Thursday 21 July 2011

சேவை செய்யறவங்களுக்கொரு சேவை..

( நன்றி- இணையம்)

"ட்ராபிக் ஜாம் ஆனா என்ன செய்யணும்.."
"ப்ரெட் வாங்கிட்டு வந்து அதுல தடவி, சாப்பிடணும்.."

ஜோக்குக்காக சொல்லப்பட்டாலும், மாநகரங்கள்ல போக்குவரத்து நெரிசல்ல, அதுவும் சிக்னல் இல்லாத இடங்கள்ல மாட்டிக்கிட்டு படற அவஸ்தை இருக்கே.. அப்பப்பா!!!.. இஞ்ச் இஞ்சா ஊர்ற வாகனங்கள்ல இருந்துக்கிட்டு போக்குவரத்து காவலர்களை கரிச்சுக்கொட்டுவோம். (இங்கே சிலசமயங்கள்ல காவலர்கள் இல்லாத நேரங்கள்ல நெரிசல் இல்லாம அழகா வாகனங்கள் தானே வழி ஏற்படுத்திக்கிட்டு போறதும், காவலர் ஒழுங்கு படுத்துற நேரங்கள்ல நெரிசல் ஏற்படறதும் விந்தையான ஒண்ணுதான் :-))

ஆனா, அவங்கல்லாம் வெப்ப நிலை மாறுபாடுகளையும், இரவு பகல்களையும் பொருட்படுத்தாம நடுரோட்டுல தூசுதும்புகளுக்கு மத்தியிலும், வாகனப்புகை ஏற்படுத்தும் மாசுகளுக்கு மத்தியிலும் வேலை பார்க்கறதை எத்தனை பேரு ஊன்றிக்கவனிச்சிருப்போம். அதான் 'சம்பளம்' வாங்கறாங்கல்லன்னு மனசாட்சி முனகுனாலும், அது வாய்ல ப்ளாஸ்டரை ஒட்டிவெச்சுட்டு எத்தனை பேரு யோசிச்சிருப்போம்.. நான் உட்பட :-))

ஆனா, செம்பூரைச்சேர்ந்த சூரஜ் ஷா, கொளுத்தும் வெய்யில்ல போக்குவரத்து நெரிசல்ல மாட்டிக்கிட்டு, சரியாகிறதுக்காக காத்திருந்தப்ப இதை யோசிச்சார். அதன் பலனா உருவானதுதான் 'வெப்பத்தை முறியடிப்போம்'ங்கற அமைப்பு. மும்பை ஃப்லிம்சிட்டியின் Rotaract க்ளப்பின் தலைவரான ஷா,.. போக்குவரத்து காவலர்களைப்பத்தி மட்டும் யோசிக்காம, வெய்யில்ல இறங்கி வேலைசெய்ய வேண்டிய கட்டாயத்துல இருக்கற மத்த தொழிலாளர்களான, தெருக்கூட்டும் துப்புரவாளர்கள், ரயில்வே ஸ்டேஷன்கள்ல வேலை செய்யற துப்புரவுத்தொழிலாளிகள், ரோடு போடுறவங்க, பஸ் ட்ரைவர்+கண்டக்டர்கள்ன்னு எல்லோரையும் பத்தி யோசிச்சதுதான் அற்புதமான விஷயம்.

அவங்களுக்கெல்லாம்,.. தன்னோட அமைப்புல உள்ளவங்களையும் கூட்டு சேர்த்துக்கிட்டு, குடிநீர், சிற்றுண்டிகள், எலுமிச்சை ஜூஸ்ன்னு விளம்பி சந்தோஷப்படுத்தியிருக்கார். கொஞ்சமா வெய்யிலும் வெப்பமும் கூடுதலானாலே நாமெல்லாம் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள்ள தஞ்சமாயிடறோம். போக்குவரத்து நெரிசல்ல சிக்கிக்கிட்டாக்கூட வாகனங்களோட குளிர்சாதன வசதியை சட்ன்னு உபயோகிக்க ஆரம்பிச்சுடறோம்.

