ஃபேஸ்புக்கில்"குங்குமம் தோழி" பத்திரிகை, நண்பர்களின் சிந்தனைகளை தினமொழி என்ற தலைப்பில் வெளியிட்டு வருகிறது. எனது சாரல்துளிகளும் அவ்வப்போது இடம் பெறுவது வழக்கம் என்றாலும் இந்தத்தடவை தனது அளவற்ற அன்பினால் என்னைத் திக்கு முக்காடச் செய்து விட்டாள் என் தோழி. செப்டம்பர் இறுதி நாளில் தொடங்கி அக்டோபர் 10-ம் தேதி வரைக்கும் ஒன்றிரண்டு நாட்களைத்தவிர தினமும், அதாவது கிட்டத்தட்ட அந்த வாரம் முழுவதையுமே எனது "சாரல் துளிகளுக்காக" ஒதுக்கிய அவளது அன்பை என்னவென்பது.
"இந்த வாரம்.. எனது வாரம்" என்று வீட்டில் சற்றே கர்வப்பட்டுக்கொண்டேன். பின்னே,.. நம் அருமை பெருமைகளை வீட்டிலுள்ளவர்களிடம் இது மாதிரியான சமயங்களில்தானே டமாரம் அடித்துக்கொள்ள முடியும். நமக்கென்று ஒரு கெத்து இருக்கிறதல்லவா :-)))
உங்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதே சமயம் என் கல்வெட்டுகளையும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டுமே. ஆகவே இங்கே பகிர்ந்து விட்டேன் :-)
13 comments:
தினமொழிகள் அத்தனையும் அருமை.
மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள் தான்.
பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
>>>>>
//"இந்த வாரம்.. எனது வாரம்" என்று வீட்டில் சற்றே கர்வப்பட்டுக்கொண்டேன்.//
நிச்சயமாக ! YOU ARE WELL DESERVED FOR IT !!
//பின்னே,.. நம் அருமை பெருமைகளை வீட்டிலுள்ளவர்களிடம் இது மாதிரியான சமயங்களில்தானே டமாரம் அடித்துக்கொள்ள முடியும். நமக்கென்று ஒரு கெத்து இருக்கிறதல்லவா :-)))//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா .... ரஸித்தேன் .... சிரித்தேன் .... ஆமாம் ஆமாம் ... உண்மை தான் ... அதே அதே ... வீட்டுக்கு வீடு வாசப்படி !
சொத்தாக நினைக்கும் நம் ’கெத்’தை நாம் விடக்கூடாது தான். ;)))))
தினமொழிகள் மிக அருமை.
வாழ்த்துக்கள்.
சாரல் துளிகளுக்கு வாழ்த்துக்கள்.
Soooper Saral Madam! I feel happy to see your words in KUNGUMAM THOZHI! My heartful wishes to you!
தினமொழிகள் அருமை
வாழ்த்துகள்:)!அனைத்து மொழிகளும் அருமை. மூன்றாவது மிகப் பிடித்தது.
பழக்க தோஷத்தில் லைக் பட்டனை தேடினேன். நல்ல மொழிகள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் அமைதிச்சாரல்..
குங்குமத்தில் வந்ததுக்கு வாழ்த்துகள்!!
ஆனாலும், ஒரு விஷயம் ஆச்சரியமாருக்கு... எப்படி இப்பிடிலாம் சிந்திக்கிறீங்க... நானுந்தான் சிந்திச்சு சிந்திச்சுப் பாக்குறேன்... லஞ்சுக்கு என்ன செய்ய, டிபனுக்கு என்னன்னுதான் ‘சிந்தனை’ வருது.... :-(
வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் அக்கா,அனைத்தும் முத்துக்கள்!!
தினமொழிகள் அனைத்துமே அருமை..... தொடரட்டும்.
வாழ்த்துகள் சகோ.
எப்படி வாழ்த்துவேனடி தோழி ! :) அருமை.பாராட்டுக்கள் பல.
Post a Comment