ஒவ்வொரு நிமிடத்திற்கும் கலக்கலாய்க் கலர்கலராய் ஆடை மாற்றிக் கொண்டேயிருக்கிறாள் ஆகாயப்பெண். அவளுக்கும் அலுக்கவில்லை, சப்ளை செய்யும் சூரியனாருக்கும் அலுக்கவில்லை. பார்க்கும் நமக்கு மட்டும் அலுக்குமா என்ன?.
நீல வெல்வெட்டில் வர்ணக்குப்பியைக் கொட்டிக்கவிழ்த்த குறும்புக்குழந்தை யார்?.. இப்பவே தெரிந்தாகணும் :-))
மழைக்காலத்தைய மந்தஹாசமானதொரு மாலைப்பொழுதில் மலைப்பகுதியில் மாட்டிய மரங்கள்...
கம்பத்தை விட விளக்கைப் பெரிதாகப் படைத்த சிற்பி யாரோ!!!
இன்னுமொரு நாளே.. புறப்படுவோம் இலக்கு தேடி..
வேகவேகமாய் உருவங்களை மாற்றிக்கொள்ளும் மேகங்களிடம் உருவங்களைக் கண்டறிதல் சிறுகுழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் வேடிக்கையான பொழுதுபோக்கு. இந்தப்படங்களிலிருக்கும் மேகங்களில் உங்களுக்கு என்ன உருவம் தெரிகிறதென்று சொல்லுங்களேன். கண்டறிந்து விளையாடுவோம் :-))
நிலமும் நீரும் ஆகாயமும் நெருப்பும் காற்றுமாக பஞ்சபூதங்களும் சந்திக்கின்றன இந்தக் குமரி முனையில்..
கதிரவனின் கண்ணாமூச்சி விளையாட்டு. எத்தனைதான் மேக முந்தானையில் முக்காடிட்டுக் கொண்டாலும் கொண்டையை மறைக்கத்தெரியவில்லை :-))))
இதோ கண்டுபிடித்து விட்டேனே :-))
16 comments:
கண்களுக்கு நல்லதொரு விருந்து. படங்கள் ரொம்ப அருமை. பாராட்டுக்கள்
அனைத்தும் அருமை... பாராட்டுக்கள்...
நினைக்கும் உருவம் எல்லாம் தெரிகிறது... நன்றி... வாழ்த்துக்கள்...
அழகான காட்சிகளை அற்புதமாகப் படமாக்கியுள்ளீர்கள். வாழ்த்துகள்.
அனைத்துமே அத்தனை அழகு!
அனைத்துப் படங்களுமே அருமை. வாழ்த்துகள் சகோ.
மூச்சே நின்றுவிடும் அழகு வண்ணங்கள். சாரல் அழகை வளைத்துப் போட்டு விட்டீர்கள். பூமி,ஆகாசம், நீர் என்று விளையாடி இருக்கிறது காமிரா. அற்புதமான படங்கள்.மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ஆகாயத்திலொரு அழகுத்திருவிழா.
அருமை. அழகு!பாராட்டுக்கள்
வானத்திலே திருவிழா பாட்டு தான் நினைவுக்கு வருகிறது.
வானம் வசப்பட்டு உள்ளது உங்களிடம்.
கன்னியாகுமரி பஞ்சபூதங்களும் காட்சி அற்புதம்.
வானமேகத்தில் நிறைய உருவங்கள் அழகாய் தெரிந்தன,
வாழ்த்துக்கள்.
படங்கள் அனைத்தும் வண்ணஜாலம் காட்டுகின்றன.
ரசித்தேன்.
புகைப்படங்கள் அத்தனையும் அருமை.தொடருங்கள்
கவிபாடும் படங்கள் அருமை. சகோ
எல்லாப் படங்களும் அருமை. இந்தப் பதிவுக்கு ஏற்கெனவே பின்னூட்டமிட்ட நினைவு. ஆனால் தடத்தையே காணோம்! :))
(பின்னூட்டமிட்டிருந்தால் பப்ளிஷ் க்ளிக் செய்யும்போது தவறாயிருக்கலாம். ஏனெனில், பின்னூட்டம் பப்ளிஷ் க்ளிக் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் சப்ஸ்க்ரைப் ஆப்ஷன் டிக் ஆகியிருக்கும். அது இல்லை)
மேகம் வரையும் கோலங்கள்தான் எத்தனை அழகு! பார்க்கப் பார்க்க சலிக்கவில்லை. அனைத்துப் படங்களுமே கண்ணையும் கருத்தையும் கவரத்தான் செய்தன!
அத்தனையும் அழகு,வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை, நேரில் சென்று காண ஆசை,உங்கள் மூலம் நிறைவேறியது சாந்தி.
அருமையான படங்கள்! பார்க்கும் போதே மனதில் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்கிறது..எப்பொழுதுமே வானம்-மேகம்-சூரியன் ..இந்தக் காம்பினேஷன் எனக்கு அலுக்காது! :)
//கம்பத்தை விட விளக்கைப் பெரிதாகப் படைத்த சிற்பி யாரோ!!!// :))) ரசித்தேன்! :)))
Post a Comment