அப்படியிருக்க அவஸ்தைகளையெல்லாம் தாங்கிக்கிட்டு, பொது நலத்தோட நமக்காக உழைக்கிற அவங்களுக்கு இந்த சின்ன உதவியை செஞ்சா தப்பேயில்லை. இப்போதைக்கு தெற்கு மும்பை மற்றும் புற நகர்களின் சிலபகுதிகள்ல மட்டும் ஆரம்பிச்சிருக்கற இந்தத்திட்டம் அடுத்த கோடையில் இன்னும் விரிவாக்கப்படலாம்ன்னு சொல்றாங்க...

முக்கியமா போக்குவரத்து காவலர்களுக்காகவே அரசாங்கத்தோட சார்பா ஸ்பெஷலா, இன்னொரு திட்டமும் கொண்டுவரப்பட்டிருக்கு. சென்ற மழைக்காலத்துல பதினஞ்சு ஆப்பீசர்களுக்கு 'லெப்டோஸ்பைரோசிஸ்'ன்னு சொல்லப்படற ஒருவகைக்காய்ச்சல் வந்துருக்கு. இது தேங்கி நிற்கிற மழைத்தண்ணீர்ல விலங்குகளோட கழிவுகள் கலக்கறதுனால பெருகும் 'லெப்டோஸ்பைரோ'ங்கற ஒருவகைக்கிருமியினால வருது. ரோட்டுல அந்தத்தண்ணியில நின்னு வேலை பார்க்கிறதால அவங்களை இந்தக்காய்ச்சல் தாக்கறதுக்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்த மழைக்காலத்துலயும் இதுமாதிரி வராம இருக்கறதுக்காக போக்குவரத்துத்துறை அவங்களுக்காக முழங்கால் வரைக்கும் உயரமுள்ள கம்பூட்ஸ்களையும், மருந்துகளையும் ஏற்பாடு செஞ்சுருக்காங்களாம். கொட்டற மழையிலும் நடுரோட்டுல வெள்ளத்துல நின்னு கடமையைச்செய்யற அவங்களுக்கு செய்யப்படும் இந்த வசதிகள் பாராட்டப்படவேண்டிய விஷயம்தான். அப்படியே வெள்ளத்தால கஷ்டப்படும் பொதுமக்களையும் அரசாங்கம் கொஞ்சம் கவனிச்சா தேவலைன்னு ஒரு நினைப்பு மனசோரத்துல எட்டிப்பார்க்கறதை தவிர்க்க முடியலை...

57 comments:

ஸாதிகா said...

அத்தியவசியமான இடுகை.வாழ்த்துக்கள் அமைதிச்சாரல்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லமனசு..
நல்ல விசயங்கள்.
கேக்கவே மகிழ்ச்சியா இருக்கு..தொடரட்டும் சேவை.

நசரேயன் said...

நல்ல விஷயம்

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல விஷயம் ஓப்பனிங்க்ல ஜோக்கா ஆரம்பிச்சது அழகு

rajamelaiyur said...

//
"ட்ராபிக் ஜாம் ஆனா என்ன செய்யணும்.."
"ப்ரெட் வாங்கிட்டு வந்து அதுல தடவி, சாப்பிடணும்.."//

நல்ல ஜோக்

rajamelaiyur said...

அருமையான பதிவு

நீச்சல்காரன் said...

மிக நல்ல விஷயம். மழையிலையும் புனேவில் உள்ள காவலர்கள் கடமையாற்றுவதை காணும் போது சல்யூட் அடிக்க தோனுகிறது.

படிக்காதீங்க.. (இந்திரா) said...

ஆரம்பம் கிண்டலா இருந்தாலும்
அழகா முடிச்சிருக்கீங்க.

உபயோகமான பகிர்வு.
வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

நல்ல விசயங்கள்.
கேக்கவே மகிழ்ச்சியா இருக்கு.

MANO நாஞ்சில் மனோ said...

ஆரம்பமே ஜோக்கா இருக்கேன்னு பார்த்தா..... அருமையான பதிவு நண்பரே....!!!

முனைவர் இரா.குணசீலன் said...

