Saturday, 2 October 2010

வைஷ்ணவ ஜனதோ...

ஹாய்..ஹாய்..ஹாய் மக்கள்ஸ்.. லேட்டானாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டோமில்ல.. இன்னும் ஆளைக்காணலைன்னா அப்பாவியக்கா இட்லி அனுப்பிடுவாங்களோன்னு பயமார்ந்தது.. அதான் வந்துட்டேன். (இவ்வளவு நாளா ஆளைக்காணோம்ன்னதும் 'அப்பாடா'ன்னு நிம்மதியா இருந்திருப்பீங்க. அப்படி விடமுடியுமா??)


அது ஒண்ணுமில்லை.. என்னோட புது இடுகைகள் எதையும் தமிழ்மணம் இணைச்சுக்க மாட்டேங்குது. பிடித்தமான இடுகைகளுக்கு ஓட்டுப்போட்டாலும் , "யார் நீ???" அப்படீன்னு கேக்குது. பாஸ்வேர்டு கொடுத்தாலும் ஒத்துக்க மாட்டேங்குது. தமிழ்மணத்துக்கு ஒரு மெயிலை தட்டிவிட்டுட்டு, அம்மா கை சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டிட்டு உக்காந்திருக்கேன் :-)))). உங்கள் யாருக்காவது இப்படி ஒரு பிரச்சினை ஏற்பட்டிருந்தா எப்படி சமாளிச்சீங்கன்னு சொன்னா புண்ணியமா போவும். (பிரச்சினையை தீர்ப்பவர்களுக்கு நாலு நல்ல ஓட்டும் பத்து கள்ள ஓட்டும் போடறேன், அல்லது நேத்து முதல் நாள் முதல் ஷோவா பார்த்த, எந்திரன் படத்தின் டிக்கெட்டின் ஜெராக்ஸ் அனுப்பப்படும்:-))


நம்ம பிரச்சினை அப்புறம்... இன்னிக்கு பாபுஜி,.. அதாவது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.... அதாவது காந்தி தாத்தாவோட பிறந்தநாள். அதனால அவருக்கு ரொம்ப பிடிச்ச இந்த பஜனைப்பாடலை அவருக்கு பிறந்தநாள் பரிசா வழங்குகிறேன்.. வேறெதுவும் எழுதத்தோணலை.. 

இப்போதெல்லாம், பெரிய தலைவர்களின் பிறந்தநாட்கள், வெறும் விடுமுறை நாட்களாக மாறிவிட்டன. அதுவுமில்லாம காந்தியடிகளைப்பத்தி புதுசா சொல்றதுக்கு என்ன இருக்கு??...  அதனால இந்தப்பாட்டைக்கேட்டுக்கிட்டே அவரை நினைவு கூர்வோம்....






21 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

பெரிய தலைவர்களின் பிறந்தநாட்கள், வெறும் விடுமுறை நாட்களாக மாறிவிட்டன///

உண்மை..

எல் கே said...

inaochiten.. ungaluku mail panren veetuku poi eppadi panrathunu.. paataya keela kondau vanthap pothum

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

//காந்தியடிகளைப்பத்தி புதுசா சொல்றதுக்கு என்ன இருக்கு??.//

(:

ஹேமா said...

காந்தித் தாத்தாவை எப்படி மறக்கமுடியும்.நல்ல மனிதர்கள் வாழ்ந்த காலங்களை நினைவு கொள்வோம் சாரல் !

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெறும்பய,

அக்டோபர் ரெண்டுன்னதும் அட!! இன்னிக்கு லீவு இல்லியான்னுதான் மொதல்ல மனசுல தோணுது :-(

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

பட்டையை கீழே கொண்டு வந்துட்டேன்.. ம்ஹூம்.. ஒண்ணும் பிரயோசனமில்லை. உங்க மெயில் பார்த்ததுக்கப்புறம்தான் மேற்கொண்டு யோசிக்கணும் :-(((

தமிழ்மணத்தில் இணைச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நண்டு,

ரொம்ப நாளுக்கப்புறம் வந்துட்டு இப்படி ஒண்ணும் சொல்லாம சிரிச்சுட்டு போனா எப்படி :-))))

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

அவங்களை நினைச்சிக்கிறதே அவங்களுக்கு செய்யும் அஞ்சலி..

