Monday 14 July 2014

படிப்படியாய்..


நம்பிக்கையின்மையை நப்பாசை முந்திச்செல்ல முயல்கிறது, சில சமயங்களில் வென்றும் விடுகிறது.

அளவு கடந்த பயம் தேவையற்ற கற்பனையைத்தூண்டுகிறது, கற்பனை மேலும் பயத்தை வளர்த்தெடுக்கிறது.

ஓங்கி உயர்ந்து வரும் ஒரு கிளையை அரக்கினாலும், தளராமல் உடம்பெல்லாம் கிளைக்கும் தாவரத்திடமும் கற்றுக்கொள்ள இருக்கிறது ஒரு வாழ்க்கைப்பாடம்.

அறிவுரைகளோ, ஆலோசனையோ நம்பிக்கையையும் தைரியத்தையும் மேலும் வளர்ப்பதாக இருக்க வேண்டுமே தவிர சிதைப்பதாக இருக்கக்கூடாது.

அவநம்பிக்கை புகுந்திருக்கும் மனதில் மருட்சி இருளாய் நிரம்பி விடுகிறது. ஞான அகலேற்றி அவற்றை விரட்டுவோம்.

கற்றுக்கொடுக்க உலகெங்கும் புல்பூண்டு வடிவில்கூட ஆசிரியர்கள் நிறைந்திருக்கிறார்கள், ஆனால் பரீட்சையை மட்டும் விதி தன்னந்தனியே நடத்துகிறது.

நமக்குச் சொல்லப்பட்ட ஆலோசனைகளை அப்படியே ஏற்காமல், அந்தந்தக் காலகட்டத்திற்கும் அப்போதைய நிலைக்கும் நன்மை பயப்பவற்றை மட்டும் ஏற்றல் நலம்.

தீ, விவாதம், கடன், விரோதம் போன்றவைகளை மீதம் வைக்காமல் அப்போதைக்கப்போது முடித்துவிட வேண்டும்.

தலையைக் குனிந்து கொண்டு சென்று கொண்டிருந்த மந்தையில், நிமிர்ந்து நடந்த ஆடொன்று புதிய வழிகளைக் கண்டுபிடிக்க ஆரம்பித்தது அந்த நொடிகளிலிருந்து.

எதிர்பாரா விதமாக அந்த நொடியில் நிகழ்ந்தவையாக நினைக்கப்பட்டவையெல்லாம் உண்மையில் அதற்கு முந்தைய நொடிகளிலிருந்தே நிகழ்வை ஆரம்பித்தவையாக இருக்கும்.

8 comments:

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் அருமை.

ஸ்ரீராம். said...


எல்லாமே நன்று. ஆனால் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் யாரும் கேட்பதேயில்லை! எல்லோருமே மற்றவர்களுக்குச் சொல்லத்தான் தயாராயிருப்பார்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

//கற்றுக்கொடுக்க உலகெங்கும் புல்பூண்டு வடிவில்கூட ஆசிரியர்கள் நிறைந்திருக்கிறார்கள்///
உண்மைதான் சகோதரியாரே

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை.

நீங்கள் தந்திருக்கும் படமும் தான்!

'பரிவை' சே.குமார் said...

அனைத்தும் அருமை அக்கா...
நீண்ட நாட்களுக்குப் பிறகு பதிவு...
தொடர்ந்து எழுதுங்கள் அக்கா...

ராஜி said...

இன்னிக்கு உங்க திருமண நாள்ன்னு நினைக்குறேன். வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

வெகு அருமை.சிந்தனையைத் தூண்டிவிடும் வார்த்தைகள். கொஞ்சமாவது உள்ளே ஏற்றிக் கொள்ளப் பார்க்கிறேன். நன்றி ஷாந்திமா.

கோமதி அரசு said...

ஓங்கி உயர்ந்து வரும் ஒரு கிளையை அரக்கினாலும், தளராமல் உடம்பெல்லாம் கிளைக்கும் தாவரத்திடமும் கற்றுக்கொள்ள இருக்கிறது ஒரு வாழ்க்கைப்பாடம்.//

ஆம், உண்மை சாந்தி.
வாருங்கள் அடிக்கடி பதிவு பக்கம்.

LinkWithin

Related Posts with Thumbnails