புலாவ் உருவான விதம்...
(இதான் ஷாஜீரா. நம்மூர்ல கருஞ்சீரகம்ன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்)
ரூம் போட்டு யோசிக்காமலேயே செஞ்ச மஷ்ரூம் புலாவ் இது. காளானைப்பத்தி நான் புதுசா ஒண்ணும் சொல்லவேண்டியதில்லைன்னு நினைக்கிறேன். ஏற்கனவே இங்கே சொல்லியிருக்கேன்.
செய்யறதுக்கு ரொம்ப ஈஸியானது, டேஸ்ட்டானது, விடுமுறை மற்றும் ஸ்பெஷல் தினங்களுக்கான சமையலுக்கு ஏற்றது.. அப்படீன்னெல்லாம் பில்டப் கொடுக்காம.. நேரே அடுக்களைக்கு போய் சமையலை ஆரம்பிக்கலாமா....
வீட்ல இதெல்லாம் இருக்கான்னு சரி பார்த்துக்கோங்க. இல்லைன்னா, கடைக்குப்போயி வாங்கியாந்துடுங்க.
1. இதெல்லாத்தையும் நறுக்கிக்கணும்:
காளான் - 1 பாக்கெட்.
பெரிய வெங்காயம் - 1
தக்காளி -1
2. இதெல்லாம் ஒன்றிரண்டா தட்டி வெச்சுக்கணும்:
இஞ்சி - 1 இஞ்ச்.
பூண்டு - ஒரு நாலு பல்லை கழட்டி, கொண்டாங்க போதும்.
பச்சமொளகா - 2
3.இது தாளிக்க:
பட்டை -2 இஞ்ச்.
கிராம்பு - 6.
ஏலக்கா - 2.
பெருஞ்சீரகம் - 2 ஸ்பூன்.
எண்ணெய்+தேங்காயெண்ணெய்+நெய் = மூணு டீஸ்பூன் வரணும்.
4. இதை கால்கப் தண்ணீரில், கரைச்சு வெச்சுக்கணும்:
மல்லிப்பொடி - அரை டீஸ்பூன்.
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்.
உப்பு -ஒன்றரை டீஸ்பூன்.
மஞ்சப்பொடி - கால்டீஸ்பூன்.
5.கடைசியா முக்கியமான பொருள்:
பாஸ்மதி - 2 கப்.
மொதல்ல சாதத்தை தயார் செஞ்சுக்கலாம்.
ஒரு பாத்திரத்தில் சுமார் இரண்டு லிட்டர் தண்ணீரை எடுத்துக்கோங்க. அதுல ரெண்டு ஏலக்கா, ரெண்டு கிராம்பு, அரை டீஸ்பூன் ஷாஜீரா போட்டுக்கோங்க. (படத்துல ஷாஜீராவை தேடாதீங்க. சாதத்துல போட்டுட்டேன். இருந்தாலும் தனிப்படம் போட்டிருக்கேன் :-)). அதை கொதிக்க வையுங்க. இப்ப அதுல, ரெண்டுகப் பாஸ்மதி அரிசியை போட்டு, அரைவேக்காடுவரை வேக வையுங்க. அப்புறம், சாதத்தை வடிச்சு வெச்சுக்கோங்க.
இப்ப மசாலா தயார் செய்யலாம்.
எண்ணெய்+ நெய்+தே.எண்ணெய்யை பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கவும். அதுல, பட்டை, கிராம்பு, ஏலக்கா, பெருஞ்சீரகம் போட்டு தாளியுங்க.
அப்றம், இஞ்சிபூண்டு கலவையை போட்டு லேசா கிண்டுங்க. அடுத்ததா, நறுக்கிவெச்ச வெங்காயத்தை போட்டு பொன்வறுவலா ஆகிறவரை கிளறுங்க.
இப்ப, தக்காளியை போட்டு, அது மென்மையாகிறவரை கிளறுங்க. இதுதான் சரியான சமயம்,.. காளானையும் அதுகூட சேர்த்து, அரை டீஸ்பூன் உப்பு போட்டு கலக்குங்க. காளான் வெந்ததும் கரைச்சு வெச்சிருக்கிற பொடிக்கலவையை அதில் ஊற்றவும்.
காளான் நல்லா வெந்து, கூட்டுப்பதம் வரும்போது, அடுப்பை ஆஃப் பண்ணிடுங்க. இப்ப, தயார் செஞ்சு வெச்சிருக்கிற சாதத்தை அதில் கொட்டி, கலக்கோ கலக்குன்னு கலக்குங்க. (புலாவை சாப்பிட்டவங்க 'கலக்கிட்டே போ'ன்னு பாராட்டப்போவது நிச்சயம் :-)). இப்ப, எலக்ட்ரிக், மைக்ரோவேவ், ஏதாவது ஒரு அவன்லயோ அல்லது, நீங்க கண்டுபிடிச்சி வெச்சிருக்கிற உங்க முறைப்படியோ, புலாவை தம் போடுங்க... அவ்ளோதான்.
சைட் டிஷ்ஷா உங்களுக்கு என்ன வேணுமோ செஞ்சுக்கலாம். ரைய்த்தாவை சேர்க்க மறந்துடாதீங்க... அதுதான் ஜோடி நம்பர் - 1 :-))
டிஸ்கி : என்னடாயிது!!! சமையல் பதிவுகள் அடிக்கடி வருதேன்னு நினைக்காதீங்க. நல்லா சாப்பிட்டு தெம்பா இருந்தாத்தான், ப்ளாக் எழுத முடியும்.. :-)). அப்றம் படத்துல இருக்கிற எண்களுக்கும், தேவையான பொருட்கள் லிஸ்டில் கொடுத்திருக்கிற எண்களுக்கும் சம்பந்தமில்லை :-)
31 comments:
எனக்கு ஒரு ப்ளேட் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்.
