்ல, சுத்தி நிக்கிறவங்களுக்கும் காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கு. அந்தளவுக்கு கலந்துக்கறவங்களும், உறியடிக்கிற கூட்டமும் வருசா வருசம் பெருகிட்டே இருக்கு.

இப்பல்லாம், பெண்களும் இப்படியோர் கோவிந்தா குழுவமைச்சு, உறியடி உற்சவத்துல கலந்துக்கறாங்க. இங்க நவி மும்பையிலிருக்கும் ஐரோலியில் (Airoli) அப்படியொரு பெண் கோவிந்தாக்கள் குழுதான் இந்த வருசம் உறியடிக்கப்போறாங்களாம்.. ரொம்பவே கட்டுப்பெட்டி நகரம்ன்னு பேரெடுத்த பூனாவிலும் கூட, மும்பையைப் பார்த்து, பெண் கோவிந்தாக்கள் குழு அமைக்கப்பட்டிருக்கு.
பெண் கோவிந்தாக்கள் குழுவில் அறுபது வயசு பேரிளம் பெண்ணிலிருந்து ஆறு வயசு சிறுமி வரைக்கும் பங்கெடுத்துக்கறாங்க. படிச்சவங்க, படிக்காதவங்கன்னு எந்த வித்தியாசமும் இங்கே கிடையாது. அத்தனை கோவிந்தாக்களும் ஒரே மாதிரி சீருடை போட்டுக்கிட்டு உறியடிக்கிறதைப் பார்க்கவே அத்தனை அம்சமா இருக்கும். ஒவ்வொரு குழுவிலும் நிறையப் பேர் இருக்கறதால, எல்லோருக்கும் சீருடை, சாப்பாட்டுச் செலவு, போக்குவரத்துச் செலவுன்னு ஒரு நாளைக்கு ஒரு பெரிய தொகை செலவாகுமாம்.
ஆண்,பெண் கோவிந்தாக்களின் ஒவ்வொரு குழுவும், கோகுலாஷ்டமி அன்னிக்கு குறைஞ்ச பட்சம் ஏழெட்டு இடங்கள்லயாவது உறியடிப்பாங்க. ஒவ்வொரு இடத்துலயும் மேள தாளத்தோட ஒரு பெரிய ட்ரக் நிறைய அவங்க வர்றதும், போறதும் பார்க்கவே அத்தனை உற்சாகமா இருக்கும்.
இத்தனையும் இவ்ளோ நாளா சாகசத்துக்காக மட்டுமே நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது. இப்பல்லாம் பரிசுத் தொகையையும் கணக்கிலெடுக்கறாங்க. பரிசு எவ்ளோன்னு சொன்னா, மயக்கம் போட்டு விழுந்துடாதீங்க. ச்சும்மா.... ரெண்டு, மூணு லட்சத்தில் இருந்துதான் ஆரம்பிக்குது.
மொதல்லயே, இந்த இடத்துல இவ்ளோ பரிசுன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டிடுவாங்க. அன்னிக்கு, அப்படியொரு போஸ்டரைப் பார்த்தேன்... 2,555,55/-ன்னு அறிவிச்சிருந்தாங்க. இன்னொரு இடத்தில 11,00000/- தானாம். இதுவரை அறிவிக்கப்பட்டதிலேயே, தானா என்னும் பகுதியில் அறிவிக்கப் பட்டதுதான் கூடுதல். தொகை ஒண்ணும் அதிகமில்லை.. வெறும் இருபத்தைந்து லட்சம் மட்டுமே.