நாட்கள் என்றுமே தம்மைப் புதுப்பித்துக்கொள்வதில்லை. தினமும் புதிதாய்ப் பிறக்கின்றன. நாமும் புதிதாய்ப் பிறப்போம், சோர்வூட்டும் கணங்களை மீறி.
பொருந்திய சூழல்களில் சந்தோஷத்துடன் இருப்பவனைவிட பொருந்தாச்சூழல்களிலும் தன்னைப்பொருத்திக்கொண்டு சந்தோஷமாய் இருப்பவன் பாராட்டுக்குரியவன்.
நேற்றிலிருந்து கற்றுக்கொண்டு, நாளையில் நம்பிக்கை வைத்து இன்றில் வாழ்வோம்.
செயல்களின்றித் தவறுகளில்லை, தவறுகளின்றி அனுபவங்களில்லை, அனுபவங்களின்றி ஞானமில்லை.
புன்னகைத்திரையிட்டு கண்ணீரை மறைக்கத்தெரிந்த நமக்கு நம் கண்ணீருக்குக் காரணமானவர்கள் புன்னகைத்துக் கொள்வதைச் சில சமயங்களில் அறிந்து கொள்ளத் தெரியாமல் போய்விடுகிறது.
வெற்றிக்கோபுரத்தை நோக்கி இட்டுச்செல்லும் படிக்கட்டுகளில் சில தோல்விகளும் புதைந்து கிடக்கலாம்.
அருகில் சென்று உற்றுப்பார்க்காத வரைக்கும் எல்லாப் பூக்களுமே அழகாகத்தான் தெரிகின்றன..
‘எதுவும் நிரந்தரமல்ல’ என்ற இரண்டு வார்த்தைகளில் அடங்கியிருக்கின்றன எண்ணிலடங்கா உணர்வுகள்.
மேலோட்டமாகப் பார்க்கையில் சலனமற்றுத்தெரிபவை உள்ளுக்குள் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கவும் கூடும்
உழைப்பு உடலையும் அனுபவங்கள் உள்ளத்தையும் பக்குவப்படுத்துகின்றன.
23 comments:
//பொருந்திய சூழல்களில் சந்தோஷத்துடன் இருப்பவனைவிட பொருந்தாச்சூழல்களிலும் தன்னைப்பொருத்திக்கொண்டு சந்தோஷமாய் இருப்பவன் பாராட்டுக்குரியவன்.//
//உழைப்பு உடலையும் அனுபவங்கள் உள்ளத்தையும் பக்குவப்படுத்துகின்றன.//
ஆமாம். உண்மை தான். அமைதியாகவும் அழகாகவும் சொல்லியிருக்கீங்க.
பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
//அருகில் சென்று உற்றுப்பார்க்காத வரைக்கும் எல்லாப் பூக்களுமே அழகாகத்தான் தெரிகின்றன..//
ஆஹா தத்துவம் எல்லாம் சூப்பர்
மற்றவர்கள் எப்படியோ புன்னகைத்து கொண்டு போகட்டும்... அதற்கு நாம் ஒரு காரணமாக இருந்திருக்கிறோம் என்று மனதில் புன்னைகயுடன் மறந்துவிட வேண்டியது நல்லது...
தொடர வாழ்த்துக்கள்...
அத்தனையும் அருமை சாந்தி.
இங்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:)!
சாரல் துளிகள் ஒவ்வொன்றும் அருமை. குறிப்பாக... முதல் மூன்று! அவசியம் மனதில் பதித்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்!
அருமையான பகிர்வு
எல்லாம் அருமை. குறிப்பாக, செயல் தவறு அனுபவம்..., நேற்று நாளை இன்று..... நன்று.
எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும் இணைகின்றன. (நன்றி ராமலக்ஷ்மி)
நல்வாழ்த்துக்கள் சாந்தி.அனைத்தும் அருமை.என்னைக் கவர்ந்தது..
// நேற்றிலிருந்து கற்றுக்கொண்டு, நாளையில் நம்பிக்கை வைத்து இன்றில் வாழ்வோம்.//
தத்துவ முத்துக்கள் அருமை.
BELATED WISHES SHANTHI.
YOUR WORDS OF WISDOM ARE OUTSTANDING AND TOUCHING.
VALLIMAA.
வாங்க வை.கோ ஐயா,
வரவுக்கும் வாசித்தமைக்கும் மிக்க நன்றிகள்.
வாங்க முரளிதரன்,
ரசித்து வாசித்தமைக்கு மிக்க நன்றிகள்.
வாங்க தனபாலன்,
வாசித்தமைக்கு நன்றி.
வாங்க ராமலக்ஷ்மி,
ரசித்தமைக்கு மிக்க நன்றி.
வாழ்த்துகளுக்கு தாமதமான நன்றிகள் :-)
வாங்க கணேஷ்,
ரசித்து வாசித்தமைக்கு மிக்க நன்றி.
வாங்க தென்றல்,
ரசித்தமைக்கு மிக்க நன்றி.
வாங்க ஸ்ரீராம்,
ரசித்து வாசித்தமைக்கு மிக்க நன்றி.
பிறந்தநாள் வாழ்த்துகளுக்கும் நன்றி ஸ்ரீராம் :-)
வாங்க ஆசியா,
ரசித்த வரிகளைக் குறிப்பிட்டும் பாராட்டியமைக்கு மிக்க நன்றி.
வாங்க மாதேவி,
ரசித்தமைக்கு நன்றிங்க.
வாங்க வல்லிம்மா,
வாழ்த்துகளுக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றிம்மா.
வாங்க வல்லிம்மா,
வாழ்த்துகளுக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றிம்மா.
Post a Comment