Friday 30 December 2011

கொண்டாட்டம் ஆரம்பம்..


உருளைக்கிழங்குக்கு அடுத்தபடியாக, பொரியல், குருமா, பாயசம், அவியல், பச்சடி, என்று எல்லா வகைச் சமையலிலும் பயன்படுத்தப்படும் இதன் பயன்கள் ஏராளம். வாரத்திற்கு குறைந்தது ஆறு காரட்டுகளாவது சாப்பிட்டு வந்தால் இதய அடைப்பு ஏற்படுவது தவிர்க்கப் படுகிறதாம். இதிலிருக்கும் விட்டமின் ஏ தெளிவான கண்பார்வைக்கு மிகவும் நல்லது.  இது தவிர புற்று நோய்க்கான எதிர்ப்பு சக்தி, தோலின் நிறத்தைக் கூட்டுதல், இதய சம்பந்தமான நோய்களைத் தடுக்கும் சக்தி, மற்றும் வயதாகும் வேகத்தைக் குறைத்தல் போன்ற நன்மைகளையும் உடலுக்குக் கொடுக்கிறது.
இதன் அசட்டுத் தித்திப்பு காரணமாக சில குழந்தைகள் காரட் சாப்பிட மறுப்பதுண்டு. அவர்களுக்குப் பிடித்தமான வகையில் அல்வா செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் உடலில் விட்டமின் ஏ-யின் சத்துக் குறைபாட்டால் பார்வைக்கோளாறுகள் ஏற்படா வண்ணம் பாதுகாக்கலாம். இந்த அல்வா குஜராத்தியர்கள், மற்றும் ராஜஸ்தானியர்களுக்கு மிக விருப்பமான ஒன்று என்பதற்கு அவர்களின் திருமணங்களில் கட்டாயம் இடம் பெறுவதே சான்று.
அல்வா கொடுக்க தேவையானவை:
கேரட்-1 கிலோ
சர்க்கரை-400 கிராம்
இனிப்பில்லாத கோவா-100 கிராம்
இது கிடைக்கல்லைன்னா கடைகளில் கிடைக்கும் மில்க் மெயிட் எனப்படும் கண்டென்ஸ்ட் மில்க் அல்லது, பால்கோவாவையும் உபயோகப் படுத்திக்கலாம். அப்படி உபயோகப் படுத்தும்போது சர்க்கரையின் அளவில் 100 கிராமை குறைச்சுக்கோங்க.
பால்- கால் லிட்டர்
ஏலக்காய்-2 பொடித்தது
எப்படி தயாரிக்கிறது:
கேரட்டை நன்கு கழுவித் துடைத்துக் கொண்டு தோலைச் சீவிக் கொள்ளவும். பின் மெல்லியதாக துருவிக் கொள்ளவும்.(சோப்பு போட்டேத்தான் கழுவணுமா, வாஷிங் மெஷின்ல வாஷ் செஞ்சா ஆகாதா,.. இல்லை ஆலாவுல ஊற வெச்சு கழுவணுமா.. டவுட்டு)
இப்போது அடி கனமான வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யைச் சூடாக்கி அதில் கேரட்டைப் போட்டு வதக்கவும். (மொதல்ல அடுப்பை பற்ற வையுங்கப்பா..)
லேசாக நிறம் மாறி வருகையில் பாலை ஊற்றிக் கிளறவும். பாலிலேயே கேரட் வேக வேண்டும். அடுப்பு மெல்லிய தீயில் எரிய வேண்டும். (அடுப்பு எரிஞ்சா அதுல இருக்கற வாணலியும் எரிஞ்சுடாதா, அடுப்பை எதுல வெச்சு எரிக்கணும்ன்னு சொல்லவேயில்லை.. டவுட்டு)
(பால் முழுவதும் உறிஞ்சப்பட்டதும் சர்க்கரையைப் போட்டுக் கிளறவும். முதலில் நீர்த்து பின் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து வரும். 
இப்போது கோவா, அல்லது கண்டென்ஸ்ட் மில்க்கைச் சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் நன்கு சுருண்டு வரும்போது ஏலக்காய்ப் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கி விடவும்.(பாத்திரத்தோட ஒன்றிப் போச்சுன்னா அது பேரை ஜிவாஜி அல்வான்னு மாத்திக்கலாமா.. டவுட்டு)
விரும்பினா வெள்ளரி விதை அல்லது மெல்லியதாகத் துருவிய முந்திரி அல்லது பாதாம் பருப்பைச் சேர்த்து அலங்கரிச்சுக்கோங்க. (பாஸ்..ட்ரை ஃப்ரூட் ஃபேஷியலுக்கப்றம், அதை, ஐ-மேக்கப்,லிப்ஸ்டிக், காம்பேக்ட்டெல்லாம் போட்டு அலங்கரிக்கலாமா.. டவுட்டு)
டிஸ்கி1: வீட்ல இருக்குங்கறதுக்காக இஷ்டத்துக்கு கிசுமிசுவைச் சேர்த்து காரட் கேசரி ஆக்கிடாம, அல்வாவாக சாப்பிடுங்க. வடமாநிலங்களில் இந்த அல்வாவை பூரி மற்றும் ஐஸ்க்ரீமுடன் சாப்பிடுவார்கள்.
புது வருசத்துக்காகவும், 
என்னோட ப்ளாக் ஆரம்பிச்சு இன்னியோட ரெண்டு வருசமும் ஒரு வாரமும் நிறைவடைஞ்ச சந்தோஷத்தைக் கொண்டாடவும், 
புதுப்பொறுப்புகள், சூழ்நிலைகள் காரணமா அடிக்கடி இடுகை போட முடியாட்டியும், எப்பவாவது போடும் இடுகைகளுக்கு கடைக்கு வந்து உற்சாகமூட்டிய உங்க பொறுமைக்கான பரிசாகவும் அல்வா கொடுத்து புத்தாண்டு வாழ்த்தும் நன்றிகளும் சொல்லிக்கிறேன். 
எல்லோரும் கேக் எடுத்துக்கிட்டு கொண்டாந்துருக்கற கிஃப்டை மறக்காம கொடுத்துடுங்க :-)

44 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கொண்டாட்டங்கள் களைகட்டட்டும்...

பகிர்வுக்கு நன்றி
மற்றும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

மனோ சாமிநாதன் said...

வலைப்பூ ஆரம்பித்து இரு வருடங்கள் முழுமையானதற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!

குறையொன்றுமில்லை. said...

சாந்தி உனக்கும் உன் குடும்பதினருக்கும் ஹேப்பி நியூ இயர் வாழ்த்துகள். காரட் அல்வா சூப்பர்.

ஹுஸைனம்மா said...

1. பதிவுலகில் வருடம் பல கண்டு பிரகாசிக்க மனமார்ந்த வாழ்த்துகள்.

2. அதென்ன, புதுவருஷத்துக்கு அல்வா கொடுக்குறப் பழக்கம்? சிம்பாலிக்கா ”இந்த வருஷம் முழுசும் அல்வா வாங்கி வாழ்க”னு வாழ்த்துறீங்களோ? ;-))))))

3. டெல்லியிலருந்து ஆதி, மும்பையிலருந்து நீங்க... ரெண்டுபேரும் சொல்லிவச்சு செய்றீங்களா? :-))))

3. //புதுப்பொறுப்புகள், சூழ்நிலைகள்//
இது என்னன்னு தெளிவாச் சொல்லிருக்கலாம்ல? இப்பப் பாருங்க, நீங்க பாட்டியாகிட்டீங்களோன்னு சிலர் நினைச்சுக்க வாய்ப்பிருக்கு... முதல்ல அந்த “வல்லமை” ஃபோட்டோ லிங்கைக் கொடுங்கப்பா... ;-))))

MANO நாஞ்சில் மனோ said...

ரொம்பநாளா பதிவே வரலையே என்னாச்சு...?

MANO நாஞ்சில் மனோ said...

உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்....

அமைதி அப்பா said...

//பாத்திரத்தோட ஒன்றிப் போச்சுன்னா அது பேரை ஜிவாஜி அல்வான்னு மாத்திக்கலாமா.//

:-)))))))))))))))))))!


புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம்!

கோமதி அரசு said...

இன்னியோட ரெண்டு வருசமும் ஒரு வாரமும் நிறைவடைஞ்ச சந்தோஷத்தைக் கொண்டாட நீங்கள் கொடுத்த காரட் அல்வா அருமை.
இனிப்பை உண்டு இனிமையாய் வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்.

புது வருட வாழ்த்துக்கள்.


கேக்கும் எடுத்துக் கொண்டேன்.
பரிசாய் அன்பை கூடை, கூடையாய் கொடுத்து விட்டேன்.

ராமலக்ஷ்மி said...

இரண்டு வருட நிறைவுக்கு இனிய வாழ்த்துகள்:)! இனிப்புகளுக்கு(கேக்கையும் சேர்த்துக் கொண்டேன்) நன்றி. கிஃப்டா என் புதுவருட வாழ்த்துகளைத் தந்து செல்கிறேன்:)!

[கேரட்டுடன் சேர்க்க மில்க் மெய்ட், கோவா கைவசம் இல்லாவிடில் பால்பவுடர்(ஸ்டாக் செய்து வைக்கலாம் எப்போதும்) சேர்த்தாலும் நல்ல சுவை கொடுக்கும்.]

Rathnavel Natarajan said...

அருமை.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

ஹேமா said...

புது வருஷத்துக்கு,பிறகு அல்வா செய்யச் சொல்லித் தந்ததுக்கு,பிறகு இரண்டு வருட எழுத்து அனுபவத்துக்கு எல்லாத்துக்குமாச் சேர்த்து என் மனம் நிறைந்த வாழ்த்துகள் சாரல்.ப்ளீஸ் சின்னதா ஒரு அல்வா பார்சல் சுவிஸ்க்கு !

Yaathoramani.blogspot.com said...

நிஜமாகவே அல்வா கொடுப்பது என்றால் என்ன எனத் தெரியாமல் இருந்தேன்
இன்று தங்கள் பதிவு பார்த்துத்தான் புரிந்து கொண்டேன்
அல்வா பார்க்க பிரமாதமாக இருக்கிறது கொடுத்தும் வீட்டீர்கள்
எடுத்துத் திண்னத்தான் முடியவில்லை

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
தொடர வாழ்த்துக்கள் த.ம 7

பால கணேஷ் said...

அல்வா பிரமாதம்ங்க. உங்களுக்கு என் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். (இரண்டு ஆண்டைப் பூர்த்தி செய்ததற்கும் பிடியுங்க என் பொக்கேவை)

Yaathoramani.blogspot.com said...

இரண்டாம் ஆண்டு நிறைவுக்கு மகிழ்ச்சி
பல்லாண்டு பல்லாண்டாய் பெருகி வளர
மனமார்ந்த வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

சாந்தி கேரட் அல்வா சூப்பர். இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் உன்க்கும் உன் குடும்பத்தினருக்கும்.

ஷைலஜா said...

நான் எப்பவும் மைசூர்பாக்தான்:):)

அமைதிச்சாரல் நீங்க சொன்னபடி என் லேட்டஸ்ட் பதிவுல 2011 போட்டோவைப்போட்டுட்டேன் ஒரு நடை வாங்க அங்க:)

வெங்கட் நாகராஜ் said...

கொண்டாட்டம் ஆரம்பித்தாயிற்று....

இங்கேயும் காஜர் ஹல்வா.... :) சுவைத்தேன்...

கேக் எடு... கொண்டாடு! :)

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

மாதேவி said...

இரண்டு வருட நிறைவுக்கு இனிய வாழ்த்துகள்.

புத்தாண்டு அல்வாவுடன் போன்று இனித்திட வாழ்த்துகள்.

Anonymous said...

கொண்டாட்டமே இந்த மாதிரி கலர்புல் ஆன
அனைவரின் படைப்புகளைப் படித்து
ரசித்து சுவைப்பதுதான்.
வாழ்த்துக்கள் !

உணவு உலகம் said...

அழகிய பகிர்வு. அல்வா அதைவிட அருமை. திருநெல்வேலிக்கே அல்வா கொடுக்குறீங்களா?
வாழ்த்துக்கள் சகோ, உங்களின் இரு வருட உழைப்பிற்கும்,பதிவுலக வளர்ச்சிக்கும்.
இனிய மனங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

வாழ்த்துக்கள். ஹுசைனம்மாவின் கமெண்டை வழிமொழிகிறேன்.

:))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சௌந்தர்,
மனோம்மா,
லஷ்மிம்மா,

[im]http://img136.imageshack.us/img136/2406/thanksssssss3ax.jpg[/im]

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

எப்பவுமே பல்பே வாங்கிட்டிருக்கோம். ஒரு சேஞ்சுக்கு அல்வா வாங்கித்தான் பாருங்களேன் :-)

நீங்க குறிப்பிட்டிருக்கற லிங்குல இருக்கறவங்க யாருங்க?. எனக்கு அவங்களைத் தெரியாதே ;-)


வாழ்த்துகளுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மனோ,

கொஞ்சம் பத்திரிகைப் பொறுப்ஸ், கொஞ்சம் சோம்பல்ஸ் ரெண்டும் சேர்ந்ததால் சின்ன இடைவெளி. இந்த ஆண்டில் அதை நிவர்த்தி செய்யணும்ன்னு நினைக்கிறேன் :-))

வாழ்த்துகளுக்கு நன்றி.

ADHI VENKAT said...

இரண்டாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள்.... கலக்குங்க..

காஜர் ஹல்வா எடுத்துகிட்டேன்...கேக்கும் தான்..

RVS said...

வாழ்த்துக்கு நன்றி! பதிவு எழுதாம அல்வா கொடுக்குறீங்க.. ம்...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமைதி அப்பா,

உங்களுக்கும் வாழ்த்துகள் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதிம்மா,

பரிசுக்கு நன்றிம்மா :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

பரிசுக்கு ரொம்ப நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரத்னவேல் ஐயா,

உங்களூக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

சின்னதா எதுக்குப்பா.. மொத்தத்தையும் அனுப்பிட்டேன். சாப்ட்டுட்டு சொல்லுங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

வீட்ல தங்க்ஸ் கிட்ட சொன்னா செஞ்சு தருவாங்க.. தாராளமா தின்னலாமே :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கணேஷ்,

வாழ்த்துகளுக்கும் பொக்கேக்கும் நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஷைலஜா மேடம்,

வாசகி விருப்பத்தை பூர்த்தி செஞ்சதுக்கு இன்னொருக்கா நன்றி சொல்லிக்கிறேன் :-)

அல்வான்னா திருனேலி ஞாபகம் வர்ற மாதிரி இப்பல்லாம் மைசூர்பாக்ன்னா உங்க ஞாபகம்தான் வருது ;-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

தலை நகரத்துல கொடுத்த இனிப்பும் ஜோரா இருந்துச்சு
:-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

உங்களுக்கும் இனிய வாழ்த்துகள்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரவாணி,

கவிதையில் கலக்குறீங்க போங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கரலிங்கம் அண்ணா,

எங்கே சுத்தி எங்க வந்தாலும், அது பூர்வீக மண்ணாச்சே.. அல்வா கொடுக்காம இருப்போமா :-))))

உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

ஆஹா!!.. நீங்களுமா ;-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆதி,

உங்கூட்டு அல்வா செம டேஸ்ட்டுப்பா :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆர்விஎஸ்,

அப்ப இது பதிவு இல்லியா!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

உங்களுக்கும் வாழ்த்துகள்.

Menaga Sathia said...

வாழ்த்துக்கள் அக்கா!! அல்வா சுப்பர் நீங்க செய்ததா..அப்புறம் ருமாலி ரொட்டி இந்தமாதிரி ஆகாசத்துல சுத்துறு மாதிரிலாம் வராதே.///

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மேனகா,

உங்களுக்கு பதில் எழுதாம அல்வா கொடுத்துட்டேன் இல்லே :-)))

ரூமாலி ரோட்டியை பறக்க விடறது சும்மா ஒரு ஷ்டைலுக்காக. விருந்து சமயங்கள்ல மக்களைக் கவர்றதுக்காக இப்படி சிலதை செய்யறது அவங்க வழக்கம். அதுவும் போட்டோவுக்காக ஸ்பெஷலா பறக்க விட்டார் :-)

LinkWithin

Related Posts with Thumbnails