Saturday 23 January 2010

உள்ளிருப்பு போராட்டம்.

தலைப்பிரசவத்துக்காக, இந்தியா வந்திருக்கும் தம்பிமனைவியிடம், போனில் பேசிக்கொண்டிருந்தேன்.ஏழு மாதங்கள் ஆனபின் தான் வருவேன் என்றவள், ஐந்து மாதங்களிலேயே இந்தியா வந்து விட்டாள். 'பனிக்குடத்தில் நீர் கம்மியாக இருக்கிறது, ஆகவே ஏழு,எட்டு மாதங்கள் ஆன நிலையில் விமானப்பயணம் அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை' என்று அவளது டாக்டர் சொல்லி விட்டாராம்.எனவே தம்பி, அவசர அவசரமாக குறைந்த நாள் விடுப்பில் கொண்டுவந்து விட்டுவிட்டு, திரும்பிச்சென்று விட்டான்.

பனிக்குட நீர் கர்ப்பகாலத்தில் குழந்தைக்கு பாதுகாப்பை கொடுக்கிறது. கர்ப்பிணியின் வயிற்றில் தெரியாத்தனமாக அடிபட்டுவிட்டால்கூட அது குழந்தையை அதிகம் பாதிக்காது. சிசுவின் வளர்ச்சிக்கு, இந்த நீர் மிகவும் முக்கியமானது.சிசு இந்த நீரைக்குடிப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அதனுடைய நுரையீரல்கள் வளர்ச்சி பெறுகிறதாம். இப்படி குடிக்கப்படும் நீர், சிசுவால் 'சூசூ'வாக வெளியேற்றப்படுகிறது.இதனால் சிசுவை சூழ்ந்திருக்கும் நீரின் அளவு, மெயிண்டெயின் செய்யப்படுகிறது.

சாதாரணமாக 36-37 வாரங்கள் ஆன நிலையில் 800மிலி-1000மிலி வரை இருக்கும். அதன் பின், கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.ஆனால், ரொம்ப சீக்கிரமாகவே குறைய ஆரம்பித்து விட்டால், சிசுவின் அசைவு பாதிக்கப்படுகிறது.ஆகவே கை,கால்கள் வளைந்து பிறத்தல், கிட்னி சரியாக வளர்ச்சி பெறாத நிலையில் பிறத்தல் என்ற சில நிலைகளை சந்திக்க நேரிடும்.நார்மல் டெலிவரி என்பதே கொஞ்சம் கஷ்டமாகி, சிசேரியனுக்கும் இட்டுச்செல்லும்.

இந்த நீர் குறைபாட்டை வழக்கமான செக்கப்புக்கு செல்லும்போதே, டாக்டர்கள் கண்டுபிடித்து,தேவையான மருந்துகளை கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இது எதனால் ஏற்படுகிறது, என்பதையும், இன்னும் விளக்கமாக கண்டுபிடிக்க முடியவில்லை.சாதாரணமாக, கர்ப்பிணியின் உடம்பில் ஏற்படும் dehydration, ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஆகவே, இந்த சமயத்தில் நிறைய நீர் அருந்துவதையும், ஓய்வு எடுத்துக்கொள்வதையும் சிபாரிசு செய்வார்கள்.இப்படி ஒரு சூழ்நிலையில்தான் அவள் இந்தியா வந்திருந்தாள்.

வழக்கமான விசாரணைகளுக்குப்பின், பொதுவாக பேசிக்கொண்டிருந்தோம்.எனக்கு ஏதோ நெருடியது.. ஏனெனில் அவள், மிகவும் கலகலப்பானவள்.தைரியசாலி..ஒரு நிமிடம் கூட சோம்பியிருக்க மாட்டாள். இன்றைக்கு ஏனோ.. சுரத்தில்லாமல் பேசிக்கொண்டிருந்தாள். சரி.. கர்ப்பகால அசதி, தலைப்பிரசவம் என்பதால பயம்,fluid குறைவாக இருப்பதால், ஏதும் பிரச்சினை வருமோ என்ற குழப்பம்... இப்படி ஏதாவது காரணம் இருக்கலாம், என்று நினைத்துக்கொண்டு, "என்னம்மா.. டாக்டரிடம் போனாயா?.. என்ன சொன்னார்?" என்று கேட்டேன்."மைனி..எனக்கு, இந்த ஆஸ்பத்திரி அவ்வளவு திருப்திகரமாக இல்லை, சுகாதாரமாகவே இல்லை.. நான் வேறு ஆஸ்பத்திரி போகப்போகிறேன்" என்றாள். எனக்கு ஒரு நிமிடம் குழப்பமாக இருந்தது. மருத்துவம் சார்ந்த துறையில் பணிபுரியும், எனது இன்னொரு அண்ணிக்கு அங்கே நல்ல பழக்கம் உண்டு, அவர்களின் சிபாரிசால்தான் அந்த ஆஸ்பத்திரி தேர்ந்தெடுக்கப்பட்டது.பின் என்ன குழப்பம்.. இங்கே சிபாரிசு இருந்தா.. சிசேரியன் செய்யாம நார்மல் டெலிவரிக்கு காத்திருப்பாங்களாம். அண்ணியால் சிபாரிசு செய்யப்பட்ட ஒருபெண்ணுக்கு ஆபரேஷன் தியேட்டர்வரை சென்று, பின் நார்மல் டெலிவரி ஆனது. இன்னொரு சொந்தக்காரப்பெண், இந்த விபரம் தெரியாமல் விட்டுவிட்டதால் சமீபத்தில், சிசேரியன் ஆனது.