ரெசிபி சொல்லி இருக்கும் விதமே, கலக்கலா இருக்குதுங்க.
சூப்பர் மஷ்ரூம் புலாவ் ..நான் இது வரைக்கும் பண்ணினது இல்லை .நீங்க சொன்னது போல செஞ்சு பார்க்கறேன் ..படங்கள் எல்லாமே சூப்பர் பார்த்தாலே சாப்பிட தோணறது .பகிர்வுக்கு ரொம்ப நன்றி
//அப்றம் படத்துல இருக்கிற எண்களுக்கும், தேவையான பொருட்கள் லிஸ்டில் கொடுத்திருக்கிற எண்களுக்கும் சம்பந்தமில்லை :-)//
அப்ப இந்த சமையல் உங்க சொந்த சமையல் இல்லையா..? ஹி..ஹி..
:-))
நல்லவேளை அரிசியை ஞாபகப்படுத்தினீங்க!! ;-)))
ஷாஜீரா - கருஞ்சீரகம் இல்லைன்னு நினைக்கிறேன்.
சமையல் சூப்பர்.அருமை.செய்து பார்க்க வேண்டும்.
வாங்க வித்யா,
அனுப்பிட்டேன்ன்ன்ன்ன்ன்ன் :-))
நன்றி.
வாங்க சித்ரா,
அப்ப சமையல்??.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
நன்றிங்க.
வாங்க சந்தியா,
செஞ்சு பாருங்க..
நன்றி.
வாங்க ஜெய்லானி,
சந்தேகம் கேக்குறதுல இன்னிக்கி உங்க சங்கத்து தலைவியை முந்திக்கிட்டீங்க போலிருக்கு :-)))
நான்..நான்..நானே செஞ்சதாக்கும் இது..
நன்றி.
வாங்க ஹுஸைனம்மா,
நானும் ஷாஜீரான்னுதான் சொல்லுவேன். அதனால நம்மூர்ல எப்படி சொல்லுவாங்கன்னு தெரியலை. (கூகிளார்கிட்ட கேட்டப்ப கருஞ்சீரகம்ன்னு சொன்னார்)
நன்றி.
//பூண்டு - ஒரு நாலு பல்லை கழட்டி, கொண்டாங்க போதும்.//
பூண்டுக்கு பல்லு இருக்குமா?.. :))
பசிக்குது
கலக்கலாக சொல்லு இருக்கின்றிங்க...சாரி செய்து இருக்கின்றிங்க...வாழ்த்துகள்...
புலாவே ம்ம்ம். இதில மஷ்ரூம் போட்டு வேற செய்துட்டீங்க.
சொல்லி இருகிற அழகுக்காகவே செய்யணுன்னு ஆசை வருது. கொரியர் செய்திடுங்கப்பா சாரல்.:)
அடடா இப்பவே நாக்கு ஊறுது...உங்க வர்ணிப்பு சூப்பரா இருக்கு...இப்பவே செஞ்சு பாத்துர்ரேன்...
:) ம்... பசிக்குதே..... நமக்கு ஒரு ப்ளேட் இப்பவே வேணுமே! அடுத்த பாம்பே விமானத்தைப் பிடிச்சுடுவோமா?.....
வெங்கட்.
எனக்கு காளான் பிடிக்காது
முயற்சி செய்யுறேன்
படிக்கவே ரொம்ப நல்லாயிருக்கு. ஆனா காளான் இதுவரை சாப்பிட்டதே இல்லை.
வாங்க சசிகுமார்,
நன்றிப்பா.
வாங்க நாடோடி,
இருக்கும்..அதை அரிசின்னும் சொல்லுவாங்க, பல்லுன்னும் சொல்லுவாங்க.
நன்றி.
வாங்க அருண்பிரசாத்,
சாப்பாடு ரெடி :-)))))
நன்றி.
வாங்க கீதா ஆச்சல்,
நன்றிப்பா.
வாங்க வல்லிம்மா,
வல்லிம்மாவுக்கு ரெண்டு ப்ளேட் கொரியர்ர்ர்ர் :-))))
நன்றிம்மா.
வாங்க கண்ணகி,
இப்ப நம்மூர்ல கிடைக்குதே.. செஞ்சு பாருங்க.
நன்றி.
வாங்க வெங்கட்,
இங்கே வர்றதுக்குள்ள ஆறிடுச்சுன்னா.. அதான் 'அங்கே' அனுப்பிட்டேன்.
நன்றி.
வாங்க எல்.கே,
நீங்க முட்டைக்கோஸ், இல்லைன்னா பீன்ஸ்+பட்டாணி+கேரட்+காலிஃப்ளவர் போட்டும் செய்யலாம்.
நன்றி.
வாங்க நசரேயன்,
முயற்சி திருவினையாக்கும். செஞ்சு பாருங்க.
நன்றி.
வாங்க கோவை2தில்லி,
உங்க பேரைப்பாத்ததும் பாம்பே2கோவா படம் ஞாபகம் வந்தது.
காளான் நல்லாவே இருக்கும். செஞ்சு பாருங்க.
நன்றி.
http://samaiyalattakaasam.blogspot.com/2012/12/blog-post_25.html
http://samaiyalattakaasam.blogspot.com/2013/01/blog-post_3.html
Post a Comment