Thursday 12 August 2010

பச்சை நிறமே.. பச்சை நிறமே!!

அந்தக்காலத்துல ராஜாக்களெல்லாம், "மந்திரியே, மாதம் மும்மாரி பொழிகிறதா??" அப்படீன்னு கேப்பாங்களாம். நல்லா மழைபெஞ்சு, நல்ல விளைச்சல் கிடைச்சு ,மக்களெல்லாம் சுபிட்சமா இருக்கணும். அப்பத்தான் ராஜா நல்லா இருக்க முடியும். அதுவுமில்லாம பசுமை, செழுமைக்கு அடையாளமாம். இப்போ, மன்னராட்சி போய் மக்களாட்சி வந்துட்டது இல்லியா?.. அதனால மந்திரியை அனுப்பாம, நானே நேரடியா போயி, நாடு செழிப்பா இருக்குதான்னு பாத்துட்டு வந்திருக்கேன்.

சும்மா பாத்துட்டு வந்துடாம, உங்களுக்காக படங்களும் புடிச்சுக்கொண்டாந்திருக்கேன். பாத்துட்டு எந்தப்படம் நல்லாருக்குன்னு சொல்லுங்க. ஆகஸ்ட் மாதத்துக்கான பிட் போட்டிக்கு அனுப்பிடலாம். இந்த மாதத்துக்கான தலைப்பு 'பசுமை'யாம்.


சோலைவனம்.


தாமரைக்குளமும், குளம் சார்ந்த இடங்களும்.


வரிசையில் நிற்கும் சிப்பாய்கள்.

மலையோரம் வீசும் காத்து...

வயக்காடு..


பச்சைமலை..


இந்தப்பூங்கொத்து நட்புகளுக்காக .


30 comments:

எல் கே said...

valthukkal, ellam arumai. itha masam nan kalanthukkalai

ஹுஸைனம்மா said...

எல்லாம் சூப்பர்னாலும், எனக்கு தாமரைக்குளம் வித்தியாசமாத் தெரியுது.

அப்புறம் தேவதையான “தேவதை”க்கு (லேட்டானாலும் லேட்டஸ்ட்) வாழ்த்துகள்!!

Vidhya Chandrasekaran said...

கண்ணுக்கு குளிர்ச்சியா ஜில்லுன்னு இருக்கு:)

தனி காட்டு ராஜா said...

:)

வெங்கட் நாகராஜ் said...

என்னுடைய சாய்ஸ் “வரிசையில் நிற்கும் சிப்பாய்கள்”, பகிர்வுக்கு நன்றி.

வெங்கட்.

Prathap Kumar S. said...

உங்க பிளாக் டெம்ப்ளேட்டை பசுமையாத்தான்தாங்க இருக்கு :))

Prathap Kumar S. said...

உங்க பிளாக் டெம்ப்ளேட்டும் பதிவுகளும் பசுமையாத்தான்தாங்க இருக்கு :))

Kousalya Raj said...

மிக அருமையான படங்கள்...கண்ணுக்கு குளிர்ச்சியாக.

ஜெயந்த் கிருஷ்ணா said...

எல்லாமே பச்சை பசேலுன்னு இருக்கு...

நாடோடி said...

இவ்வ‌ள‌வு ர‌சிச்சி ப‌ட‌ம் எடுத்த‌ உங்க‌ளை விட‌ என‌க்கு என்ன‌ பெரிசா தெரிஞ்சிட‌ போகுது?.. :))

Anonymous said...

//மலையோரம் வீசும் காத்து...
பச்சைமலை..//
இரண்டும் அருமை!
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

ஸ்ரீ.... said...

படங்கள் கொள்ளை அழகு. உங்கள் பூங்கொத்துக்கு மிக்க நன்றி.

ஸ்ரீ....

ப்ரியமுடன் வசந்த் said...

ம்ம் ஆகஸ்ட் பிட் போட்டிக்கா? வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

Anonymous said...

எல்லா படங்களும் நல்லா இருக்கு .எனக்கு ரொம்ப பிடிச்ச படங்கள் "மலையோரம் வீசும் காத்து " அப்புறம் "வயக்காடு ".

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தோழி

சசிகுமார் said...

நல்ல படங்கள் நண்பா கலக்கல்

ராமலக்ஷ்மி said...

மலையோரம் வீசும் காத்து இதமாய் இருந்தாலும் சோலைவனம் சொக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.

தாராபுரத்தான் said...

பசு ...மைங்க

சாந்தி மாரியப்பன் said...

கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.

ஓட்டுக்கள் பிரிஞ்சு, ஒரே குழப்பமா இருந்ததால, தமிழ்நாட்டின் தாமரைக்குளத்தை போட்டிக்கு அனுப்பிட்டேன்.

மனோ சாமிநாதன் said...

அத்தனை புகைப்படங்களும் பசுமையோ பசுமை! எது மிக அதிகமான பசுமை என்று இனம் பிரிக்க முடியாமல் அவ்வளவு அழகாக எடுத்திருக்கிறீர்கள்! போட்டியில் வெற்றி பெற அன்பு வாழ்த்துக்கள்!!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மனோ,

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

வல்லிசிம்ஹன் said...

ஏதாவது படத்தை ரொம்ப அழகும்ன்னு சொன்னால் மத்த படங்கள் வருத்தப்படுமே சாரல். பசுமை அப்படி செழிப்பாக இருக்கிறது.
எனக்கு வயக்காடு வார்த்தை பிடித்தது:) தாமரைக் குளத்துக்கு வெற்றி வாழ்த்துகள்.
பூங்கொத்து மிக அழகுமா. நன்றி. சுதந்திர தின வாழ்த்துகள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஏதோ கிராமத்துக்குப் போய் வந்தாற்போல்.....

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

'வயக்காடு' நாம சர்வசாதாரணமா உபயோகிக்கிற வார்த்தை இல்லியா :-))))

உங்களுக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்.

நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி,

ரொம்ப நன்றிங்க.

Chitra said...

ஆஹா...... கலக்கல் படங்கள்..... background மியூசிக் தான் மிஸ்ஸிங்..... :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

நன்றிப்பா.

நசரேயன் said...

நாம்ம ஊரு மாதிரி தெரியலை

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சோலைவனம் - அழகு கொஞ்சுது போங்க

தாமரைக்குளமும், குளம் சார்ந்த இடங்களும். - கைல அள்ளிகணும் போல இருக்கு

வரிசையில் நிற்கும் சிப்பாய்கள் - எந்த ராஜியத்த பிடிக்க

மலையோரம் வீசும் காத்து - மனசோடு கேக்கும் பாட்டு கேக்குதே கேக்குதே

வயக்காடு - அழகுங்க

பச்சைமலை - ரெண்டு கண் போதல போங்க

இந்தப்பூங்கொத்து நட்புகளுக்காக - ரெம்ப ரெம்ப அழகு

எல்லாமே சூப்பர் அமைதி அக்கா

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

தாமரைக்குளம் மட்டும் நம்மூர்..

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அப்பாவி,

உங்க வர்ணனையும் சூப்பர்ப்பா.. :-)))

நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails