அது ஒரு அழகிய இளவேனில் காலம். அதாவது சூரியன் சுட ஆரம்பிக்காத காலைப்பொழுது. வழக்கம்போல கல்லூரிக்கு வந்தப்புறம்தான், வழக்கம்போல ஸ்ட்ரைக் நடக்குதுன்னு தெரிஞ்சது. இன்னிக்கி என்ன காரணம்ன்னு தெரியலை. காண்டீன் டீயில, உப்பு குறைச்சலா இருக்குதுன்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க. ஒரு வேளை அதுக்காக இருக்கலாமோ.. சீச்சி, அது போனவாரம்... இது இந்தவாரம். என்னத்துக்குன்னு தெரியலை, ஆனா நாலு நாளா நடக்குது.
வழக்கம்போல வகுப்புகள் நடக்காத அறையில் வந்து உக்கார்ந்தோம். ஒவ்வொரு வகுப்பிலும் பேருக்கு ஒரு ஆறேழு மாணவிகள்தான் உண்டு. பசங்கதான் மெஜாரிட்டி. எல்லாரும் ஸ்ட்ரைக்குக்காக வெளியே போயிட்டதால, நாலஞ்சு பேருக்கு.. என்னத்தை வகுப்பு எடுக்கிறதுன்னு, விரிவுரையாளர்களும் சும்மா வகுப்புக்கு வந்துட்டு போயிட்டு இருந்தாங்க.
காரிடாரில், 'லெஃப்ட்.. ரைட், லெஃப்ட்.. ரைட்'ன்னு சத்தம். உண்மையில் அது கல்லூரிக்கு முன்னால இருந்த மைதானத்துல இருந்து வந்துட்டு இருந்தது. கூடியிருந்த மாணவர் கூட்டத்தை 'பெருமையோட' பாத்துட்டு தன்னோட அறைக்கு, நடந்து போயிட்டிருந்த ப்ரின்சிபாலைப்பாத்துதான் பசங்க அப்படி சவுண்ட் விட்டுட்டு இருந்தாங்க. அவரோ எதையும் சட்டை செய்யாம தன்னோட ரூமுக்கு போயிட்டு இருந்தாரு.
அப்ப, எங்க வகுப்பறைக்குள்ளாற எங்க இங்கிலீஷ் விரிவுரையாளர் வந்தார். 'பாடம் நடத்தமாட்டேன்.. அதுக்கு வேற எதையாவது உருப்படியா பண்ணலாம். இப்ப, உங்களுக்கே தெரியாம நிறைய திறமைகள் உங்களுக்குள்ள பெட்ஷீட்டை போத்திக்கிட்டு ஒளிஞ்சிருக்கும். அதையெல்லாம் கண்டுபிடிச்சி, வெளிய கொண்டுவரணும். அதனால, அவரவருக்கு என்னென்ன எழுதணும்ன்னு தோணுதோ.. கதை, கவிதை, கட்டுரை.. இப்படி ஏதாவது எழுதுங்க'ன்னு சொல்லிட்டு அவர் கொண்டுவந்திருந்த நாவலை படிக்க ஆரம்பிச்சிட்டார்.
என்னடாயிது,..இந்த தமிழ்நாட்டுக்கு வந்த சோதனைன்னு நினைச்சிக்கிட்டு, 'என்ன எழுதலாம்'ன்னு கன்னத்துல கைவெச்சிக்கிட்டு உக்காந்தோம். அப்படி உக்காந்தாத்தான் கற்பனை ஓடுமாம். எங்கேன்னு தெரியலை :-)) அப்பத்தான் வராந்தாவுல நாற்காலி போட்டு உக்காந்திருந்த ஏழரைச்சனி என்னைப்பாத்து சிரிச்சான். நானும் பதிலுக்கு ஒண்ணரைப்பல்லை காமிச்சு வெச்சேன்... ஐடியா வந்துட்டது. கவிதையே எழுதலாம். கதைன்னா ரொம்ப கற்பனை வளம் வேணும். கட்டுரைன்னா நிறைய விஷயங்கள் தெரிஞ்சுருக்கணும். கவிதை எழுதறதுதான் ஈஸி. உடைச்சுப்போட்டா,..
க..
வி..
தை..
ஆகிடாதா என்ன??
என்ன விஷயத்தைப்பத்தி எழுதலாம். நாம எழுதறதையும் கவிதைன்னு நினைச்சு படிக்கிறவங்களுக்கு ஏமாத்தம் வரலாமோ!!!!. எவர்க்ரீன் டாப்பிக் " வரதட்சணை"
ரொம்ப செண்டியான விஷயம் இது. எப்படி எழுதினாலும் நிச்சயம் பாராட்டு வாங்கும். எழுத ஆரம்பிச்சேன்.
விளக்கேற்ற வரும் பெண்ணிடம்
வரதட்சணை வாங்கும்
மாமியார்களே..
கேட்ட தட்சணை
கிடைக்காததால்தான்
மருமகளையே
விளக்காக
எரிக்கின்றீர்களோ!!!!
எழுதிமுடிச்சிட்டு வெற்றியோட நிமிர்ந்து பார்த்தா, ஒவ்வொருத்தியும் செமஸ்பீடா எழுதிக்கிட்டு இருந்தாங்க. விட்டா.. அடிஷனல் ஷீட் கேப்பாங்க போலிருக்கு. நான் பேப்பரை கொண்டுபோய் சார்கிட்ட கொடுத்தேன். வாங்கி படிச்சுப்பார்த்தார்.. வேர்த்து விறுவிறுத்து முகத்தை துடைச்சிக்கிட்டு அப்படியே உக்காந்துட்டார். அப்றம் மெதுவா சமாளிச்சிக்கிட்டு, வகுப்புக்கு வெளியே போயிட்டார். அந்தக்கவிதை எழுதினதன் பலன் மறுநாள் கல்லூரிக்கு வந்தப்போதான் தெரிஞ்சது.
"ஸட்ரைக் முடிஞ்சு போச்சாம்"
டிஸ்கி: மொதமொத கவிதைன்னு எழுதினது அது. குத்தங்குறை இருந்தா பொறுத்தருளவும்.. ஒரு கவுஜையாளரை உருவாக வழிகாமிச்ச அந்த லெக்சரர், இப்போ இருக்காரான்னு தெரியலை. எனவே ஆட்டோ அனுப்ப வேண்டாம் :-)). இது சும்மா சுத்தின கொசுவத்தி.
59 comments:
ஆத்தா நான் பர்ஸ்ட்டு கமண்ட்டு போட்டுட்டேன்...
அதிகமா தினத்தந்தி படிப்பீங்கன்னு நினைக்கிறேன்...:)
பை தி வே கவிதை ரொம்ப நல்லாருக்கு...
ROTFL! nice flow! :)) amaithicharal rocks!!
மிகவும் சுவராசியமாக எழுதி இருக்கிறீர்கள் . கவிதை அருமை . நிறையக் கவிதை எழுதுங்கள் எதிர்பார்கிறேன் . வாழ்த்துக்கள்
ஆஹா ஆத்தா தொடர் பதிவாகிடும் போல இருக்கே! :))
:)
இப்படில்லாம் மிரட்டி இருக்கீங்களா?
\\【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
ஆஹா ஆத்தா தொடர் பதிவாகிடும் போல இருக்கே! :))//
:))
எவர்க்ரீன் டாபிக்:)! ஆமா நானும் அப்போது விட்டு வைக்கவில்லை.
ஆனா முதல் கவிதை வேற டாபிக்.//குத்தங்குறை இருந்தா பொறுத்தருளவும்..// இதே போல கெஞ்சி அதையும் வலையேற்றிட்டன்ல:))!
