Saturday 10 January 2015

சென்னை புத்தகத்திருவிழா - 2015

வாசிப்பனுபவத்தில் மூழ்கி முத்தெடுக்கக்காத்திருக்கும் வாசகர்களையும், அவர்களுக்குத்தீனி போடக்காத்திருக்கும் பதிப்பகங்களையும் புத்தகங்கள் என்ற சங்கிலி இணைக்கிறது. அதுவும் நேற்று ஆரம்பித்து வருகிற 21-ம் தேதி வரை நடைபெற இருக்கும் புத்தகத்திருவிழாவில் வாசகர்கள் தேனில் விழுந்த ஈக்களாய் 'எதை எடுக்க.. எதை விட' என்று மயங்கித்திரியப்போவது நிச்சயம்.

புத்தகக் கண்காட்சி என்பதை விட திருவிழா என்று கூறுவது மிகப்பொருத்தமானது என்றே தோன்றுகிறது. ஒரு உற்சாகமான மனநிலையையும் கொண்டாட்டத்தையும் உருவாக்கக்கூடிய ஒன்றை வேறெப்படித்தான் கூறுவதாம்?
இந்தப்புத்தகத்திருவிழாவில் 'சிறகு விரிந்தது' என்ற எனது கவிதைத்தொகுப்பு உட்பட அகநாழிகைப்பதிப்பகத்தின் அனைத்து நூல்களும் வீரபாண்டிய கட்டபொம்மன் வீதி 'அகநாழிகை அரங்கு எண்-304' ல் கிடைக்கும். கவிதைத்தொகுப்பை இணையத்திலும் வாங்கலாம்.

அரங்கில் அடுக்கப்பட்டிருக்கும் அகநாழிகைப்பதிப்பக வெளியீடுகள்..
அரங்கின் வரைபடம்
படங்கள் மற்றும் தகவல் திரு. வாசுதேவன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து.

அகநாழிகைப் பதிப்பகத்தின் வெளியீடுகள் - 2013, 2014 மற்றும் - ஜனவரி 2015
கவிதைகள் 
விரல் முனைக் கடவுள் - ஷான் (ரூ.80)
சொந்த ரயில்காரி - ஜான் சுந்தர் (ரூ.70)
மௌன அழுகை - மு.கோபி சரபோஜி (ரூ.70)
மலைகளின் பறத்தல் - மாதங்கி (ரூ.80)
ஏன் என்னைக் கொல்கிறீர்கள் - க.இராமசாமி (ரூ.60)
என் வானிலே - நிம்மி சிவா (ரூ.50)
யுகமழை - இன்பா சுப்ரமணியன் (ரூ.70)
கவிதையின் கால்தடங்கள் (50 கவிஞர்களின் 400 கவிதைகள்) - தொகுப்பாசிரியர் : செல்வராஜ் ஜெகதீசன் (ரூ.230)
அன்ன பட்சி - தேனம்மை லட்சுமணன் (ரூ.80)
சிறகு விரிந்தது - சாந்தி மாரியப்பன் (ரூ.80)
இலைகள் பழுக்காத உலகம் - ராமலக்ஷ்மி (ரூ.80)
தனியள் - தி.பரமேசுவரி (ரூ.100)
அவளதிகாரம் - வசந்த் தங்கசாமி (ரூ.200)
சிவப்பு பச்சை மஞ்சள் வௌ¢ளை - செல்வராஜ் ஜெகதீசன் (ரூ.70)
மணல் மீது வாழும் கடல் - குமரகுரு அன்பு (ரூ.70)
ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம் - உமா மோகன் (ரூ.70)
அக்காவின் தோழிகள் - நீரை. மகேந்திரன் (ரூ.60)
தூக்கம் விற்ற காசுகள் - ரசிகவ் ஞானியார் (ரூ.90)
சிறுகதைகள்
சுனை நீர் - ராகவன் ஸாம்யேல் (ரூ.110)
தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் - இராய. செல்லப்பா (ரூ.120)
அடை மழை - ராமலக்ஷ்மி (ரூ.100)
குறுக்கு மறுக்கு - சிவக்குமார் அசோகன் (ரூ.70)
முப்பத்தி நாலாவது கதவு (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்) - தமிழில் : புல்வெளி காமராசன் (ரூ.120)
சக்கர வியூகம் - ஐயப்பன் கிருஷ்ணன் (ரூ.80)
வற்றா நதி - கார்த்திக் புகழேந்தி (ரூ.120)
அம்மாவின் தேன்குழல் - மாதவன் இளங்கோ (ரூ.130)
என்றாவது ஒரு நாள் (ஆஸ்திரேலிய புதர்க்காடுறை மனிதர்களின் வாழ்க்கைக் கதைகள்) - ஹென்றி லாசன் - தமிழில் : கீதா மதிவாணன் (ரூ.150)
கட்டுரைகள்
வெயில் புராணம் - உமா மோகன் (ரூ.25)
கலிகெழு கொற்கை (மீனவர் வாழ்வியலை முன்வைத்து ஜோ டி குரூஸ் படைப்புலகம்) தொகுப்பாசிரியர் : தி.பரமேசுவரி (ரூ.240)
யாருக்கானது பூமி? - (சூழலியல் - காட்டுயிர் பாதுகாப்பு - பறவையியல் கட்டுரைகள்) பா.சதீஸ் முத்து கோபால் (ரூ.140)
பேயாய் உழலும் சிறுமனமே - இளங்கோ டிசே (ரூ.150)
நாவல்
நுனிப்புல் - வெ.இராதாகிருஷ்ணன் (ரூ.130)

8 comments:

Yaathoramani.blogspot.com said...

அவசியமான விரிவான அருமையான
தக்வல் பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி ஐயா

துளசி கோபால் said...

வாவ்! சென்னைக்குப் போயிருக்கீங்களா!!!

புத்தகத்திருவிழா தான் சரியான சொற்கள். நானும் அப்படித்தான் குறிப்பிடுவேன்!

முதலில் என் வாழ்த்துகளைப் பிடியுங்க. சிறகு விரிந்தது. தலைப்பே கவிதை!

புத்தகத் திருவிழா கூடாரத்தில் தெருப்பெயர்கள் கொடுத்த ஐடியா சூப்பர். யாரோட கண்டுபிடிப்பு?

அப்படியே ஒரு எட்டு சந்தியாவுக்குப்போய் அக்கா அங்கெ இருக்காங்களான்னு என் சார்பில் பாருங்க.

'பரிவை' சே.குமார் said...

புத்தகத் திருவிழாவில் தங்களின் படைப்பு அகநாழிகை அரங்கில்...

வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

புத்தக திருவிழாவில் உங்களின் படைப்பு இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள். மற்றும் அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

கீதமஞ்சரி said...

வாழ்த்துகள் சாந்தி. அகநாழிகையின் அரங்கு எண் 304. ஒரு இடத்தில் 314 என்று பதிவாகியுள்ளது. கவனியுங்களேன்.

ஹுஸைனம்மா said...

முதல் முறை புத்தகம் வெளியிட்டிருக்கும் கீதமஞ்சரிக்கும் என் வாழ்த்துகள். நீங்க, துளசி டீச்சர், ராமலக்ஷ்மிக்கா, தேனக்கா எல்லாரும் புத்தக வெளியீட்டில் ’சீனியர்கள்’ ஆச்சே.

இப்ப சென்னையிலயா இருக்கீங்க?

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாந்தி பொங்கல் வாழ்த்துகளோடு புத்தக வாழ்த்துகளும். சென்னை வந்திருக்க்கிறீர்களா. எல்லோருமே சென்னையில் தான் இருக்கிறீர்களோ என்னவோ. நல்லதொரு பகிர்வு ஷாந்தி.

LinkWithin

Related Posts with Thumbnails