தேவையான சிந்திக்கத்தக்க இடுகை.

க.பாலாசி said...

கேட்கவே சந்தோஷமா இருக்கு... பாராட்டப்பட வேண்டியவர்கள்.. நல்ல பகிர்வு...

க.பாலாசி said...

ஏற்கனேவே போலீஸ்காரங்களுக்கு முழங்கால்முட்டும் பூட்ஸ்கள் உண்டு.. தமிழ்நாட்ல பாத்திருக்கேன்.. அங்க எப்டின்னு தெரியல..

ஆமினா said...

அருமையான விஷயம்

ஸ்ரீராம். said...

அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் தனியார் தானாக முயற்சி செய்து இப்படி ஒரு சேவை செய்வது பாராட்டப் பட வேண்டியது.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸாதிகா,

வருகைக்கும் வாசிச்சதுக்கும் நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

அவங்களும் மனுஷங்கதானேன்னு ஒரு ஈரப்பட்ட மனசுக்கு தோணினதே ரொம்ப சந்தோஷப்படவேண்டிய விஷயம்தானே.. இந்த மாதிரி நல்லவிஷயங்கள் பெருகுனா சந்தோஷமும் பெருகும்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரு,

லீவெல்லாம் முடிஞ்சுடுச்சா... இடுகைகளை போட்டுத்தாக்குங்க :-))

வருகைக்கும் வாசிச்சதுக்கும் நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சி.பி,

இனிப்பான விஷயமோ, கசப்பான கஷாயமோ எதுன்னாலும் மொதல்ல வாய் நிறைய இனிப்பை அள்ளிப்போடறது நம்ம வழக்கம்.. அதான் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜா,

ரொம்ப நன்றிங்க.. வருகைக்கும் வாசிச்சதுக்கும்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நீச்சல்காரன்,

மும்பையும் பூனாவும் இரட்டை நகரங்கள்ன்னு சொல்லிக்கலாம் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குமார்,

அதே அதே...

வருகைக்கும் வாசிச்சதுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மனோ,

நாஞ்சில் புயல், சூறாவளிச்சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதா B.B.C.ல சொன்னாங்க. ரொம்ப சந்தோஷம்.. பயணமெல்லாம் நல்லபடியா முடிஞ்சதா?..

வருகைக்கும் வாசிச்சதுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குணசீலன்,

வருகைக்கும் வாசிச்சதுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாலாசி,

ஸ்ரீராம் சொன்னதுபோல எதுக்கெடுத்தாலும் அரசாங்கம்தான் செய்யணும்ன்னு எதிர்பார்க்காம, சில சின்னச்சின்ன விஷயங்களை நாமும் நாட்டுக்காக செய்யலாம்தானே..

இங்கே மழைக்காலத்துல மட்டும்தான் பொதுமக்கள்லயும் சிலபேர் கம்பூட்ஸ் போடுவாங்க. ஆனா, அரசே காவலர்களுக்கு கொடுக்கறதை இப்பதான் கேள்விப்படறேன். நான் பார்த்தவரை எப்பவும் யூனிஃபார்ம் ஷூக்களைத்தான் போட்டிருந்திருக்காங்க. மழைக்காலம்ன்னா அதே கலர்ல ரெய்னி சாண்டல்ஸ்தான் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆமினா,

வருகைக்கும் வாசிச்சதுக்கும் ரொம்ப நன்றி..

சிலபேர் இந்தமாதிரி நல்லவிஷயங்களை செய்யறதுனாலதான் நாட்ல மழைபெய்யுது :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

கரெக்டா சொன்னீங்க.. பெரியவிஷயங்களைப்பொறுத்தவரை அரசாங்கத்தை வலியுறுத்தலாம். நம்ம சக்திக்குட்பட்ட சில சின்னச்சின்ன விஷயங்களை நாமே செய்யலாம்தானே :-))

ஸ்ரீராம். said...

இது சம்பந்தமாக நினைவுக்கு வந்த பழைய திரைப் படப் பாடல் ஒன்று...!
"நாடென்ன செய்தது நமக்கு என்று கேள்விகள் கேட்பது எதற்கு?
நீயென்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு...
நான் ஏன் பிறந்தேன்...நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்,,,என்று வாழும்வரையில் நாளும் பொழுதும் நினைத்திடு என் தோழா...நினைத்து செயல்பாடு என் தோழா..".

சாந்தி மாரியப்பன் said...

ஸ்ரீராம்,

ரொம்ப சரி.. பொருத்தமான கருத்துள்ள பாடல்வரிகளைத்தந்து அசத்திட்டீங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

ஸ்ரீராம்,

ரொம்ப சரி.. பொருத்தமான கருத்துள்ள பாடல்வரிகளைத்தந்து அசத்திட்டீங்க :-)

Menaga Sathia said...

நல்லவிஷயம்,கேக்கவே ரொமப் சந்தோஷமா இருக்குக்கா...வாழ்த்துக்கள்!!

Geetha6 said...

வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

பாராட்டப்பட வேண்டிய விஷயம். அவர்களும் மனிதர்கள்தானே... வேலையின் போது இதுபோன்ற தொந்தரவுகள் அவர்களுக்கு அதிகம். அதைப் பற்றி சிந்திக்கவும் வேண்டும் என்பதை உணர்த்தியது.

விஷயத்தினை எங்களுக்கும் பகிர்ந்த உங்களுக்கும் பாராட்டுகள்.

Unknown said...

நல்ல சேவை.மனசுக்கு நிறைவான பதிவு. பகிர்வுக்கு நன்றிங்க.

மாய உலகம் said...

//"ட்ராபிக் ஜாம் ஆனா என்ன செய்யணும்.."
"ப்ரெட் வாங்கிட்டு வந்து அதுல தடவி, சாப்பிடணும்.."//

இப்படி நகைச்சுவையில தொடங்கி நல்ல விசயத்தை சொல்லியிருக்கிறீர்கள் நன்றியுடன் வாழ்த்துக்கள்

மோகன்ஜி said...

பாராட்டுக்குரிய முயற்சி. அதை பதிவிட்டதற்கு பாராட்டுக்கள் உங்களுக்கும்.

ஹுஸைனம்மா said...

மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். பலருக்கும் முன்மாதிரியாகவும் அமையும்.

நாடோடி said...

பாராட்ட படவேண்டிய விசயம்.. பகிர்விற்கு நன்றி சகோ..

Yaathoramani.blogspot.com said...

நல்ல சேதி சொல்லிப்போகும் பதிவு
தலைப்பு மிகப் பொருத்தம்
வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மேனகா,

நிச்சயமா ரொம்பவே சந்தோஷமான விஷயம்தான்.. வாழ்த்துகளை அந்த நல்ல மனசுக்கு அனுப்பிட்டேன் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கீதா6,

வாழ்த்துகளை அனுப்பிட்டேன்ப்பா.. வாசிச்சதுக்கும் வாழ்த்து சொன்னதுக்கும் நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நாகராஜ்,

கரெக்டா சொன்னீங்க. இந்தமாதிரி வேலைகள்ல கொஞ்சம் ஓய்வுகூட எடுக்கமுடியாது. வெய்யிலோ மழையோ காய்ஞ்சு நனைஞ்சுதான் ஆகணும்..

அதுவும் மும்பையைவிட டெல்லியில வெய்யில் கூடுதலாச்சே!!! உங்கூரு ஆட்கள் ரொம்ப பாவம்ங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜிஜி,

இப்படி நல்லதா நாலுபேரு இருக்கறதுனாலதான் இன்னிக்கும் மழை பெய்யுதுன்னு தோணுது..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாய உலகம்,

நல்லவிஷயத்தை சொல்லும்போது ஸ்வீட் கொடுக்கறதுதானே முறை :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மோகன்ஜி,

இதைப்பார்த்தாவது நாலு நல்ல உள்ளங்களுக்கு இதேமாதிரி சமூல நல உணர்வு தோணினா நல்லதுதானே :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

சில பேர்க்கு தீயா 'சேவைசெய்யணும் பாஸ்'ன்னு உத்வேகம் இருக்கும். ஆனா, தூண்டுகோல் இல்லாம இயங்காத மனசுகளா இருப்பாங்க. அப்படிப்பட்ட ஆட்களை ஒருங்கிணைச்சும்கூட யாராவது ஒருத்தர் முன்னெடுத்து செய்ய முன்வரலாமில்லையா, முன்மாதிரியா இதுமாதிரி சில நல்லவிஷயங்கள் நடக்கறப்ப....

