Wednesday, 11 August 2010

ஸ்வீட் எடுத்துக்கோங்க..

பண்டிகைக்காலம் தொடங்கி, வரிசை கட்டி நிக்க ஆரம்பிச்சுட்டது. அதுக்கு ஏத்தமாதிரி ஒரு அயிட்டத்தை இன்னிக்கு கத்துக்கலாம். இதை, தினமும் காலைபூஜைக்கு நைவேத்யமாவோ, இல்லை, சும்மா சாப்டுறதுக்காகவோ செஞ்சுக்கலாம். இதுக்குப்பேரு 'ஷீரா'. சத்ய நாராயணபூஜைக்கு கண்டிப்பா இதைத்தான் எங்கூர்ல செய்வாங்க. இதுல விஷேசம் என்னன்னா, பிடிச்ச சிலவகை பழங்களை இதுல சேர்த்துக்கலாம்.

தேவையானவை ;

ரவை - 1 கப்.
நெய் - 1 கப்.
சர்க்கரை -1 கப்.
ஏலக்காய் - 2(பொடித்தது)
வாழைப்பழம்-1
(அல்லது)
ஆப்பிள் - 1
சூடாக்கி ஆறவைத்த பால் - 1கப்.

எப்படி செய்யணும் :

அடுப்பை மொதல்ல லைட்டர்கொண்டு பற்றவைத்துக்கொள்ளவும் (சந்தேகம் கேக்க நெறைய பேர் இருக்காங்கப்பா :-))

1. மொதல்ல, நெய்யை ஒரு அடிபிடிக்காத வாணலியில் ஊற்றி சூடாக்கவும்.

2. பின் ரவையை அதில் போட்டு, லேசாக வாசனை வரும்வரை வறுக்கவும். கண்டிப்பாக சிவக்கக்கூடாது.

3. பின் கால்கப் பாலை அதில் ஊற்றி, கைவிடாமல் கிளறவும். ரவை, சமர்த்தாக அந்தப்பால் முழுவதையும், உறிஞ்சிக்கொண்டுவிடும். பின், மறுபடியும் கால்கப் பாலை ஊற்றவும். இப்படியே ஒருகப் பாலையும் ரவையுடன் சேர்க்கவும்.எல்லாத்தையும் குடிச்சிட்டு, இந்த ரவையும் பால் குடிக்குமான்னு அப்பாவியா இருக்கும்.

கவனம்: ரவை உதிரியாக ஆகும்வரை கிளறிவிட்டு அப்புறம்தான் அடுத்த கால்கப் பாலை சேர்க்கவும்.

4. பழத்தை பொடியாக ஸ்லைஸ் அல்லது துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

5. ரவையுடன் சர்க்கரையை கலந்து, அதன்மேல் நறுக்கிய பழத்துண்டுகளை பரத்தவும்,

6. ஏலக்காய் பொடியை மேலாக தூவிவிட்டு, வாணலியை தட்டுபோட்டு மூடிவிடவும்.

7. அடுப்பை மிதமாக எரியவிடவும்.

எண்ணி மூணே நிமிஷம்தான். (இப்ப அதை ஷீரான்னு சொல்லலாம்) ஷீராவை லேசா கிளறிவிடணும். உப்புமா மாதிரி உதிரியா வந்தா... இப்ப நீங்க ஒரு 'ஷீரா'
எக்ஸ்பர்ட். இல்லேன்னா, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் :-)))))))

உதிரியா இருந்தாத்தான் ஷீரா, இல்லேன்னா, அது கேசரி. அதனால, கவனமா உதிரியா ஆகிறவரை கிளறிவிடுங்க. அவ்வளவுதான்.

நான் இதில் ஆப்பிள் சேர்த்து செஞ்சிருக்கேன். எல்லோரும் எடுத்துக்கோங்க. ஒரு இனிப்பான செய்தி சொல்லப்போறேன்..

என்னுடைய வலைப்பூவான 'அமைதிச்சாரல்', தேவதையின் ஆகஸ்ட் 1-15 இதழில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது... அவர்களுக்கு என் நன்றிகள். இந்த இடத்தை அடைய, நண்பர்களாகிய நீங்கள் கொடுத்தஆதரவும், உற்சாகமும் ஒரு காரணம். ஆகவே, உங்களுக்கு என் வணக்கங்கள்.



புளிக்காய்ச்சல் தமிழ்நாடு முழுக்க தாறுமாறா பரவிடுச்சு போலிருக்கு :-)))

மொதல்ல வாழ்த்து சொன்ன ராமலஷ்மிக்கு இங்கே நன்றி சொல்லிக்கிறேன் :-)


44 comments:

எல் கே said...

vaalthukkal. sweet nalla irukku

kavisiva said...