//காண்டீன் டீயில, உப்பு குறைச்சலா இருக்குதுன்னு //
எங்க காலேஜ்லலாம் இனிப்பு குறைச்சலா இருந்தாத்தான் ஸ்ட்ரைக் :)
//"ஸட்ரைக் முடிஞ்சு போச்சாம்"//
பிரின்சிபல்லால முடியாதத கவிதை எழுதி முடிச்சு வச்சேன்னு சொல்றிங்க ;)
எனிவே கவிதை நல்லா இருக்கு!
நல்லாத்தான் இருக்கு கவிதை. ஏன் என்னமோ குத்தம் செஞ்சமாதிரி பீலிங்க்ஸ்
"நான் பேப்பரை கொண்டுபோய் சார்கிட்ட கொடுத்தேன். வாங்கி படிச்சுப்பார்த்தார்.. வேர்த்து :விறுவிறுத்து முகத்தை துடைச்சிக்கிட்டு அப்படியே உக்காந்துட்டார். அப்றம் மெதுவா சமாளிச்சிக்கிட்டு, வகுப்புக்கு வெளியே போயிட்டார்"
ஏன் எதுக்கு வெளியில் போனா ?எதா பீலிங்கா ..
உங்க முதல் கவிதை நல்லா இருக்கு பா ...
ஆரம்பமே
அசத்தல்தான்!
ஏன்
எழுதவில்லை
தொடர்ந்து?
சிரிக்காதீங்க
சின்னதா
முயற்சித்து
முடியாமல்
முடிக்கிறேன்!
முதல் கவிதை நல்லாத் தானே இருக்கு! உங்க ஆசிரியர் வேர்த்து விறுவிறுத்துப் போனதுக்கு வேற காரணம் இருக்கும் - அவங்க வீட்டுலயே வரதட்சிணை வாங்கி இருப்பாங்களா இருக்கும் :)
வெங்கட்.
//வேர்த்து விறுவிறுத்து முகத்தை துடைச்சிக்கிட்டு அப்படியே உக்காந்துட்டார். அப்றம் மெதுவா சமாளிச்சிக்கிட்டு, வகுப்புக்கு வெளியே போயிட்டார்.//
ஒரு வேளை அவர் வீட்டிலும் கொடுமை நடக்குது போல அதான் அப்படி
சாரல்...இது மொக்கையோ நகைச்சுவையோ இல்லை.
நினைவலை.அருமை கவிதையும்கூட !
கவிதை நல்லா இருக்கு
வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதவும்
உங்களுக்குள் இருக்கும் அந்தப்புரட்சிக்கவிஞனை திரும்பவும் போர்வைக்குள்ளேயே போட்டு அமுக்கிருங்க.. அவ்வ்.. :-))
:)
nice!!!!!!!
நான் கடைசி கமென்ட் ... அந்த ஆள் என் கைல கிடச்சான் அவன்....
/இது சும்மா சுத்தின கொசுவத்தி./
சும்மா சுத்தின கொசுவத்தியே இந்தப் போடு போடுதே!!
முதல் கவிதையே நல்லா இருக்கு. தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.
ஆத்தா..... நான் வாசித்து விட்டேன்!
வாங்க பிரதாப்,
ஃபர்ஸ்ட்டு கமெண்டுக்கு நன்றி.
எங்கூட்ல தினத்தந்தி வாங்கியதில்லை :-))
வாங்க முல்லை,
டாங்க்ஸ்பா.. :-))))))
வாங்க பனித்துளி,
அங்க ஆரம்பிச்சது இங்கே வந்துதான் நின்னிருக்கு :-))))
http://amaithichaaral.blogspot.com/
இங்கே கவுஜைகள் மட்டும் கிடைக்கும் :-))))))
நன்றி.
வாங்க ஷங்கர்,
ஆஹா.. இது கூட நல்ல ஐடியாவா இருக்கே!!!. இதுவரை வந்ததையெல்லாம் சேர்த்து ஒரு தொகுப்பாக்கூட போடலாம் போலிருக்கு. :-))))
ரொம்ப கேட்சிங்கான தலைப்பு இல்லியா :-))
நன்றி.
