Sunday, 8 August 2010

வலைப்பூவில் அனிமேஷன் படங்கள்..

சென்ற இடுகையில் பார்த்த, அசையும் படங்கள்(GIF) ரொம்பப்பேருக்கு பிடிச்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். Graphics Interchange Format-ன் சுருக்கமே gif. அதில் அனிமேஷன் சேர்த்து அசையும் படமாக்கலாம். கூகிளில் இப்படிப்பட்ட படங்கள் நிறையக்கிடைக்கின்றன. நிறையப்பேருக்கு, இதை எப்படி இடுகைகளில் பயன்படுத்துவது என்பது தெரிந்திருக்கலாம்.. தெரியாதவர்களுக்காக இந்த இடுகை.

கூகிளின் முகப்புப்பக்கத்தில் படங்களை மட்டும் தேடுவதற்கென்று images என்ற குறிச்சொல் இருக்குமில்லையா.. அதை க்ளிக் பண்ணுங்க. ஒரு சின்ன பாக்ஸ் வரும். முதலில் நமக்கு வேண்டிய படத்தை தேடியெடுத்துக்கொள்ளவேண்டும். உங்களுக்கு விருப்பமான பெயர்.gif ஐ டைப் செய்தால்..(உதாரணமாக kitten.gif) நிறைய படங்களை கூகிளாண்டவர் தருவார். இடதுபக்கத்தில் அளவு, வகை, மற்றும் நிறங்களுக்கான தேர்வுகள் இருக்கும். அதில் வேண்டியதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் . நான் படங்களை தேர்ந்தெடுத்திருக்கிறேன். நம்முடைய வலதுபக்கம் படங்கள் வரும். அதை ஒவ்வொன்றாக open in new windowவில் திறந்து, க்ளிக்கிப்பார்த்து அனிமேட்டட் ஆக இருக்கிறதா!! என்று பரிசோதனை செய்து கொள்ளவும்.உதாரணத்துக்கு பாட்டுக்கேக்கும் பூனையாரை எடுத்துக்கலாம்..


தேவையான படம் கிடைத்தபின், அதை சிஸ்டத்தில் சேமித்துக்கொள்ளவும். animated gif படங்களை தனியாக ஒரு கோப்பில் சேமித்து வைத்துக்கொள்வது நலம்.

இடுகைகளில், இந்தப்படங்களை உபயோகிக்கவேண்டுமென்றால், சில சம்பிரதாயங்கள் இருக்கின்றன. அவற்றை கடைப்பிடித்தால்.. படங்களை அசைவுடன் பார்க்கலாம். இல்லையென்றால் வெறும் படமாகத்தான் பார்க்கமுடியும்.

இதற்கு, முதலில் photobucket.com சென்று ஒரு அக்கவுண்ட் ஆரம்பித்துக்கொள்ளவும். பின் லாகின் செய்து உள்ளே சென்றால் முகப்புப்பக்கத்திலேயே, படங்களை அப்லோட் செய்யும் பட்டன் இருக்கும்.
அதை க்ளிக் செய்தால், நம்முடைய கணினியில் ஒரு ஜன்னல் திறக்கும். அதில், எந்த கோப்பிலிருந்து படங்களை வலையேற்றவேண்டுமோ அதைத்திறந்து, வேண்டிய படத்தை தேர்ந்தெடுத்து, open-ஐ க்ளிக் செய்தால் தானாகவே photobucket-ல் அப்லோட் ஆகிவிடும். பின் அதை, ஒரு ஆல்பத்தில் சேமித்துவைத்துக்கொள்ளவும். இப்படி, photobucket-ல் சேமித்து வைக்கப்பட்ட படங்களை நமக்கு எப்போது வேண்டுமோ, உபயோகித்துக்கொள்ளலாம்.



இடுகைகளில், இந்தப்படங்களை உபயோகப்படுத்த நினைக்கும்போது, dashboard சென்று, புதிய இடுகையோ, அல்லது தேவைப்படும் இடுகையையோ திறந்துகொள்ளவும். பின்,edit mode-ல் வைத்துக்கொண்டு add image பட்டனை க்ளிக் செய்யவும்.


மறுபடியும் photobucket-ல் லாகின் செய்து உள்ளே நுழைந்து, சேமித்து வைக்கப்பட்ட படங்களில் தேவையான படத்தில், டபுள் க்ளிக் செய்து திறந்துகொள்ளவும். படத்தின் வலதுபுறத்தில், பகிர்வுகளுக்கான நான்கு லிங்குகள் இருக்கும். அதில் direct link-ஐ செலக்ட் செய்து காப்பி செய்துகொள்ளவும்.
பின், add image பக்கத்துக்கு வந்து, படங்களை வலையிலிருந்து ஏற்றும் பகுதியில் உரல் கேட்கப்பட்டிருக்கும் பெட்டியில் ஒட்டவும். பின் வழக்கம்போல் அப்லோட் செய்யவும். அவ்வளவுதான். படங்கள் உங்கள் இடுகைப்பகுதியில் வந்திருக்கும். பின் வழக்கம்போல் இடுகையில் எங்கெங்கு படங்கள் வரவேண்டுமென்று நினைக்கிறீர்களோ, அங்கே ஒட்டிக்கொள்ளலாம்.


இந்தப்படம் சிஸ்டத்திலிருந்து நேரடியாக வலையேற்றப்பட்டது.



இது photobucket மூலமாக வலையேற்றப்பட்டது.

இந்த gif படங்களை இடுகைகளில் மட்டுமல்லாமல், வலைப்பூவை அழகுபடுத்தவும் உபயோகிக்கலாம். என்னுடைய வலைப்பூவின் சைட்பாரில் மழைபெய்கிறதே அதுமாதிரியோ, இல்லை.. தலைப்பின் அருகிலேயோ உபயோகப்படுத்தலாம். அதற்கு, design பகுதிக்குச்சென்று add a gadget, அல்லது header- ஐ திறந்து அதில், உரல் கேட்கப்பட்டிருக்கும் இடத்தில், படத்தின் photobucket link-ஐ ஒட்டிவிடவும். பின் சேமிக்கவும்... அவ்வளவுதான்.

கம்ப்யூட்டரில் எனக்கு அதிகமா தெரியாது, இருந்தாலும் எனக்குத்தெரிந்தவரை விம்போட்டு விளக்கியிருக்கேன். விளக்கம் புரியும்ன்னு நினைக்கிறேன். ஹைய்யா!!! நானும் ஒரு தொழில்நுட்பப்பதிவு போட்டுட்டேனே :-)))

27 comments:

Vidhoosh said...

super. :) thanks for sharing.

Vidhya Chandrasekaran said...

சூப்பர். நானும் யூஸ் பண்ணிக்கிறேன்:)

தோழி said...

பயனுள்ள தகவல்.. நன்றி..

வெங்கட் நாகராஜ் said...

உபயோகமான ஒரு பதிவு. எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதோ இப்பவே பக்கெட் பக்கம் போயிடறேன். :))

http://rkguru.blogspot.com/ said...

நீங்க சொன்ன மாதிரி செய்து பார்த்துட்டேன் மிகவும் அருமை நன்றி மற்றும் வாழ்த்துகள்

நாடோடி said...

ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்க‌ள் தான்.. க‌ண்டிப்பாக‌ புதிதாக‌ வ‌லைப்ப‌திவு ஆர‌ம்பிப்ப‌வ‌ர்க‌ளுக்கு உப‌யோக‌மாக‌ இருக்கும்...

க.பாலாசி said...

ரொம்ப நல்ல தகவலுங்க.. இப்பதான் இந்தமுறையைப்பற்றி நான் தெரிந்துகொள்கிறேன். நன்றி...

அருண் பிரசாத் said...

நேராகவும் மற்ற படங்களை இனைப்பது பொலவும் இனைக்கலாம். என் வலைதளத்தில் அப்படிதான் செய்தேன் ஒர்க் ஆகிறது.

http://arunprasathgs.blogspot.com/2010/07/for.html

அருண் பிரசாத் said...

ஆனால், நண்பர் தளத்தில் ஒர்க் ஆகவில்லை, இப்படித்தான் செய்தோம். பகிர்வுக்கு நன்றி

அமைதி அப்பா said...

மேடம், எங்கேயோ போயிட்டீங்க..!
தொடர்க.
நன்றி.

எல் கே said...

eppadi mis pannen unga posta??? arumai nandri

Prathap Kumar S. said...

// நானும் ஒரு தொழில்நுட்பப்பதிவு போட்டுட்டேனே//

அமைதி சாரல் -hiடெக் சாரல் ஆயிடுச்சு...

கண்ணகி said...

அய்.....நல்லாருக்கே...செஞ்சு பார்த்திடுறேன்...

ப்ரியமுடன் வசந்த் said...

டாங்க்ஸ் மேடம்...!

ஜெயந்த் கிருஷ்ணா said...

உபயோகமான ஒரு பதிவு. எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

sudhanthira said...

Beautiful ..................
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி
Link:www.secondpen.com/tamil/what is jaico?

சாந்தி மாரியப்பன் said...

வாங்க விதூஷ்,

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வித்யா,

பயன்படுத்திட்டு சொல்லுங்க..

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தோழி,

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

பயன்பட்டா எனக்கும் மகிழ்ச்சிதான். பக்கெட் பக்கம் போய்ட்டு வந்து சொல்லுங்க..

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குரு,

செம ஸ்பீடுப்பா நீங்க. இடுகையை பாத்தவுடனே செஞ்சு பார்த்து பதிலும் சொல்லிட்டீங்க :-)).

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நாடோடி,

நிச்சயமா உபயோகமா இருக்கும்.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாலாசி,

நான் வலையில் கத்துக்கிட்டதை கொஞ்சூண்டு திருப்பிக்கொடுக்கிறேன். அவ்வளவுதான் :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அருண்பிரசாத்,

உங்க தளத்தில் போய்ப்பார்த்தேன். நேரடியா எப்படி இணைச்சீங்கன்னு சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்குவோம். ஏன்னா, சில படங்களோட settings அப்படி இருக்கு. நேரடியா அனுமதிப்பதில்லை. நானும் முட்டிமோதி கடைசியில்தான் பக்கெட்டை கண்டுபிடிச்சேன் :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமைதி அப்பா,

எங்கியும் போகலை.. இங்கேயேதான் இருக்கேன்(ஜனகராஜ் ஸ்டைலில் படிக்கவும்) :-))))

ஊக்கம் கொடுத்ததுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சகோ எல்.கே,

இப்படி நேரம் கழிச்சா வர்றது????. வரவுக்கு நன்றி. :-)))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பிரதாப்,

ஹைடெக்கா... அப்டீன்னா???????? :-))

நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails