Tuesday, 22 January 2013

யாதெனில்..


இயங்காமலேயிருந்து இற்று வீழ்ந்து அழிவதை விட ஓடித்தேய்ந்து வீழ்வது மேல்.

தன் வரையில் எதுவும் கெடுதல்கள் நடக்காதவரைக்கும் 'உலகம் பாதுகாப்பானதாக இருக்கிறது' என்றே பலரும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.

நாளையைத் திட்டமிடுவது முக்கியம்தான்.. அதேசமயம் இன்றை வாழ்ந்து பார்ப்பது அதை விட அவசியமானது.

வெகு நாட்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தபின் கிடைக்கும் எதுவும் கடுகை விடச்சிறியதாயினும் மலையளவு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

ஒரு சின்ன தலை வருடல் கூட எத்தனை பொக்கிஷமான தருணமானது என்பதை அன்புக்கு ஏங்கும் உள்ளங்களைக் கேட்டால் புரியும்.

தேர்ந்தெடுக்கப்படுவதற்கென நம்முன் இருக்கும் வாய்ப்புகள் அதிகமாக ஆக வேண்டும், வேண்டாமென்ற நமது விருப்பங்களும் மாறுபடுகின்றன. வாய்ப்புகள் அமையப் பெறாதவர்களுக்கோ கிடைத்ததே வரமாகிறது.

கடமைக்குச் செய்வதை விட, விரும்பும் செயலில் முழு மனதுடன் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதே நம்மை உண்மையான மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

நமது சுயரூபத்தை அறிந்த பின்னும் விட்டு விலகாமல், மனதார அப்படியே ஏற்றுக்கொண்டு அருகிலிருப்பவர்களே நம்மீது உண்மையான நேசம் கொண்டவர்கள்.

நேரெண்ணங்களுடன் நாளைத்துவக்குவதும் முடிப்பதும் அன்றைய நாளை மகிழ்ச்சியுடன் நல்லபடியாகக் கழித்ததற்கு அடையாளம்.

தோற்றத்திற்கும் உள்ளத்திற்கும் பெரும்பாலான சமயங்களில் சம்பந்தமிருப்பதில்லை.

16 comments:

ஸாதிகா said...

சாரலின் தத்துவங்களோ?தலைபோடு சேர்த்து அத்தனையும் அருமை!

புதுகைத் தென்றல் said...

வாவ்.. சிம்பிளி சூப்பரா இருக்குப்பா.

பிரிண்ட் எடுத்து வெச்சுக்கிடலாம்னு ஐடியா.

Ramani said...

அனைத்து மொழிகளும் மனதின் ஆழத்தில்
பதித்து வைக்கவேண்டிய அருமையான
பொன் மொழிகள்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

tha.ma 2

ராமலக்ஷ்மி said...

அத்தனைத் துளிகளும் நன்று சாந்தி.

அமுதா கிருஷ்ணா said...

தோற்றத்திற்கும் உள்ளத்திற்கும் பெரும்பாலான சமயங்களில் சம்பந்தமிருப்பதில்லை.

சமீப காலங்களில் இதை நிறைய அனுபவித்து வருகிறேன்.

Asiya Omar said...

தத்துவம் அத்தனையும் அருமை.மனதில் நிறுத்தி பார்க்க வேண்டியவை.படமும் மிக அருமை.

கோமதி அரசு said...

ஒரு சின்ன தலை வருடல் கூட எத்தனை பொக்கிஷமான தருணமானது என்பதை அன்புக்கு ஏங்கும் உள்ளங்களைக் கேட்டால் புரியும்.//
உண்மை.

அத்தனையும் அருமை.

மனோ சாமிநாதன் said...

//ஒரு சின்ன தலை வருடல் கூட எத்தனை பொக்கிஷமான தருணமானது என்பதை அன்புக்கு ஏங்கும் உள்ளங்களைக் கேட்டால் புரியும்.//

அனைத்தும் அழ‌கு என்றாலும் இன்த‌ வ‌ரி மிக‌ மிக‌ அழ‌கு!!


ஸ்ரீராம். said...

எல்லாமே நல்ல சிந்தனைகள்.

T.N.MURALIDHARAN said...

நல்ல சிந்தனைகள்

கோவை2தில்லி said...

அத்தனையுமே அருமை. எனக்கு நான்காவதும்,ஐந்தாவதும் மிகவும் பிடித்திருந்தது.

பால கணேஷ் said...

அட! என்ன ஆச்சரியம்! நான் சொல்ல வந்த அதே கருத்தை கோவை டு தில்லி மேடம் சொல்லியிருக்காங்க. அதுவே என் குரலும் சாரல் மேடம்! அசத்திட்டீங்க!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கருத்துகள்....

//தோற்றத்திற்கும் உள்ளத்திற்கும் பெரும்பாலான சமயங்களில் சம்பந்தமிருப்பதில்லை// மிக மிக உண்மை...

த.ம. 7

அருணா செல்வம் said...

அனைத்தும் அருமையான முத்துக்கள்.

அமைதிச்சாரல் said...

கருத்துரையிட்ட நட்புகள் அனைவருக்கும் நன்றிகள்..

LinkWithin

Related Posts with Thumbnails