தேவதையில் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள் சாரல் மேடம்.
இப்போ சந்தேகங்கள்
//அடுப்பை மொதல்ல லைட்டர்கொண்டு பற்றவைத்துக்கொள்ளவும்//

அப்போ தீக்குச்சி வச்சு அடுப்பை பத்த வச்சா ஷீரா ஒழுங்கா வராதா? ஆட்டோ இக்னிஷன் அடுப்புலயும் ஒழுங்கா வராதா? :-)

//மொதல்ல, நெய்யை ஒரு அடிபிடிக்காத வாணலியில் ஊற்றி சூடாக்கவும்//

வாணலியில் கூட 'அடி' பிடிக்கற வானலி'அடி' பிடிக்காத வாணலின்னு இருக்கா. எனக்கு 'அடி'ன்னு சொன்னாலே பிடிக்காது அழுதுடுவேன். அடிச்சா வலிக்கும்ல :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

தேவதையில் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்...

ஸ்வீட் மிகவும் ஸ்வீட்டாக உள்ளது...

வெங்கட் நாகராஜ் said...

”க்ஷிரான்னம்” என்ற ஒரு சாதம் செய்வார்கள் ஸ்ரீரங்கம் கோவிலில். க்ஷிரம் என்றால் சமஸ்கிருதத்தில் பால் என்று பொருள். உங்கள் ஷிரா படித்தவுடன் எனக்கு க்ஷிரான்னம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றி விட்டது. முதலில் ஷிரா சாப்பிடலாம், அடுத்த முறை ஸ்ரீரங்கம் செல்லும் போது பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். பகிர்வுக்கு நன்றி.

தேவதை இதழில் அறிமுகம் ஆனதற்கு வாழ்த்துக்கள்.


நட்புடன்

வெங்கட்.

நாடோடி said...

தேவ‌தை இத‌ழில் அறிமுக‌த்திற்கு வாழ்த்துக்க‌ள் ச‌கோ... ரெம்ப‌ ஸ்வீட்டா இருக்கு... கொஞ்ச‌ம் சில்லிப‌வுட‌ர் போட்டிருக்க‌லாம்.. :)))))))

ராமலக்ஷ்மி said...

தேவதையில் அமைதிச்சாரல்! மறுபடியும் என் வாழ்த்துக்கள்.

// லைட்டர்கொண்டு //

தீக்குச்சி:)?

//எல்லாத்தையும் குடிச்சிட்டு, இந்த ரவையும் பால் குடிக்குமான்னு அப்பாவியா இருக்கும்.//

:)!

//இப்ப நீங்க ஒரு 'ஷீரா'
எக்ஸ்பர்ட். இல்லேன்னா, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் :-)))))))//

இப்படி பயம் காட்டுறீங்களே? நீங்க ரெஸிபி சொல்லும் அழகுக்கே ரெண்டு முறை படிக்கலாம். ஆனா கேசரி ஆகிவிடக்கூடாதேன்னு கவனமா 3 முறை படித்துக் கொண்டேன். ரிசல்ட் சொல்றேன்:)!

அமைதி அப்பா said...

பகிர்வுக்கு நன்றி.
ஸ்வீட் செஞ்சு சாப்பிட்டிட்டு, தேவதை இதழ் படிச்ச்சிட்டு, சீக்கிரமே வர்றேன்.

Prathap Kumar S. said...

அடடே... தேவையில் வந்தது சந்தோசமான விசயம் வாழ்த்துக்கள்.

இந்தமாதிரி சமையல் குறிப்புகsள் இனிமேலும் வராது என்று நம்புகிறேன். :))

Prathap Kumar S. said...

அடடே... தேவையில் வந்தது சந்தோசமான விசயம் வாழ்த்துக்கள்.

இந்தமாதிரி சமையல் குறிப்புகsள் இனிமேலும் வராது என்று நம்புகிறேன். :))

sathishsangkavi.blogspot.com said...

Super Sweet...

நசரேயன் said...

காரமா போடுங்க வீட்டிலே செய்ய வசதியா இருக்கும்

தெய்வசுகந்தி said...

வாழ்த்துக்கள்! நல்ல sweet!!!!!!!

ப்ரியமுடன் வசந்த் said...

அடடே ஸ்வீட் எடுத்தாச்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

Anonymous said...

நான் வர லேட் ஆச்சு ஸ்வீட் தீர்ந்து போச்சே மேடம் ..பரவால்லே கொஞ்சம் பார்சல் அனுப்பரிங்களா? ஸ்வீட் நல்லா இருக்கு பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

சொன்னது போல சீக்ரம் வந்தீங்களை நன்றி பா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஸ்வீட் எடுத்துக்கிட்டொம்ங்க நன்றி..
வாழ்த்துக்கள் :)

Kousalya Raj said...

valththukkal...thank u for ur sweetest sweet...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க் எல்.கே,

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கவிசிவா,

குட்..அப்படித்தான் சந்தேகங்களை கேள்வி கேட்டு தெளிவுபடுத்திக்கணும் :-)))

எனக்கு ஸ்கூட்டர் இக்னிஷன், கார் இக்னிஷன் மட்டும்தான் தெரியும். அதென்ன ஆட்டோ இக்னிஷன்???

ஹி..ஹி.. எங்கூட்டு வாணலிக்கும் அடிபிடிக்காதுங்க.அடிக்கவே தேவையில்லாம சமர்த்தா இருக்கும். அதான் தேடியெடுத்து கொண்டாந்தேன் :-)))))

அடிக்கடி வாங்க....

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெறும்பய,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

இதிலும் பால் சேர்த்திருக்கேன்.

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நாடோடி,

வாழ்த்துக்களுக்கு நன்றி. கலருக்காக சில்லிபவுடர் சேர்த்து செஞ்சு, உங்களுக்கு நாலுப்ளேட் அனுப்பறேன். ஓ.கே :-))))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

தீக்குச்சிக்காக மரத்தை வெட்ட வேண்டியிருக்குமே.. அதுவுமில்லாம, நாமெல்லாம் கற்காலத்துல உபயோகிச்சதுதானே இந்த லைட்டர்ல இருக்கிற சிக்கிமுக்கி கல்லு. அதான் :-)))))

ரிசல்ட் சொல்லுங்க..

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமைதி அப்பா,

சாப்பிட்டுக்கிட்டே படிக்கலாம், படிச்சிக்கிட்டே சாப்பிடலாம் :-)))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பிரதாப்,

வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ.

ஏன்.. ஏன்.. ஏன்..?????. ஓணம் வரப்போகுதேன்னு, காரமா ரெண்டு மூணு ரெசிப்பி எழுதி வெச்சிருந்தேன். உங்களுக்கு கிடையாது :-)))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கவி,

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

கண்டிப்பா போடுறேன் சகோ..

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தெய்வசுகந்தி,

வாழ்த்துக்களுக்கும் வரவுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்த்,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தியா,

ஸ்வீட் தீரவே தீராதாக்கும். தீர்ந்தாலும் உங்களுக்காக பார்சல் அனுப்பறேன்.. உங்களுக்கில்லாததா :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கௌசல்யா,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள் அமைதிச்சாரல்.

தேவதையில் பார்த்தேன்.

உங்கள் இனிப்புக்கு நன்றி.

Anonymous said...

ரொம்ப நன்றி தோழி

Chitra said...

Congratulations!

துளசி கோபால் said...

ஆஹா....ஆஹா.....

இனிய வாழ்த்து(க்)கள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தியா,

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துளசியக்கா,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

எனக்கு ரெண்டு டவுட்...
முதல் டவுட் - ஷீராவா... நம்ம அஜித் புகழ் ஹீராவா?
ரெண்டாவது டவுட் - இதுக்கும் கேசரிக்கும் ஆறு வித்தியாசம் என்ன? சரி சரி டென்ஷன் ஆகாதீங்க அக்கோவ்....

வாவ்... தேவதை இதழ்லையா... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

//(சந்தேகம் கேக்க நெறைய பேர் இருக்காங்கப்பா :-))//


நம்ம சங்க தலைவி முதல்ல வந்து கேட்டுட்டதால நோ கொஸ்டின்ஸ்.

ஜெய்லானி said...

தேவதை இதழில் அறிமுகம் ஆனதற்கு வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அடப்பாவி,

அடப்பாவி.... ஷாலினி நல்ல பொண்ணுப்பா.குடும்பத்துல குழப்பம் வேணாம் :-)))))).

சரி.. இப்ப சந்தேகத்துக்கான பதில்.
கேசரி கேசரிகலர்ல இருக்கும். ஷீரா ஷீராகலர்ல இருக்கும். நான் ஒரு வித்தியாசம் கண்டுபிடிச்சா ஆறுவித்தியாசம் கண்டுபிடிச்ச மாதிரி. எப்பூடி :-))))

வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெய்லானி,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails