Tuesday, 1 June 2010

நினைப்பதெல்லாம்...

"ஹனி,... வெய்யில்ல நிக்காதே.. உள்ள வா"... பக்கத்து வீட்டிலிருந்து கொஞ்சலாக ஒரு குரல் கேட்டது.

"ஹனி,... ந்யூஸ் பேப்பர் வந்தாச்சா பாரு.. வந்துட்டுதுன்னா கொஞ்சம் எடுத்துட்டு வந்துடேன்... ப்ளீஸ் " ஒரு ஆணின் குரல் , அதிகாரத்தை பாலிஷாகப்போட்ட மென்மையுடன் ஒலித்தது.

பக்கத்து வீட்டில் ஒரு இளம்ஜோடி , புதுசா குடிவந்திருக்கிறது. ப்ளாட் கலாச்சாரத்தை காப்பாற்றும்பொருட்டு ,... எந்நேரமும் அடைக்கப்பட்ட கதவுகள் , வீட்டில் இருப்பவர்களைப்பற்றிய தகவல்களை, வெளியே கசியவிடாமல் பாதுகாத்தன.

"என்னதான் புதுசா கட்டிக்கிட்ட ஜோடின்னாலும் இப்படியா!!!" அவ்வப்போது என் அப்பா முணுமுணுப்பார். "வயசாயிட்டாலே காதும் கண்ணும் கூர்மையாயிடும் போலிருக்கு" என் மனைவி வாய்க்குள்ளாகவே புராணம் பாடுவதை அவர் பொருட்படுத்தியதே இல்லை.

"ப்ளீஸ்டா... டி.வி பாக்கும்போது தொந்தரவு செய்யாதே. சீரியல்ல முக்கியமான கட்டம் போயிட்டிருக்கு. அவனோட affair அவன் மனைவிக்கு தெரிஞ்சுடுமோன்னு நான் டென்ஷனோட நகம் கடிச்சிட்டிருக்கேன். இந்த சமயத்துல வந்து பசிக்குதுன்னு சொல்றியே!!! தட்டுல சாப்பாடு எடுத்து வெச்சிருக்கேன்.சாப்பிட்டுடு "

" பால்கனில காத்தாட உக்காரலாமா ஹனி?... பௌர்ணமி நிலா அப்படியே பால்மாதிரி பொழியுது!! " பக்கத்துவீட்டு பால்கனியில் குரல் கேட்டதும் எதேச்சையாக திரும்பிப்பார்த்தேன். நிலா வெளிச்சத்தில், உட்கார்ந்திருந்தார்கள் . இங்கிதம் கருதி வீட்டுக்குள் வந்துவிட்டேன்.

"ஹனி..ஹனின்னு என்னமா உருகறாங்க ரெண்டுபேரும். நீங்களும்தான் இருக்கீங்களே..." என் மனைவி பெருமூச்செறிந்தாள்.

"பத்து வருஷத்துக்கப்புறமும் இப்படி உருகுவாங்களான்னு கேட்டுச்சொல்லு"

"க்க்கும்.. போதுமே" முகவாய்க்கட்டையை தோளில் இடித்தபடி உள்ளே சென்றுவிட்டாள்.

எதேச்சையாக ஒரு நாள் பக்கத்துவீட்டு பெண்ணை , லிஃப்டில் சந்தித்தேன் . ஒன்றிரண்டு முறை அவர்களை பார்த்திருக்கிறேன் என்றாலும் பேசியதில்லை. ஒரு புன்னகையோடு சரி... இன்றும் பலவீனமான ஒரு புன்னகையை சிந்தினாள். முகம் ஏனோ வாடியிருந்தது . . 'கேட்டுவிடலாமா?.. என்னதான் அறிமுகம் இல்லை என்றாலும் பக்கத்து வீட்டுக்காரர்கள்... தனிக்குடித்தனம் இருக்கும் இளம்ஜோடிகள் . ஒரு ஆத்திர அவசரத்துக்கு உதவவில்லையென்றால் அப்புறம் என்ன மனிதம் வேண்டிக்கிடக்கிறது??...

"ஹலோ"

"ஹாய்"

"வெயில் ரொம்ப அதிகமா இருக்கு இல்லையா?.. இந்த வெயிலில் வெளியே போகணுமா??.."

"அது... ஹனிக்கு உடம்புக்கு முடியலை.. ஆஸ்பத்திரியில் நிறைய டெஸ்ட் எடுத்திருந்தாங்க.. அந்த ரிப்போர்ட்டுகளை வாங்கத்தான் போயிருந்தேன் " தழுதழுப்பான குரலில் சொன்னது போலிருந்தது எனக்கு..

"என்னம்மா நீ!!! உடம்பு சரியில்லாத நிலையில் இப்படி தனியா விட்டுட்டு போகணுமா?.. ஏதாவது உதவி வேணும்ன்னா... எங்கிட்டேயோ இல்லை அண்ணிகிட்டேயோ கேக்கலாமில்ல.. சமயத்துக்கு உதவல்லைன்னா அப்புறம் என்ன பக்கத்து வீட்டுக்காரங்க. ஆமா,.. என்ன உடம்புக்கு?.."

"டயபடீஸ்ன்னு சொல்றார். கொஞ்சம் வெயிட்டும் கூடியிருக்காம்.. ஒபிசிடி வந்துடாம கவனிச்சுக்க சொல்லியிருக்கார் டாக்டர். மருந்து மாத்திரையெல்லாம் கொடுத்திருக்கார் ".

"இவ்வளவுதானா!!! டெய்லி காலைல வாக்கிங் ,ஜாகிங் கூட்டிட்டு போங்க. நாளடைவுல சரியாயிடும்.. டயட்டை கன்ட்ரோல்ல வையுங்க . ஒண்ணு பண்ணுங்களேன். எனக்கு டெய்லி காலைல வாக்கிங் போற பழக்கமுண்டு. எங்கூட அனுப்பி வையுங்களேன். பேச்சு சுவாரஸ்யத்துல நாப்பது கிலோமீட்டர் நடந்தாலும் தெரியாது "

நன்றியுடன் கண்கள் மின்ன, என்னைப்பார்த்தாள். " ரொம்ப தேங்க்ஸுங்க. காலைல அஞ்சு ,அஞ்சரை மணிக்கெல்லாம் கூட்டிட்டு வரட்டுமா?".

"ஓ.. தாராளமா"

ரொம்ப நாளைக்கப்புறம் என் ஆலோசனைகளே கேட்க ஒருத்தன் மாட்டியிருக்கான். விடக்கூடாது... "ஐயோ, பாவமே . போயும் போயும் உங்ககிட்டயா அவர் ஐடியா கேக்கணும்" என்ற என் இல்லத்தரசியின் மதிப்புரையை கிடப்பில் போட்டேன். உடம்பை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை, வலியுறுத்தி , சொல்லப்பட வேண்டிய ஆலோசனைகளை தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தவன் எப்படியோ தூங்கிவிட்டேன் .

காலையில் எழுந்து, தயாராகி... ஜாகிங் ஷூக்களை மாட்டும்போது அழைப்புமணி ஒலித்தது . என் மனைவி கதவைத்திறந்தாள். பக்கத்துவீட்டுப்பெண் நின்று கொண்டிருந்தாள். "எங்கே.. லேட்டாகிவிடுமோன்னு நினைச்சேன்" என்று அவள் சொன்னபோது , "அதெல்லாம் ஒண்ணுமில்லை... ரிட்டையர்டுக்கப்புறம் சும்மாத்தானே இருக்கார். அவருக்கும் பொழுது போகணுமில்லையா " என்று சமயம் பார்த்து தங்கமணி என்னுடையஇமேஜை , டேமேஜ் பண்ணினாள்.

"ஹனி... hurry up. இல்லைன்னா அங்கிள் உன்னை விட்டுட்டு போயிடுவார்.. சீக்கிரம் வா" என்று குரல் கொடுத்தாள்.

அவள் வீட்டுக்குள்ளிருந்து... நாலுகால், ஒரு வால், கழுத்துப்பட்டையுடன் ஓடிவந்தது ஹனி . " கழுத்துப்பட்டைய கட்டியாச்சுன்னா,.. உடனே வெளிய புறப்பட்டாகணும் இவனுக்கு. டேய்.. அங்கிள் கூட பத்திரமா போயிட்டு வா செல்லம் ".

நான் பேச்சு மூச்சற்று நின்றுகொண்டிருந்தேன்..


26 comments:

எல் கே said...

excellent.. superba eluthi irukeenga saaral. vaakthukkal

வெங்கட் நாகராஜ் said...

கொஞ்சல் ரொம்ப ஓவரா இருக்கேன்னு நினைச்சுட்டே படிச்சேன், கடைசில கலக்கிட்டீங்க போங்க! வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

எதோ ட்விஸ்ட் இருக்கும்னு தெரியும்.

ஆமா, நாய்களுக்கு கூட டயபடீஸ் வருமா?

எல் கே said...

//நாய்களுக்கு கூட டயபடீஸ் வருமா/

repeatt

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

வரும்... என் ஃப்ரெண்ட் வீட்டில் பார்த்திருக்கேன்.அவங்க வீட்டில் இன்னொரு நாய்க்கு கண்ணில் காட்ராக்ட் வந்தப்ப, பெங்களூர் கொண்டுபோய் ஆபரேஷன் செஞ்சு சரி பண்ணாங்க.

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

ஹுஸைனம்மாவுக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும்.

நன்றி.

நசரேயன் said...

நல்ல பேருதான் ஹனி

பனித்துளி சங்கர் said...

கலக்கல் மிகவும் நேர்த்தியாக எழுதி இருக்கீங்க பகிர்வுக்கு நன்றி !

Matangi Mawley said...

ஹி ஹி.. சுவாரஸ்யமா இருந்தது! நல்ல எழுதிருக்கீங்க!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பர் சூப்பர் சூப்பர்... எந்த ஊர்ல இது கொஞ்சம் ஓவர் தாங்க... புள்ளைய நடக்க வெச்சுட்டு நாய தூக்கி இடுப்புல வெச்சுகர கொடுமை எல்லாம் இருக்கும்... சூப்பர் கதை சூப்பர் ட்விஸ்ட் ...

ப்ரியமுடன் வசந்த் said...

ட்விஸ்ட் குட்...

மேடம் எங்க மழைச்சாரலை காணோம்?

:(

தக்குடு said...

நல்ல பகிர்வு அம்மா! வாழ்த்துக்கள்!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசர்,

ஸ்வீட்டா இருக்குதுல்ல :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பனித்துளி,

ரொம்ப நாளுக்கப்புறம் நம்ம பக்கம் வந்திருக்கீங்க நலமா?...

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதங்கி,

முதல்வரவா!!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அப்பாவி,

ரொம்ப கொடுமைதான் :-))))

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்த்,

ஊருக்கு போயிட்டு வந்தாச்சா.. ஊர்ல அப்பா, அம்மா, 'அவங்க' எல்லாரும் நலமா?.

மழைல பசங்க நனைஞ்சுக்கிட்டிருந்தாங்க. ஜல்ப்பு பிடிச்சுக்கும்ன்னு எடுத்துட்டேன். பத்திரமா இருக்கு. எப்போ வேணாலும் திரும்ப கொண்டு வந்துக்கலாம்.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தக்குடு,

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. சந்தடி சாக்குல சீனியர் சிட்டிசன் ஆக்கிட்டீங்களே, சகோதரின்னே சொல்லலாம் :-))))).

நன்றிப்பா.

தக்குடு said...

//கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. சந்தடி சாக்குல சீனியர் சிட்டிசன் ஆக்கிட்டீங்களே, சகோதரின்னே சொல்லலாம் :-))))).// ok akka!..:)

Anisha Yunus said...

"ஆஹா....அப்ப 'அது' அவனில்லையா? நாந்தான் தப்பா நினச்சிட்டேனா? அவ்வ்வ்வ்வ்வ்..." கலக்கல் கதை, ஆனா "பேசிட்டே நடந்தா 40கிமீ கூட நடக்கலாம்னு சொன்னப்ப‌வாவது சொல்லியிருக்கலாம். அது ஹாய் ஹாய் ஜாதியில்லே, வவ் வவ் ஜாதின்னு...இப்படி கவுத்திட்டீங்களே?"

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அன்னு,

அது எப்டிம்மா!!... ஹனி வூட்லதான் எப்பவும் அவங்கிட்ட பேசிக்கிட்டே இருக்காங்களே.. அப்றம் எப்டி சொல்வாங்க :-))))

முதல்வரவுக்கு நன்றி. அடிக்கடி வரணும்.

கண்ணகி said...

அட நல்ல ட்விஸ்ட்...நல்லாருக்கு...தொடருங்கள்...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கண்ணகி,

நன்றிங்க.

Anonymous said...

he he romba nalla iruku, na kooda ennamo nenachuten

LinkWithin

Related Posts with Thumbnails