Monday 13 October 2014

தெளிவும் .. குழப்பமும்.

திறமையற்ற உழைப்பும், உழைக்க மனமற்ற திறமையும் வீணே. 

அறியாமை பிழையல்ல.. அறிந்து கொள்ள கடுகளவேனும் முயலாமல் இருப்பதே பெரும்பிழை.

"இனி பொறுப்பதற்கில்லை" என்று சொல்லிக்கொண்டே மேலும் மேலும் பொறுத்துக்கொள்கிறோம் ஒவ்வொன்றையும்.

இன்றைய வெற்றி கொடுத்த இனிய நினைவுகளிலேயே தேங்கி நின்று விடாமல் எதிர்கால வெற்றிகளுக்கான நகர்தலில் ஈடுபடுபவனே அறிவாளி.

பெரியவர்களின் கண்ணாடியையும், காலணிகளையும் ஒரு தடவையேனும் விரும்பி அணிந்திடாத குழந்தை உலகில் இன்னும் பிறந்திடவில்லை.

வெளிக்காட்டிக் கொள்ளாததாலேயே எதுவும் இல்லையென்று ஆகி விடுவதில்லை.

அவசர புத்தியும் ஆராயாத்தன்மையும் சிந்தனையை மழுங்கடித்து எண்ணங்களையும் பாழ்படுத்தி விடுகிறது.

எண்ணங்களைக் கெடுத்துக்கொள்வதை விட, தெளிந்த பின்னும் அவற்றைத் திருத்திக்கொள்ளாதிருப்பதே பெருந்தவறு.

அன்பு செய்தலும் செய்யப்படுதலும் வாழ்வின் மிக இனிய வரங்கள்.

கிடைப்பதுதான் கிடைக்கும் என்று சோர்ந்து உட்காராமல் நமக்கு வேண்டியதைப்பெற அயராது முயல்வோம்.

குழப்பவாதிகள் எப்போதுமே தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.

6 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அருமையாகசொல்லியுள்ளீர்கள்... பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ராமலக்ஷ்மி said...

அத்தனை சிந்தனைத் துளிகளும் அருமை.

ஐந்தாவது.. உண்மைதான், இரசித்தேன்:)!

ஸ்ரீராம். said...

மூன்றாவது எண்ணத்தைப் படித்ததும் பழைய பிரதமர் நினைவுக்கு வந்தார்!

எல்லாமே அருமை.


கரந்தை ஜெயக்குமார் said...

சிந்தனைத் துளிகள் அருமை

வல்லிசிம்ஹன் said...

குழப்பவாதிகளின் தெளிவு அருமை.

கோமதி அரசு said...

அன்பு செய்தலும் செய்யப்படுதலும் வாழ்வின் மிக இனிய வரங்கள்.//
அருமை.

LinkWithin

Related Posts with Thumbnails