வாங்க முத்துலெட்சுமி,
எல்லாம் ஒரு முயற்சிதான் :-))))))
நன்றி.
கவிதை நல்லா இருக்கு...அதுலவிட அதுக்கான முயற்சிகளின் வர்ணனை அதைவிட நல்லா இருக்கு.பாஸ்மார்க...
நல்ல முயற்ச்சி தான்...
அருமை நண்பா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ரொம்ப நல்லா இருக்கு உங்க கவிதை
வாங்க ராமலஷ்மி,
அது...... :-))))))
நன்றி.
வாங்க பாலாஜி,
காக்கை உட்கார பனம்பழமோ என்னவோ :-))))))
நன்றி.
வாங்க சின்ன அம்மிணி,
ஏன்.. எதற்கு.. எப்படி?? ஃபீலிங்க்ஸ் ஆஃப் ஆஸ்திரேலியா :-)))))
நன்றி.
வாங்க சந்தியா,
நம்ம கவிதையின் தாக்கம் அப்பிடி.. மெரண்டுட்டார் :-))))))
ச்சும்மா..
நன்றி.
வாங்க அமைதி அப்பா,
நான்
சிரிக்கலை.
நல்லாத்தான் இருக்கு இதுவும்.
தொடர்ந்து
முயற்சி செய்யுங்க :-)))
நன்றி.
வாங்க வெங்கட்,
ஜெய்லானி.
அப்படி தெரியலை.. நம்ம கவிதை அப்படி மெரள வெச்சுட்டுதுப்பா. அப்புறம் காலேஜ் ஆரம்பிச்சப்பறம், வகுப்பறையில எல்லாருக்கும் முன்னால, அதை பெருமையா வாசிச்சு வேற காமிச்சார்.
நன்றி.
வாங்க ஹேமா,
அருமையா இருக்குன்னு சொன்னதுக்கு நன்றிப்பா.
வாங்க வேங்கை,
தொடர்ந்து எழுதிக்கிட்டுத்தான் இருக்கேன். என்னோட ப்ரொஃபைல்ல 'கவிதை நேரமிது'ன்னு இருக்குல்ல அங்க. :-))))
உற்சாகம் கொடுத்ததுக்கு நன்றி.
வாங்க ஆதிமூலகிருஷ்ணன்,
ஆஹா.. பிரபல பதிவர்களெல்லாம் நம்மையும் வாசிக்கிறாங்களா!!!!
அது வந்துங்ணா... அந்த கவுஜர் தனிக்குடித்தனம் போயி ரொம்ப நாளாச்சுங்கண்ணா.. போகும்போது அந்த போர்வையும் சேர்த்து கொண்டு போயிட்டாரு. அது இருந்தாத்தான் கவுஜ எழுத கற்பனை வருதாம்.
தனிவூடு இங்க இருக்கு.
http://amaithichaaral.blogspot.com
வரவுக்கு நன்றி.
புரட்சி கவிஞர் பட்டம் கொடுக்கலாமா?
கவிதை நல்லாவே இருக்கு!
வாங்க அஹமது,
சிரிச்சு வெச்சதுக்கு நன்றி :-)))
வாங்க தெய்வசுகந்தி,
நன்றி.
வாங்க எல்.கே,
பாவம்ப்பா அவர் :-)))))))))
நன்றி.
வாங்க அருணா,
ஹி..ஹி.. நன்றிங்க.
வாங்க அம்பிகா,
நன்றிங்க.. ஊக்கம் கொடுத்ததுக்கு.
வாங்க சித்ரா,
ஆத்தா... உங்க கமெண்டை பப்ளிஷ் பண்ணிட்டேன் :-))))
நன்றி.
வாங்க கண்ணகி,
பாஸ்பண்ணினதுக்கு நன்றிங்க.
வாங்க நாடோடி,
நன்றிப்பா.
வாங்க சசிகுமார்,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
வாங்க கோவை2தில்லி,
நன்றிங்க.
உங்கள் கவிதை மிக நன்றாக உள்ளது!
அந்த இங்கிலீஷ் விரிவுரையாளர் அட்ரஸ் எனக்கு வேணுமே... எதுக்கா? ஏன் இந்த தூங்கிகிட்டு இருக்கற புலிய எழுப்பி விட்டு எங்களை எல்லாம் கொடுமை படுத்தறீங்கன்னு கேக்க தான்... ஹ ஹ ஹ... ஜஸ்ட் கிட்டிங்... நல்லாவே இருக்கு முதல் கவிதை... (அதுக்கு அப்புறம் ஒன்னும் எழுதல தானே...)
வாங்க எஸ்.கே,
ரொம்ப நன்றி :-))
வாங்க அப்பாவி,
எழுதினேனே... கல்லூரியின் ஆண்டுவிழா மலருக்காக எழுதி வெளியானதைத்தான் இங்கே போட்டிருக்கேன்,
http://amaithichaaral.blogspot.com/2010/03/blog-post_16.html
அப்புறம் ஒரு நீண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்கப்புறம் தனிராஜ்ஜியம் ஆரம்பிச்சு இப்ப இம்சை பண்ண ஆரம்பிச்சுருக்கேன். எல்லாம், நீங்க படிப்பீங்கன்னு தைரியம்தான்:-))))
வாங்க வசந்த்,
நல்லா பறக்குற பட்டமாவே கொடுங்க :-)))
நன்றி.
அன்பின் அமைதிச் சாரல் - கவிதை உண்மையிலேயே சூப்பர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
dheva has left a new comment on your post "ஆத்தா... நான் கவிதை எழுதிட்டேன்!!!..............":
''அமைதிச்சாரல் ''உங்கள் கவிதை மனசை ..அல்லுச்சி "ஆத்தா ''"எப்படி ஆத்தா ,,இப்படி எல்லாம் ?,
உங்கள் கவிதை மழயில்,நனைந்து ,' சளி பிடித்து ,ஜூரம் வந்து ,பயங்கர கனவு வந்து ,அதில் நான் ,வேர்த்து ,
விறுவிறுத்து ,நொந்து ,நூடில்ஸ் ஆகி ,,அடுத்த கவிதை எப்போது ?என்று நான் ,கேட்கமாட்டேன் ,
அப்படி நீங்கள் எழுதினாலும் ,நான் படிக்கமாட்டேன் ,இது அந்த ஆத்தா மீது ஆணை ,
நான்,தாங்கள்,''வல்லமை' என்ற வலையில் ஒரு அழகான கவிதை படித்தேன் ,அதான் சாரல்
இதில் இருக்கும் என்று நம்பி (க்கையில்}படித்தேன் ,''சுதந்திரமும்' சோமக வாழ,விரும்பும் ஒரு வரிக்குதிரை
அதன்கோபம்,athil கண்டேன் ,அதை பற்றிய என்னுடைய ,விமர்சன வரிகள் ,அனுப்பி இருக்கிறேன் ,
தயவு செய்து அதை படிக்கவும் ,,'''என்னை ஏமாற்றிய ''''ஆத்தா '''' என் சிந்தனைக்கு வேகம் கொடுத்த ,வரிக்குதிரை ,,தொடருங்கள் ,வாழ்த்துக்கள் ....தேவா ''''''
கை தவறுதலா அழிஞ்ச கமெண்டை துரத்திட்டுப் போயி பிடிச்சுட்டு வந்து இங்கே போட்டுருக்கேன் :-))
@ தேவா,
ஏன் நொந்து நூடுல்ஸானீங்க?.. நீங்களும் வரதட்சணை வாங்கியிருக்கீங்களா :-))))
வாங்க சீனா ஐயா,
என்னோட அளவு கடந்த சுறுசுறுப்பை, மன்னிச்சுக்கோங்க :-)
உங்களுக்கு இருக்கும் பணிச்சுமையில் இடுகையை வாசிச்சு கருத்தும் இட்டதற்கு ரொம்ப ரொம்ப நன்றி :-)
Post a Comment