ஒன்றும் தெரியாத அப்பாவி மாதிரி இருந்து கொண்டு இந்த 'சூரர்' நம் ஜலீலாக்கா நடத்திய போட்டியில் கலந்து கொண்டு விருதுகளை அள்ளி வந்திருக்கிறார். மேக்கப் போட்டு அனுப்பிய வேலையை மட்டும்தான் நான் செய்தேன். அந்த அழகுக்கே ஒரு விருது கொடுத்ததாக ஜலீலாக்கா சொல்லியிருக்கிறார்கள்.
பொதுவாக பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் அயிட்டங்கள் சாப்பிடவும் நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். உண்மைதானா என்று சூராவைச் சாப்பிட்டுப்பார்த்துச் சொல்லுங்கள்.
விருது கொடுத்தது மட்டும் போதாதென்று ஜலீலாக்கா பணமுடிப்பு.. அதாவது அழகான மணிபர்ஸ் ஒன்றையும் அன்பளிப்பாக அனுப்பியிருந்தார். க்ரே அண்ட் ப்ளாக் காம்பினேஷனில் அள்ளுகிறது.
சென்னை திருவல்லிக்கேணி, பைக்ராப்ட்ஸ் சாலையிலிருக்கும் ஜலீலாக்காவின் கடையான "சென்னை ப்ளாசா"விலிருந்து அழகான பாக்கிங்கில் பரிசு வந்து சேர்ந்தது. பாதுகாப்பாக அனுப்பி வைத்த சென்னை ப்ளாசாவுக்கும் ஜலீலாக்காவிற்கும் மிக்க நன்றிகள்.
12 comments:
ஒன்றும் தெரியாத அப்பாவி மாதிரி இருந்து கொண்டு இந்த 'சூரர்' நம் ஜலீலாக்கா நடத்திய போட்டியில் கலந்து கொண்டு விருதுகளை அள்ளி வந்திருக்கிறார்./
இனிய வாழ்த்துகள்..
அந்த சூரர் புகைப்படம், கவிதை, கதை என்று பலவும் தெரிந்தவர் என்பதால் ‘ஒன்றும்’ தெரியாத அப்பாவிதானே! அந்த அப்பாவி இன்னும் நிறைய நிறைய பரிசுகளைப் பெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் அமைதிச்சாரல்.
வாழ்த்துக்கள் சாந்தி, மேலும் பல பரிசுகள் கிடைத்திட வாழ்த்துக்கள்.
அருமை:)! பாராட்டுகளும் வாழ்த்துகளும் சாந்தி! நிகழ்வை சிறப்பாக நடத்திய ஜலீலாவுக்கும் பாராட்டுகள்.
வாழ்த்துக்கள்...
இனிய வாழ்த்துகள்.
வாழ்த்துகக்ள்!
அட சூராவுக்குப் பரிசு கிடைத்திருக்கிறதா.
அன்பு சாரல் மனம் நிறைந்த வாழ்த்துகள்
இதைப் படித்த நினைவு இருக்கிறது.
ரொம்ப கலர்ஃபுல் டிஷ்.
வெளுத்துக் கட்டுங்க:)
வாழ்த்துகள். தொடரட்டும் விருதுகளும், பரிசுகளும்..
பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்!
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
அமைதியான உங்களுக்கும் அட்டகாசமான சூரருக்கும். ;)))))
அவர்கள் அனுப்பிய Packing மிக அழகாக இருந்ததால் எனக்கு பிரிக்கவே மனம் வரவில்லை.
Thanks to Mrs. Jaleela Kamal Madam.
Post a Comment