Friday 23 August 2013

இலைகள்.. PIT போட்டிக்காக..

மலர்களுக்கு வாரி வழங்கிய வர்ணங்களையும் வடிவமைப்பையும் எந்த வித கஞ்சத்தனமுமில்லாமல், பாரபட்சமில்லாமல் இலைகளுக்கும் வழங்கியிருக்கிறாள் இயற்கையன்னை. பூக்களின் அழகுக்கு எந்தவிதத்திலும் குறைந்து விடாத "இலைகள்"தான் இம்மாத 'பிட்'போட்டிக்கான கருப்பொருள். கண்டதையெல்லாம் பிடித்துக்கொண்டு வந்ததில் இரண்டாவது படத்திலிருக்கும் க்ரோட்டன்ஸ் 'நான் போட்டிக்குப் போகிறேன்' என்று அடம் பிடித்ததால் அதை 'சென்று வா.. வென்று வா' என்று வீரத்திலகமிட்டு வாழ்த்தி அனுப்பியிருக்கிறேன். மீதமிருப்பவை எக்ஸிபிஷனில்..

நான் போட்டிக்குப் போறேனே..










 காடு மேடு எல்லாம் சுற்றினாலும் தோட்டத்து மூலிகையை மறந்து விட முடியுமோ!!.. எங்கள் வீட்டு வெற்றிலைகள் முகம் மறைத்து.. 

15 comments:

கோமதி அரசு said...

பூக்களுக்கு இலைகள் எந்தவிதத்திலும் குறைந்தவை இல்லை தான்.
இலைகளே மலர் மாதிரி அழகாக காட்சி அளிக்கும். உங்கள் இலை பகிர்வு எல்லாம் அழகு. க்ரோட்டன்ஸ் வென்று வரட்டும். வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

எல்லா இலைகளும் அருமையாகப் படமாக்கப்பட்டுள்ளன.

பாராட்டுக்கள்.

வெற்றிபெற வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அழகோ அழகு...


வெற்றி பெற வாழ்த்துகள்.....

ஸ்ரீராம். said...

எல்லாமே மிக அருமை. ஏழாவது இருப்பது என்ன இல்லை? வெற்றி பெற வாழ்த்துகள். படங்கள் துல்லியமாக இருக்கின்றன.

Kousalya Raj said...

ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு ! இலையை இவ்வளவு அழகாய் புகைப்படம் எடுத்த கைகளுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள் !

வெற்றிப் பெற என் அன்பான வாழ்த்துகள்!

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் அருமை சாந்தி.

Dhiyana said...

படங்கள் அழகு.. வெற்றி பெற வாழ்த்துகள்!!

கரந்தை ஜெயக்குமார் said...

அழகோ அழகு
வெற்றி நிச்சயம்

வல்லிசிம்ஹன் said...

இலை அழகு சொல்லி முடியாது. என்ன ஒரு போட்டோக்ரஃபி. அசத்திட்டிங்க சாரல். கச்சிதம் வெகு கச்சிதம். வெற்றி பெறவேண்டும். வாழ்த்துகள் மா.

கீதமஞ்சரி said...

கொள்ளை அழகு. போட்டிக்குப் போக உங்கள் படங்களுக்குள் ஒரு பெரும்போட்டியே நடந்திருக்கும் போலுள்ளதே. பாராட்டுகள் அமைதிச்சாரல்.

ஹுஸைனம்மா said...

இலைகளுக்கு இவ்வளவு அழகு உண்டு என்பது உங்கள் ப்டங்களைப் பார்த்ததும்தான் தெரிகீறது. கோமதிக்கா சொல்வது சரியே:
//பூக்களுக்கு இலைகள் எந்தவிதத்திலும் குறைந்தவை இல்லை தான்//

மேக்கப்பே இல்லாமல் இலைகளையும் பூக்களுக்கு நிகராக்கியிருக்கிறீர்கள். நிச்சயம் உங்கள் படம் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது. கண்டிப்பா ட்ரீட் தரணும் - நேரில் வரும்போது.

'பரிவை' சே.குமார் said...

படங்கள் அருமை...
வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா...

மாதேவி said...

அனைத்தும் அருமை. வெற்றிக்கு வாழ்த்துகள்.

Asiya Omar said...

விதம் விதமாக இலைகள் ! ஆஹா! அசத்தல் எதனை தேர்வு செய்வது? எல்லாமே அழகு.

cookbookjaleela said...

பச்சை பசேல்லுன்னு கண்ணுக்கு இதம் தரும் இலைகள் சூப்பரோ சூப்பர்

LinkWithin

Related Posts with Thumbnails