காமிரா என்றவொரு அறிவியல் கண்டுபிடிப்பு மனிதனுக்கு முதன்முதலில் அறிமுகமாகியபோது அதை ஆச்சரியத்தோடு பார்த்தவர்களை விட பயம் கலந்த ஆச்சரியத்தோடு பார்த்தவர்கள்தான் அதிகமாக இருந்திருக்கக்கூடும். "படம் புடிச்சா அளகு குறைஞ்சுடும், ஆயுசு குறைஞ்சுடும்" என்று போட்டோ எடுத்துக்கொள்வதை எவ்வகையிலாவது தள்ளிப்போட்ட நமது பாட்டன், பாட்டிகள், காண்பவற்றையெல்லாம் படம் பிடித்துத்தள்ளும் இன்றைய டிஜிட்டல் உலகத்தையும், காமிரா அடங்கிய மொபைலில் நிமிடத்துக்கொரு முறை செல்ஃபி எடுத்துக்கொள்ளும் மக்களையும் காண நேர்ந்தால் எவ்வகை அதிர்ச்சிக்கு உள்ளாவார்களோ!! :-))
அப்படியில்லாமல் துணிந்து தங்களையும் தங்கள் வாழ்வியலையும் காமிராவில் பதிவு செய்த துணிச்சல்வாதிகளால்தானே அன்றைய வாழ்வியலை அறிந்து கொள்ள முடிகிறது. எத்தனையோ பேருக்கு தங்கள் முந்தைய தலைமுறையை படத்திலாவது காண முடிகிறது. அந்த வகையில் அன்றாட வாழ்க்கையில் கண்ணையும் கருத்தையும் கவர்ந்த சில காட்சிகளை ஒளிப்படமாக்கியவற்றில் சிலவற்றை ஏற்கனவே முதல் பாகமாகப் பகிர்ந்திருந்தேன். தொடர்ச்சியாக மேலும் சில.
போவோமா ஊர்கோலம்..
ஆலையகப்பட்ட கரும்பாய் வாழ்வும்..
பஞ்சு மிட்டாய் பத்து ரூபாய்..
குறுக்கப்பட்ட விருட்சம்..
நண்பேண்டா//
தலைமுறைகள்..
பழுத்த பழம்..
ஐஸ்..
எங்கே செல்லும் இந்தப்பாதை..
இயந்திர வாழ்க்கை பிழிந்தெடுக்கிறது..
அ.. ஆச்சரியம்..
பதனி.. பதனீய்..
எல்லாம் வெங்காயம்..
நிறைவு செய்கிறது வெற்றிலை..
ரோட்டோரத்தில் வாழ்ந்தாலும்.. பசிக்கிறதே..
இளைய தாத்தா..
நல்ல மேய்ப்பர்..
சுத்தம் சோறு போடும்..
கல்லிலிருந்து கட்டடம் வரை..
சுமையல்ல..
5 comments:
கவித்துவமான புகைப்படங்கள்
மனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
ஆம், எங்கும் செல்ஃபி மயம் :) !
அருமையான காட்சிகள். அழகான ஒளிப்பட ஆக்கம்.
படங்கள் அருமை.
ஒவ்வொரு படத்திலும் உங்கள் பெயரை எந்த இடத்தில் பதிவு செய்திருக்கிறீர்கள் என்று சுவாரஸ்யமாகப் பார்த்தேன். வெங்காயம் படத்தில் உங்கள் பெயரை மஞ்சள் நிறப் பட்டையில் வந்திருக்கலாமோ...
அக்கா... படங்கள் எல்லாம் அழகு.
இரண்டு பகுதி படங்களையும் பார்த்தேன். எல்லாமே நேர்த்தி. அபெர்ச்சர் செட்டிங்க்ஸ் இன்னும் கூடுதல் தகவல். இன்றைக்கு வலைப்பதிவுகளில் உள்ள படங்களின் முக்கியத்துவம் புரியாது. 20 அல்லது 50 வருடங்கள் கழித்து இவை வரலாறு பேசும்.
பதிவினுக்கு நன்றி. (எனக்கும் போட்டொகிராபியில் ஆர்வம் உண்டு)
த.ம.4
Post a Comment