இப்பல்லாம் இந்த சிசேரியன் கலாச்சாரம் பெருகி வருகிறதோ.. என்று ஒரு தோணல்.. நார்மல் என்பதே அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஆகிவிட்டது. எந்த ஆஸ்பத்திரியிலும், அவசரப்பட்டு செய்வதில்லை.. என்று நினைத்தாலும்,வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் நார்மலுக்கு காத்திருக்கலாமே என்று ஒரு ஆதங்கம்.

அவள் குறிப்பிட்ட வேறொரு ஆஸ்பத்திரி, நான் ஏற்கனவே அவளிடம் சொன்னதுதான், இங்கே,இந்த நீர் குறைபாட்டுடன் வரும் கர்ப்பிணிகளை,முழு கவனத்துடன் பார்த்துக்கொள்கிறார்கள். வேறுவழியில்லை என்றால் தவிர சிசேரியன் செய்வதில்லை.அங்கேதான் போகப்போகிறேன் என்றிருக்கிறாள். 'எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டுமே பகவானே' என்றிருக்கிறது.

26 comments:

Anonymous said...

பல தாய்மார்களே சிசேரியன் விரும்பறாங்க. என்ன பண்ணறது ?

சந்தனமுல்லை said...

நல்ல தகவல்கள் - பகிர்வு. இப்போதெல்லாம் நிறைய பெண்கள் நார்மலைத் தான் விரும்புகிறார்கள் - அதற்காக பேறுகால உடற்பயிற்சிகளும் மருத்துவமனைகளில் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. அவசியமான இடுகையை தந்திருக்கிறீர்கள் - நன்றிகள்!

pudugaithendral said...

பல தாய்மார்களே சிசேரியன் விரும்பறாங்க. என்ன பண்ணறது ?//

ஆமாம்பா, எனக்குத் தெரிந்த ஒரு பெண். நர்ஸ் வேலை பார்ப்பவர். அவர் சிசேரியன் தான் வேனும்னு செஞ்சுகிட்டாங்க.

நார்மலா பிறப்பதுதான் நல்லது. அவசரத் தேவைன்னாதான் சிசேரியன்னு யார் எடுத்துசொல்வது??

எல்லாம் நல்லபடியா நடக்கும் அமைதிச்சாரல். திருச்சி தாயுமானவருக்கு வேண்டிக்கோங்க.

pudugaithendral said...

http://pudugaithendral.blogspot.com/2008/01/blog-post_31.html


http://pudugaithendral.blogspot.com/2008/01/blog-post_2795.html

எல் கே said...

//பல தாய்மார்களே சிசேரியன் விரும்பறாங்க. என்ன பண்ணறது ?//

miga sari.. numerology appuram fansy date ithellam parthuthan ippa kulandai petthuka virumbaranga

miga sogamana visyaam

ungal tambi manaiviku suga prasavan aga en valthugal and prarthanaigal

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சின்ன அம்மணி,

உங்களுக்கு பதில் l.k.சொல்லியிருக்காரு, பாருங்க.

மேலும், நார்மல்தான் வேணும்ன்னு சொல்றவங்களுக்கும், கத்தியை காட்டுவது, தேவையில்லை இல்லையா?

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தனமுல்லை,

ஆமாம்..prenatal,postnatal ரெண்டுமே இருக்கு. பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் குறைபாடு இருந்தால், டாக்டர் சொல்லாமல் எதுவும் செய்யக்கூடாது.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க புதுகைத்தென்றல்,

சரியா சொன்னீங்கப்பா.. சிக்கல் இருந்தா சரின்னு ஒத்துக்கலாம். இல்லை என்னும்போது இதை விலக்கிவிடலாமே.

சாந்தி மாரியப்பன் said...

சுட்டிகளுக்கு நன்றிப்பா.. புதுகைத்தென்றல்,

ஏழு, எட்டு வருஷம் முன்பு போன ஞாபகம்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க L.K.,

நச்ன்னு சொல்லியிருக்கீங்க.

வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் சேர்ப்பித்து விடுகிறேன்.

பா.ராஜாராம் said...

முல்லை தளத்தில் உங்கள் பின்னூட்டம் என்னை ஈர்த்தது.இந்த பகிரல் கூடுதலாகவும்.

உபயோகமான பகிர்வுங்க.

ப்ரியமுடன் வசந்த் said...

copied...!

thanks...

avvv...

நசரேயன் said...

//சின்ன அம்மிணி said...

பல தாய்மார்களே சிசேரியன் விரும்பறாங்க. என்ன பண்ணறது ?
//

அம்மணி சொல்வது சரிதான், நேரம் காலம் எல்லாம் குறித்து சிசேரியன் பண்ணுறாங்க

ஹுஸைனம்மா said...

நார்மலா, சிஸேரியனா என்பதை மருத்துவரின் திறமையில் நம்பிக்கை வைத்து அவ்ரது முடிவில் விட்டுவிடவேண்டும். சில சூழ்நிலைகளில் நார்மல்தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதும் தவறு.

எல்லாம் இறையருளால் நல்லபடியே நடக்கும். கவலை வேண்டாம்.

எல் கே said...

//சில சூழ்நிலைகளில் நார்மல்தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதும் தவறு.//

correctthan but ippalam neraya doctors venumne operation panranga.

அம்பிகா said...

எல்லாம் நல்லபடியே நடக்க வாழ்த்துக்கள்.

\\இப்பல்லாம் இந்த சிசேரியன் கலாச்சாரம் பெருகி வருகிறதோ.. என்று ஒரு தோணல்..\\
உண்மைதான்.
இருதரப்பினருமே ரிஸ்க் எடுக்க விரும்பாததும் ஒரு காரணம்.
பெண்களின் தாமதமான திருமணம், தாமதமான முதல் பிரசவம் என பல காரணங்கள் சொல்லப் படுகின்றன..
நல்ல பகிர்வு.

சாந்தி மாரியப்பன் said...

ஸாரிப்பா.. பயணத்தில் இருந்தேன்.

தமிழ் fonts இல்லாததால் உடனடியா பதில் சொல்ல முடியவில்லை.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பா.ராஜாராம்,

முதல் வரவா, நன்றி.

கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்த்,

//avvv//

பயப்படப்பிடாது :-)))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க,

நசரேயன்,

ஹுஸைனம்மா,

L.K.,

வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

விரும்புபவர்களை விட்டுவிடலாம். வாய்ப்பும், சூழ்நிலையும் இருக்கும் பட்சத்தில் இதை தவிர்க்கலாமே என்பதுதான் என் ஆதங்கம்.

எல் கே said...

//பெண்களின் தாமதமான திருமணம், தாமதமான முதல் பிரசவம் என பல காரணங்கள் சொல்லப் படுகின்றன..///

sari.another thing is heels is cauing problems. wearig high heals leads to operation

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அம்பிகா,

முதல் வரவுக்கு நன்றி,

வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க l.k.,

//another thing is heels is cauing problems. wearig high heals leads to operation//

ஹீல்ஸ் போட்டா முதுகுவலி வரும்னு தெரியும், இது எப்படிப்பா!!!!

sorry- தான் சரியான spellingனு நினைக்கிறேன். :-)

எல் கே said...

//ஹீல்ஸ் போட்டா முதுகுவலி வரும்னு தெரியும், இது எப்படிப்பா!!!!//

yes its lead to back pain which was due to some kind of stress created in back bones which is also cauing the problem related to delivery. i willcheck with my family doctor in salem to give correct exact explanation.

goma said...

75% டாக்டர்களே தங்கள் நேரத்தை ஈடுகட்ட சிசேரியன் முறையை ஆதரிக்கின்றனர்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமா,

புது வரவா... நன்றிப்பா.

ஆமாம்ப்பா..கையில காசு, வாயில தோசைதான். இதில் அந்த பொண்ணோட ஆபரேஷனுக்கு அப்புறமான உடல்நிலை கோளாறுகளை இருதரப்பினருமே யோசிப்பதில்லை.

LinkWithin

Related Posts with Thumbnails