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நாடோடி,

வருகைக்கும் வாசிச்சதுக்கும் நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

நல்ல மக்கள் தொண்டர்களுக்கு நாமும் தொண்டு செய்யலாமே :-)

Thenammai Lakshmanan said...

அருமையான முயற்சி ..வாழ்த்துக்கள் மும்பை ரோட்ராக்ட் தலைவருக்கு.. பகிர்வுக்கு நன்றி சாந்தி

கோமதி அரசு said...

சேவை செய்யறவங்களுக்கு சேவை செய்வதை அறியும் போது மகிழ்ச்சி. இது மேலும் தொடர வாழ்த்த தோன்றுகிறது.

வாழ்த்துக்கள்.

சக்தி கல்வி மையம் said...

அவசியமான பதிவு..
வாழ்த்துக்கள்+நன்றிகள்.

Unknown said...

அறியவேண்டிய, செய்தி
அனைவரும் அறியவேண்டிய
செய்தி

புலவர் சாஇராமாநுசம்

Unknown said...

உங்களை இந்த தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரம் இருக்கும்போது தொடருங்கள்.

http://vaarthaichithirangal.blogspot.com/2011/07/blog-post_28.html

அமைதி அப்பா said...

//அவங்கல்லாம் வெப்ப நிலை மாறுபாடுகளையும், இரவு பகல்களையும் பொருட்படுத்தாம நடுரோட்டுல தூசுதும்புகளுக்கு மத்தியிலும், வாகனப்புகை ஏற்படுத்தும் மாசுகளுக்கு மத்தியிலும் வேலை பார்க்கறதை எத்தனை பேரு ஊன்றிக்கவனிச்சிருப்போம்.//

உண்மைதான். அவர்கள் மிகவும் பரிதாபத்துக்குரியவர்களே!


//அதான் 'சம்பளம்' வாங்கறாங்கல்லன்னு மனசாட்சி முனகுனாலும், அது வாய்ல ப்ளாஸ்டரை ஒட்டிவெச்சுட்டு எத்தனை பேரு யோசிச்சிருப்போம்.. நான் உட்பட :-))//

'சம்பளம் அவர்கள் செய்யும் வேலைக்கு மட்டுமே! அவர்கள் உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்படுகிறதே அதற்கு, எதைக் கொடுத்து ஈடு செய்வது?' என்கிற சிந்தனையில் தாங்கள் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

செம்பூரைச்சேர்ந்த 'சூரஜ் ஷா'க்கும் தங்களுக்கும் நன்றியும் பாராட்டுக்களும்.

இராஜராஜேஸ்வரி said...

இங்கே சிலசமயங்கள்ல காவலர்கள் இல்லாத நேரங்கள்ல நெரிசல் இல்லாம அழகா வாகனங்கள் தானே வழி ஏற்படுத்திக்கிட்டு போறதும், காவலர் ஒழுங்கு படுத்துற நேரங்கள்ல நெரிசல் ஏற்படறதும் விந்தையான ஒண்ணுதான் :-)//

அருமையான பகிர்வு.

Unknown said...

i like that photo..

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான பகிர்வு. டிராஃபிக் ஜாமில் மாட்டிய தங்களின் பார்வை பொதுவான விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாக ஆனதற்கு, அந்த டிராஃபிக் ஜாமுக்கு நன்றிகள்.

திருமதி இராஜராஜேஸ்வரி கூறுவது போலவும் சமயத்தில் ஆங்காங்கே நடப்பதுண்டு.

பகிர்வுக்கு நன்றிகள்.

LinkWithin

Related Posts with Thumbnails