நன்றி.

எல் கே said...

இப்ப சரியாய் வருதா

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

ஒண்ணும் வேலைக்காவலை :-((

உதவினதுக்கு நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நினைவு நாளில் நினைக்கிறதே பெரிசா இருக்கு ..

( அது என்ன ரொம்பநாள் காணும்ன்னா இட்லி அனுப்பபவாங்களா..
நான் அதை ..இட்லி சாப்பிட்டுட்டு கொஞ்ச நாளா உங்களைக்காணோம்ன்னு
மாத்தி படிச்சிட்டேன்.. :)
)

ஹுஸைனம்மா said...

உங்க தமிழ்மண இமெயில் ஐடி - பாஸ்வேர்டுலதான் பிரச்னை போலருக்கு. பாஸ்வேர்ட் மறந்துட்டீங்களா இல்லை தவறுதலா மாத்திட்டீங்களா? இன்னுமா தமிழ்மணத்துகிட்டேர்ந்து பதில் வரலை? :-((

ஒரு மகிழ்ச்சியான செய்தி(ஆறுதல்??!!): மிகப் பிரபல பதிவர்களெல்லாம் எந்தத் திரட்டிகளிலும் அவங்க பதிவுகளை இணைப்பதில்லை!! ஸோ, நீங்களும் அந்த லிஸ்டுல வந்துட்டீங்க!!

Prathap Kumar S. said...

காந்தி தாத்தான்னு யாரு? பேர் பாடியோட... ஆய்போடும் காக்காவை விரட்ட கைல ஒரு கம்புவச்சுட்டு இருப்பாரே அந்த ஓல்டுமேன்தானே... ஆமா அவரு பிறந்தநாளை நாம எதுக்கு கொண்டாடனும்...?

ஆங்க சொல்லமறந்துட்டேன் எங்க தலைவருக்கு அடுத்தமாசம் பிறந்தநாளு..மறக்காம வாழ்த்து சொல்லிடுங்க...வர்ட்டா...:)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

நம்ம அப்பாவியோட இட்லிமகிமை தெரியாதா உங்களுக்கு :-)))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹூஸைனம்மா,

இன்னிக்கு முழுக்க தமிழ்மணத்தோட சண்டை போட்டு சரிபண்ணிட்டேன் :-)))

ஆத்தீ.. பிரபல பதிவர்ன்னா அப்புறம் வலைப்பூவை ஹேக்குவாங்களே :-(... எனக்கு வாணாம். நான் சாதாரண பதிவராவே இருக்கிறேன்.....

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பிரதாப்,

உங்க தலைவரா... அதாரு!!!!!
அவரு பிறந்த நாளை ஏன் கொண்டாடணும்!!!!!

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

ஹுஸைனம்மா ஒரு விஷயம் சொல்ல விட்டுப்போச்சு..

நீங்க பாஸ்வேர்டைப்பத்தி சொன்னதும் அப்படியும் இருக்கலாமோன்னு.. அங்க போயி சரி பண்ணிட்டேன். சொன்ன மாதிரி உங்களுக்குத்தான் மொத ஓட்டுபோட்டேன்.

ரொம்ப நன்றிங்க :-))))

ஹுஸைனம்மா said...

ஹை!! அப்ப நான் சொன்னது வொர்க்-அவுட் ஆகிடுச்சா?

அப்ப இனி நானும் டெக்னிக்கல் பதிவுகள் எழுத ஆரம்பிச்சுடலாமா? ;-))))

ஓட்டுக்கு நன்றி!!

சாந்தி மாரியப்பன் said...

ஹூஸைனம்மா,

ஸ்டார்ட் மூசிக் :-)))))))

நானானி said...

ஒரு வழியா தமிழ்மணம் உங்களோடு ‘சேக்கா’ விட்டுச்சா? அப்பாட!!

காந்தி பற்றி இங்கே போய் பாருங்கள் சுவாரஸ்யமாயிருக்கும்.
www.vedivaal.blogspot.com

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நானானிம்மா,

அருமையான வலைப்பக்கத்தை அறிமுகம் செஞ்சுருக்கீங்க.. நன்றிம்மா.

LinkWithin

Related Posts with Thumbnails